அரசியல்

Wednesday, February 17, 2016

தமிழ் தந்த பிச்சை சம்ஸ்கிருதம்


 (ஆரிய பார்ப்பன மொழி மோசடிக்கு ஆணித்தரமான மறுப்பு)
பகுதி - 1
 
- மஞ்சை. வசந்தன்
தமிழில் சமஸ்கிருதச் சொற்கள் என்று ஆயிரம் சொற்களை எடுத்துக்காட்டி (Sanskritroots.com என்ற இணையத்திலிருந்து எடுத்துக்காட்டி) ஒரு மோசடியான பிரச்சாரத்தை இணைய தளம் வழி செய்துள்ளார். அதற்கு மறுப்பாக இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.
உலகின் முதல் மொழி தமிழ் என்பதும், உலக மொழிகளுக்கெல்லாம் மூல மொழி தமிழ் என்பதும் உலக அளவிலான மொழி அறிஞர்கள் ஒட்டுமொத்தமாக ஒத்துக் கொண்டுள்ள உண்மையாகும்.
எடுத்துக்காட்டாக, ஜப்பானிய மொழி அறிஞர் சுசுபோ ஒனோ என்பவர் ஜப்பானிய மொழி தமிழிலிருந்து வந்தது என்பதை ஒப்புக் கொள்கிறார். இவருக்கு முன்னரே சு.சுமுஷிபா, அகிரா புஜீவாரா, மினோரு சோ போன்றவர்கள் ஜப்பான் மொழி தமிழ் (திராவிட) மொழியை ஒத்திருப்பதைக் கூறுகின்றனர்.
பிலிப்பைன், கொரியா, ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகள் திராவிடர்கள். அவர்கள் மொழி தமிழ் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
பிரான்ஸ், ஸ்பெயின் நாட்டு பழங்குடிகள் திராவிடர்கள் (தமிழர்கள்) என்பது ஆய்வின் முடிவு.
எகிப்து, சுமேரியா, ரோம், கிரேக்கம் போன்ற பகுதிகளிலும் தமிழர்கள் தொல்குடிகளாக வாழ்ந்தமை அரிய சான்றுகளின் மூலம் தெரியவருகிறது.
சிந்து சமவெளியில் கிடைத்துள்ள எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் என்பது அறிஞர்களால் உறுதிசெய்யப்பட்ட உண்மை. அதே வடிவ எழுத்துக்கள் தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகிலுள்ள கீழ்வாலை என்ற ஊர் பாறை ஓவியங்களுக்கிடையே காணப்படுகின்றன.
ஆந்திராவில் கார்வ மட்டக்கல் என்ற கிராமத்தில் கிடைத்த நான்கு அடி அகலச் சுவர் ஒன்றில் சிந்து வெளி எழுத்து உள்ளதை ளு.மு.பாண்டியன் கண்டுபிடித்தார். அதை ஆய்வாளர் மதிவாணன் படித்து கலிங்க கிராமத்து நக்கன் மகன் நந்தி என்று இருப்பதாகக் கூறியுள்ளார். அதேபோல், ஆனைக்கோட்டை முத்திரையிலும் இவ்வெழுத்து உள்ளது. யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ள முத்திரை ஒன்றிலும் கோவேடன் என்ற சிந்துவெளி எழுத்து காணப்படுகிறது. ஆக இலங்கை, பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளடங்கிய அனைத்துப் பகுதியிலும் தமிழே பேசப்பட்டது என்பது உறுதியாகிறது.
இப்படிப்பட்ட நிலையில் ஆரியர் இந்தியாவிற்குள் நுழைய தமிழில் கலப்பு உருவாகிறது. ஆரியர் வரும்போது அவர்களுடன் சமஸ்கிருதம் வரவில்லை. சமஸ்கிருதம் என்ற ஒரு மொழியே அப்போது இல்லை. அது மிகப் பிற்காலத்தில் தமிழ்ச்சொற்களை மாற்றித் திரித்து உருவாக்கப்பட்டது. இதனைத் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள இருபதாம் நூற்றாண்டிற்கான தமிழிலக்கணம் - சொற்படலம் என்ற நூலில் கீழ்கண்டவாறு தெளிவாக்கப்பட்டுள்ளது.
திரி சொல்
ஒரு பொருள் குறித்த வேறுசொல் லாகியும்
வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும்
இருபாற் றென்ப திரிசொற் கிளவி (தொல்.சொல்.393)
இதன் கருத்து: வடிவம் வேறுவேறாகத் திரிபுற்று வரும் திரிசொல்லாவன ஒரு பொருளைக் குறித்து வேறு வேறு வடிவுடன் வரும் சொற்களும், வேறு வேறு வடிவுடன் ஒரு பொருளையே குறித்து வரும் சொற்களும் என இருவகையாக வரும் என்பதாகும். இயற்சொல்லுக்கு மாறுபட்டது என்னும் பொருளில் திரிசொல் எனப்பட்டது.
இயற்சொற்கள் போலக் கற்றார் கல்லார் யாவர்க்கும் பொருள் விளங்குதலின்றிக் கற்றார்க்கும் நூற்பயிற்சி யுடையார்க்கும் பொருள் விளங்க நிற்றலின் திரிசொல் எனப்பட்டது. ஈண்டுத் திரிபென்பது ஒரு பொருள் குறித்த பல சொற்களும் பலபொருள் குறித்த ஒரு சொல்லும் சுட்டப்படும் பொருளின் நிலைமைகளை விளக்கி நிற்றலின் அக்கோணங்கள் திரிவு எனப்பட்டன என அறிக.
1. ஒருபொருள் குறித்த வேறு வேறு சொற்கள் வருமாறு: மலை என்னும் ஒரு பொருளைக் குறித்து வெற்பு, ஓங்கல், விலங்கல் என்பன வரும். பொதுப் பொருள் மலை. நிலத்துக்கு அரணாக நின்று வெற்றியைத் தருதலின் வெற்பு எனப்பட்டது. பரப்பாக விரிந்து நில்லாமல் நெடிதாக ஓங்கி நிற்பது ஓங்கல். நிலத்தைத் தான் நடுவில் நின்று விலக்கி நிற்றலின் விலங்கல். இவ்வாறே ஏற, ஏற்றை, போத்து, காளை என்பவை ஆண்பால் விலங்கை உணர்த்துவன. ஒவ்வொன்றும் நுணுக்கமான பொருள் வேறுபாடுடையனவாகும்.
2. வேறுபொருள் குறித்த ஒரு சொல் வருமாறு: வண்டு இது பறக்கும் வண்டினையும், வண்டியின் உருளையையும், மகளிர் கைவளையல்களையும் உணர்த்தும். பறக்கும் வண்டு வட்டமாகப் பறத்தலின் இப்பெயர் பெற்றது. வளைந்து உருளாக நிற்றலின் சக்கரம் வண்டு எனப்பட்டது. வளைந்து சுழற்சியாக இருத்தலின் கைவளையல் வண்டு எனப்பட்டது.
இவ்வாறே வினைச் சொற்களிலும் - பிணித்தல் - யாத்தல், வீக்கல் என்பவை கட்டுதல் என்னும் ஒரு பொருளுக்குரிய வேறு சொற்கள். ஒவ்வொன்றும் சிறுநுணுக்க வேறுபாடுடையவை. வரைதல் என்பது, எழுதுதல், எல்லையிடுதல், மணத்தல், நீங்குதல் என்னும் பல பொருளைத் தரும். காரணம் வேறுபடும்.
இனி இலக்கியப் பயிற்சியுடையார்க்கே விளங்கும் சொற்களும் இத்திரி சொல்லின்பாற்படும். எ.டு.: கொங்கு (தேன்), இறால் (தேனடை), அளகு (பறவைக் குஞ்சு), நாகு (விலங்கின் இளமை), நெய்த்தோர் (குருதி), அதோளி (அங்கு), வந்தீத்தை (வந்தாய்), என்றிசினோர் (என்றார்) இவ்வாறு வருவனவற்றை அரிதுணர் பொருளன என்பார்.
ஒவ்வொரு சொல்லும் தனித்தனிச் சிறப்புப் பொருளுடையனவேயாகும். அவற்றுள் அமைந்துள்ள சில ஒற்றுமைக் கூறுகளின் அடிப்படையில் யாப்பியல் புலவோர் தொடை நயங்கருதி ஒரு பொருளில் கையாளுவர். அது கருதி இலக்கண நூலார் ஒரு சொற் பல்பொருள் பல பொருளொரு சொல் என வகுத்து இலக்கணம் கூறிச் சென்றனர். சொல்தோறும் பொருள் வேறுபடும் என்றாரிலர்.
திசைச் சொல்
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொல். சொல். 394)
இதன் கருத்து: செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்தமைந்துள்ள பன்னிரு நாடுகளில் வாழும் மக்கள் சில பொருள்கட்கு தம்தம் நாட்டுச் சூழலுக்கேற்ப பெயரிட்டு வழங்குவர். அங்ஙனம் தத்தங்குறிப்பினவாக அமையும் சொற்கள் தமிழே எனினும் அவை இயற்சொல் போலல்லாமல் அவர்கள் கற்பித்துக் கொண்ட பொருளைத் தருதலின் அவை திசைச் சொல் எனப்படும். திசை என்பது ஆகுபெயராய்த் திசையிலுள்ள நாடுகளைக் குறித்து நின்றது. இன்றைய மொழியியலார். இவற்றை வட்டார வழக்கு என்பர். உரையாசிரியர்கள் தரும் எடுத்துக்காட்டுக்கள்:
(1) ஆ (பசு) வினையும் எருமையையும் பெற்றம் என்பது தென்பாண்டி நாட்டார் வழக்கு. இது பேறு = செல்வம் என்பதன் திரிபாகும். பேறு, பெறுதல், பெற்றம்.
(2) தாயைத் தள்ளை என்பது குட நாட்டார் வழக்கு. இது இன்றாள் என்னும் சொல்லின் பொருளுடையதாகும். ஈனுதல் = தள்ளுதல் - தள்ளை என அமைந்தது.
(3) தந்தையை அச்சன் என்பது குடநாட்டார் வழக்கு. இது ஆத்தன் என்னும் சொல்லின் தகரசகரப் போலியாக அமைந்த சொல்லாகும். அத்தன் - தந்தை.
(4) வஞ்சரைக் கையர் என்பது கற்கா நாட்டு வழக்கு. இது கயவர் என்பதன் சிதைவாகும்.
(5) தோழனைக் குறிக்கும் ஏடா என்னும் சொல்லைச் சீத நாட்டார் எலுவன் என்ப. இது எல்லா என்பதன் திரிபாகும். மேலும் சீத நாட்டார் தோழியை இருளை என்றும் தம் மாமியைத் தந்துவை என்றும் வழங்குவர். இகுளை என்பது இகம் (பக்கம்)த்தில் உள்ளவர் என்னும் பொருளையும், தந்துவை என்பது கணவனைத் தந்தவள் என்னும் பொருளையுமுடைய தாகும்.
(6) நாயை ஞமலி என்றல் பூமி நாட்டார் வழக்கு. இது ஞாளி என்பதன் 
திரிபாகும்.
(7) செய்யை (வயல்)ச் செறு என்பதும் சிறு குளத்தைக் கேணி என்பதும் அருவா நாட்டு வழக்கு. செறு என்பது சேறு என்பதன் குறுக்கமாகும். கேணி என்பது கீழ் +நீர் = கிணறு - கேளி என அக்கம் பெற்றதாகும்.
(8) குறுணியைக் குட்டை என்பது அருவா வடதலையார் வழக்கு. குட்டை என்பது குண் (குண்டம்) என்பதன் திரிபாகும். இவ்வெடுத்துக் காட்டுக்கள் நச்சினார்க்கினியர் காட்டியவை. ஏனை உரையாசிரியர்களும் இவற்றை ஒட்டியே காட்டியுள்ளனர்.
இனி, அந்தோ, கரைய, சிக்க, குளிர, செப்பு, பாண்டில் (எருது) கொக்கு (மாமரம்) என்பவற்றைத் திசைச் சொற்களாகக் காட்டுவார் தெய்வச்சிலையார்.
நன்நூலாசிரியர் திசை என்பதற்கு எட்டுத் திசைகள் எனப் பொருள் கொண்டு திசைச் சொல் இலக்கணத்தைப் பின்வருமாறு கூறுவார்.
செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரட்டினில் தமிழ்ஒழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (நன்.273)
என்பார். பன்னிருநிலம் மேற்கூறப் பெற்றவையே. பதினெண் நிலம்பற்றி உரையாசிரியன்மார். பின்வருமாறு கூறியுள்ளனர்.
சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லந் தெலுங்கம் கலிங்கம் வங்கம்
கங்கம் மகதம் கடாரம் கவசம் கடுங்குசலம்
தங்கும் புகழ்ந்தமிழ் சூழ்பதினேழ்புவிதாமிவையே (நன்.272. மயிலை உரை)
இவற்றிற்கு உரையாசிரியன்மார் காட்டியுள்ள சொற்கள் வருமாறு: கொக்கு (மாமரம்) துளு நாட்டுச் சொல். சிக்குதல் (அகப்படுதல்) கன்னட நாட்டுச் சொல். எச்சரிக்கை (விழிப்பூட்டல்), செப்பு (விடை) தெலுங்க நாட்டுச் சொல். அந்தோ (இரக்கம்), சிங்கள நாட்டுச் சொல். இவற்றை நுணுகி நோக்கின் இவை தமிழ்ச் சொற்களின் சிதைவுகளே என்பது விளங்கும்.
வடசொல் 
பாரத தேயத்துள் குமரிமுதல் இமயம் வரை வழங்கும் மொழிகளுள் தொன்மையானவை தமிழும் ஆரியமுமாம். இவையன்றி வட்டார வழக்காக வழங்கிவந்த இவற்றின் திரிபுகள் பிராகிருதம் எனப்படும். இம்மும் மொழிகளின் அடிப்படையில் செம்மைசெய்து உருவாக்கப்பட்ட மொழியே செயற்கை மொழியாகிய சமற்கிருதம். பெரும்பான்மையான சொற்கள் ஆரியத்தின் அடிப்படையில் அமைந்துள்ளமை கருதிச் சமற்கிருதத்தையே ஆரியமொழி எனவும் சிலர் வழங்குவர். பிராகிருதத்திற்கு லௌகீகம் (உலகியல் மொழி) என்னும் பெயரும் உண்டு. அதனைப் பாணின் பாஷா (பேச்சு மொழி) என்று குறிப்பிடுவார்.
ஆரியப் பிராமணர்கட்கும் தென்னாட்டு அந்தணராய தமிழர்க்கும் தெய்வக் கொள்கை, கலைத் துறைகள், ஓரளவு ஒத்துப் போனமையாலும், அரசியல் சமுதாய சூழல்கள் காரணமாகவும் இனக் கலப்பும் மொழிக் கலப்பும் நேர்வனவாயின. உயிர், இறை, உலகு, பிறப்புப் பற்றிய தத்துவம் முதலிய சமயக் கோட்பாடுகள், வானியல், கோளியல், காலக் கணிதவியல் முதலியவை பாரதநாடு முழுமைக்கும் பொதுவாக அமைய வேண்டும் என்றும் கருத்தினால் அத்துறைகள் பற்றிய கல்விக்கு ஒரு பொதுமொழி உருவாக்க எண்ணிய அறிஞர்கள் அடிப்படை நூல்களை இயற்றினர். அவற்றையெல்லாம் ஆராய்ந்து பாணினி முனிவர் அட்டாத்யாய என்னும் வியாகரண நூலைப் படைத்தார். பின்னர் பாணினியக் கோட்பாடுகளின் அடிப்படையில் பொதுமொழி செம்மை செய்யப் பெற்றது. அந்நிலையில் நன்றாகக் செய்யப்பட்டது. செம்மையாகச் செய்யப்பட்டது என்னும் பொருள்பட அதற்குச் சமஸ்கிருதம் எனப் பெயர் அமைந்து, சமயம் முதலாய துறைகளில் ஆழ்ந்த புலமையுடைய சான்றோர்கள் சமற்கிருதத்தில் பல நூல்களைப் படைத்தனர்.
தமிழகத்தின் ஒரு பகுதியாகிய சேரநாட்டில் தோன்றிய சங்கரரும், சோழ நாட்டில் தோன்றிய இராமா நுசரும் வேதக் கொள்கையின் அடிப்படையில் அத்வைதம், விசிட்டாத்வைதம் என்னும் தத்துவ நூல்களையும், பிற சாத்திர, தோத்திர நூல்களையும் படைத்தனர். சமஸ்கிருத மொழிக்குரிய எழுத்து வரிவடிவங்களாகத் தமிழ் வட்டெழுத்து முறையைப் பின்பற்றிக் கிரந்தம் என்னும் வரிவடிவைப் படைத்து நூல்களை இயற்றினர். அம்முறையில் சமற்கிருதச் சொற்களைத் தமிழ் வரிவடிவ எழுத்துக்களால் எழுதுமிடத்துக் கிரந்த வரிவடிவங்களைக் கலந்தே எழுதி வந்தனர், அம்முறைமை இற்றை நாள்வரை மாறவில்லை.
மேற்கூறப் பெற்ற வரலாறுகளை நோக்கின் சமற்கிருதம் உருவாவதற்கும் தமிழ் பெரும்பங்கு அளித்துள்ளமை புலனாகும். அம்முறையில் சமற்கிருதம் பாரத நாட்டுப் பொதுமொழி என்ற நிலையில் தமிழர்க்கும் உரிமையுடைய தாயிற்று. தமிழ் நூல்கள் பல சமஸ்கிருதம் ஆக்கப்பெற்றன. வடமொழி ஆகமங்களுக்குத் தமிழே மூலம் என்பது அவற்றின் பொருளமைப்புக்களால் தெரியலாம்.
அம்முறையில் சமற்கிருதத்தில் கலந்து சமற்கிருதமாககிய தமிழ்ச் சொற்கள் தமிழர்க்குத் தாய உரிமையுடையவாயின. அவற்றை அப்படியே மேற்கொள்ளின் புணர்மொழி விதிகளும், யாப்பமைதிகளும் பாவென்னும் ஓசையும் சிதையுமாகலின் அவற்றைத் தமிழ் எழுத்திலக்கண, சொல்லிக்கண நெறிமுறைகளுக்கு ஏற்பச் செப்பஞ்செய்து கொள்வாராயினர். அங்ஙனம் சமற்கிருதத்திற்குச் சென்று மீண்ட சொற்கள் தமிழ் இலக்கியச் சொல்வகையுள் ஒன்றாகச் கொள்ளப்பட்டமையின் தொல்காப்பியம்.
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (தொல்.சொல்.39)
என உரிமையாக்கிக் கூறுகின்றது. சென்ற சொற்களை மீட்குங்கால், சமற்கிருத ஓசை ஒலிகளை நீக்கித் தமிழ் எழுத்து ஓசை ஒலிகளாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை.
வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே
என விதிக்கின்றது. அங்ஙனம் கொடுத்தவற்றைக் கொள்ளுங்கால் கொடாத சிலவும் கொள்ள நேருமன்றே. நேரின் அவையும். அப்பெயரானே வழங்கப் பெறும் என்பது விளங்க.
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் (தொல்.சொல்.396)
என விரிந்துள்ளது.
இதுகாறும் கூறியவாற்றான் வடமொழி என்பது சமற்கிருத பாடையைக் குறிக்கும் என்பதும், வடசொல் என்பது சமற்கிருதத்திற்குச் சென்று மீண்ட பழந்தமிழ்ச் சொற்களைக் குறிக்கும் என்பதும் விளங்கும். இதனைப் பி.டிசீனிவாச  அய்யங்கார் முதலாய வரலாற்று ஆசிரியன்மார் உரைகளாலும் அறியலாம்.
 வடசொல் தமிழ்ச்ல் விளக்கம்
வடமொழித்  தமிழாக்கம்பற்றி எழுத்துப் படலத்துள் விளக்கமாகக் கூறப் பெற்றமையின் ஈண்டுச் சுருக்கமாகச் சில குறிப்புகளே தரப் பெறுகின்றன. வடமொழியில் ஸ்வரங்கள் என்னும் உயிர் எழுத்துக்கள் பதினாறு அவற்றுள் இடையிலுள்ள ருரூலுலூ நான்கும் ஈற்றிலுள்ள அம், அஃஎன்னும் இரண்டும் ஆக ஆறும் வடமொழியில் உள்ள சிறப்பெழுத்துக்களாம். அஆஇஈஉஊஏஐஓஔ என்னும் பத்தும் எகர ஒகரக் குறில்கள் வடமொழியில் இல்லை. சிறப்பெழுத்துக்களுள் ரு என்னும் ஏழாவது உயிர் மட்டுமே தமிழில் மேற்கொள்ளப்படுகிறது. பிற வழங்கப் பெறுதலில்லை. ஏழாம் உயிர் ருஷபம், ம்ருகம் என வரும் வடமொழிச் சொற்கள் தமிழில் இடபம் மிருகம் என, இ - இரு எனத் திரிந்து வரும்.
வடமொழியில் வியஞ்சனா என்னும் மெய்யெழுத்துக்கள் முப்பத்தேழு. அவற்றுள் கசடதப என்பவை ஒவ்வொன்றும் நான்கு நிலைகளில் ஒலிக்கும். அய்ந்தாவது எழுத்து மெல்லொலி அவை ங ஞண நமன என்னும் தமிழெழுத்தோடு ஒக்கும். ஏனை இடையிலுள்ள மூன்றும் தமிழில் வரும்போது முதலெழுத்துப் போலவே கொள்ளப்படும் அவையாவன:
நகம், நாகம், மேகம், சலவாதி - விசயம் - சருக்கரை. சகர வரிசையில் உள்ள மூன்றாவது எழுத்து ஜ. அதனைத் தமிழில் ச, ய எனத் திரித்துக் கொள்வர். விஜயம் - விசயம் (வெற்றி), புஜம் - புயம் (தோள்) எனவரும். பீடம் - சடம் - கூடம். தலம் - தினம் - தரை. பலம் - பந்தம் - பாரம். இடையில் உள்ள கசடதபக்கள் முதலில் உள்ள எழுத்தாகவே தமிழிற் கொள்ளப்படும். இவ்விருபத்தைந்தும் தவிர 26, 27, 28, 29 ஆக உள்ளவை யரலவ என்பன. 34வது எழுத்து ள - இவ்வைந்தும் அப்படியே மேற்கொள்ளப்படும். 30, 31, 32, 33, 35, 36, 37 இவை முறையே கிரந்த வடிவில் பா, ஷ, ஸ், ஹ, க்ஷ என்பனவாகும். 36, 37 கூட்டொலிகள். பா என்னும் 30ஆவது எழுத்து தமிழில் ச,ய - எனத் திரித்துக் கொள்ளப்படும். (ய) சங்கரன், வயம், 31வது ஷ, அது ச, ட எனத் திரித்துக் கொள்ளப்படும். ஷ, சண்முகம். விடம் (விஷம்) எனத் திரித்துக் கொள்ளப்படும். 32ஆவது ஸ. அது ச, த, எனத் திரித்துக் கொள்ளப்படும். ஸ-சபை, மாதம் எனக் கொள்ளப்படும். 33-ஆவது ஹ. அது தமிழில் அ. முதலிய உயிரெழுத்தாகவும் ககரமாகவும் யகரமாகவும் திரியும். ஹ-ஹரி - அரி. ஹிமாலயம் - இமாலயம். ஹேமம் - ஏமம். எனவும், மோஹம் - மோகம் எனவும், மஹிஷன் - மயிடன் எனவும் வரும். 35-வது க்ஷ என்பது க்க - ட்ச, எனத் திரியும். பக்ஷம் - பக்கம். மோக்ஷம் - மோட்சம் என வரும். 36-வது த்-ர எனவும், 37-வது ஞ், க எனவும் திரிந்து வரும்.
