அரசியல்

Friday, October 30, 2015

கீதையும் எனது கேள்வியும்.......(3)


”பெண்கள், வைசியர், சூத்திரர் ஆகியோர் தாழ்ந்த பிறவிகள்”
“பிராமணர்கள், புண்ணிய பிறவிகள்”
- பகவத்கீதை அத்தியாயம்-9, சுலோகம்-32,33

இப்படிச் சொல்லும் கீதை ஒரு புனித நூலா?

 இந்துக்களுக்கு பொதுவான நூலாக இது எப்படி இருக்க முடியும்?
பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக எழுதிக்கொண்டது இது என்பது விளங்கவில்லையா?
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது பிறவியை வைத்தா? நடத்தையை வைத்தா?
சிந்தியுங்கள்!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

https://www.facebook.com/manjaivasanthan

படியுங்கள்! பரப்புங்கள்!

2 comments:

  1. ///”பெண்கள், வைசியர், சூத்திரர் ஆகியோர் தாழ்ந்த பிறவிகள்”
    “பிராமணர்கள், புண்ணிய பிறவிகள்”
    - பகவத்கீதை அத்தியாயம்-9, சுலோகம்-32,33

    இப்படிச் சொல்லும் கீதை ஒரு புனித நூலா?//////////////////////////////////

    இப்படி தவறான விளக்கம் கொடுக்கவேண்டாம் !

    கீதையில்சொல்வது ...


    மாம் ஹி பார்த² வ்யபாஸ்²ரித்ய யேऽபி ஸ்யு: பாபயோநய: |
    ஸ்த்ரியோ வைஸ்²யாஸ்ததா² ஸூ²த்³ராஸ்தேऽபி யாந்தி பராம் க³திம் || 9- 32||

    ஹி பார்த² = ஏனெனில் பார்த்தா
    ஸ்த்ரிய: வைஸ்²யா: ஸூ²த்³ரா: = பெண்களாயினும் எந்த வர்ணத்தவராயினும்
    ததா² = அதே போல
    பாபயோநய: = பாவிகளானாலும்
    யே அபி ஸ்யு: = எவர்களாக இருந்தாலும்
    தே அபி மாம் வ்யபாஸ்²ரித்ய = அவர்களும் என்னை தஞ்சமடைந்து
    பராம் க³திம் யாந்தி = மேலான கதியை அடைகிறார்கள்

    “ என்னை பணிவார்கள் பாவிகளானாலும், பெண்களாயினும், வைசியரேனும், சூத்திரராயினும், எவராகிலும் பரகதி பெறுவார்.” - பகவத்கீதா 9-32

    இதில் பெண்களை எங்கே கிழ்குலம் என்று சொல்கிறது? அவர்களை தனியே தானே சொல்கிறது.

    பகவத்கீதா 5.18 — அடக்கமுள்ள பண்டிதர்கள் தங்களது உண்மை ஞானத்தின் வாயிலாக, கற்றறிந்த தன்னடக்கமுள்ள பிராமணன், பசு, யானை, நாய், நாயைத் தின்பவன் என அனைவரையும் சமநோக்கில் காண்கின்றனர்.

    இதில் தெளிவாக சொல்கிறதே எல்லோருமே சமம் என ! அப்புறம் எப்படி ?

    ஆதாரம் :

    http://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-9

    ReplyDelete
  2. ///இந்துக்களுக்கு பொதுவான நூலாக இது எப்படி இருக்க முடியும்?
    பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக எழுதிக்கொண்டது இது என்பது விளங்கவில்லையா?
    //////////////////////////////////////////
    வேத புராணங்களை எழுதியவர்களில் எவருமே பிராமணர்கள் அல்ல. அப்படியிருக்க இந்த ப்ராமண ஆதிக்கம் எப்படி வந்ததாக சொல்றீங்க ?

    வேத, புராணங்களை எழுதிய பிராமணரின் ஒரே ஒரு பெயரை தர முடியுமா உங்களால் ?

    வேதங்களை எழுதியவர் மீனவருக்கு பிறந்த வியாசர், இவர் தான் மகாபாரதம்,கீதை எழுதியது,

    ராமாயணத்தை எழுதியது ஒரு வேடனான வால்மீகி,

    பிராமணர்களால் தினமும் கூறும் காயத்திரி மந்திரம் சொன்னது விசுவாமித்திரர் என்கிற சத்திரிய அரசன்,

    மேலும்,கௌசிகர்,ஜாம்பூகர், கௌதமர், வசிஷ்டர்,அகஸ்த்தியர் போன்ற ரிஷிகள், மஹா அதர்வண சத்யகாம ஜாபாலா என்ற வேத கால அறிஞர்போன்றோர் பிராமணனுக்கு பிறக்கவில்லை.

    அப்புறம் எப்படி ப்ராமணத்துவம் ?


    ReplyDelete