இஸ்ரோவில் பணிபுரியும் 90 சதவீதம்
பேர் தாய்மொழியில் படித்தவர்கள்
மயில்சாமி அண்ணாதுரை தகவல்
பேர் தாய்மொழியில் படித்தவர்கள்
மயில்சாமி அண்ணாதுரை தகவல்
தமிழில் படிப்பதால் யாரும் சோடை போவதில்லை. தாய்மொழியில் படித்ததுதான் என்னுடைய பலம். அதனால் நான் விஞ்ஞானியாக வளர்ந்தேன் என இந்திய விண்வெளி செயற்கைக்கோள் ஆய்வு மையத்தின் தலைமை திட்ட இயக்குநர் மயில் சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
நான் முதல் வகுப்பு படிக்கும் போது, மாட்டுக்கொட்டகையில் தான் படித்தேன். என்னை முழுக்க முழுக்க என் பெற்றோர் 11 ஆண்டுகளாக, தமிழில்தான் படிக்க வைத்தார்கள். அதனால் தான், இன்றைக்கு விஞ்ஞானியாக வளர்ந் துள்ளேன்.
என்னுடைய பலம் தாய் மொழியில் படித்தது தான்.
குழந்தைகள் தாய் மொழியில் படித்தால் முன்னேறமாட்டார்கள் என்கிற பெற்றோர்களின் எண்ணம் தவறானது.
தமிழில் படிப்பதால், யாரும் சோடை போகப்போவதில்லை. முதல் 15 ஆண்டுகள் இயல்பானவர்களாக குழந்தைகள் இருக்க வேண்டும். அவர்களை மன இறுக்கம் உடையவர்களாக மாற்றக்கூடாது.
இஸ்ரோவில் பணிபுரியும் 90 சத வீதம் பேர் அவரவர் தாய் மொழியில் படித்தவர்கள் தான் என்றார்.///
தமிழ் வழியில் படிக்கின்ற மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தாழ்வு மனப்பான்மையை விளக்கி சாதனை புரிய விளைய வேண்டும்.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
No comments:
Post a Comment