தமிழில் மொழிமுதல் வாராத ர, ல, ய முதலாக உள்ள வடசொற்கள் அ, இ, உ என்னும் முன்னொட்டுக்களைப் பெற்று அரங்கம், இராமன், உரோமம் எனவும், இலாபம், உலோபம் எனவும், யுகம் - உகம், யுக்தம் - உக்தம், யக்ஷன் - இயக்கன் என்றும் வரும். டகரம் சிறுபான்மை டாகினி - இடாகினி என்றும் வரும். சில சொற்களில் இடையே எழுத்துக்கள் குன்றியும் திரிந்தும் வரும். பிரஹ்ம - பிரமன், ஸீம்ஹம் - சிங்கம் என வரும். வடசொற்கள் பெரும்பாலும் பொருட் பெயராகவும் பண்புப் பெயராகவும் சிறுபான்மை வினைச் சொல்லாகவும் வரும்.
தமிழினின்றும் வடமொழிக்குச் சென்றவற்றுள் இருமொழிக்கும் ஒத்த எழுத்துக்களாலானவை, வடமொழியில் திரித்துக் கொள்ளப் பெற்றவற்றை மீண்டும் தமிழ் எழுத்துக்களால் ஆக்கிக் கொள்ளப் பெற்றவை என வடசொற்கள் இருதிறப்படும். அவற்றிற்குச் சில எடுத்துக்காட்டுக்கள் வருமாறு.
தமிழ்        வடமொழி
அகில    அகரு
அந்தம்    அந்தம்
அண்டம்    அண்டம்
அடவி    அடவீ
அம்பரம்    அம்பரம்
அம்பு    அப்பு
அமர்    சமர்
அரங்கம்    ரங்கம்
அரசன்    ராஜன்
அரண்    அரணம்
அரா    அரவம்
ஆரண்யம்    ஆரண்ய
அளகம்    அலக
தமிழ்        வடமொழி
அனல்    அனல
ஆகவம்(போர்)    ஆகவம்
ஆணி    ஆணி
ஆயம்    ஆய:
ஆரம்    ஹாரம்
ஆவணம்    ஆபண
கடுக    கடுக
கண்ணியம்    கண்யச்
கண்டம் (முள்)    கண்ட
கணிதம்    கணித
காரிகை    காரிகா
கதை(பேச்சு)    கதா
கமுகு    க்ரமுக
தமிழ்        வடமொழி
கலகம்    கலக
கலுழன்    கருடன்
கலை    கலா
கவளம்    கவல
கவுள்    கபோல
கவான்    கவீணீ
கன்னம்    கர்ணம்
கன்னி    கந்யா
காக்கை    காக்க
காமம்    காம
காலம்    கால
கானம்    கானன
இகம்    இக:
இஞ்சிவேர்    சிருங்கவேர்
உயர்ச்சி    உச்சம்
உத்தி    யுக்தி
உதடு    ஒஷ்ட
உருவம்    ரூபம்
உருத்திரம்    ருத்ரம்
உவமம்    உபமா
ஊசி    சூசி
ஊதை    வாதை
எருமை    ஹேரம்ப
ஏது    ஹேது
ஏமம்    க்ஷேமம்
ஓடம்    ஹோட
ஒட்டகம்    ஒஷ்ட்ரக
கச்சை    கக்ஷ்ய.
கட்டை    காஷ்ட
கடம்பு    கதம்பு
கோடி    கோடி.
கோபுரம்    கோபுர
சகடம் (சக்ர)    சக்கரம்
தமிழ்        வடமொழி
சமம்    ஸம
சரம் (நடத்தல்)    சர
சாந்து    சந்தன
சாயை    சாயா
சாலை    சாலா
சித்திரம்    சித்ர
சீர்த்தி    கீர்த்தி
சுக்கு    சுஷ்க
சுண்ணம்    சூர்ண
சுரபி    ஸுரபி
சுரம்    ஜ்வர
சூரன்    சூரன்
தடம்    தட
தடாகம்    தடாக
குட்டம்    குஷ்ட
குடங்கர்    குடங்கக
குடம்    குட
குடல்    குத
குடில்    குடீர
குணம்    குண
கும்பம்    கும்ப
குமாரன்    குமார
குயில்    கோகில
குளிர்(நண்டு)    குளீர
கூகை    கூக
கூடம்    கூட
கூந்தல்    குந்தல
கூம்பு    கூப
கோட்டம்    கோஷ்டம்
கோட்டை    கோட்ட
கோடரி    குட்டார
பரிதி    பரிதி
பவழம்    ப்ரவாள
தமிழ்        வடமொழி
பழம்    பல
பள்ளி    பல்லி
புவி    புவன
பூசை    பூசனா
பூதம்    பூத
பேச்சு    பாஷா
மகள்    மஹிலா
மகுடம்    மகுட
மங்கலம்    மங்கல
மயிர்    மச்ரு
மத்தளம்    மர்தல
மதங்கம்    மருதங்கம்
மந்திரம்    மந்த்ர
மலையம்    மலய
மாத்திரை    மாத்ரா
தண்டு    தண்ட
தவம்    தபஸ்
தூண்    தூண
தெய்வம்    தைவ
தோள்    தோஸ்
நகர்    நகர
நடனம்    நடந
நாகரிகம்    நாகரிக
தமிழ்        வடமொழி
நாவாய்    நௌக
இமை    நிமி
நிலையம்    நிலய
நீர்    நீரம்
நேயம்    நேய
படிவம்    பிரதி
படிமம்    பிரதிமா
பரமன்    பரம
மாதம்    மாஸ
மாயை    மாயா
மாலை    மாலா
மீன்    மீன
முகம்    முக
முத்து    முக்தா
முட்டை    முட்ட
மேழம்    மேஷம்
வட்டம்    விருத்தம்
விடை    ருஷப:
வீச்சு    வாஸ்
வீணை    வீணா
வேலை(கடல்)    வேலா
வேளை    வேலா
வைகை    வேகவதி
முட்டி    முஷ்டி
இவ்வட்டவணையில் தமிழினின்றும் வடமொழிக்குச் சென்று அம்மொழியமைப்பிற் கேற்பத்திரிந்த வடிவங்கள் காட்டப் பெற்றுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை ஈண்டு உயிரீறாக நிற்பினும் வடமொழியாக உச்சரிக்கும் போது அநுஸ்வாரமும் விஸர்க்குமும் சிலவற்றில் சேர்த்திசைக்கும்.
மற்று வடமொழி வடிவங்கள்தாம் மூலம் அவற்றினின்று தமிழ் எழுத்தொலிகளுக்கேற்பத் திரிந்து அமைத்துக் கொண்டவையே தமிழில் உள்ள வடசொற்கள் எனக் கொள்ளலாகாதோ? எனின், தமிழ் வடிவங்களே தொன்மையானவை என்பதற்கு அவற்றின் பொருளமைப்பே சான்றாகும் என்பதை ஊன்றி நோக்கின் புலனாகும். சொற்களுக்குரிய பொருள் எந்நிலத்தது அவற்றொடு தொடர்புடை பிறசொற்கள் தமிழில் வழங்கும் பொருளுக்கும் வடமொழியில் வழங்கும் பொருளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை அச்சொல் திராவிட மொழியினத்தில் உள்ளனவா? ஆரிய மொழியினத்தில் உள்ளனவா? என்றும் காணின் ஒருசொல் எம்மொழிக்கு உரிமையுடையது என்பது விளங்கும். மேலே காட்டப்பெற்ற சொற்களுள் சிலவற்றை இனி ஆய்ந்து காண்போம்.
அகில்:
அகில் என்பது அகரு எனத் திரிந்ததா - அகரு என்பது அகில் எனத் திரிந்ததா எனக் காணுமிடத்து, அகில் என்பது ஒருவகை மென்மர இனத்தைச் சார்ந்தது. அதனகத்தே பிசின் போல விளையும் மணப் பொருள் அது. காட்டின்கண் சந்தனம் முதலியவற்றோடு விளைந்து நிற்கும் மரம் அது. தமிழகத்திலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மணப் பொருள்களுள் ஒன்று என்பதை. குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் (பட்டினப் பாலை) என்னும் வழக்காலும், கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் (நான்மணிக்கடிகை) என்பதனாலும் அறியலாம். அகஹ+இல்=அகவில் - அகில் என்பது சொல்லாக்கம். அகத்தே காழ்கொண்டது என்பது பொருள். வடமொழி அகரு என்பது அக-ரூ என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. கள்ளி, தென்னகத்து மரவகையுள் ஒன்றாகலின் அகில் என்பதே வடமொழியில் அகரூ எனத் திரித்துக் கொள்ளப்பட்டுள்ளமை விளங்கும்.
அம்பரம்:
அம்=இடம். பரம்=மேல், உயர்ச்சி. எனவே புவியின் மேற்பரப்பாக உள்ள வெளியிடம் என்பது பொருள். எங்கும் பரவியிருக்கும் பொருள் பரம். அம்+பரம் இரண்டும் தமிழ் உரிச் சொற்களே என்பது விளங்கும்.
அடவி:
மரங்களால் அடர்ந்து விளங்குமிடம் என்னும் பொருளில் அடர்+வி=அடவி என அமைந்தது. வி சொல்லாக்க விகுதி வி-வீ என நீண்டு வடமொழியில் அடவீ என அமைந்தது.
அம்பு:
அம்+பு. அம்=நீர். பு=பொழிதல் என்னும் வினையின் முதற்குறிப்பு மழையாகப் பெய்யும் நீரினைக் குறித்து நின்றது. ஒப்புமையாக்கத்தான் வில்லினின்றும் ஏவப்படும் கணை, அம்பு எனப்பட்டது. மலையருவிக்குத் தமிழில் ஆம் என்பது பெயர். உண்ணும் நீர்க்கு (அம்+து) அமுதம் என்பது பெயர். இது வடமொழியில் ம் வன்மையுற்று அப் என்றாய்ப் பின் அப்பு என ஆக்கம் பெற்றுள்ளது.
அரங்கம்:
ஆர்+அம்+கு+அம் =வட்டம். இது ஆரம், ஆரை என வட்டமான மாலையையும், தேருருளையையும் குறிக்கும். அம்=இடம். கு - சொல்லாக்க விகுதி. ஆர் அம் கு என்பவை அரங்கு என உருப்பெற்று மேலாய இடப் பொருள் தரும். அம் என்பதனோடு கூடி அரங்கம் என ஆக்கப் பெற்ற தமிழ்ச் சொல் இதன் முதல் எழுத்தை நீக்கி மேடை என்னும் பொருளில் வடமொழியில் ரங்கம் என அமைக்கப் பெற்றது. வடமொழியில் ஆக்கம் பெறுமிடத்து இங்ஙனம் முதல் எழுத்தைக் குறைத்து ஆக்கிக் கொள்ளுதலை இலவம் (மரம்) லவம் என்றும், இலக்கியம் - லக்கியம். உலகம்-லோகம் என்றும் வரும் சொற்களால் அறியலாம்.
அமர்:
அம்மு+அர்=அமர். அம்முதல்=அமுக்குதல் குழவியால் அமுக்கப் படுதலின் அடிக்கல் அம்மி எனப்பட்டது. ஆர்=நிறைவு, பகையை மேல் எழ ஒட்டாமல் அமுக்கி வெல்லுதலான் போர்ச் செயல் அமர் என்றும், அதனைப் புரியும் வீரர் அமரர் என்றும் அமைவனவாயின. இது சமர் என்றும் சமம் என்றும் திரியும். வடமொழியில் சமர் என்பது சமம் எனத் திரியும். வடமொழியில் சமர் என்பது சமரம் என்றும் சமர் என்றும் மேற்கொள்ளப் பெற்றுள்ளன.
அரசன்:
ஆர் என்னும் வட்டத்தைக் குறிக்கும் சொல் அணுகுதல் என்னும் பொருளுடைய அண் என்பதனோடு கூடி அரண் என்றும் அரணம் என்றும் வரும். அரணம் கோட்டை மதில் மதிலுக்குள் அமைந்த மனை அரண்மனை. அரணம் என்பது அரையம் எனவும் வரும். அரையத்திலிருந்து ஆளுபவன் அரையன். யகரமும் சகரமும் தேயம் - தேசம், நேயம் - நேசம் எனப் போலியாக வரும். அம்முறையில் அரையன் - அரைசன் - அரசன் என ஆக்கம் பெற்றது. வடமொழியில் ராஜன் என்பதன் அடிப்படைப் பொருள் வேறு. எனவே, அரசன் என்னும் தமிழ்ச் சொல் வேறு. ராஜன் என்னும் வடசொல் வேறு என்க. அரா:
பாம்பு, அரி=காற்று. காற்றை உணவாகக் கொள்ளும் இயல்பினது. அரி, அர்+ஆ=அரா. வட்டமாக மண்டலித்தலானும் நாகம் அரா எனப்பட்டது. நிலா கனா என்பவை நிலவு கனவு என வருதல் போல அரா-அரவு என வரும். அதனோடு அம் விகுதி சேரின் அரவம் என வரும். வடமொழி அரவம் என்னும் சொல்லை மேற்கொண்டது. வடமொழியில் வேறு பெயர்களும் உண்டு.
அளகம்:
கூந்தல் பலவாக உள்ள பொருள்களைத் திரட்டிக்கைக் கொள்ளுதலை அள்ளுதல் என்ப. மயிர்க்கற்றை கையால் அள்ளி முடிக்கப் பெறுதலின் கூந்தல் அளகம் எனப்பட்டது. வடமொழியில் அலக எனத் திரிந்தது.
அனல்:
நெருப்பு, அல்+நல்=அனல். அல்=இரவு. இரவின் கருமையை நீக்கி ஒளி தருதலின் அல்லுக்கு நலம் செய்வது அனல் என அமைந்தது. இவ்வாறே புல்லுக்கு நன்மை தரும் நீர். புல்+நல்=புனல் எனப்பட்டது.
ஆகவம்:
போர்க் களத்தில் வீரர்கள் வஞ்சினம் கூறி (சவால் விடுதல்) எதிர்த்தலை அறைகூவல் என்பர். அறைகூவல் - அகவல் - அகவம் என அமைந்து போர்ச் செயலை உணர்த்திற்று. வடமொழியில் ஆகவம் என்பதன் பொருள் வேறு.
ஆணி:
சுவர், மரம் முதலியவற்றுள் அணுகி உட்புகும் கருவி ஆணி. அண் - ஆண் + இ=ஆணி.
ஆயிரம்:
பல துண்டுகளை - கூறுகளையுடையது. பல்+து=பத்து. அதனினும் பல துகள்களை - நொறுங்கிய கூறுகளையுடையது நூறு. அதனினும் மிக்கபல துகள்களையுடையது ஆயிரம். அயிர் - துண்மணல். நுண்ணிய துகள்களின் வட்டம். அயிர்+அம்=ஆயிரம் என ஆக்கம் பெற்றது.
ஆர்-ஆரம்=ஆர்=வட்டம். வட்டமாகக் கட்டப்பெற்ற மாலைக்குப் பெயர். வடமொழியில் ஆ=ஹாவாகத் திரிந்து ஹாரம் என வந்தது.
ஆவணம்:
எழுத்தால் எழுதப் பெற்ற ஓலைப் படிவம். மையால் எழுதப்படுதலின் எழுத்திற்கு வண்ணம் என்பது ஒரு பெயர். வடமொழியில் வர்ணம் என்பர். எழுத்துக்களால் ஆயது ஆவணம். கடைத்தெரு என்னும் பொருளில் வரும் ஆவணம் என்பது ஆம் வணிகம் என்பவற்றின் மரூஉவாகும். ஆவணிகம் ஆவணம் எனவரும்.
இஞ்சிவேர்:
இஞ்சுதல் - உறிஞ்சி யிருத்தல். நீரைத் தன்னுள் உறிஞ்சி இஞ்சி நிற்றலால் - இஞ்சி எனப்பட்டது. இஞ்சி தமிழகத்திற்குரிய பயிர்களுள் ஒன்றாகும்.
உயர்ச்சி:
உய்+அர்+சி. உ=மேலோங்கதல் என்னும் குறிப்புணர்த்தும் எழுத்து. உய்தல் = மேலேழுதல், ஆர்தல் = நிறைதல். சி - தொழிற்பெயர் விகுதி. உயர்ச்சி, உச்சி எனவும், அம் என்னும் பண்பு விகுதி சேர்ந்து உச்சம் எனவும், வரும்.
உதடு:
வாயிதழ். உ+தள். வாயில் முன்னாகத் தள்ளியிருப்பது என்பது பொருள். உதள்+து=உதடு என அமைந்தது. இதழ் இரண்டும் ஒட்டி நிற்பதால் ஒட்டம் என்பதும் வாயிதழுக்குப் பெயர். வடமொழியில் இடையே ஊஷ்மாணந் தந்து நீட்டி ஓஷ்டம் என ஆக்கிக் கொள்ளப்பட்டது.
உருவம்:
உரு+அம். சுட்டி உணர நிற்பது. (உர்+உ) என்பது பொருள். அம் இனிமைப் பொருள் விகுதி, வடமொழியில் உகரம் நீங்கி ரூ=ரூபம் என ஆக்கம் பெற்றது.
 உவமம்:
ஒ-ஒத்தல். அது ஒவ்வுதல் என உருவாகி உவ எனத் திரிந்து அம் விகுதி பெற்றது. உவமம் - உவமை என வரும். வடமொழியில் உகரம் பகரமாகி உபமா எனவும் உபமானம் எனவும் வரும்.
ஊசி:
ஊசுதல் (ஊ+ச்+அல்) முன்னும் பின்னுமாக ஆடுதல். வழக்கில் ஊஞ்சல் என்பர். ஊசலாடுதல் முன்னும் பின்னுமாகத் திரிதல். ஆடை முதலியவற்றை நூலோடு முன்னம் பின்னுமாக ஊசலாடுதலின் துன்னும் கருவி ஊசி எனப்பட்டது.
ஊ+செல்=ஊடுவிச் செல்லுதல். ஊசி எனினுமாம். மூ+செய்=மூசு மூச்சு எனவரும். ஊசல்-ஊடு செல்லுதல் ஊசி. எருமை: இரு+மை=இரு=பெரிய மை = ஆடு. பெரிய வடிவமுடைய ஆடு போன்றது. என்னும் பொருளில் காரான் எருமை எனப்பட்டது. இனி, இரு+மெய்=பெரிய உடம்பை உடையது என்றுமாம். மெய்=மை எனத் திரிதல் சொல் மரபு.
ஏது:
எதிர்தல் தன்மையுடையது ஏது. ஒரு காரியத்திற்கு முன்னாக எதிர் நிற்பது என்பது பொருள். அதனான் இதற்குக் காரணம் என்பதும் பொருள். வடமொழியில் ஏ-ஹேவாகத் திரிந்து ஹேது என நின்றது.
ஓடம்:
நீரில் மிதந்து செல்வது. ஓடுவது ஓடம். அம்=நீர். இதற்கு இணைச் சொற்கள் - நீரில் பரிவது பரிசல். படர்வது படகு என வரும்.
கட்டை :
மரத்தினின்று கடியப்பட்டது. கட்டை வடமொழியில் காஷ்டை.
கணிதம்:
கண்ணுதல் = கருதுதல். கண்+அக்கு=கணக்கு. கணித்தல் கணக்கிடுதல். கோள்களின் இயக்கத்தைக் கணிப்பவர் - கணிவர். பாடங்களைக் கணக்கிட்டுப் பயிற்றுபவர் கணக்காயர்.
கணிகை:
கணம் = கூட்டம். கூட மகிழ்தற்குரியவள் கணிகை. வடமொழியில் ஐகாரம் ஆகாரமாக நீண்டு கணிகா என வரும்.
கதை:
கத்துதல், கதறுதல் என்பவற்றிற்கு ஒலித்தல் என்பது பொருள். கத்=பேச்சு. கதை=வாயால் மொழிதல் வடமெடாழியில் கதா என வரும்.
கலகம் :
கலக்குதல் - கலகம். கலக்கி ஆரவாரம் செய்தல். கலவரம் கலந்து போரிடுதல் கலகம்.
கவளம் :
கவுள் - கன்னமூட்டு வாயாற் கௌவி உண்ணுதலால் உணவு கவளம் எனப்பட்டது. கவ்வு+உள்=கவுள். வடமொழிகபோலம்.
கவான்:
தொடை இடுக்கு இடுப்பினின்றும் சுவையாகப் பிரிதலால் தொடை கவான் எனப்பட்டது.
கன்னம்:
முகத்தின் இருபுறமும் கனிபோல இனிதமைந்துள்ள உறுப்பு. அது ஆகுபெயராய்ச் செவியையும் உணர்த்தும் வடமொழியில் காது கர்ணம் என வரும்.
கன்னி:
இனிய பருவத்தினள். கன்=இனிமை. கன்னல், கனா, கனி முதலியவை இனிமைபற்றி அமைந்த பெயர்களாகும். வடமொழியில் இனிமைபற்றி அமைந்த பெயர்களாகும். வடமொழியில் கந்யா என வரும். அதன் திரிபாகத் தமிழில் கன்னிகை என வரும்.
காமம்:
கமம் என்னும் உரிச் சொற்கு நிறைதல் என்பது பொருள். பருவத்தால் நிறைந்தெழும் உணர்வு காமம். அவ்வுணர்வு அவா ஆதலின் அவா என்னும் பொருளிலும் வரும்.
காலம் :
நிலையாக நில்லாமல் கணந்தொறும் கலித்துச் செல்லுதலால் பொழுது காலம் எனப்பட்டது. காற்று இடையறாது இயங்கலின் கால்+து=காற்று எனப்பட்டது. அவற்றான் நகர்த்திச் செல்லும் உறுப்புகள் கால் எனப்பட்டன. கால்+அம்=காலம். கலிமா, கலைமான், கலைமதி, கலிப்பா என வருவன வெல்லாம் இவ்வடிப்படையில் அமைந்தனவே.
குடம்:
குடைவுற்றுக் கூடாக உள்ள கலம்.  கூடு - குடம் எனப்பட்டது. கூடு, கூடை, குடங்கை, குடை என்பவை இவ்வடிப்படையில் ஆக்கம் பெற்றனவாகும்.
குணம்:
குண்+அம்=குணம். குண்-குன்-உள் - உள்ளிருப்பது, உள்ளதாக இருப்பது என்பது பொருள். குணம் ஒரு பொருளினிடமாகவன்றித் தனித்து நில்லாது. நிறம், வடிவு, உரு, அளவு, சுவை, பண்பு முதலியவை குணத்துள் அடங்கும்.
கும்பம்:
அடிபருத்து நுனி குவிந்து கூம்பியிருத்தலின் கலசம் கும்பம் எனப்பட்டது. கலசம் என்பது கலயம் என்பதன் திரிபாகும்.
குயில்:
குய்+ஒல் - கூவி. இசை எழுப்பி ஒலித்தலின் குயில் எனப்பட்டது.
குரு:
கூர் என்னும் உரிச் சொல் மிகுதி என்னும் பொருள் தரும். அறிவு, அருள், தவம் முதலியவற்றால் மிகுதியுடையவர். கூர்+உ=குரு என ஆக்கம் பெற்றது. அம்முறையில் ஆசான் குரு என விளம்பப்பட்டார். அதனடியாகப் பிறந்த சொல் குரவர். இருமுதுகுரவர் பெற்றோர். குரவன் - கணவன். சமயக்குரவர் - மெய்யறிவாளர்கள். வடமொழியில் கு-அஞ்ஞானம். ரு-ஒழிப்பவர். அறியாமையை நீக்குபவர் என்னும் பொருளில் அமைந்ததாகும். தமிழில் குருசில் என்பது சிறப்பு என்னும் பொருளில் அமைந்தது.
கோட்டம் :
கோடு - வளைவு. வளைத்துக் கட்டப்பெற்ற கோயில் கோட்டம் எனப்பட்டது. வடமொழியில் டகரத்தை நீக்கிக் கோஷ்டம் என வழங்கும். கோஷம் என்பதற்குக் கூட்டொலி என்பது பொருள்.
கோடி: குவடு = உயர்ந்த உச்சி. குவடு - கோடு என்றாகி இகர விகுதி பெற்று உயர்ந்த எண்ணினை உயர்த்திற்று. எல்லை உணர்த்தும் கோடி என்பது வரைவு என்னும் பொருள்தரும். கோடு என்பதனடியாகப் பிறந்ததாகும்.
கோபுரம்:
 
