- மஞ்சை வசந்தன்
தமிழகத்தில் வெளிவரும் இதழ்களில் குப்பை என்று ஒதுக்குவதற்குக்கூட தகுதியில்லாது அதனினும் கீழாய் கொடுநெஞ்சின் குரோத வெறியோடு, பிடிக்காதவர்களை பிய்த்துக் குதறும் பித்துப் பிடித்து இதழ் நடத்தகிறார்கள். குமுதம் நிறுவனத்தார்.
தி.மு.க. கலைஞர் என்றாலே கடும் வெறுப்போடு, அநியாயப் பழிகளையெல்லாம் சுமத்தி, மக்கள் வெறுக்கும்படி செய்வது; ஊகக் கருத்துக்களையே உண்மைபோல வெளியிட்டு தி.மு.க.வை அழிக்க முனைவது என்று பல செயல்களைச் செய்கின்றனர்.
அ.தி.மு.கவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது.
நாளேடுகளில் தினமணி அதேவகையில் செயல்பட்டு, அ.தி.மு.க. அதிகாரபூர்வ ஏடாகவே வெளிவருகிறது. இந்த இரண்டும் தமிழ்நாட்டில் செய்யும் ஊடக அடாவடித்தனத்திற்கு அளவே இல்லை.
அதே கொள்கையோடு, தந்தை பெரியாரையும் தாக்க குழுதம் ரிப்போர்ட்டர் முனைந்துள்ளது. அதற்கு அரைவேக்காடுகள் கூறுவதையெல்லாம் வரலாறாகப் போட்ட, அவதூறு பரப்புகிறது.
அறிஞர் அண்ணா அவர்கள் இறந்தபின் நாவலரா? கலைஞரா? யார் முதல்வர் என்ற நிலை வந்தபோது, கலைஞரை முழுமையாக ஆதரித்து முன்மொழிந்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
நாவலரா? கலைஞரா? என்று வந்ததே தவறு! பேராசிரியரை ஏன் ஒதுக்க வேண்டும்? பேராசிரியர் தகுதியற்றவரா?
இங்கு யார் மூத்தவர், யார் படிப்பாளி என்ற கேள்வி எழவில்லை. யார் போராளி, யார் இடையூறுகள் எதிர்கொள்ளும் ஆற்றலாளர்; யார் அரசியல் அரங்கில் சாதுர்யம், சாணக்கியம் மிக்கவர் என்பதே எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதையுணர்ந்தே எம்.ஜி.ஆர். முன்மொழிந்தார். அதை அறிந்து பெரியார் மகிழ்ந்தார் என்பதே உண்மை.
மற்றபடி யாரையும் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. குறிப்பாக பெரியாருக்கு யார் மீதும் விருப்பு வெறுப்பு இல்லை.
அம்மையார் சத்தியவாணிமுத்து முன்னிறுத்தப்படவில்லை. தாழ்த்தப்பட்டவர் வரக்கூடாது என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. கலைஞர் மட்டும் என்ன உயர்சாதிக்காரரா?
இல்லாத ஒரு கற்பனையைச் சொல்லி, தாழ்த்தப்பட்டோர் வரக் கூடாது என்று பெரியார் நினைத்தார் என்று கூறுவது மோசடிக் கருத்து. தாழ்த்தப்பட்டோருக்கு பெரியார் செய்த தொண்டுகள்
இதோ: மேலும் முழு விவரம் அறிய : http://manjaivasanthan.blogspot.in/2016/02/blog-post_16.html
No comments:
Post a Comment