அரசியல்

Friday, October 30, 2015

உறவுக்குள் திருமணம் வேண்டாம்! உடல் நலம், உள நலம் கெட்டு குழந்தை பிறக்கும்!

உறவுக்குள் திருமணம் வேண்டாம்!
உடல் நலம், உள நலம் கெட்டு குழந்தை பிறக்கும்!
அத்தை மகளை மணப்பது சித்தப்பா பெண்ணை மணப்பதற்குச் சமமல்லவா?
அக்காள் மகளை மணப்பது அண்ணன் மகளை மணப்பது போலல்லவா?
------------------------------------------------------------
அத்தையின் முதல் மகனும் மாமாவின் முதல் பெண்ணும் திருமணம் செய்துகொண்டால் பிறக்கும் குழந்தை பாதிப்போடு பிறப்பது ஆய்வின் முடிவில் அறியப்பட்டுள்ளது.
அக்கா மகளை திருமணம் செய்துகொள்ளும்போது, அதில் பிறக்கும் குழந்தை மனநலம் கெட்டு, மூளை வளர்ச்சி குறைந்து உடல் வலுவிழந்து பிறக்க வாய்ப்பு அதிகம்.
உறவு அல்லாதவர்கள் மணம் புரியும்போது குழந்தைகள் உடல் நலத்தோடு அறிவாளிகளாகவும் இருப்பது கண்கூடு.
சாதி விட்டு சாதி, இனம் விட்டு இனம் திருமணம் செய்தால் அதில் பிறக்கும் குழந்தை இன்னும் உடல் வளமும், அறிவு வளமும் பெற்று விளங்கும்.
குறுகிய மதில் சுவர்களைத் தகர்த்து, அறிவுக் கண்கொண்டு நோக்கி, வேற்றுமைகளைக் களைந்து, மனிதர்கள் எல்லோரும் சமமானவர்களே; மனிதருள் பிறப்பால் உயர்வு, இழிவு என்பது இல்லை; பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பது அயோக்கியத்தனம் என்று உணர்ந்து மனித நேயத்தோடு வாழ்வதே மனிதர்க்கு அழகு!
தனக்கேற்ற இணை எச்சாதியில் எந்த இனத்தில், எந்த மதத்தில் இருந்தாலும் ஏற்று வாழ்வதே சிறந்த வாழ்வாகும்!
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
படியுங்கள்! மற்றவருக்கு பகிருங்கள்!
-----------------

No comments:

Post a Comment