கோ+புரம். கோ=குவிதல் - புடை உயர்தல் = குவிந்து ஓங்கியிருக்கும் கட்டிடம் கோ=இறைவன். புரம் = உறையும்  இடம். இறைவன் வாழுமிடம் என்னும் பொருளில் வடமொழியில் அமைந்தது.
சகடம்:
ச - ஒலிக்குறிப்பிடைச் சொல். கட+அம்=கடம். கடத்தலைச் செய்வது. கடத்தல் - நகர்தல், ஊர்தல், ஓடுதல் என்னும் பொருளில் வண்டி முதலிய ஊர்திகளை உணர்த்திற்று. இது சகடு எனவும் சாகாடு எனவும் திரிந்துவரும்.
சக்கரம் :
சருக்கு+ஆரம் என்பவற்றின் மரூஉ. ஒப்பாக்கச் சொல். சருக்கிச் செல்லும் வட்டமான உறுப்பு என்பது பொருள். உருள், வண்டு, வட்டை, சக்கரம் என்பன ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும். வடமொழியில் சுழல்வது என்னும் பொருளில் அமைந்ததாகும்.
சாந்து :
சந்தன மரத்திற்குரிய தமிழ்ப்பெயர். சாந்த மரத்திற்குத் தமிழில் ஆரம் என்பதும் பெயர். சந்தனக் கட்டையை உரசிச்சாந்து செய்து பூசிக் கொள்ளுதலால் சாந்துதரும் மரம் சாந்தம் எனப்பட்டது. அரைத்துப் பூசிக் கொள்ளுதலால் ஆரம் எனப்பட்டது. சாந்தை அணிவதால் வடமொழியில் சந்தணம் எனப்பட்டது.
சாயை :
ஒரு பொருளினின்று நிலத்தில் சாய்தலால் நிழல்சாயை (சாய்கை - சாயை) எனப்பட்டது. வடமொழி மரபின்படி சாயா எனவரும்.
சாலை :
நிறைந்துள்ள இடம். சால் என்னும் உரிச் சொற்குமிகுதி என்பது பொருள். அதனான் அகன்று நாற்படையும் செல்லுதற்குரிய பெருவழிச்சாலை எனப்பட்டது. மாணவர் பலர் கூடிப்பயிலும் இடம் கல்விச்சாலை (கலாசாலை) தொழிலாளர் பலர் கூடிப் பணிபுரியும் இடம் தொழிற்சாலை. வடமொழி மரபுப்படி சாலா என வரும்.
சித்திரம் :
செத்து என்னும் உவம உருபிடைச் சொல்லுக்கு ஒத்தல், ஒப்பு என்பது பொருள். அது செய்து என்பதன் மரூஉவாகும். ஒவ்வுமாறு வரைவது ஓவியம். செய்திரமாகச் செய்வது செய்திரம் - செத்திரம் - சித்திரம் என அமைந்தது.
சுக்கு :
நீர்வற்றிச் சுருங்கிக் காய்ந்த இஞ்சி சுக்கு - சுருக்கானது. சுருக்கு. அது இடை ஒற்றுக் குன்றிச் சுக்கு என அமைந்தது. நீர்வற்றிய கல் சுக்கான் கல் எனப்படும். நீர்வற்றிய பாறை சுக்காம் பாறை எனப்படும்.
சுரபி : பசுமாடு, பாலைச் சுரந்தளித்தலின் சுரபி எனப்பட்டது. இலக்கியங்களில் சுரை - சுரை ஆன் என வழங்கும்.
சுரம் :
பாலை நிலம். உடல் வெப்பம் முதலியவற்றைக் குறிக்கும் தமிழ்ச் சொல். சூர் என்பது வெப்பம், சூடு, நெருப்பு ஆகியவற்றைக் குறிக்கும். சுர் என்பது இதன் வேர்ப்பகுதி. இதனடியாகப் பிறந்த சொற்கள் சூரி, சூரியன், சூரன், சுரனை, சுரம் (பாலை நிலம்) சுரம் (உடல் வெப்பம்)முதலியவையாகும். சூர் = தீண்டி வருத்தும் தெய்வத்திற்குப் பெயர்.
தடம் :
தோண்டி அகழப்பெற்ற சிறுகுளத்தின் பெயர். தட்டல் = அகழ்தல், தள் இதன் பகுதி. குளம் அகன்று பெரிதாயின் தடாகம் எனப்படும். வழி என்னும் பொருளில் வரும் தடம் என்பது தாள்களால் (காலால்) நடந்து செல்லுதற்குரியது என்னும் பொருளுடையதாகும். அதற்குத் தள்ளுதல் என்பது தொழிற்பெயர். தாள்-தள்-தடம் என அமையும்.
தண்டம் :
தண்டு+அம்-உள்ளீரமுடையதாய்த் திரண்டிருக்கும் கோல் தண்டம் எனப்படும். வாழைத்தண்டு, கீரைத்தண்டு, தாமரைத் தண்டு, மூங்கில் தண்டு முதலியவை அவ்வாறமைந்தனவாகும். தண்டினைக் கொண்டு பகைவரைக், குற்றம் புரிந்தோரை ஓறுத்தலால் தண்டித்தல் தண்டனை எனப் பெற்றது. மூங்கில் வில்லுக்குக் கோதண்டம் என்பது பெயர். தண்டினைக் கைக்கொண்டிருத்தலின் முருகனுக்குத் தண்டபாணி என்று பெயர். தண்டாயுதம் இதனடியாகப் பிறந்த பெயர்.
தூண்:
மேல்தளத்தைத் தாங்கி அதற்குப் பற்றுக்கோடாக நிற்றலின் தூண் எனப்பட்டது. தூ-பற்றுக் கோடு. அண் உத்திரம் முதலியவற்றைத் தாங்கி அணுகி நிற்றலால். தூ+அண்=தூண் என அமைந்தது. வடமொழியில் தூணம் எனவரும்.
தெய்வம்:
தெய்=பற்றுக் கோடு  இனிமை, இனிய பற்றுக் கோடாக இருப்பது தெய்வு (தேவு) அது அம் என்னும் விகுதியொடு கூடித் தெய்வம் என அமைந்தது. தமிழில் தெவு என்னும் உரிச் சொற்குக் கொள்ளுதல் என்பது பொருள். இதனடியாகப் பிறக்கும் சொல் தேவன், தேவி, தேவர் என்பனவாகும்.
தோள்:
மேலும் கீழுமாகக் கைகளைச் சுற்றிச் சுழற்றுவதற்கு அடியாக நின்று துவளுதலின் கையில் மூலப்பகுதிதோள் எனப்பட்டது. துகள்  தூள் என அமைந்தாங்குத் துவள்  தோள் என அமைந்தது.
நகர்:
நகு+அர் = நகர். இச்சொல் முதற்கண் மனைவி மக்களோடு நிறைவாக மகிழ்ந்துறையும் குடிலை உணர்த்திப் பின், காவற்படையோடும் கூடிய மன்னன் மகிழ்ந்துறையும் அரண்மனையையும் பின் மேலாய என்னும் பொருள்தரும் விண் என்பதனுடன் கூடி தேவர்கள் மக்களுக்கு அருள்புரியும் இடம் என்னும் கருத்தில் விண்ணகரம் என ஆக்கம் பெற்றுத் தேவகோட்டத்தை உணர்த்தி நின்று, பின்  மனை, அரண்மனை, தேவகோட்டம் நிறைந்த பேரூரை உணர்த்திற்று. அம் என்னும் விகுதியொடு கூடி நகர், நகரம் என உணர்த்தி வழங்குகின்றது. நகுதல்  மகிழ்தல், கூடுதல் என்னும் பொருளுடையதாகும். புறத்தே சென்று எய்திய வருத்தம் நீங்கி மகிழ்ந்துறையும் இடமாதலின் வீடு நகர் எனப்பட்டது.
நாகரிகம்:
மேற்கூறப் பெற்ற நகரங்களில் வாழும் மக்கள் மேற்கொண்டொழுகும் பண்பாடு. நகர்+இகம்=நாகரிகம். மக்கள் முன்னேற்றப் பண்புகளை உணர்த்தி ஆக்கம் பெற்றது. நாகர் என்னும் மக்கள் இனத்தார் மேற்கொண்ட பண்பாடு நாகர்+இகம்=நாகரிகம் என்பது வெள்ளை விளக்கமாகும்.
நாவாய்:
 
நீரிற் செல்லும் ஊர்திகளுள் ஒன்றற்குரிய பெயர். நீர் ஊர்திகள் படகு, பரிசு பஃறி (பறி) ஓடம், தோணி, அம்பி, கப்பல் எனப்பலவுள ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தால் அமைந்த பெயர்களாகும். அகன்று ஆழ்ந்த தோணியின் இருபுறமும் நீண்ட துடுப்புக்களை இணைத்து அசைத்துச் செலுத்தப்பெறும் நீர் ஊர்திக்கு நாவாய் என்பது பெயர். தோணி அகன்ற வாயைப் போலவும் துடுப்புகள் நாக்கைப் போலவும் அமைந்திருத்தலால் நா+வாய்=நாவாய் எனப்பட்டது. இது வடமொழியில் தத்திதாந்த முறையில் நௌகா எனப்பட்டது. அய்ரோப்பிய மொழிகளில் நேவி எனப்பட்டது.
இமை:
கண்களின் மூடியாக உள்ள உறுப்பு இமை. இம் என்னும் ஒலிக்குறிப்பால் (இம்+அய்=இமை) அமைந்த பெயராகும். இமைகள் மூடித்திறக்கும் நேரம் இமைப்பொழுது எனப்படும். பின்னர் இமை என்பதே காலத்தின் பெயராய் அமைந்தது. வடமொழியில் இமை என்பது திரிந்து நிமி-நிமிஷம் என அமைந்தது. நிமியின் உட்கூறுதுமி.
படிவம், படிமம்:
படிதல் = ஒத்தல். படி = தன்மை. தன்மையால் வடிவால் ஒப்பியிருக்கும் உரு, வடிவு ஆகியவை படிவம் எனப்பட்டது. வடமொழியில் வகரம் நீங்கி இறுதி நீண்டு படிமா எனவரும். எழுதப்பெற்ற ஓலை, சித்திரம், செதுக்கப் பெற்ற சிற்பம் இவற்றைப் படிவம் என்ப.
பரம்:
பிரபஞ்சம் முழுமையும் பரந்து விரிந்து நிற்கும் பேராற்றல் பரம் (பொருள்) எனப்பட்டது. பால் காட்டும் விகுதி சேர்ந்து பரமன் என அமைந்தது.
பிரிதி, பருதி:
இரண்டும் கதிரவனைக் குறிக்கும். பரி என்பதற்குத் தூய்மை, விரைந்து செல்லுதல் என்பது பொருள். தி-என்பது தீ என்பதன் குறுக்கமாகும். பரிந்து செல்லுதலும், புகையின்றித் தூய்மையாக இருத்தலும் பற்றிச் சூரியன் பரிதி எனப்பட்டது. பரு=பருமை உலகத் தீக்களுள் மிகப் பெரிதாக  பருமையாக இருத்தல் பற்றிச் சூரியனுக்குப் (பரு+தீ) பருதி எனப் பெயர் அமைந்தது.
பவளம், பவழம்:
பவளம் கடல்படு பொருள்களுள் ஒன்று. அணுக்களாலும் கிருமிகளாலும் உருவாவது பாறை வடிவாகவும், கிருமிகளால் உருவாவது கிளைத்துச் செடியாகவும் இருக்கும். கடலுக்குப் பௌவம் என்பது ஒருபெயர். பள்ளமாக ஆழ்ந்திருப்பது என்பது இதன் பொருள். பௌ என்பது எழுத்துப் போலியாகப் பவ் எனவரும் பாறை குழைந்த சேறு போலக் கெட்டியாக விளைதலின் அளம் எனப்பட்டது. அளம் = சேறு பவ்+அளம் என அமைந்தது. கொடிபோல் விளையும் பவழம் கடலுக்குள் தீப்பிழம்பு போல இருத்தலின் பவ்-வழல் (அழல்=நெருப்பு) என்பவற்றுள் ஒப்புமையாக்கத்தால் கற்பவளத்தையும், பவழம் என்பது கொடிப்பவழத்தையும் குறிக்கும். பவளம் வடமொழியில் பிரவாளம் எனப்படும்.
பழம்:
பழுத்தல், முதிர்தல், முதிர்ந்து மென்மையாதல், இனிமையாதல் என்னும் பொருள்களைக் கொண்ட சொல் காயின் முதிர்ந்த நிலை  கனிந்த நிலை பழம் எனப்பட்டது. வடமொழியில் ழகர மின்மையின் பலம் (பல) என அமைந்தது. 
புவி:
மண்ணுலகம் சிற்றுயிர்களையும் மரஞ்செடி கொடிகளையும் தன்னுள்ளிருந்து வெளிப்படுத்தலால் புவி எனப்பட்டது. வெளிப்படுத்தலைப் பூத்தல் என்பர். பூத்தலைச் செய்வது பூவி-புவி. வடமொழியில் வகரம் மகரமாகத் திரிந்து பூமி எனநிற்கும். பிறசொற்களுடன் இணைந்து வருமிடத்து விகுதி குன்றிப் பூமண்டலம் பூதலம் எனவரும்.
பூஜை:
(பூசனை) மந்திரம் ஓதிப் பூக்களைக் கொண்டு இறைவனை வழிபடுதலின் பூவால் செய்யப்படும் செயல் என்னும் கருத்தில் பூ+செய்=பூ செய்  பூஜை என அமைந்தது. அனை என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி. பூ+செய்+அனை=என்பவை பூசனை என ஆக்கம் பெற்றது. பூவைச் சொரிந்து வழிபடுதலால் பூசாரி என வந்தது எனினும் பொருந்தும். வடமொழியில் பூஜா என திரிந்து வழங்கும்.
பூதம்:
பிரபஞ்சத்தில் தன்மாத்திரைகளாகிய ஆற்றல் நீர் நெருப்பு காற்று நிலம் வெளி எனப் பூத்தலால் அவை அய்ம்பெரும் பூதங்கள் எனப்பட்டன. பதினெண்கணங்களுள் ஒன்றான பூதம் என்பது பருத்த உடம்பையுடைய தெய்வ ஜாதியைக் குறிக்கும் வடமொழிச் சொல்.
பேச்சு:
நாவசைத்து வாயால் சொற்களைப் பெய்தலால் ச என்பது நாவைக் குறிக்கும் குறிப்பொலி ச்+ஒல்=சொல். பெய்+சு=பேச்சு, பேசு, பெய்சு என்பவற்றின் திரிபாக அமைந்தது பாஷா என்னும் வடசொல் பேச்சு மொழியால் அமைந்த உரைக்குப் பாஷியம் என்பது பெயர்.
மங்கலம்: மண்+கலம்=மங்கலம் என ஆக்கம் பெற்ற சொல் மண்=நாற்றம் மணத்தல் நாறுதல். கலம்=கலத்தல், உடம்பை அணுகிக் கலத்தலால் அணிகலன் எனப்பட்டது. மங்கலத்திற்கு மணவணி என்பது ஒருபெயர். மணத்தல்=விளங்கித் தோன்றல் பரவும் பண்புடையது மணம் ஆதலின் நற்செயல்கள் மங்கலம் எனப்பட்டது. வடமொழியில் லகரம் ளகரமாகி மங்கலம் எனவரும் அதனான் மங்கலம் என்ப மனைமாட்சி என்றார் திருவள்ளுவர்.
மணி:
மண்ணப் பெற்ற பொன், கல், பளிங்கு இவற்றிற்குரிய பெயர் மண்ணுதல்=கழுவித் தூய்மை செய்தல், ஒளி ஏற்றுதல். மண்ணுமங்கலம்  மன்னன் முடிசூடி நீராடுதல். மண்ணாமுத்து  கழுவித்தூய்மை செய்யப்படாத கழுவுதல்  நீராற் கழுவுதல் ஒருவகை. களிம்புபோக ஒளியேற்றுதல். ஒரு வகை சாணைதீட்டி ஒளியூட்டுதல். ஒரு வகை சாணையில் தீட்டப் பெற்ற அரதனக் கற்கள். அம்முறையில் மணி எனப்பெற்றன. மணியின் வடிவம் திரட்சியாகவும் உருட்சியாகவும் உள்ளமையால்  ஒலியெழுப்பும் கருவியின் நா.மணி எனப்பட்டது. மணிகளை உருட்டி எண்ணுவதால் கால அளவை மணி எனப்பட்டது.
மாத்திரை:
கால அளவையின் சுருக்கம். மா=அளவு. திரை=சுருக்கம் ஓர் எண்ணாக நிற்கும் நிலை சுருக்கம் கண்ணிமைக்கும் நொடிக்கும் அளவு ஒரு மாத்திரை என்பர் இலக்கண நூலோர். கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை என்பது தொல்காப்பியம் இனி மருந்து பற்றிய மாத்திரை என்பதும் ஒத்த அளவாகத் திரட்டியது என்னும் பொருளுடையதாகும். மா=அளவு. திரை = திரட்டியமைந்தது.
மாதம் :
மதி = அளவு. அளவினைக் காட்டுதலால் திங்களுக்கு மதி என்று பெயர். காருவாவிலிருந்து ஒவ்வொரு பிறையாதவள்வது நிலைமை. (திதி) ஒளி உவாகமுற்றுவது ஒரு பக்கம் (பட்சம்) மீண்டும் தேய்ந்து காருவாவது ஒரு பக்கம். ஆக இரண்டு பட்சமும் சேர்ந்து முப்பது நாள் அளவைக் காட்டுதலின், நிலாவுக்கு மதி என்று பெயராயிற்று. மதியால் அளக்கப்பெற்ற கால எல்லை மாதம். வடமொழியில் இதனை மாஸம் என்பர்.
மாயை :
மறைப்பு உண்மையை மறைத்துப் பொய்ம்மையாகத் தோற்றுவது மாயம். இது மாய்கை என்பதன் இடைக்குறை மாயை வடமொழியில் மாயா என வரும். மாயம் என்பதனடியாகப் பிறந்த சொல் மயக்கம். மயக்கத்தைச் செய்வது 
மாயை.
மாலை :
மால்=மயக்கம். ஈண்டு மயக்கம் என்பது ஒன்றோடொன்று இரண்டறக் கலத்தலை உணர்த்தும். பன்னிறப் பூக்களை ஒன்றாகத் தொடுப்பின் அது மாலை. பகற்பொழுதும் இரவுப் பொழுதும் கலந்து மயங்கும் காலப்பொழுது மாலை. மார்புக்கு மற்றொரு பெயர் மல்லாகம் மல்=மார்பு. மார்பில் விளங்குமாறு அணியும் அணியும் மாலை எனப்படும்.
வட்டம்:
சுருளாக வளைந்துள்ள நிலை வட்டம். வல்+து=வட்டு+அம்=வட்டம். வள=வளைவு. வள என்பதனடியாகப் பிறந்தவை. வள்ளம், வளாகம். வட்டமாக நின்று மகளிர் ஆகும். கூத்து வள்ளைக் கூத்து எனப்படும். வள்ளி=கொடி. வளைந்து நெளிந்து படர்தலால் கொடி வள்ளி எனப்பட்டது. கிழங்கைக் குறிக்கும் வள்ளி என்பது வளமானது வளம் என்பதனடியாகப் பிறந்ததாகும்.
வீசுதல் - வீச்சம் :
பரவிவிரிதல் எடுத்தெறிதல் - நாற்றம் என்னும் பொருள்களில் வரும். கைவீசி நடந்தாள் காற்று வீசுகிறது, மணம் வீசுகிறது எனவரும் வீசி நிகழும் மணம், நாற்றம், வீச்சம் எனப்பட்டது. வீசும் நிலை என்ற பொருளில் வடமொழியில் வாசம் என்னும் சொல் மூக்கின் வழியாகக் காற்றை உள்ளிழுத்துக் கொள்ளும் நிலையை உணர்த்தும். ஸ - வெளிப்படுத்தல். வஸ் உள்ளிழுத்தல் ஸ்வஸ் என்னும் ஒலிக்குறிப்பு. சுவாசம் என ஆக்கம் பெற்றது. அவ்வடிப்படையில் மூக்கால் நுகரும் சுவை வாசனை எனப்பட்டது.
வேலை :
வேலை = கடல்.  வியல் என்னும் உரிச்சொற்கு அகலம் என்பது பொருள். வியலென் கிளவி அகலப் பொருட்டே (உரிச்....) வியல் என்பது ஐகார விகுதி பெற்று வியலை என்றாகி, அகழி என்பது ஆழி என நீண்டாற் போல வேலை நீண்டமைந்தது. வடமொழியில் வேலா எனத் திரித்துக் கொள்வர்.
இனி வடிவம் ஒன்றாக அமைந்து பொருளால் வேறுபட்டிருக்கும் சொற்கள் பலவுள. அவற்றை வடிவ ஒப்புமை கருதி வடசொல் என மயங்குதலும் உண்டு. எடுத்துக்காட்டாக.
ஆசான் என்னும் பெயர் ஆசிரியன் என வரும் ஆக+ஆன்=என அமையும். ஆசு-பற்றுக்கோடு. மாணவனுக்குப் பற்றுக் கோடாக உள்ளவன் ஆசான் என ஆக்கம் பெற்றது. ஆசு+இரி+அன். ஆசு=குற்றம்குறை. இரி=இரிதல், நீக்குதல். அறியாமை என்னும் குறையை நீக்குபவன் ஆசிரியன். இவை தமிழ் - வடமொழி ஆசான் என்பது. ஆசாரியன் என்பதன் பிறிதொரு வடிவம். ஆசாரம் - ஒழுக்கம். ஆசாரியன் = ஒழுகிக்காட்டுபவன், நடந்து காட்டுபவன் என்னும் பொருளுடையது.
தருமம் :
அற்றார்க்கு ஒன்றையீதல் - தருதல் = தருமம். இது தமிழ். தர்மம் - வடசொல். செயற்பாடு ஒழுக்கம், ஆசிரம ஒழுக்கம் இது வடமொழி.
தீர்த்தம் என்பது தமிழில் தாகத்தைத் தீர்ப்பது - நீக்குவது என்னும் பொருளுடையது. வடமொழியில் தோஷங்களைப் போக்குவது என்பது பொருள். தமிழில் தயவு என்பதற்குத் தாயன்பு என்பது பொருள். வடமொழியில் கருணை என்பது பொருள். தமிழில் எட்டு என்பது வடமொழியில் அட்ட, அஷ்ட எனத் திரியும். தமிழில் ஆகாயம் என்பது வடமொழியில் ஆகாசம் என வரும். தமிழ் வண்ணம் - வடமொழி வர்ணம்.
இங்ஙணம் தமிழின் வேரடியாகவும் திரிபாகவும் வடமொழியில் எழுத்தொலி ஓசைகட்கு ஏற்ப வழங்கப்படும் சொற்கள் தமிழில் தமிழ் எழுத்தொலி ஓசைகட்கு ஏற்பத் திரித்துக் கொள்ளப் பெற்றவையே. (பழந்தமிழ்த் திரிபுகளே) தமிழ் இலக்கியச் சொல்வகை நான்கனுள் ஒன்றாகிய வடசொல் என்பதாகும்.
********
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள், வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? என்ற தனது ஆய்வுநூல், தமிழ்ச் சொற்களை சமஸ்கிருத சொற்களாக ஆரியர்கள் மாற்றி ஏமாற்றி வருவதை மிகத் தெளிவாக விளக்குகிறார். இந்நூலை சென்னையிலுள்ள பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. (பூம்புகார் பதிப்பகம், பிரகாசம் சாலை, சென்னை-108, தொலைபேசி எண்: 25267543). இந்நூலிலிருந்து சில சொற்கள் எடுத்துக்காட்டாக விளக்கத்திற்காக கீழே தரப்பட்டுள்ளன:
காட்சி
தமிழ்ச்சொற்களையெல்லாம் வடசொற்கள் என்று ஆக்குவதில் பார்ப்பனர்க்குத் தனி ஆசை. அவ்வாறு செய்வதால் இந்நாட்டுக்கும் அவர்கட்கும் இல்லாத தொடர்பை உண்டுபண்ணிக் கொஸ்ளகிறார்கள். ஆனால் இந்தத் தீய முயற்சியை அறிவுடைய தமிர்களும், நடு நிலையுடைய உலகமும் அறிந்து நகையாடக்கூடுமே யென்பதை அவர்கள் கருதுவதேயில்லை.
தூங்கிக்கொண்டிருந்தார்கள் தமிழர்கள். அது அந்த நாள். பார்ப்பனர் அல்லல் புரிந்தார்கள் அளவில்லாமல்.
விழித்துக்கொண்டார்கள் தமிழர்கள். இது இந்த நாள். அல்லல் புரியாது அடங்கினார்களா எனில் இல்லை.
காட்சி - தொழிற் பெயர். அதில் காண், முதனிலை, சி-தொழிற்பெயர், இறுதிநிலை. காண் என்பதின் இறுதியில் உள்ள -ண், என்ற மெய்யானது - சி, என்ற வல்லினம் வந்தால் - ட் - ஆகும் என்பது சட்டம். அதனால்தான் காட்சி என்றாயிற்று. காணல், காண்டல், காட்சி அனைத்தும் ஒரே பொருள் உடையவை. எனவே காட்சி தூய தமிழ்ச் சொல். இதைப் பார்ப்பனர் தம் ஏடுகளில் காக்ஷி என்று போடுவார்கள். காட்சியைக் காக்ஷி ஆக்குவதில், தமிழ்ச்சொல்லை வடசொல் ஆக்குவதில் அவர்கட்குள்ள ஆசை புரிகிறது அல்லவா? இவ்வாறு காக்ஷி என்று பார்ப்பனர்கள் தம் ஏடுகளில் கொட்டை எழுத்துக்களில் வெளியிடுவதால் நம்மவர்களும் அதையே பின்பற்றத் தொடங்கி விடுகிறார்கள். பார்ப்பான் சொன்னது பரமசிவன் சொன்னதல்லவா? அதனால்தான் நாம் பொதுவாக நம்மவர்கட்குச் சொல்லுகிறோம்.
தமிழ் தமிழர்க்குத் தாய்! தமிழிற் பிழை செய்வது தாயைக் குறைவு படுத்துவதாகும். படக் காட்சிக்குரிய அறிவிப்போ, திருமண அழைப்பிதழோ, வணிக அறிவிப்புப் பலகையோ எழுதும் போது தமிழறிஞர்களைக் கலந்து எழுதுங்கள் என்கிறோம்.
இனி இவ்வாறு தமிழ்ச் சொற்களையெல்லாம் பார்ப்பனர் வடசொற்கள் என்று சொல்லிக்கொண்டு போகட்டுமே, அதனால் என்ன தீமை என்று தமிழரிற் சிலர் எண்ணலாம்.
அவ்வாறு அவர்கள் இந்நாள் வரைக்கும் விட்டு வைத்ததால் என்ன ஆயிற்றுத் தெரியுமா? வடமொழியினின்று தான் தமிழ் வந்தது, வடவர் நாகரிகத்திலிருந்துதான் தமிழர் நாகரிகம் தோன்றியது என்றெல்லாம் அவர்கள் சொல்வதோடு அல்லாமல், உலகையும் அவ்வாறு நம்பவைக்கவும் முயல்கிறார்கள்.
அதுமட்டுமா? மேற்சொன்ன காரணங்களைக் காட்டி, அவர்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர்கள் என்னும் முடிச்சுமாறித் தனத்தையும் மெய் என்று நிலை நாட்டி வருகிறார்கள்.
இது வட சொல்லன்று; இன்ன காரணத்தால் இது தமிழ்ச் சொல் என்று விளக்கிவர முடிவு செய்துள்ளோம். தமிழர்கள் ஊன்றிப்படிக்க.
கணம்
இயல்பாக ஒருவன் கண் இமைக்கும் நேரத்திற்குப் பெயர். இச்சொல் கண் என்பதிலிருந்து பிறந்தது. கண் அம் கணம் ஆகி, அது கண்ணிமைக்கும் நேரத்திற்கானதை ஈறு திரிந்தோர் ஆகு பெயர் என்பர்.
இவ்வாறு கண் என்பது அம் பெறாமலே கண்ணிமைப் போது என்ற பொருள் தருவதும் உண்டு.
கயற்கணின் அளவும் கொள்ளார் - (சீவக சிந்தாமணி 1393)
என்று வந்துள்ளதும் கருதத்தக்கது. எனவே கணம் வந்தவர் சொல்லன்று. செந்தமிழ்ச் செல்வமே என்று கொள்க. இதைப் பார்ப்பனர் க்ஷணம் என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறுவார்கள். கணமும் க்ஷணமும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றன. கணம் என்ற தமிழ்ச் சொல் பழந்தமிழ் நூல்களில் நாம் எடுத்துக் காட்டியுள்ளவாறு காரணப் பெயராய் வந்துள்ளது. இந்நிலையில் நாம் அறிய வேண்டியது என்னவெனில், வந்தவர் நம் தமிழாகிய கணத்தை க்ஷணம் என்று தம் வாய்க்கு வந்தவாறு சொல்லிக்கொண்டார்கள் என்பதே.
தானம்
தன்மை என்பது மைஈற்றுப் பண்புப்பெயர் ஆகும். மைஈற்று பண்புப் பெயர் ஆகும். மை ஈற்றுப் பண்புப் பெயர்கள் அனைத்தும் பல மாறுதல்களை அடையும்.
ஈறு போதல் இடை உகரம் இய்யாதல்
ஆதிநீடல் அடி அகரம் ஐயாதல்
தன் ஒற்று இரட்டல் முன்னின்ற மெய்திரிதல்
இளம்மிகல் இனையவும் பண்புக்கியல்பே
என்ற நன்னூற் பாட்டினால் இன்னின்ன மாறுதல் அடையும் என்பது அறிக. மேற்சொன்ன தன்மை என்ற பண்புப் பெயர் ஈறுபோதல் என்ற சட்டத்தால் மை கெட்டுத் தன் என நின்றது. அந்தத் தன் என்பது ஆதி நீடல் என்ற சட்டத்தால் தான் என நீண்டு நின்றது. அந்தத் தான் என்பது அம் என்ற பண்புப் பெயர் இறுதி நிலை பெற்றுத் தானம் ஆயிற்று. தானம் எனபதன் பொருள் தன்மை, உயர்வு என்பன. எனவே, தானம் என்பது கொடைத்தன்மை என்று உணர்தல் வேண்டும்.
தானம் என்பது ஈண்டுக் காட்டிய பொருளில் அமைந்து இருப்பதை அடியில் வரும் சிந்தாமணி (2024)ச் செய்யுளாலும் அறியலாம்.
கருங்கற் பிறப்பின் அல்லால்
வலம்புரி காணுங் காலைப்
பெருங்குளத் தொன்றும் தோன்றா
பிறை நுதல் பிணையினீரே.
அரும் கொடைத் தானம் ஆய்ந்த அருந்தவம்
தெரியின் மண்மேல்
மருங் குடை யவர்கட் கல்லால்
மற்றையவர்க் காவ துண்டோ.
இச் செய்யுளில் வந்துள்ள அருங்கொடைத் தானம் என்ற தொடர் மேலே நாம் காட்டிய வண்ணம் தானம் என்பது தன்மை என்று பொருள்படுவது காண்க.
எனவே, தானம் என்ற சொல் தூய தமிழ்ச் சொல் அன்றோ? இதைப் பார்ப்பனர் வடமொழிச் சொல் என்று கயிறு திரிப்பர். தானம் என்ற சொல் வடவர் இலக்கியத்திலும் இருக்கின்றதே எனில், ஆம், வந்தேறிகளாகிய வடவர் தமிழினின்று எடுத்துக் கொண்டார்கள் என்றோ அறிய வேண்டும்.
(குயில், குரல்: 1, இசை: 1, 1--6--8)
நேயம்
இது நேசம் என்னும் வடசொல் சிலதவாம். சீவக சிந்தாமணியில் 3040-ம் செய்யுள்.
ஆசை
இது ஆசா என்ற வடசொல்லின் திரிபு என்று கதைப்பர் பார்ப்பனரும், அவர் வால்பிடிக்கும் தமிழர் சிலரும்.
மனம் தன்னிலை நிற்றல் பொருள் அடையத் தக்க நிலை என்பர் அறிந்தோர். அஃதன்றி அம் மனம் வெளிப் பொருள் நோக்கி அசைதல் என்பது துன்பம் பயப்பது அன்றோ? எனவே அசைதல், அல்லது அசைவு என்பது மனத்தின் அசைவாயிற்று. அசைதல் தொழிற் பெயர். அசை முதனிலைத் தொழிற் பெயர். ஆசை முதனிலை திரிந்த தொழிற் பெயர். ஆசை தூய தமிழ்ச் சொல் என்க. மனம் பிறவற்றில் செல்லுதல் என்பது அதன் பொருள். உதவி என்பதற்கு ஒத்தாசை என்றது இழிவழக்காக வழங்கி வருகிறது. இந்த ஒத்தாசை என்பதில் அசை என்பதுதான் ஆசை என நீண்டது என அறிதல் வேண்டும். அசைதல் என்பதற்கு ஆசை என ஆனதற்குப் பேச்சு வழக்கில் வந்துள்ள இதையும் கண்டு நினைவுறுத்தினோம்.
பூசை
இது பூசா என்ற வடசொல்லின் சிதைவு என்று ஏமாற்றுவார் ஏமாற்றுவர்.
பூசு+ஐ என்பன தொழிற் பெயர் முதனிலையும் இறுதி நிலையுமாகும். பூசுதல் என்பதுதானே இது?
பூசுதல் என்றால் தூய்மை செய்தல், கழுவுதல் என்பது பொருள். இவ்வழக்கு இன்றும் திருநெல்வேலிப் பாங்கில் இருக்கக் காணலாம். இனிப் பூசு என்ற முதனிலை அன் சாரியை பெற்றுப் பூசனை என்றும் வரும். எனவே, பூசை, பூசனை தூய தமிழ்ச் சொற்கள் என முடிக்க.
இமையம் இமைத்தல்  --ஒளித்தல். இமையமலை பனிமூட்டத்தால் ஒளி செய்தலால் அப்பெயரிட்டு அழைத்தார்கள் பண்டைத் தமிழர்கள்.
எனவே, காவியம், காப்பியம், இமையம் என்பன செந்தமிழ்ச் செல்வங்கள். அனைவரும் வந்தவர் மொழியல்ல என நெஞ்சில் நிறுத்துக.
வேதம்
வேதம் வந்தவர் மொழியன்று, வேய்தல்-  மறைத்தல், வேதல் என மருவியது. வேய்ந்தான் என்பது வேய்ந்தன் என மருவியது போல, பின் வேதல் என்பது வேதம் என ஆனது. ஈறுதிரிந்த தோர் ஆ.குபெயர். கபிலம் என்பதிற் போல.
வேய்ந்தன் என்பதின் வேய்தல் எனின் கொற்றக் குடையால் மறைத்து காத்தல் என்று கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு மறைமலையடிகளும் உரைத்தார். எனவே, வேதம் செந்தமிழ்ச் சொல்லே எனக் கொள்க.
ஆதி
ஆதி என்பது வடசொல்லாம். அச்சொல்லும் திருவள்ளுவருக்கு தாயின் பெயராம். அந்தத் தாய்கூட ஒரு புலைச்சியாம். ஆதி வட சொல்லன்று. தூய தமிழ்ச் சொல்லே. அஃது ஆதல் எனப் பொருள்படும் தொழிற்பெயர். ஆ முதனிலை, தி -இறுதிநிலை செய்தி, உய்தி என்பவற்றிற் போல, ஆதி -முதன்மை, இதை வடவர் மூலப் பிரகிருதி என்பர்.
பகவன்
 
பகவான் என்று வடவர் சொல்லுகிறார்களே அதுதானாம் இது. இது கலப்பில்லாத முட்டாள்தனமான பேச்சு. பகல் என்பதும் பகவு என்பதும் ஒரே பொருளைய சொற்கள். பகல் என்பதில் பகு முதனிலை. பகவன் என்பதில் பகவு முதனிலை. பகல் என்பதற்கும் பகவு என்பதற்கும் நடுவுநிலை. அறிவு என்பன பொருள்கள்.
பகவு என்பதற்கு பாவேந்தர்கள் அன் இறுதிநிலை சேர்த்துப் பகவன் என்று சிறப்புறுத்துவார்கள். எனவே பகவு, பகவன் இவைகட்கு அறிவு, அறிவன் என்பன பொருள். பகவன் தூய தமிழ்ச்சொல். பகவன் வடசொல்லாம், அது திருவள்ளுவரின் தந்தையின் பெயராம். அந்த பகவனும் பார்ப்பனனாம். ஆதியும் பகவனும், புலைச்சியும் பார்ப்பனனுமாம். திருவள்ளுவர் பேரறிஞராகத் திகழக் காரணம் அவர் பகவன் என்னும் பார்ப்பனனுக்குப் பிறந்ததாகும். இப்படி அந்தப் பாவிகள் ஒரு கதை கட்டி விட்டிருக்கிறார்கள்.
(குயில், 24-.6.-58)
சலம்
 
ஜலம் என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறுவார்கள் கலகக்காரர்கள்.
சலம் என்பது காரணம் பற்றிவந்த தூய தமிழ்ச் சொல். சல, சல என்று இயங்குவது காரணமாகத் தண்ணீர் சலம் என்று பெயர் பெற்றது. இவ்வாறு மறைமலையடிகளும் கூறியருளினார். இதைப் பார்ப்பனர் ஜலம் என்கிறார்கள் அல்லவா? நாத்திருந்தாமை அவர் கொண்ட குற்றம். அதனால் சலம் அவர் மொழியாகிவிட்டது.
உவமை
உவமை என்பது உபமானம் என்பதன் சிதைவாம். இவ்வாறு மொட்டைத் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிபோடுவர் பார்ப்பனரும், அவர் அடியாரும். பொருள் நிலை உணர்வித்து உவப்புறச் செய்வது உவமை. உவத்தல், உவமை ஒரு பொருட் சொற்கள். தாமரை மலர் முகம் என்பதில் தாமரை மலர் உவமை முகம் உவமை ஏற்கும் பொருள். இவ்வாறு கூறாமல் முகம் என்று மட்டும் சொன்னால் முகம் என்ற பொருளின் நிலையை நன்கு உணரச் செய்ததாகாது என்பதை நோக்குக. உவப்புறச் செய்வது எனின் இச்சொல் காரணப் பெயராதலும் அறிக. எனவே, உவமை செந்தமிழ்ச் செல்வமே என்க.
அமிழ்து
இது குன்று, குன்றம் என அம் சாரியை பெற்றது போல், அமிழ்தம் என்றும் வரும். அன்றியும் அமுதம் அமுது என்றும் மருவி வழங்கும். இதை பார்ப்பனரும் அவர்களின் அடியார்க்கடியாரும் அம்ருதம் என்னும் வடசொற் சிதைவு என்று கதைப்பர். அது கான்றுமிழத் தக்கதோர் கதை என்க. அமிழ்து என்பது அமிழ்+து எனப்பிரியும். இதன் பொருள் மேலிருந்து அமிழ்கின்ற உணவு என்பது மழைக்குப் பெயர். அமிழ்+து வினைத்தொகை நிலைத் தொடர். அமிழ்து மழைக்குப் பெயர் என்பதென்ன? மழையானது வாழ்வார்க்குப் பயன்படும் வகையில், வளவயல் வறளாது உயிர் மருந்தாய்ப் பெய்யும் நிலையில் அமுது எனப்படும். மேலிருந்து அமிழும் உணவும் என்றும் இத்தொடரின் பொருள் கண்டு இன்புறுக. து -உணவு. இதனாற்றான் வள்ளுவரும்,
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
என்று குறித்தார். எனவே அமிழ்து, அமிழ்தம், அமுதம், அமுது என்பன அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களே என்க.
மழை என்று தோன்றிற்று. அன்று தோன்றிற்று அதன் பெயராகிய அமிழ்து என்பது. அதன் பின் அதாவது கிரேதாயுகத்தில் பாற்கடல் கடைந்ததில் வந்ததாக உள்ள பொய்க்கதையில் வந்துள்ளது அம்ருதம் என்ற சொல். இதனால் அமிழ்தை அம்ருதம் என்று எடுத்தாண்டனர் வடவர் என்று தெளிதல் வேண்டும்.
ஆலயம்
இதையும் வடசொல் என்று கூறுகின்றார்கள் பார்ப்பனரும் அவர் அடியார்க்கடியாரும். ஏன் கூறமாட்டார்கள். ஏமாந்தாரும் காட்டிக் கொடுத்தாரும் நிறைந்த தமிழகத்தில்? ஆல் என்பதனடியாகப் பிறந்தது இச்சொல். ஆல்+அ+அம் எனின் அவ்வும், அம்மும் சாரியைகள். அம் என்பது அகம் என்பதன் திரிபு எனினும் அமையும். ஆலயம் என்பன் நேர்பொருள் ஆலாகிய இடம் என்பதாம். முன்நாளில் ஆலின் அடியில் அமைந்த நிழல் மிக்க பேரிடத்தை வழக்குத் தீர்ப்பிடமாகவும், கல்வி பயிலிடமாகவும், விழா நடைபெறுமிடமாகவும் கொண்டு பெருமைப்படுத்தினார்கள். அதுவே பிற்காலத்தில் உருவன வணக்கத்திற்குரிய இடமாயிற்று என்றும் ஆராய்ந்துரைத்தார்கள் அறிஞர்கள் பலர். ஆலயம் இடம் என்ற பொருளில் இலக்கியங்களிலும் வந்துள்ளது.
.................. மழை இடிப்புண்டு ஓர் நாகம் ஆலயத்தழுங்கி யாங்கு மஞ்சரி அவல முற்றாள். (சீவக சிந்தாமணியின் 897 ஆவது பாடல்) என்று வரும் அடிகளில் ஆலயம் என்பது நாகம் தங்கும் இடம் என வந்துளது.
தான் விளையாடி மேனாள் இருந்ததோர்
தகைநல் ஆலைத்
தேன் விளையாடும் மாலை யணிந்தபொற்
பீடம் சேர்த்தி
யான் விளையாடும் அய்ந்தூர் அதன் புறம்
ஆக்கினானே!
என்ற சிந்தாமணிச் செய்யுளையும் நோக்குக. எனவே, ஆலயம் காரணப் பெயராகிய தூய தமிழ்ச் சொல்லே.
நாகரிகம்
 
நகர சம்பந்தம் நாகரிகம் என்று கரடி விடுவார் தமிழின் பகைவர். அன்று! நாகரிகம் தூய தமிழ்ச் சொற்றொடர் என்க, என்னை?
நாகம் என்ற சொல்லுக்கு,
நாகன் விண் குரங்கு புன்னை
நற்றூசு மலை பாம்பு யானை
என்ற நூற்பாவினால், இத்தனை பொருள்கள் இருப்பது அறியப்படும்.
எனவே, நாகம் மலைக்கும் பெயர். நாகர் என்பது மலையாளிகள் என்பதாயிற்று. இனி இகத்தால் என்பது பகைத்தல் வெறுத்தல் என்பதாம். 
நாகரிகம் என்பது நாகர்களை  மலையாளிகளை வெறுப்பதோர் பண்பாடு என்க. 
நாகரிகம் ஈறு திரிந்ததோர் ஆகுபெயர். பண்டு தீயொழுக்கத்தவரான ஆரியர் தமிழரால் புறந்தள்ளப்பட்டனர். அவ்வாரியர் மலைப்பாங்கில் ஒதுங்கி வாழ்ந்தனர். அவர் தீயொழுக்கம் தமிழர்க்குத் தீராத வெறுப்பை உண்டாக்கிற்று. தமிழரிடத்து  ஓர் புதிய பண்பாடு தோன்றியது. நகரை  நாகரின் தீயொழுக்கத்தை வெறுப்பதென்று அன்று தோன்றியதே நாகரிகம் என்பது. ஆதலின் நாகரிகம் காரணம் பற்றி வந்த தமிழ்ச் செல்வமே என்க.
(குயில், 08.07.1958)
திராவிடம்
இது தமிழம் என்பதன் திரிபு, ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவைகளில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன.
பாலி மொழியிற் பகர்ந்த மகாவமிச
நூலில் ஒருசெய்தி நோக்குகின்றோம்! மேலாம்
தமிழ் என்ற சொல்லைத் தமிழோஎன்றார்! ஏன்?
தமிழரல்லார் நாக்குத் தவறு.
தமிழ் நாட்டை ஆசிரியர் தாலமி முன்னாள்
தமிரிசி என்றுரைத்தார். தாம்ஓர், தமிழரல்லர்!
ஆதலினால் தோழா அயலார் ஒருசொல்லை
ஓதலினால் மாறுபடல் உண்டு
தமிழென்று சாற்றுதற்கு மச்ச புராணம்
த்ரமிளென்று சாற்றியதும் காண்க, தமிழா
படியைப் ப்ரதிஎன்னும் பச்சைவட வோரிப்
படியுரைத்தால் யார்வியப்பார் பார்.
தமிழோவும் மற்றும் தமிரிசியும் வேறு
த்ரமிள த்ரமில் எல்லாம் சாற்றின், தமிழன்
திரியே அவைகள்! செந்தமிழ்ச் சொல் வேந்தன்
பிரிந்ததுண் டோ இங்கவற்றில் பேசு.
திரிந்ததமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில்
பிரிந்தவாய்க் காலும் பிரிதோ? தெரிந்த
பழத்தைப் பயம்பளம் என்பார் அவைகள்
தழைந்த தமிழ்ச்சொற்கள் தாம்
உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம்
திராவிடம்என் றேதிரிந்த தென்று! திராவிடம்
ஆரியர்வாய் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்
ஆரியச் சொல் ஆமோ அறி.
தென் குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும்
நன்கெல்லை கொண்ட நடுவிடத்தில், மன்னும்
பொருள்கள் பலவாம்! பொலிந்தனவே அந்தப்
பொருள்கள் தமிழ்ப் பெயரே பூண்டு.
திராவிடம் தன்னந் தனியா ரியமா?
திராவிடம் இன்பத் தமிழின் திரிபன்றோ!
இன்பத் தமிழகத்துக் கிட்டார் திராவிடப் பேர்
என்பார்சொல் ஏற்புடைய தன்று.
திராவிடம் என்னல் தமிழின் திரிபே
திராவிடம் ஆரியச்சொல் அன்று திராவிடம்
வெல்க என்று சொன்னால்நம் மேன்மைத் தமிழர்கள்
வெல்க என்று விண்டதுவே யாம்.
வந்தார் மொழியா திராவிடம்? மாநிலத்தில்
செந்தமிழ்ச் செல்வமா அந்தச் சொல்! முந்தியே
இங்குள்ள நற்பொருள்கள் எல்லாவற் றிற்குமே
எங்கிருந்து கொண்டுவந்தார் போ
வேட்டி!
இது வேஷ்டி என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு பார்ப்பனரும், பார்ப்பனர் அடியாரும் பகர்வர்.
வெட்டப்படுதலின் வேட்டி எனத் தூய தமிழ்க் காரணப்பெயர்.
வெட்டல் என்ற தொழிற் பெயரின் அல், இறுதிநிலை கெட, வெட்டு என நின்று முதல் நீண்டது வேட்டு என. அது இ என்னும் பெயர் இறுதி பெற்று வேட்டி ஆனது. அறுக்கப் படுதலின் அறுவை என்றும், துணிக்கப் படுதலின் துணி என்றும், துண்டிக்கப் படுதலின் துண்டு என்றும் வருவதும் ஒப்பு நோக்கத் தக்கதாகும்.
முட்டி
இது முஷ்டி என்ற வடசொற் சிதைவாம். முட்டுதல், முட்டு, முட்டி என வந்தது காண்க.
ஆசாரம்
ஆசு+ஆர்வு+அம். குற்றத்தை ஆய்ந்து ஒழுகுவதோர் ஒழுக்கத்திற்குக் காரணப் பெயர். ஆர்வு என்பதில் வு தொக்கது.
பெருவாயின் முள்ளியார் அருளிச் செய்த ஒழுக்கப் பகுதியின் தொகுப்புக்கும் ஆசாரக் கோவை என்று பெயர். இத் தொடர் தமிழானதால் அப் பெயர் வைத்தார்.
அதி
இஃது அதைத்தல் முதனிலை வேறுபட்ட தழ்ச் சொல், அதைத்தல், அதை, அதி, என்பனவற்றிக்கு மிகுதி என்பது பொருள்.
(குயில், குரல்: 1, இசை: 7, 15---07-1958)
அதி
 
இது தூய தமிழ்ச் சொல் என்றும் அதைத்தலின் முதனிலையாகிய அதை என்பதுதான் ஆதி என்றாயிற்று என்றும் கூறியிருந்தோம். அது பற்றி நண்பர் ஒருவர் (பெயரைக் குறிப்பிட வேண்டாமாம்) அதை என்பது அதி வர இலக்கணச் சட்டம் இடந்தருகின்றதா என்று கேட்டுள்ளார். ஒரு சொல் வேறுபாடு உறுவதையும் மருவி வருவதையும் தமிழிலக்கணம் ஒத்துக் கொள்கிறதல்ல. அதன்படியே அதை என்பது என அறிதல் வேண்டும்.
இதற்கு மற்றொரு மேற்கோள் அவைத்தல், அவித்தல் என்றும், அவை என்பது அவி என்றும், வந்தது காண்க.
ஆசிரியர்
இது வடசொல் என்று ஏமாற்றுவார், தூய தமிழ்ச் சொற்றொடர் ஆகும். ஆசு - குற்றம். இரியர் - நீங்கியவர். மடமை என்னும் குற்றத்தினீங்கியவர் ஆசிரியர். காரணப்பெயராதல் அறிக.
மடம்
அறியாமை உணர்த்தும் போது மடம் தூய தமிழ்ச் சொல்லே. அது நிலையத்துக்கு ஆகும்போது வடமொழி என்க!
அரங்கு
அரக்குதல் என்னும் தொழிற் பெயர் உடலில் புடை பெயர்ச்சி செய்தல் என்று பொருள் படும். அதன் முதனிலையாகிய அரக்கு என்பதற்கும் அதுவே பொருள்.
அரக்குதல், அரக்கு என்பவற்றின் தன்வினைகள் அரங்ககுதல், அரங்கு என்பது. பொருள் என்னவெனில் (உடல்) புடைபெயர்தல், அஃதாவது உடலசைதல், ஆடல் ஆகும். இனி அரங்கு என்பது அம் இறுதி பெற்றும் பெறாமலும் ஆடுமிடத்திற்கு ஆனது ஓர் ஆகுபெயர் என்க!
இச்சொல் நம் செந்தமிழ்ச் செல்வமாகும். இதை வடசொற் சிதைவென்று கூறுவார். கூற்று நூற்றுக்கு நூறு பொய்யென மறுக்க.
காமம்

இது வடசொல் என்றே கூறிப் பொய்ப்பர். ஏனெனில் வடமொழி நூற்களில் பெரிதும் வருவதான ஒரு சொல் இது. தமிழினின்று திருடியது.
காமக்கணிப் பசலியார் என்பது ஒரு பெண்பால் புலவர் பெயர். இதுல் காமம்,கண் என்பன முதலிரு சொற்களாகும். இது காமாட்சி என்பதனின் தமிழ் மொழி பெயர்ப்பு. இவ்வாறு மொழி பெயர்த்தவர் சங்கப் புலவர் என்க. சாம்பூநதம் என்னும் ஒருவகைப் பொன்னை, நக்கீரனார் நாவலொடு பெயரிய பொலம் என்று தமிழிற் பெயர்த்ததும் காண்க. காமாட்சி என்பதில் காமம், ஆட்சி என்ற இரு சொற்கள் உண்டு. ஆட்சி மட்டும் வடசொல் ஆதலால் காமாட்சி - காமக்கண் என்றார். எனவே காமம் தமிழச் சொல்லே. ஆதலும் அதை வடவர் எடுத்தாண்டார் ஆதலும் காண்க. காமம் - தோற்றத்துக்கு முன்னது. அது காம்பு என்பதன் வேர்ச்சொல் ஆகிய காம் என்பதனின்னு தோன்றியது.
இது போல் ஓம்பு என்பதன் வேர்ச்சொல்லாகிய ஓம் என்று வழங்கி வருவதும் ஊன்றி அறியற்பாலது.
ஓம்
இது வடசொல் அன்று. தூய தமிழ்ச் சொல். காக்க என்பது இதன் பொருள்.
சங்கம்
சங்கமே, கணைக்கால், ஓரம், சவை, சங்கு, புலவர், நெற்றி என்பது நிகண்டு. சங்கம் இத்தனைப் பொருளைத் தருகிறது. சவை புலவர் என்று குறிக்குமிடத்தில் அது தமிழ்ச் சொல்லா, வடசொல்லா என்றுதான் ஆராய்ச்சி இங்கே.
தொல்காப்பிய காலத்துக்கு முன்பே தென்பால் தென் கழகம் என்பதொன்றும் வடசொல், வடகழகம் என்பதொன்றும் இருந்ததாக பழைய இலக்கியங்கள் நமக்கு நவிலுகின்றன.
வடகழகமிருந்து கருத்து வேறுபட்டு, அகத்தியர் தென் கழகம் போந்தார் என்றும் கூறுவார். தென் கழகம் என்பது தென்னகம் என்றும், தெங்கம் என்றும் செங்கம் என்றும் ச என்ற எழுத்துத் தமிழில் சொல்லுக்கு முதற்கண் வரத்துவங்கிய பின் சங்கம் என்றும் வழங்கலாயிற்று என அறிதல் வேண்டும். வடபுலம், தென்புலம் என்பன கூட முதற்கண் வடகழகம், தென்கழகம் என்ற பொருளிலேயே வழங்கினவாதல் வேண்டும். புலம் - அறிவு.
தென்கழகம் என்பதே சங்கம் என மருவியது எனின், வடபால் சங்கம் என்ற சொல் என்ன பொருளில் வழங்குகின்றது என்றால், வழங்கவில்லை என்றுதான் பதில் இறுப்போம். சங்கம் என்ற சொல் பிற்பட்ட தமிழிக்கியத்துள் மட்டும் காணப்படுகின்றதும் காண்க.
சங்கம் வடமொழியன்று என்று அறுதியிட்டுக் கூறுவோம். அது தமிழ்ச் சொல்லே என்று உறுதியிட்டுக் கூறுவோம்.
பதி
 
அரசன், இடம், கொழுநன், தலைவன், பதிவு, வீடு இத்தனை பொருள் பயக்கும். பதி என்பது வடசொல்லன்று. வழங்கிடுவோர், வடவரும் அவர் அடியார்களும்.
எஞ்சிய எல்லாம் எஞ்சிய இலவே.
(தொல்காப்பியம் மொழிமரபு - சச)
என்ற நூற்பாவின் உரையில் பதி என்பது குறிக்கப்பட்டது காண்க. அது வடசொல்லாயின் குறியார் என்க. எனவே பதி தூய தமிழ்ச் சொல்லே.
கலை 
 இதுவும் தூய தமிழ்ச்சொல்லே. மேற்படி நூற்பாவுரையும் இதை வலியுறுத்திற்று. கல்வி, ஆண்மான் என்பன இதன் பொருள்.
பிலம்
பில்கல் என்பதன் முதநிலையாகிய பில் என்பது நீர் பொசியும் இடம். அதாவது கீழ் அறையைக் குறிக்கும் - பில் அம் பெற்று பிலம் ஆயிற்று. இது தூய தமிழ்ச் சொல்.
குலம்
இது குலை என்பதன் திரிபு. இதை வடவர் எடுத்தாண்டதில் நமக்கு வருத்தமில்லை. அது வடசொல்லே என்று புளுகும்போது தான் எரிச்சல் உண்டாகிறது. இது தூய தமிழ்ச்சொல் என்பதற்கு முன் காட்டிய தொல்காப்பிய நூற்பாவின் உரையே சான்றாகும்.
(குயில், குரல்: 1, இசை: 9, 29--7--1958)
அந்தனர்
இதை அந்தம்+அணர் என்று பிரித்து முதலில் உள்ள அந்தம் என்பது வடசொல் என்று கூறி, அழி வழக்காடுவர் இழிவுறு பார்ப்பனரும் இனம் கண்டு வேர்ப்பாரும்.
வேதாந்தத்தை அணவுவோர் என்பது அதன் பொருள் என்று பொய்ப்பர் அவரே!
அம்+தண்=என்பன அந்தண் என்றாயிற்று.
இதன் பொருள்: அழகிய தட்பம், அஃதாவது நாட்டார் கண்கட்கு. அழகு செய்பவரின் தொண்டின் அருட்தன்மை.
இந்த, அந்தண் என்பது தமிழ்ப் பெருநூற்களில் பெரும்பிடியாய் வந்து பயில்வது அந்தண் சோலை, அந்தண் காவிரி என வந்துள்ளவை காண்க.
அந்தணர் என்பவர் யார்? - கூறுவோம்.
அறந்தான் இயற்றும் அவனிலுங்
கோடி அதிகம் இல்லம்
துறந்தான்.........
என்பது பட்டணத்தடிகள் பகர்ந்தது.
இல்லறத்தானைவிட மக்கள் நலம் கருதி இல்லம் துறந்தான் சிறந்தவன் என்று குறித்தனர். மேலும் அதைத்தொடர்ந்தே அவர், அவனிற் சத கோடி உள்ளத் துறவுடையான் என்றும் கூறினார். அவ்வாறு இல்லந் துறந்தவனை விடச் சிறந்தவன் உள்ளத் துறவுடையான்.
எனவே துறவு இல்லத்துறவு, உள்ளத்துறவு என இரு வகைப்படும். இவ்விரண்டிலும் இல்லத்துறவே மேலானது மக்கட்குப் பயன்படுவதால்.
இக்கூறிய இல்லத் துறவிகளையே நம் தமிழ் முன்னோர் அந்தணர் என்றார் என்று கடைபிடிக்க. அந்தணர் என்ற சொல் அயலவர் மாசு படாத செந்தமிழ்ச் செல்வம்.
மனம்
மனசு என்ற வடசொல்லின் சிதைவு என்பார் வந்தவரும், சில கந்தல்களும்.
மன்னுவது மனம் என்பதைத் தமிழ் மக்கள் அறிந்து ஏமாறியிருக்க வேண்டும்.
உலகுக்கு முதக்முதலில் தத்துவ நூல் (கபிலர் எண்ணூல்) தந்தவர்கள் தமிழர்கள். அதில் மனம் என்பதின் இலக்கணத்தைத் தெளிவுறுத்தியதை மன்னுவது என்ற காரணத்தினால் மனம் என்று அதற்குப் பெயர் என்று அமைந்தமையே காட்டும். மனமானது புலன் வழி செல்லாமல் தன்னிலையில் மன்னுவதே உணர்வு நிலையே விடுதலை வீடு என்றும் கூறும் கபிலர் எண்ணூல்.
தூய தமிழ்ச் சொல்லாகிய, மனம் என்பதை வந்தவர் எடுத்துக் கொண்னர். வேறு வழியில்லாமல் என்று அறிந்துகொள்ளவும்
சிவம்
இது தூய தமிழ்ச் சொல். செம்மை என்னும் மையீற்றுப் பண்புப் பெயரின்று வந்த பெயர்ச்சொல். செம்மைப்பட்ட நிலை என்பது இதன் பொருள்.
செம்மை சிவம் ஆகுமா என்று கேட்பார் தமிழிலக்கணம் அறியாதாரும், பார்ப்பனரும், அவரடியாரும் ஆவார். அன்றியும், சைவத்தை வளர்ப்பதாகக் கூறி மக்கட் பொதுப் பணத்தில் விழுந்து கொண்டு வரும் அறநிலையத் தலைவராகிய துறவிகள் சிலரும் சைவ தமிழ்ச்சொல் அன்று என்று மறுத்துள்ளார்கள். அவ்வாறு மறுத்தவர்கள் காரணம் கூறி மறுத்தார்களா எனில் அதுதானில்லை. அவர்கள் எண்ணம் யாதெனில் வடமொழி ஒழிந்தால் சைவமே ஒழியுமே என்பதுதான். தமிழில் பற்றுள்ளவர் போல் நடிப்பார்கள் வேறு வழியின்மையால்.
மூன்றாண்டுகட்குமுன் மயிலத்து அறநிலையத்தின் ஒரு பகுதி பார்க்கப்பட வேண்டும் என்பதற்காக அவ்வற நிலையத் தலைவராகிய துறவியார் பொருளுதவி கோரி வேண்டுகோள் விடுத்தார். அதில் அவர் தம் பெயரை வடவெழுத்தாலேயே பொறித்திருந்தார். இத் திருந்தாச் செயலுக்குக் காரணம் கேட்டாருக்கு அவர் அளித்த விடை என்ன தெரியுமா? நாம் தமிழில் கையொப்பம் இடமாட்டோம் என்பது. இந்தப்பாவி இன்றைக்கும் இப்படித்தானாம்-திருந்த வில்லையாம், திருந்துகிற எண்ணமும் இல்லையாம்.
இந்த ஒழுங்கில் இவர் தமிழ்க் கல்லூரி நடத்துகிறார். இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் எவ்வாறு உருப்படுவார்களோ நாம் அறியோம். ஆயினும் அம் மாணவர்களுக்குத் தமிழ் ஆர்வத்தில் உயர்ந்து வரும் தமிழ்நாடு விழிப்பூட்டி வருகிறதென்றே எண்ணுகிறோம்.
செம்மை என்பதில் உள்ள மை ஈறுபோதல் என்ற சட்டத்தால் உட்டது. முன்னிருந்த மெய்திரிதல் என்ற சட்டத்தால் செம், சிவ ஆயிற்று. ஆம் என்ற பண்புப் பெயர் நிலைபெற்று இந்தச் சிவ் என்பது சிவம் ஆயிற்று. அந்த சிவம் என்பதும் ஆகுபெயராய் செம்மையுற்ற ஒரு நன்னிலைக்கு ஆயிற்று என்க. செம்மை என்பது செம்மை நிறத்துக்கும் பெயர். செங்கால் நாரை என்பதிற் காண்க. செம்மை செவப்பு என்று வருவதும் இங்கு நோக்குக.
செம்மையின் வழித்தாகிய சிவம் என்பதை செம்மைநிலை என்ற பொருயில் அமைத்துத் தமிழ்ச் சான்றோர் செய்யுள் செய்தயை நோக்குக!
தவம்புரிந் தடங்கி நோற்கும்
தத்துவர்த் தலைபட் டோம்பிப்
பவம் பரிகெமக்கும் என்று
பணிந்து அவருவப்ப ஈமின்
அவம்புரிந்து உடம்பு நீங்காது
அருந்தவம் முயன் மின் யாரும்
சிவம்புரி நெரியைச் சேரச்
செப்பும் இப் பொருளும் கேண்மின்.
என்பது சீவக சிந்தாமணி காந்தருவ தந்தையாரிலம்பகம் 605 ஆம் செய்யுள் ஆகும்.
இஃதேயுமன்றிச் சிவம் தூய தமிழ்ச் சொல்லே என்று அறுதியிட்டுக் கூறியருளிய மறைமலையடிகளாரின் கூற்றையும் கண்டு தெளிக.
இனி, சிவம் என்பது தமிழாயின் சைவம் எனத் திரியுமா என அய்யுறுவாரும் உளர். அவ்வாறு ஆரியர் திரிந்தார்கள். சிவம் என்பதை அவர்கள் தமிழினின்னு எடுத்துக் கொண்டார்கள். வந்தவர்களாகிய அவர்கள், வருமுன் சிவத்தை யறிந்தாருமல்லர், அப்பெயரைக் கேட்டாருமல்லர். அவர்களின் ஆரிய மறையே சிவத்தைக் கண்டதில்லையே!
(குயில்: குரல்: 1, 12, 19--08--1958)
முகம் இது வடசொல் என்று வம்பு பிரிந்தார்கள் பல்லாண்டுகளின் முன்! அப்போது இது தூய தமிழ்ச் சொல்லே என்று பேராசிரியர் கா. சுப்பிரமணியம், வி.கி.,வி.லி. முதலியவர்கள் எடுத்துக் காட்டி மறுத்தார்கள். ஆயினும் ஏமாற்றும் பார்ப்பனரும், ஏமாறும் தமிழரும் மலிந்து வரும் இந்நாளில் மீண்டும் அதுபற்றி ஆராய்வது பொருத்தமே யாகும்.
முன் என்பதன் திரிபே முகம். எனவே முகம் என்பதற்கு முன் என்பதே பொருள் என்க. முகம் என்ற இச் சொல். நூற்றுக் கணக்கான தமிழ்ச் சொறக்ளின் உள்ளுறுப்பாகவே அமைந்திருப்பதும், பழங்காலந் தொட்டே அமைந்திருப்பதும் நோக்கத் தக்கது.
முகமன்-முன், சிறப்புக்கூறல், முகப்பு ஆசை, வீடு இவற்றின் முன்னுறுப்பு, முகசு, முகசும், முன்னே சிறந்து காணப்படும் பல். முகதா--முன்னிலை. முகருதல். முன்னாலிருந்து மணத்தை உட்கொள்ளல். முகவனை, முகவுரை முன்னால் உரைக்கும் உரை. இதை வடவர் எடுத்தாண்டார்கள் விழியின்மையால் போலும்.
எனவே, முகம் தூய தமிழ்ச்சொல் என்று முடிக்க.
காரணம்
இது தமிழ்ச் சொற்றொடர்.
கருமை+அணம் = காரணம் ஆயிற்று. மையீறு போதலும் ருகரத்தின் மேலுள்ள உகரம் போதம், முதல் நீளலும் தமிழிலக்கணச் சட்டம்.
எனவே, கார்+அணம் = காரணம் ஆயிற்று. கருமையின் வேற்றுமையான் உற்ற கார் என்பதற்குப் பொருள் முதன்மை. அணம் அணுவுவது--அஃதாவது நெருங்குவது, முதன்மையை நெருங்குவது என்ற பொருளில் அமைந்ததாகும். 
காரியம்
கார்+இயம் = காரியம். கார் முதன்மை. இயன்றது என்பது இயம் என வேறுபடுத்தும் காரணத்தால் இயன்றது காரியம் என்க. காரணமே காரியம் என்னும் கபிலர் எண்ணூலையும் எண்ணுக.
காரியம் தூயதமிழ்ச் சொற்றொடர். காரணம் காரியம் இரண்டையும் வட மொழியாளர்கள் எடுத்தாண்டார்கள் வேற்றுமையின்மையால்.
கடிகாரம்
இது கடிகார யந்திரம் என்பதின் திரிபென்று கதைப்பர். கடிகை ஆர்வது - காட்டுவது - ஈற்று திரிவுற்றது. எனவே கடிகாரம் தூய தமிழ்ச் சொல்லே.
(குயில்: குரல்: 1, இசை: 14, 2---9---58)
தாரம்
தாரம் அரும்பண்டம், வெள்ளி, அதன் ஒளி சேரும் ஏழ் நரம்பில் ஓர் நரம்பும் செப்பும் என்பது திவாகரம். இதில் தாரம் என்பதற்கு நான்கு பொருள் காணப்படுவதைக் காண்க.
வல்லிசைப் பெயரும், வாழ்க்கைத் துணைவியும், யாழின் நரம்பும், அரும்பண்டமும், தாராவும், நாவும், தாரம் என்பன. (வெண்தாதும்) என்பது பிங்கலந்தை.
இதில் தாரம் என்பதற்கு, ஏழு பொருள் காணப்படுவதைக் காண்க.
தாரம், வல்லிசை, நா, வெள்ளி
தலைவி, ஓரிசை, கண், என்பன.
என்பது சூடாமணி நிகண்டு. இதில் கண் என்பதும் குறிக்கப்படுவதைக் காண்க.!
தாரம் என்ற சொல் வடமொழியே என்று சொல்லுகின்றவர்கள் அதற்கு எடுத்துக் காட்டாக என்ன சொல்லுகின்றார்கள் எனில், தாரம் ஏழிசையின் ஒன்று என்ற பொருள் வட மொழியில்தான் உண்டு என்கிறார்கள். அரும்பண்டம் முதலிய பொருள் தரும் போது அது தமிழ்ச் சொல்லே என்பதை அவர்களே ஒத்துக் கொள்கின்றார்கள்.
நாம் கேட்கின்றோம், ஏழிசையில் ஒன்றைக் குறிக்கின்ற போது அது வடசொல் என்றால், ஏழிசை வடவர்க்கு எப்போது எங்கிருந்து கிடைத்தது? -- ஏழிசை தமிழரிடமிருந்து வடவர் எடுத்தனர் என்பதை மறுக்கக் கூடியதா? இல்லவே இல்லை. ஆதலின் ஏழிசையின் ஒன்றுக்கு அமைந்த தாரம் என்பதையும் வடவர் தமிழினின்றே எடுத்தனர் அல்லவோ?
இனி, அரும்பண்டம், ஏழிசையின் ஒன்று ஆகிய இரு பொருளிலும் வரும் தாரம் செந்தமிழ்ச் செல்வமே. ஆனால் நிகண்ட, பிங்கலம் முதலியவற்றில் பிற பொருளில் வரும் தாரம் என்ன மொழி? எனில், கூறுவோம்.
தாரம் என்பதை வடவர், வல்லோசையானும் மெல்லோசை யானும் சொல்லிக் கொண்டனர். ஆயினும் முதல் தாரம் என்பது தான் அது ஆகுபெயர் முதலிய சார்ப்புப் பொருள் பெற்று வந்திருக்கலாம். அவையும் தமிழரால் வந்தனவே என்று உணர்தல் வேண்டும்.
எனவே, தாரம் என்பது தூய தமிழ்ச் சொல் என முடிக்க. இனியும் இசை இலக்கணம் தமிழினின்றே வடவர் எடுத்தார்கள் என்பதற்குச் சில எடுத்துக் காட்டுகள் வருமாறு:
க. இன்றைக்கு ஆயிரத்து நானூறு யாண்டின் முன் வடமொழியில் இசை நூல் இயற்றிய பரதரும், அறுநூற்றென்பது யாண்டின் முன் இசைநூல் இயற்றிய சாரங்க தேவரும், தமிழிசையிலிருந்து எடுத்தே வடமொழிக் கண் இசை வகுக்கப்பட்டது எனக் கூறினார் என்பர், இவ்வாராய்ச்சி வல்ல விருதைச் சிவஞான யோகிகள்.
உ. இசைத் தமிழிலிருந்தே எல்லா இசைவகைகளும் வடமொழிக்கண் சென்ற உண்மை ஆபிரகாம் பண்டிதர் மிக விரிவாக இயற்றி வெளியிட்ட கருணாமிர்த சாகரம் என்னும் இசைத் தமிழ் நூலில் நன்கு விளக்கிக் காட்டப்பட்டிருக்கின்றது.
(குயில்: குரல்: 1, இசை: 16, 16--9--58)
ஓரை
இது தூய தமிழ்ச் சொல் இராசிகனின் பொதுப் பெயர். ஆனால், வடமொழி நூலுள்ளும், கிரேக்க மொழியுள்ளும் காணப்படுதலின், வடமொழியே என்று புகலுவர். அதற்குக் காரணம் இரண்டு தமிழரை ஏமாற்றி விடலாம் என்று அவர்கள் நினைப்பதொன்று. ஆராய்ச்சியில்லாமை மற்றொன்று.
    தொல்காப்பியத்துக் களவியல் ச ச-ம் நூற்பாவாகிய
மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
என்பதன் கண் காணப்படும் ஓரை என்னும் சொல்லைக் கிரேக்க மொழி எனக் கொண்டு, அவ்வாற்றால் தொல்காப்பிய காலத்தையே கி.மு. மூன்றாம் நூற்றாண்டென்று கூறி மகிழ்ந்து கொள்ளும் பகைவரும் உண்டு. இதையே சிலர் வடசொல் என்று கூறிக் கொக்கரிப்பர்.
ஓரை என்னும் இது மட்டுமன்று. ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களையும் வடசொல் என்றே ஏமாற்றித் திரிவார்கள், அவர்கள் யார்? தமிழ்மொழி கொண்டு தம் மொழி பெருக்கிய மொழிவெறியர்.
தொல்காப்பயித்துக்கு முற்பட்ட காலத்திலேயே ஓரை என்னும் சொல் வடமொழியிலேனும் கிரேக்க மொழியிலேனும் வழங்கப்பட்டிருக்குமாயின் அது அப் பிறமொழிச் சொல் எனலாம். காட்டட்டுமே!
மறைமலையடிளார் கூறுகின்றார்: ஆராய்ந்த மட்டில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டாதலால் அதற்கு முற்பட்ட காலத்திலாதல் இயற்றப்பட்ட கிரேக்க ஆரிய நூற்களில் ஓரை என்னும் சொல் வாங்குவதைக் காணோம். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவராகமிகிரரால், கிரேக்கரின் வானநூல் ஆராய்ச்சியைத் தழுவி ஹோரா சாத்திரம் என்னும் ஒரு நூல் வடமொழியில் எழுதப்பட்டிருக்கிறது.
அதைக்கொண்டு ஹோரா என்னும் சொல் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குச் சிறிது முற்பட்ட காலத்திய கிரேக்க மொழியில் வழங்கப்படாமை மட்டும் அறியப்படும்.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிரேக்க ஆசிரியரான ஹிப்பார்க்கஸ் காலத்திலேதான், கிரேக்கரின், வான் நூலாராய்ச்சி ஓர் ஒழுங்குபெறத் தொடங்கியது. அதன் பின் அது தாலமி என்பவரால் முற்றுப் பெற்றாயிற்று.
(குயில்: குரல்: 1, இசை: 17, 23--9--58)
பரதர், பாரதர், பாரதம், பரதன்
இந் நான்கு சொற்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை தூய தமிழ்ச் சொற்களே யாதலால் இங்கு விரித்துரைக்கப்படும்.
தொல்காப்பியம் அகத்திணை இயல் 20ஆம் நூற்பாவின் உரையின் பகுதி வருமாறு:--
நால்வகை நிலத்துக்கும் மருவிய குலப் பெயர் ஆவன.
முல்லைக்குக் கோவலர், இடையர், ஆயர், பொதுவர், இடைத்தியர், கோவித்தியர், ஆயத்தியர், பொதுவியர்.
நெய்தற்கு நுளையர், திமிலர், பரதவர், நுளைத்தியர், பரத்தியர்.
இதனால் நாம் அறிய ண்டுவது என்னவெனில் பரதவர் அஃதாவது பரதர் என்ற பெயர் தொல்காப்பிய காலத்திலேயே, தமிழில் வழங்கியது என்பதாகும்.
மீனெறி பரதவர் மடமகள்
    மானேர் நோக்கம் காணா ஊங்கே
எற் நற்றிணையிலும் காண்க.
இதில் வரும் பரதவர்தானா பரதவர் எனின் ஆம் என்க. பரதவர் என்பதன் பெண்பால் பரத்தியர் என வருதலை நோக்குக.
இனி, பரதர் என்று தமிழ் நூலில் வரும் பெயர்தான் பரதர்--பரதன், பாரதம், பாரதம் என வந்ததா எனின் ஆம் ஆம் என்று கூறி, மறைமலையடிகளார் சொல்லியருளிய விளக்கத்தையும் இங்கு சுருக்கி எழுதுவோம்.
தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம் என்ற திருமந்திரச் செய்யுள்-பஞ்ச திராவிடராகிய தமிழரின் மேம்பாட்டைக் குறிக்கின்றது. இத் தமிழர் தாம், முதன்முதலில் கடவுளைத் தீ வடிவில் வைத்து வழிபடலாயினர்.
இவ் வைவகைத் தமிழ் மரபினர்க்கு தலைவராயிருந்து அந்நாளில், அரசு புரிந்த பரதன் என்னும் தமிழ் வேந்தன் வழியில் வந்தவர் பரதர்கள் என்று சொல்லப்பட்டனர்.
பாரத மரபினரான தேவசிரவர், தேவபரதர் என்னும் இருவரும் பயன்மிகுந்த தீயை மிக்க வலிமையோடும் தேய்த்து உயிர்ப்பித்தனர். (இருக்கு )
ஓ நெருப்பே, வலிய படைவீரர்களுடைய பழைய பரதர்கள் தமக்குப் பேரின்பம் வேண்டி நின்னையே இரந்தனர். (இருக்கு)
இவ்வாறு இருக்கு மறையில் பல இடத்தில் காணப்படுகின்றன. இதனால் தமிழ் மக்கட்குத் தலைவரான பரதர்களே முதன் முதலில் தீ யெழுப்பினர், தீயின் பயன் கண்டனர். தீயே கடவுள் என்று வழிபட்டனர் என்று அறிய வேண்டும்.
தீயைப் பரதன் என்று சொல்லுகிறது இருக்கு மறை இரண்டாம் மண்டிலத்து ஏழாம் பதிகம்!
அன்றியும் செந்நிறக் கடவுள் எனக் காரணப் பெயரான உருத்திரன் என்ற தமிழ் பெயருடைய கடவுளுக்கும், பரதன் என்று பெயரிட்டழைக்கிறது, மேற்படி இரண்டாம் மண்டிலத்து முப்பத்தாறாம் பதிகம்.
தென்னாட்டவர் கண்டறிந்தது தீக்கடவுள் என்பதுனாலன்றோ வடநூல்களில் நெருப்புக்குத் தென்றிசையங்கி தக்ஷிணாக்கிளி என்று சொல்லப்படுகிறது.
இங்ஙனமாக இறைவனை நெருப்பொளியில் வைத்து வழிபடும் முறையை உணர்ந்த பரதர், பண்டை நாளில், இந்த நாவலந்தீவு முழுதும் ஒருங்கு செங்கோல் ஒச்சினராதலின், அவர் பெயரால் அது (இந்தியா) பரத கண்டம் எனப் பெயர் பெறுவதாயிற்று. இப் பரதர்கள் முதன் முதல் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் கண் இருந்து, அதன் கண் பட்டினங்கள் அமைத்து நாகரிகத்திற் சிறந்து வாழ்ந்தாராதலின் அந் நெய்தல் நிலத்து மக்கள் பரதர், பரத்தியர் எனப் பெயர் பெறலாயினர்.
வடக்கிருந்து வந்து இந்திய நாட்டின் வடமேற்கு எல்லையில் குடியேறிய ஆரியர், நாகரிகம் இல்லாதவராய் உயிர்க்கொலை புரிந்த வரைதுறை யின்றி ஊனுண்டும் கட்குடித்தும் மகளிர்ப் புணர்ந்தும் தமிழர் அருவருக்குமாறு ஒழுகினமையால் அவர்களை இந்நாட்டில் நுழையாதபடி அக்காலத்தில், எதிர்த்து நிறுத்தினர் என்று இருக்கு மூன்றாம் மண்டிலத்து --ம் பதிகம்    கூறுகிறது.
இன்னும் இதை விவரிக்க வேண்டாம். இங்கு றியவற்றால் அறியலானவை எவை?
ஆரியர் வருமுன்னரே தமிழர் நல்ல நாகரிகத்துடன் இந் நாவலந் தீவில் எங்கணும் பரவி இருந்தனர். அக்கால், தமிழே இருந்தது. அக்கால தமிழ்ப் பெயர்களே எப்பொருட்கும் அமைந்திருந்தன. இன்றும் பண்டைய நூல்களில் காணப்படும் பரதர், என்பதே அக்காலத்தில் பரதன், பாரதன், பாரதம், பரதகாண்டம் என விரிந்தது. பரதன், பரதவர் முதலிய அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களே என்பனவாம்.
பாரதகண்டம் என்பதில் கண்டம் தமிழா என ஐயுற வேண்டாம். கண்டம் தூய தமிழ்ச் சொல்லே. அஃதேயுமன்றி காண்டம் என்பதும் தூய தமிழ்ச் சொல்லே. கண்டம், காண்டம் என்பன பிரிவு என்பது. கண்டம் நிலப்பிரிவு, காண்டம் நூற்பிரிவு என்க.
(குயில்: குரல்: 1, இசை: 18, 30--9--58)
தாசர்
தான என்று வடமொழியில் சொல்லப்படினும் இது வடமொழியன்று. தரஹி என்று பாரிசி மொழியில் வழங்குவதால் இது பார்சி மொழியாகிவிட்டது.
தாதர் என்ற தூய தமிழ்ச் சொல்லையே ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்-அதாவது ஆரியர் நாவலந் தீவில் நுழைவதற்கு முன்-வடவராலும், பார்சிக்காரராலும் தான, தாஹி என எடுத்தாளப்பட்டது என அறிதல் வேண்டும்.
தாத்தல்-கொடுத்தல், இது தரத்து என்று இன்றும் வழங்குகிறது. அன்றியும் தாதம் என்றும் கொடுத்தல் என்ற பொருளில் வழங்குகிறது. இதன் முதனிலை தா என்பதைக் காண்க தா-கொடு, தாத்தல், தாத்து, தாதம், கொடுத்தல் கொடை என்க.
எனில், தாசர் என்ற சொல்லுக்கு, கொடையாளிகள், வள்ளல்கள் என்று பொருளா என்று கேட்போரை நாம் வேறென்ன தான் என்று கேட்கின்றோம்.
தாசர் என்றால் அடிமைகள் என்பதல்லவா பொருள் எனில், அது பின்னாளில் என்றும் எடுத்துக்காட்ட நம்மால் முடியம். ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டவர்கள் தமிழ்ச் சொல் ஒவ்வொன்றையுமே தலைகீழாக்கி வைத்தார்கள். அவர்களின் ஏமாற்று--விழிப்புற்ற--ஆராய்ச்சி மிக்க இக்காலத்தினும் செல்லுமோ!
ஆரியர்-மிலேச்சர் என்பது பிங்கலந்தை. அதை அநாரியர்-மிலேச்சர் என்று இதே நூற்றாண்டில் உ.வே. சாமிநாத ஐயர் முயற்சியால் அகரவரிசை நூல் ஒன்றும் வந்திருப்பதை நாம் கண்டோம் அல்லவா? இருபது ஆண்டுகளின் நிலையே இப்படியானால், ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிலைமை எவ்வாறு தலைகீழாக்கப்பட்டிருக்கும்.
பாலிமொழி ஆராய்ச்சியில் உலகப் புகழ் வாய்ந்த தருமானந்த கோசம்பி தம் பகவான் புத்தர் என்ற நூலில் அடியில் வருமாறு கூறுகின்றார்:
ஆரியர் வருமுன்பு சிந்து பஞ்சாப் பெருமாவட்டங்களில் தாசர்களின் ஆட்சி நிலவியிருந்தது. இப்போதுதான் தாசன் என்ற சொல்லுக்கு அடிமை என்பது பொருள் ஆக்கி வைத்திருக்கின்றார்கள். ஆனால், ஆரிய மறையில் தாச, தாஸ் என்ற இரண்டு வினைப் பகுதிகளுக்கு கொடுத்தல் என்ற பொருளே அமைந்திருக்கிறது. அண்மையில் வெளிவந்த அகரவரிசை நூற்களிலும் கொடுத்தல் என்ற பொருளிலேயே தாஸ, தாச் என்ற சொற்கள் அமைந்துள்ளன. எனவே, தாசன் என்ற சொல்லுக்கு முதலில் உண்டான பொருள் கொடைவள்ளல், நாவலந்தீவின் உயர்குடித் தோன்றல்! என்று யாரும், ஆவெஸ்தாவில் பர்வதின்யஸ்து என்ற வட்டாரத்தில் தாச நாட்டு பிதிரர்கள் வழிபாடு பற்றி செய்தி வருகிறது. அதில் அவர்களை தாஹி என்று  குறித்துள்ளார்கள்.
தாஸ தாச் என்ற தமிழ்ச் சொற்களை ஆரிய மறை எடுத்தாண்டதும் இங்கு நோக்கத்தக்கது. தாசன்-தமிழ்ச் சொல்லே என அறுதியிட்டுக் கூறுக!
(குயில்: குரல்: 1, இசை: 19, 7--10--58)
வித்தகம் 
இது தூய தமிழ்ச் சொற்றொடர். இரு சொற்களால் அமைந்தது. வித்து+அகம்.
வித்தகம் என்பது பழந்தமிழ் நூற்களல் பல்லிடத்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.
நத்தம் போற் கேடும், உளதாகும் சாக்காடும்
    வித்தகர்க்கு அல்லால் அரிது.    (குறள்)
    வித்தகப் பெண்பிள்ளை நங்காய்.    (ஔவையார்)
வித்து எனில் முதன்மை: காரணம், அகம் எனில் மனம். எனவே வித்தகம் (வெற்றிக்குக்) காரணமாகிய மனம் ஆற்றல்! அவ்வாற்றலும் தோல்வியடையாத ஆற்றல் ஆகும். மேற்படி குறளில் வரும் வித்தகர் என்பதற்கு பரிமேலழகரும் சதுரப்பாடு உடையவர் என்று பொருள் கூறினார்.
சதுரப்பாடு-ஆற்றல்.
வித்தகம் என்னும் இது நாளடைவில் வித்துக்கும் வழங்கலாயிற்று. அதன் அருமை காட்ட உழவர்கள் வித்து என்ற சொல்லை வித்தகம் என்றே சொல்லுவதுண்டு. மணிமேகலையில் பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை 227ஆம் அடி நெல்லித் தகத்துள் நெல்முனை தோற்றம்
என்பது.
வித்தகம் தமிழ்ச் சொற்றெடர் என்பதில் ஐயப்பாடு அடையக் காரணமே இல்லையாகவும், தமிழ் மாணவர் நலம் கருதி நாம் இதற்கு விளக்கம் தர முன் வந்தோம், இது வடசொல் என்று ஒரு நண்பர் சொன்னதால்.
(குயில்: குரல்: 1, இசை: 20, 14--10--1958)
மளிகை
இது தமிழ்ச் சொல்லா? விளக்கித் தருக என ஒரு அன்பர் கேட்கின்றார். மளிகை என்ற தூய தமிழ்ச் சொல் மளிகை என்று மருவிற்று. ஆதலின் தமிழ்ச் சொல்லே, அன்றியும் ஒரு தமிழ்ச்சொல் சிறிதும் வேறுபாடு ஆயினும் அதன் தூய்மை கெடாது என்ற உண்மையை மனதிற் ள்க! ஆகவே மளிகை என்பது தமிழ்ச்சொல் என்று மட்டும் சொல்லி அமையாமல், தூய தமிழ்ச் சொல் என்றே சொல்லுக!
மளிகை--நிறைதல். பெருகல் இத்தொழிற்பெயர் மலிதல் எனத் தல் இறுதிநிலை பெற்று வரும்.
இனி மளிகை எனில் பல்பொருள் நிறைதல் என்க. மளிகைக் கடை எனின் பல்பொருள் நிறைந்த விற்பனை இல்லம்.
கவி
இது கபி என்பதின் சிதைவானால் குரங்கு என்று பொருள்படும். அப்போது அது வடசொல் என்றால் நாம்ம ஏற்றுக் கொள்ளத் தடையில்லை. பா என்னும் பொருளைத் தரும் போது அது (கவி) தூய தமிழ்ச் சொல்லே யாகும்.
கவிதல் என்பது தல் இறுதி நிலை பெற்ற தொழிற்பெயர். கவிகை என்னும் போது, அது கை இறுதிநிலை பெற்ற தொழிற்பெயர். கவிதை என்பதில் அது போல தை இறுதிநிலை என்க, நடத்தை என்பதிற் போலவே. எனவே கவிதல் கவிகை. கவிதை இது தொழிற்பெயர்கள். கவி என முதனிலைத் தொழிற் பெயராக வருவது உண்டு. இது பெருவழக்கும் ஆகும்.
இனிக் கவி என்றால் மனம் ஒரு பொருளில் கவிவது. பா என்க. கவி என்பது பாட்டுக்குப் பொருளாயிற்று. கவிதா என்கின்றார்களே வடவர் எனில், அது வடவர் இயல்பான செயல் என விடுக!
கவிஞர் உள்ளத்தில் உருவான நிலையில் வைத்து அதைக் கவி என்றான் தமிழன். அது வெளிப்பட்டுப் பரவி நடக்கும் (பரவி) நிலையில் அதைப் பா என்றான்!
கவிப்பா அமுதம் இசையின் கறியொடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான்சட கோபன் குமரி கொண்கள்
புவிப்பா வலர்தம் பிரான்திருமாய் மொழி பூசரர் தம்
செவிப்பாய் துழைத்து புக்கு உள்ளத்திலே தின்று தித்திக்குமே
சடகோபர் அந்தாதி 7.
என்றதில் நோக்குக.
இதில் கவி என்றது என்ன பொருளில் அமைந்தது. மனம் கவிதலால் உண்டான பா எனப் படவில்லையா. எனவே, கவி தனியே நின்று ஆகுபெயராய்ப் பாவை உணர்த்துவதில் வியப்பென்ன?
கவி என்ற தூய தமிழ்ச் சொல்லும், அது பாவை உணர்த்த வேண்டியதற்கான தமிழ்ச் சட்டமும் இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே நம்மிடம் உண்டு! ஆட்சியில் உண்டு! அது போல இதை வடவர் 5000 ஆண்டுகளின் முன்னே ஏற்பட்டிருந்தால் அந்தக் காரணத்தைக் காட்டி இது வடசொல்லேதான் என்று மறுக்கட்டுமே! தமிழர் தம் தமிழ் உள்ளத்தை வடவரின் நச்சில் துவைத்துக் கொண்டு தமிழ் நாட்டில் தமிழில் உள்ள சொற்களிலெல்லாம் ஐயப்பாடுறுவானேன்? நாவலந்தீவு தமிழருடையது. அங்கு இயற்கை முறையில் முற்காலத்திலே இருந்தது தமிழ்.
ஆரியர் வந்தவர். வந்தபின்தான் அவர்களின் மொழியைத் தமிழாற் பெருக்கினர். ஆரியர் வரும்போது அவர்கட்குச் சில சொற்களே தெரியும்? அவர்கட்கு நூற்களும் ஏற்பட்டன என்றால் தமிழாலேயே! சமஸ்கிருதம் என்பது சேர்த்துப் பொறுக்கிச் செம்மைப்படுத்தப்பட்ட ஒரு கூட்டுக்கறி! தமிழ் அப்படியா? கருத வேண்டும். எனவே கவி தூய தமிழ்ச் சொல் என்பதைக் கடைபிடிக்க.
(குயில்: குரல்: 1, இசை: 23, 4-11-1958)
பனாதி
இது தமிழ்ச் சொல்லே. பன்+அத்து+இ=பன்னத்தி. அத்துச் சாரியை, இ பெயர் இறுதி நிலை. பன்-ஒருவகைப் புல். அது பச்சென்றிருக்கையிலும் கொளுத்தினால் காய்ந்தது போல் எரியும். பசையற்றது, பள்ளத்தி என்பதே பனாதி என மருவிற்று. பனாதி--பசையற்றவன், வளமில்லாதவன்.
ஆதலின் தமிழ்ச் சொல்லாதல் பெறப்படும் என்க!
ஆய்தம்
தமிழரின் ஆய்தத்தை வடவர் பறித்துக் கொள்ள பெரிதும் முயன்றுள்ளனர். மு. இராகவையங்கார் இதை வட சொல்லாக்கத் தலைகீழ் நின்றார் என்பதை, அவர் எழுதி வெளியிட்ட ஆராய்ச்சித் தொகுதி கண்டார் அறிந்தாரராவார். ஆய்தல் அகம், ஆயுதல் அகம், ஆயல் அகம், ஆய்தகம் என்பன அனைத்தும் பயிலிடத்துக்கு ஆன பெயர்கள். சிறப்பாக அது படைப்பயிற்சி செய்யுமிடத்து ஆம். இந்த ஆய்தகம் என்பது  ஆய்தம் என ஈறு திரிந்த ஆகு பெயராய் படைக்கு ஆயிற்று.
இனி ஆய்தம் என்பது (ஃ) ஆய்தவெழுத்துக்கும் ஆம். அப்படி ஆம் போது அது உவமை ஆகு பெயர் என்க.
ஆய்தம் என்பது (படை) தானேயன்றித் தான் மற்றொன்றை-தன்னை எடுத்தாள்வோனைச் சார்ந்து பயன்படுவது.
ஆய்த வெழுத்தும் வல்லெழுத்தைச் சார்ந்து பயன்படுவது, ஆய்த எழுத்து-சார்பெழுத்துக்களில் ஒன்று.
சார்ந்துவரின் அல்லது தமக்கியல் பிலஎனத்
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்
தத்தம் சார்பிற் பிறப்பொடு சிவணி
ஒத்த காட்சியின் தம்மியல் பியலும்.
என்னும் தொல்காப்பிய நூற்பாவை நோக்குக.
எனவே ஆய்தம் வடமொழியன்று. தூய தமிழ்ச் சொல்.
(குயில், குரல்: 1, இசை: 26, 25-11-58)
சிங்கம்
இது ஹிம்ஸ என்ற வடசொல்லின் சிதைவாம். ஹிம்ஸ என்பது சிம்ஹ என்றாகப் பின் சிங்கம் என்று ஆயிற்றாம். இவ்வாறு வடவர் கூறுவதோடு தமிழ்ப் புலவர் சிலரும் கூறுகின்றார்கள். சிலப்பதிகாரப் பதிகம் 47-ஆம் அடியில்
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்து
என்றதை உற்று நோக்குவாருக்கு உண்மைப் புலப்படாமல் போகாது.
இது மட்டுமல்ல, கம்பராமாயணம் நாடுவிட்ட படலம் 40இல் செய்யுளாகிய
சிங்கல் இல் கூதாலி
என்பதையும் நோக்குக. தமிழ்ச் செய்யுள்களில் பல இடங்களில் இவ்வாறு வந்துள்ளதென்பது தமிழறிந்தார் அறியாததன்று.
சிங்கம்-கெடுதல் என்பது பொருள். எனவே பிற உயிர்கட்குக் கேடு சூழ்வது அதனால் தானும் கெடுவது சிங்கம் என்றாயிற்று. உயிர்நூற் புலவரும், சிங்கம் இந்நாட்டிலும் பிற நாட்டிலும் இல்லாது குறைந்து வருவதற்குக் காரணம் பிற உயிரை அரிப்பதுதான் என்று கூறுவார்கள். சிங்கத்துக்கு அரிமா எனப் பெயருண்டு. சிங்கல் சிங்கத்துக்கு ஆன ஆகுபெயர்.
எனவே சிங்கம் தூய தமிழ் சசொல் என்க!
வரம்
வரல் என்பது ஈறுதிரிந்த தொழற் பெயராய் வருதலுற்ற பொருளைக் குறிக்கும். இந்த ரல் என்பது வரத்து என்றும் வழங்கும். அதனாலன்றோ கம்பராமாயணம் ஆரணிய காண்டம், விராதன் வதைப்படலம் 22ஆம் செய்யுளில்
வரத்தின்-வருதலினால் என்று பொருள் கொண்டதும் என்க.
எனவே வரம் என்பது தூய தமிழ்ச் சொல்லே என்று கடைப்பிடிக்க.
(குயில், குரல்: 1, இசை: 27, 2-12-58)
பாக்கியம்
இது வடசொல் அன்று! வடசொல் அன்று!! பயன் கொழிக்கும் நெய்தனிலத்தூரையும், பயன் கொழிக்கும் மருதநிலத்தூரையும் பாக்கம் என்னும் தமிழ்நூல். பாக்கம் என்பது அங்கு தோன்றும் செல்வத்துக்கு ஆனது இடவாகு பெயர். பாக்கம், பாக்கியம் ஆனது. திரிதல் ஓவம். ஓவியம் என்பதைப் போல. இனிப் பாக்கம் இடையில் இகரச்சாரியை பெற்றது ஆகு பெயர்க்குறி எனவும் ஆம்.
செல்வம், பேறு முதலியவற்றைக் குறிக்கும் பாக்கியம் என்பது தூய தமிழ்க் காரணப்பெயர் என்று நினைவிற் கொள்க!
(குயில்: குரல்: 1, இசை: 29, 16-12-58)
சுவர்க்கம்
இது துறக்கம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயர்ச் சொல்லின் சிதைவு. அவ்வாறு வடவர் சிதைத்து எடுத்தாண்டார்கள். நம் பழந்தமிழ் இலக்கியத்தினின்று.
துறக்கம்-விட்டநிலை, உள்ளத்தின் நிலை, ஈதல் அறம் தீவினை விட்டு ஈட்டல் பொருள். எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம். பரனை நினைத்த இம் மூன்றும் விட்டதே பேரின்ப வீடு, என்ற நம் ஔவை மூதாட்டியார் அருளிய செய்யுட் பொருளை உற்றுக் காண்க. குடும்பத் தொல்லையைத் துறந்த உள்ளப் பாங்கே துறக்கம் என்றான் தமிழன். இந்திரன் முதலியவர்க்குக் கள்ளையும், ஆட்டையும், மாட்டையும் கொடுத்துப் பெறுவதோர் மேலுலகம் என்றும் அதைச் செத்த பிறகே அடைய முடியும் என்றும் ஆரியர் புரட்டை ஒத்துக் கொள்ளாதவன் தமிழன்.
இன்னும் அறிய வேண்டுவது, அதாவது நினைவல் வைக்க வேண்டியது. தமிழன் இந் நாட்டில் என்றும் உள்ளவன். அன் அன்றே நன்று வாழ்ந்தவன். ஆரியன் தமிழினிடத்தினின்றே பிச்சை எடுத்திருக்க வேண்டும்.
ஏன் இதை இவ்வளவாய் விடுத்தோம் எனின், கம்பராமாயணத்துக்குப் பொருள் கூற வந்த ஒரு பார்ப்பனப் பேதை, துறக்கம் சுவர்க்கம் என்ற வடசொல்லின் சிதைவு என்றாள். பொந்து தேடி ஓடிவந்த ஆரியக் குரங்கு பொனன்டை கட்டி வந்தது என்பதை நிகர்க்கும் இது.
(குயில்: குரல்: 1, இசை: 34, 27-1-1959)
அவி
அவிதல், அவியல் என்பனவற்றின் முதனிலைத் தொழிற் பெயரே அவி என்பது. வேவுதல் என்பது இதன் பொருள்.

இனி, அவி என்பது தொழிலாகுபெயர். வேவுதல் உடைய ஒரு பொருளைக் குறித்தது. அந்த வேவற்பொருள் எது? தேவர் உணவு என்று மழுப்பற் பொருள் கூறிக் கொண்டிருக்கின்றனர் ஆரியச் சார்பினர். ஆடுமாடுகளின் ஊன் என்றும் நிணம் என்றும் வெளிப்படையாகவே கூறுவார்கள்?
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று என்ற குறட்பாவுக்குப் பொருள் கூற வந்த பரிமேலழகர், அவி என்பதற்கு நெய் முதலியவைகள் என்று கூறி மழுப்புகின்றார். கொலை வேள்வியும், தம் இனத்தார்க்கு உள்ள புலால் வெறியும் பரிமேலழகர்க்கே நாணத்தை உண்டாக்குகின்றன. வெளிப்படை பொருளை அவரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்!
கா. சுப்பிரமணியனார் (எம்.எல். பிள்ளை) திருக்குறள்-பொழிப்புரையுள் அவி என்பதற்கு ஊன் என்றே பொருள் கூறியருளியுள்ளார்.
ஆட்டைப் பல பார்ப்பனர் அமிழ்த்திப் பிடித்துக் கொள்வார்கள். அதன் விதையைப் பிசைந்து உயிர் போக்குவார்கள். மற்றும் சில கொலைகாரப் பார்ப்பன பசங்கள் எதிரில் உள்ள தீயில் அதை எடுத்துப் போடுவார்கள். அந்த ஆட்டின் நிணமே-கொழுப்பே அத் தீயை மூண்டெழச் செய்கின்றன. அந்த நிணத்திலேயே அந்த ஆட்டுடல் வேகுகின்றது. இந்தத் திருப்பணியில் பெரிதாக எண்ணப்படுவன இவ் விரண்டுமே! ஒன்று தீ எரியச் செய்கின்றது நிணம். கறியை வேகச் செய்கின்றது நிணம் என்பது மற்றொன்று. இவைகளைக் கருதித்தான் அவி சொரிந்து என்றார் வள்ளுவர்.
இனி, அவி என்ற சொல்லை வடமொழி நூற்களிற் கண்ட சில தமிழ் விபூடணர், இது வடமொழிச் சிதைவென்று கூறி மானமிழப்பர். தமிழ் நூலில், தமிழ் நாட்டில் அவி எனக் காணும் தமிழர் தமிழிலக்கணத்தால்-தமிழ்ணத்தால் அச் சொல்லை நோக்க வேண்டுமேயன்றி ஆரியணத்தின்று நோக்குவது என்ன காலக்கோளாறோ நாம் அறியோம். எனவே, அவி தூய தமிழ்க் காரணப் பெயர் எனக் கடைப்பிடிக்க.
(குயில்: குரல்: 1, இசை: 37, 17-2-59)
நாகம்
இது வடமொழியல்லவா?-இவ்வாறு தனிமுறையில் கேட்கின்றார் ஓர் வடமொழி அன்பர். அதேநேரத்தில் அவர் தனி முறையில் கேட்கின்றேன், தனி முறையில் பதில் எழுதுங்கள், குயில் வாயிலாய் பதில் தருவதாயிருந்தால் என் பெயரைக் குறிக்க வேண்டாம் என்றும் கூறுகின்றார். இவ்வளவு கட்டுப்பாடுகளை நமக்கு ஏற்படுத்துகின்றார். 1. காரணம் நன்பநின் தலைக்கொழுப்பேயாகும்.
கரு என்றதன் அடியாகத் தோன்றியத நாகம் நகுதல் என்பதற்கு மகிழ்ச்சி, ஒளி சிறப்பு என்பன பொருளாகும்.
நகு என்பதன் அடியாகப் பிறந்த நாகம் என்றது சொல்லுக்கு நாளடைவில் விண், குரங்கு, புன்னை, தூசு மலை, பாம்பு, யானை என்பன அனைத்தும் பொருளாயின.
ஏன்?-  இங்கு கூறிய விண் முதலிய அனைத்தும் மகிழ்ச்சியையும் ஒளியையும் சிறப்பையும் தரத்தக்கன ஆதலால்.
நகு முதல் நீண்டு நாகு என்றாயது இலக்கணப்படி நாகு என்பது அம்சாரியை பெற்றது இலக்கணப்படியே.
வடமொழி இலக்கியத்தில் நாகம் வருகின்றதே என்று கேட்பர் சில அறிவிலிகள். வந்தாலென்ன! தமிழ்ச் சொல்லைத் திருடாதவர்களா டவர்? வடமொழி இலக்கியம் என்பதாக-தனித்தன்மையோடு-கலப்பில்லாமல் ஒன்று வாழ்கின்றதோ வடவருக்கு?
நாகம் தூய தமிழ்க் காரணப்பெயர் என்பதை மீண்டும் வலியுறுத்தினோம்.
(குயில்: குரல்: 1, இசை: 38, 24-2-59)
பலி 

dgdgdgவாய் என்பதன் அடியாகப் பிறந்து வாய்மை போலவும், மெய் என்பதன் அடியாகப் பிறந்த மெய்ம்மை போலவும், உண் என்பதன் அடியாகப் பிறந்த உண்மைபோலவும், கண் என்பதன் அடியாகப் பிறந்த கணம் போலவும், பல் என்பதன் அடியாகப் பிறந்தது பலி என்று அறிக. பலி-பல்லினால் வலிந்து உண்ணத் தகும் உணவுக்கும் நாளடைவில் பல்வகை உணவுப் படையலுக்கும் வழங்கிற்று.
முதலில் விலங்கு முதலியவற்றை மூடவழக்கத்தால் தெய்வப் படிவங்களில் முன் வைத்து வெட்டிக் கொலை புரிந்தார்கள். அதை தெய்வங்களே நேரில் பல்லினால் கடித்து உண்டதாக சிறப்புறுத்தினார்கள்.
பின்னர் நாகரிகமிக்க தமிழர்களின் வெறுப்புக்கு அஞ்சி, தெய்வத்துக்குத் தருவன எவற்றையும் பலி என்ற பெயராலேயே கூறத் தொடங்கினர் ஆரியப்பாவிகள். எனவே, பலி தூயத் தமிழ் காரணப் பெயர் என்று கடைபிடிக்க!
(குயில்: குரல்: 1, இசை: 39, 3-3-1959)
துளசி
இது துழாய் என்ற தூய தமிழ்ச் சொல்லின் சிதைவு. இவ்வாறு சிதைத்து எடுத்தாண்டனர் வடவர்.
இந்த திருட்டு அவர்களிடம் நிலைத்து விடவே, இன்று துழாய் என்பதே துளசியினின்றும் வந்தது என்கின்றனர். துழாய் இருக்க, அவர்களால் ஒலி மாற்றம் செய்யப்பட்ட துளசி என்ற சொல்லை நாம் ஏன் எடுத்தாள வேண்டும்.
துழா-பரவுதல். மணம் பரவுதல் என்க.
ய். பெயர் இறுதிநிலை.
(குயில்: குரல்: 1, இசை: 40, 10-3-1959)
இலட்சம்
 
இது இலக்கம் என்ற தூய தமிழ்ச் சொற் சிதைவு. ஒன்றினும் ஒளியுடையது பத்து: பத்தினும் ஒளியுடையது ஆயிரம். ஆயிரத்தினும் ஒளியுடையது பத்தாயிரம், பத்தாயிரத்தினும் ஒளியுடையது நூறாயிரம். ஒளி-புகழ், கவர்ச்சி அடையத் தக்கது.
எல்லே இலக்கம் என்பது தொல்காப்பியம். இலக்கம் என்பது அம் சாரியையின்றி இலக்கு என நிற்பதும் உண்டு.
லட்சம் என்ற வடசொல்லினின்று இலக்கம் வந்தது என்று ஏமாற்றுவார். சொற்கள் கான்றுமிழத்தக்கவை.
தமிழன் வடசொற்காரர் சிதைத்தபடி, லட்சம் என்றோ இலட்சம் என்றோ எழுதாமல் இலக்கம் என்ற சிதையா தூய தமிழ்க் காரணப் பெயரை எழுதுக. பேசுக.
ஆயுள் இது ஆயுசு என்ற வடசொல்லின் சிதைவென்று சொல்லி ஏமாற்றி வருகின்றனர் வடவர். அவ்வாறே ஏமாந்து கிடக்கின்றனர் தமிழர்.
ஆயுள் என்பது ஆவுள் என்பதன் மரூஉ. ஆவுள்-உள் என்னும் தொழிற் பெயர் இறுதி நிலை பெற்ற ஆதல் என்னும் பொருட்டாய தொழிற் பெயரேயாகும். இதை ந்தவர் எடுத்தாண்டவர்.
வாழ் நாள் ஆய்க்ண்டே-கழிந்து கொண்டே போவது என்ற காரணம் பற்றி வந்தது ஆயுள் என்பது.
எனவே, ஆயுள் தூய தமிழ்க் காரணப் பெயரே.
கலசம்
கவயம் என்ற தமிழ்ச் சொல் கவசம் என வடவரால் திரிக்கப்பட்டது. எனவே கவயம் என்பதினின்று கவசம் தோன்றியது.
கல்+அகம்=கல்லகம். இதன் மரூஉ கலம். கல்+அகடு=கலடு. கன்னிலம் ஆனது நோக்குக. கலம் இடை யகரம் பெற்றுக் கவசம் ஆனது. கல்லைக் குழிவு செய்தது கலம், கலயம் என்று காரணம் கண்டுகொள்க. குழிவு கல்லைக் குழிவு செய்தது என்ற இடத்துப் போல, கல்லை என்பதும் கல்லியது என்ற பொருள் அமைந்ததே ஆகும். வடவர் திரித்ததால் நாம் அதை மேற்கொள்ள வேண்டா. கலயம், கலம் என்றே எழுதுக.
சூது
 
இது வடசொல் அன்று. தூயத்தமிழ்க் காரணப்பெயர். சூழ் வினை முதனிலை, தல் என்ற தொழில் இறுதிநிலை பெற்றுச் சூழல் என்றும், வு என்ற தொழிலிறுதி நிலை பெற்றுச் சூழ்து என்றும் வரும். எனினும் சூழ்தல், சூழல், சூழ்து அனைத்தும் பொருளால் ஒன்றே. சூழ்து-விரகு (உபயம் என்பர் வடசொல்லார்) சூது, இடைக்குறை. எனவே சூது விரகால் பிறர் பொருள் பறித்தல் என்பது. சூது, அம்சாரியைப் பெற்றுச் சூதம் எனவும் வருவதுண்டு. குன்று குன்றம், மன்று மன்றம் என்பவற்றைப் போல.
இனிச் சூழ்து என்பது சூது என இடையிலுள்ள ழ் இல்லாதொழிந்தது எப்படி எனில், அது இடைக்குறை என்னும் தமிழிலக்கணம். போழ்து என்பது போது என்று ஆனது போல.
எனவே சூது தூயதமிழ்க் காரணப்பெயர். வடநூலில் வரும் த்யூத் என்பதன் திரிபல்லவா சூது என்று கேட்பது முடிச்சு மாறித்தனம் எனவிருக்க.
விஞ்சை
இதை விந்த்யா என்பதன் திரிபு என்பார் தமிழறியார். விஞ்சுதல் (மிஞ்சுதல்) என்ற சொல் தமிழில்தான் உண்டு. வித்யா என்பதோ விந்த்யா என்பதோ விஞ்சை என வராது, வரத் தேவையுமில்லை.
விஞ்சுதல், விஞ்சை, விஞ்சு என்பவை முதனிலையாகக் கொண்ட தொழிற்பெயர்களே. பொருளும் ஒன்றுதான்.
கம்பலம்-கம்பளம்
இது தூய தமிழ்க் காரணப் பெயர். விளக்கிக் காட்டி, படிப்போருக்குத் தமிழின் தொன்மை உணர்த்தப்படும்.
செந்நெ ருப்புணும் செவ்வெ லிம்மயிர்
அந்நெருப் பளவு ஆப்பொற் கம்பலம்
இச் சீவகசிந்தாமணி மேற்கோளை நுணுகி ஆராய்ந்தால் செவ்வெலி மயிர் கொண்டு நெய்ததே கம்பலம்-கம்பளம் என விளங்கும்.
இவ்வடிகட்கு நெருப்பைத் தின்னும் எலிமயிர்க் கம்பளம் என்று நச்சினார்க்கினியார் பொருள் கொண்டது பொருந்தாது. செந்நிறம் ஏறிய எலி மயிர் என்பதே அதன் பொருளாகும்.
இனி முதலாவதாகக் கம்பலம் என்னும் சொல் எதனின்று தோன்றியது என்பது ஆராயப்பட வேண்டும். சொல்லாராய்ச்சி இல்லாதவர் இதனை ஒரு வடசொல் என்று கூறுவர். அவ்வாறானால் வடமொழியில் அதற்குப் பொருத்தமான அடிச்சொல் கூற முடியுமா? வாசசுபத்தியம் முதலிய அகரவரிசை நூலோர், ஆசைப்படுதல் என்னும் பொருளுள்ள கம் என்ற அடியினின்று இது பிறந்தது என்பர். அது பொருந்தாது. அன்றியும் கம்பலம் என்ற சொல், கிரேக்கர், இலத்தீனியம், பழைய ஆங்கிலம் முதலிய பிற ஆரியமொழிகளுள்ளும் இல்லை. வடமொழியில் இச்சொல் ஒருவகை மானின் பெயராய் வழங்குவதுண்டு. கம்பலி என்னும் சொல்லுருவம் காலத்தால் மிக முற்பட்டது என்று மோனியர் உ. வில்லியம்சு, தம் அகரவரிசை நூலில் கூறியுள்ளதும் நினைற் கொள்ளத்தக்கதாகும். அவர் சொல்லியபடி காலத்தால் முற்பட்ட நாகரிகம் வாய்ந்த தமிழில் இக் கம்பலம் ஆடு என்று கூறிற்றுப் பிங்கலந்தை. 
மெழகம் கம்பள்ம தகரே திண்ணகம்
ஏழகம் கடாதுரு ஆட்டின் ஏறே
என்பதால் அறிக! இதனால் கம்பலம்-கம்பளம் ஆட்டின் பெயர். இனி, எலி மயிர் என்று வந்துள்ளதை ஆட்டு மயிரால் அன்றோ ஆனது கம்பளம் என ஐயுறுவர். எலி மயிர் என்பதில் உள்ள எலி என்ற சொல் ஆடு என்பதே என்பதை மேஷம் என்பது பற்றி விளக்கும் போது விளக்கப்படும்.
(குயில்: குரல்: 1, இசை: 45, 14-4-59)
அவிசு
அவிசு, அவிது, அவிதல் ஒரே பொருளில் அமைந்த தொழிற் பெயர்கள். அ, து, தல் தொழிற்பெயர் இறுதி நிலைகள். வேகவைத்தல் என்பது பொருள். இது அவி என முதனிலைத் தொழிற் பெயராகவே நிற்பதும் உண்டு.
அ சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று
என்ற குறட்பாவில் நோக்குக!
அவிசு, அவிது, அவிதல், அவி இவை தொழிலாகு பெயராய், அவிக்கப் போகும் ஆடுமாடுகளின் தசையையும் அவித்த, அதாது வெண்ணெயை அவித்த-வேவைத்த-காய்ச்சிய நெய்யையும் குறிக்கும்.
வேள்வியின் பெயரால் ஆடுமாடுகளைப் பலியிட்டு வேகவைத்துத் தின்னும் ஆரியர், இத்தமிழ்ச் சொல்லை எடுத்தாண்டார். அவர் ஆவிஸ் என வாயாடுவர். எனவே, அவி, அவிசு தூய தமிழ்க் காரணப் பெயர்கள்.
மேஷம்
இது மேழகம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயரின் திரிபு. இவ்வாறு திரித்து மேற்கொண்டனர் ஆரியர்.
மேழகம் கம்பளம் தகரே திண்ணகம்
ஏழகம் கடாதுரு ஆட்டின் ஏறே
(பிங்கலந்தை கஎஉ)
இதில் மேழகம் ஆட்டின் பெயராதலை அறிக! மே அல்லது மேழ் என்று கத்துதலைக் கொண்டுள்ளதால் மேழகம் என்பது காரணப் பெயர் என்பதை அறிதல் வேண்டும். வடவரால் திரிக்கப்பட்டதால் மேஷம் என்பதைத் தமிழர்கள் மேற்கொள்ளுவது சிறப்பில்லை. இதுவே தொகுத்தல் பெற்று மேழம் என்றும் வரும். மேடம் என்றும் வரும். இவைகளையெல்லாம் தள்ளுக! மேழகம் என்பதை மட்டும் காள்ளுக!
(குயில்: குரல்: 1, இசை: 47, 28-4-1957)
அங்கி
பிங்கலந்தை அங்கி, நெருப்பு என்னும்! கந்தபுராணம் (பாயிரம் க) அக்கினி தேவன் என்னும்! திருக்காளத்திப் புராணம் (30--41) சூரியன் என்னும்! பரிபாடல் கார்த்திகை நட்சத்திரம் என்னும்! இத்தனைப் பொருள் அமைந்தது அங்கி என்பது. அஃது+இ என ஆய்தம் மெல்லினமாகிப் புணர்ந்த தூய தமிழ்ப் பெயரே என அறிதல் வேண்டும். இதை வடசொல் என்று ஏமாற்றுவர். அஃதல்-விரிதல்.
அங்கத்தையுடையது. அங்கி என்னும்போது நீண்ட சட்டையையும் குறிக்கும். இது அங்கிகை என வந்து பெண்களின் சட்டை! (இரவுக்கை, ஜாக்கெட்)யையும் குறிக்கும்.
அசடு
கம்பராமாயணம் பார்ப்பனர் உரையில் சடு-அறிவுடமை, அசடு-அறியாமை என்று பொருள் கூறி, இது வடசொல் அயறு, அசறு என்பதன் திரிபு ஆதலால் தூய தமிழ்ச் சொல்லாகப்படும்.
அடவி
இது வடசொல்லன்று. அடர்வி என்பதன் இடைக்குறையாய் அடர்தல் எனப் பொருள் தருவது. ஆகு பெயர், அடவி-சோலை, கூட்டம்.
(குயில்: குரல்: 1, இசை: 51 26-5-59)
அம்பரம்
ஆடைக்கும், வானுக்கும், திசைக்கும், கடலுக்கும், மன்றத்திற்கும், துயிலிடத்திற்கும், உதட்டுக்கும் பெயராகிய அம்பரம் என்பது தூய தமிழ்க் காரணப் பெயர்.
அம்முவது என்றால் சூழ்ந்திருப்பது. அரம் உறுவது என்ற பொருள் பட்டு வருவதோர் கடைநிலை. இடையில் ப் விரித்தல். இந்தக் கடைநிலை ப கரத்தையும் இழுத்துக் கொண்டு (பரம்) கடைநிலையாய் வருவதும் உண்டு. விளம்பரம் என்பதிற்காண்க. எனவே, அம்பரம் சூழ்ந்திருப்பது. ஆடை உடலைச் சூழ்ந்திருப்பது காண்க. திசையும் அவ்வாறே, கடலும் அவ்வாறே. மன்றம் அமைந்திருப்பாரைச் சூழ்ந்திருப்பதைக் காண்க! துயிலிடமும் அவ்வாறே! உதடு உள்வாயைச் சூழ்ந்திருப்பதைக் காண்க!
இவ் வம்பரமே அம்பலம் என வேறுபட்டு வரும்.
அம்பா
என்பதும் வடசொல் என எண்ணா தொழிக! அம்மா என்பதின் திரிபே அம்பா. பரிபாடல் க க. அகல் அம்பா வருகின்றது. இஃது அம்மை என்றும் வருவதுண்டு.
அம்மன்
அம்மன் என்பதும் தூய தமிழ்ச் சொல்லே. அம்மனை என்பதன் கடைநிலை கெட்டது.
அமர்
இது வட சொல்லன்று. அமர்-போர், போர்க்களம் (புறப், வெண். பா. அ ரு) விருப்பம் (அகம் 23) கோட்டை மதில் எனப் பல பொருள் குறிக்கும் ஒரு சொல் என அறிக!
போர்வீரர் என்பது பொருள். விருப்பமுடையவர் என்ற காரணம் கூறித் தேவர்க்குப் பெயராக எடுத்தாண்டனர் வடமொழியாளர்.
(குயில்: குரல்: 1, இசை: 52, 2-6-59)
உஷட்ர
இது வடமொழியில் ஒட்டத்தின் பெயர். இப்பெயர் வடவர்க்கு எங்கிருந்து கிடைத்தது? தமிழில்  இருந்த ஒட்டகத்தையே இவ்று திரிந்து மேற்கொண்டனர். ஒட்டகம் குளிர்ந்த காடாகிய வடநாட்டில் இல்லை. தமிழில் ஒட்டகம் உண்டா? ஒட்டம் என்ற பெயரால் குறிக்கப்படும் பொருள் தமிழகத்தில் உண்டா? இரண்டும் உண்டு.
ஒட்டகம் அவற்றோடு ஒரு வழிநிலையும் என்பது தொல்காப்பிய மரபியல் நூற்பா.
இதனால் ஆராயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய தொல்காப்பயத்தில் ஒட்டகம் என்ற சொல் காணப்படுகின்றதல்லவா?
இனி, ஒட்டகம் தமிழகத்தில் இருந்ததா எனில், கூறுவோம்.
இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் கடலால் விழுங்கப்பட்ட தென்தமிழ்க் குமரி நாட்டினிடையில் இருந்த பாலை நிலத்தைக் கடக்க உதவும் பொருட்டு இயற்கை தர இருந்தது ஒட்டகம். இதன் விரிவை மறைமலை அடிகளார் அருளிச் செய்த மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்ற நூலின் எசுஉ, எசு, பக்கங்களில் கண்டு மகிழ்க.
எனவே உஷட்ர என்பது ஒட்டகம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயரின் சிதைவே என்பது பெறப்பட்டது.
ஒட்டகம், ஒட்டு+அகம் எனப் பிரிந்து, உதவும் உள்ளமுடையது எனப் பொருள் பயப்பது. இது-ஓட்டை எனவும் வழங்கும். இது இழிவழக்கு.
(குயில்: குரல்: 1, இசை: 53, 9-6-1959)
தூலம்
ஸ்தூலம் என்ற வடசொல்லுக்கும், தூலம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயருக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணுவோரும் இருக்கின்றார்கள்.
சுலவு என்ற சொல்லடியாகத் தோன்றிய பல சொற்களில் தூலமும் ஒன்று என்று உணர்தல் வேண்டம். தூலம், சுற்றி நீண்டது. காரணப் பெயர்.
இலேசு 
இது இளைது என்பதன் மரூஉ. இளைதாக முண்மரம் கொள்க என்ற குறளடி காண்க. இளைது, இளப்பம், இளைப்பம், இளசி என்பன ஒரு பொருளன. முதுமையால் பெறப்படும் வன்மை இலாதது. இது புலன்களுக்குப் புலப்படுவதில் அரிதின்மையும், தூக்குவதற்குத் தொல்லையின்மையையும் குறித்து வழங்குறிது.
பலபம்
பலகை என்ற சொல் ஈறு திரிந்த ஓர் ஆகுபெயர். பலகை-கற்பலகை, அதன் துகளைக் குழைத்துச் செய்த கற்குச்சி பலபம்.
எனவே பலபம் வந்தவர் மொழியன்று.
அருச்சனை
இது வடசொல் என்று மயங்கற்க! அருத்தனை என்பதின் போலி. அருத்து முதனிலை. அன்சாரியை, ஐ தொழற்பெயர். இறுதிநிலை, அருந்துதல் என்பதில் அருத்து முதநிலை. தல் தொழிற்பெயர் இறுதிநிலை. எனவே அருத்தனை அருத்துதல் ஒன்றே. உண்பித்தல் என்பது பொருள். அருந்துதலின் பிறவினை இது.
அருத்தனை, பொருத்தனை என்பது சொல் வழக்கு. இவற்றில் பொருத்தனை என்பது பொருப்பேற்றல் என்று பொருள்படும். விரதம் என்னும் வடசொல் இதே பொருளில் இடம் பெறும். வேண்டிக் கொள்ளுதல் என்றும் கூறுவதுண்டு. அறுத்தல் பெருத்தல் என்பன வேறு பொருளில் அமைந்தவை.
(குயில், குரல்: 2, இசை: 3, 23-6-59)
இலம்பாடி (லம்பாடி)
இது லம்பாடி என்று வழங்குகிறது. லகரத்தை முதலாகக் கொண்டு தமிழ்ச் சொல் வராது. ஆதலின் இலம்பாடி என்றே எழுதுக. பேசுக. இலம்பாடி-வறியவள். இலம்பாடு உடைய ஒரு கூட்டம். வறியவனைக் குறிக்கும்போது இலம்பாடு அனைத்துமோர் முதனிலை. இ பெண்பால் இறுதிநிலை என்க. ஒரு கூட்டத்தைக் குறிக்கும் போது, இலம்பாடி ஆகுபெயரால் இலம்பாடுடைய கூட்டத்தைக் குறித்து அவ்விடத்து இகரம் அஃறிணை ஒருமை இறுதிநிலை என்க. நாற்காலி என்பதிற்போல.
எனவே இலம்பாடி தூய தமிழ்க் காரணப் பெயர் என உணர வேண்டும்.
ஏளனம்
இது வட சொல்லார் என்றோர் அஞ்சல் கிடைத்துள்ளது நமக்கு. தூய தமிழ்ச் சொல்லாகும். எள்ளல எனில் இகழ்தல், கேலி செய்தல் என்பது பொருள்! எள்ளலின் முதனிலையாகிய எள் என்பது முதல் ஆண்டு அன், அம், சாரியைகள் பெற்றது. இதுவே ஏளிதம், ஏக்கை என்றெல்லாம் மருவி வழங்கும். ஏளனம் என்பதன் மரூஉ கேலி என்பதையும் யாராலும் மறுக்க முடியாது
எனவே ஏளனம், ஏளிதம், ஏக்கை, கேலி அனைத்தும் தூய தமிழ்ச் சொறக்ளே!
(குயில்: குரல்: 2, இசை: 6, 14-7-1959)
ஆலாபனம்-ஆலாபனை 
என்பவை வடசொற்கள் அல்ல, தமிழ்ச் சொற்களே ஆளத்தி என்பது ஆலாபனம் ஆலாபனை என மருவிற்று.
ஆளத்தி-இசைகளை ஆளும் முறை, காரணப் பெயர். ஆளத்தியை வக்காணம் என்றும் கூறும். வக்கணை இழி வழக்கு.
உவணம்
அவண் இவண் உவண் என்பவற்றில் உவண் என்பது உயரத்தைக் குறிப்பதோர் சுட்டுப் பெயர். இது அம்சாரியை பெற்று உவணம் என வழங்கும். உவணம் உயரத்திற்குப் பெயராகவே பின் அரு உயரத்திற் பறக்கும் பருந்துக்கும் ஆகு பெயராயிற்று. உவணம்-உயரம், பருந்து.
இதை வடவர் வடமொழி என்று ஏமாற்றுவர். தூய காரணப் பெயராதல் அறிந்து உவக்க.
சமம்
இது தமிழ்ச் சொல், வடசொல் அன்று. இது ஈம் எனவும் தொல்காப்பியத்தில் வந்துள்ளது. ஈமம் - சுடுகாடு.
ஏமம்
இது வடசொல் அன்று, தூய தமிழ்ச்சொல். ஏமம் - நள்ளிரவு. பொன், இன்பம், காலல், பொருள். ஏமம் என்பதை ஹேம ஆக்கி அதைப் பொன்னுக்கு இட்டழைத்தார்கள் சொல்லறியராகிய வடவர்!
அலாதி
பிறமொழிச் சொல்லன்று. வடசொல்லும் அன்று.
அலாதது-அல்லாதது என்பதன் தொகுத்தல். இருப்பு முறை அல்லாதது, தனி என்பன அதன் பொருள்கள்.
அலாதது என்பதன் மரூஉ அலாதி என்பது.
எனவே, அலாதி தூய தமிழ்க் காரணப் பெயர் என்று தெளிக. சுரம்
சுரம் என்ற ஒலி வடமொழியிலும் இருக்கலாம். அதற்கும் தமிழ்ச் சரத்திற்கும் தொடர்பே இல்லை.
சுரம் என்பது வடமொழி அன்று என்றும், அது தமிழ்ச் சொல்லே என்றும் துணிக.
சுர் என்பது விரைவையும் ஒலியையும் குறிக்க வருவதோர் குறிப்பிடைச் சொல்-இதனால் அது தீய சுவையின் தாக்குதலையும், தீய ஒளியின், தீய ஊற்றின், தீய ஓசை தீய நாற்றம் இவற்றின் தாக்குதலையும் குறிப்பதாயிற்று. சுர் என்பது அம் சாரியை பெற்றுச் சுரம் ஆனது. அருநெறி, கள், காடு, காய்ச்சல், பாலை நிலம், நெடுவழி இவற்றைக் குறிக்கத் தமிழில் சுரல் என்றால், பிழையாகாது. அது வடசொல்லன்று, தூய தமிழ்க் காரணப் பெயர். இதை சுவரம் என்று கூறிக் காய்ச்சலைக் குறிப்பவர் பிழை செய்தவராவார்கள். காய்ச்சலைக் குறிக்கும் போதும் சுரம் தூய தமிழ்க் காரணப் பெயர்.
ஆனால், சுவரம் என்றதோர் வடமொழி உண்டு. அதற்கும் சுரம் என்பதற்கும் தொடர்பே இல்லை. சுவரம் என்ற வடமொழிச் சொல்லுக்கு இசை என்பது பொருள்.
(குயில்: குரலு: 2, இசை: 14, 13-10-1959)
பாலன், பாலியன்
இந்தச் சொல் காதில் விழுந்ததும் தமிழனுக்கு எத்தகைய நினைவு தோன்ற வேண்டும்? பால் குடிக்கும் பருவமுள்ள ஒரு குழந்தை நினைவல்லவா வரவேண்டும்!ஏன்? அந்தச் சொல் பால் என்றதிலிருந்தல்லவா துவங்குகிறது. அவன் பாலன் என்ற தொடரில் அவன் எழுவாய், பாலன் பயனிலை, எனவே, இங்கு பால் முதனிலை! அன் ஆண்பால் ஒருமை குறிப்பு வினைமுற்று பாலை உடையவனாக இருக்கின்றான் என்பது பொருள். பாலன் வந்தான் என்ற விடத்தில் பாலன் குறிப்பு வினையாலணையும் பெயராகும். பாலை உடையவன் அல்லது பால் குடிப்பவன் என்ற பொருள் படுவதால்.
இவ்வாறெல்லாம் இல்லாமல் பாலன் என்பது இளம் பருவமுடையவன். பிள்ளை என்ற பொருளில் வழங்கும் போது பால் என்ற தூய-தெரிந்த-தமிழ்ப் பெயர் நமக்குக் காட்சியளிக்கிறது. அது கொண்டு பாலன் என்பது பால் குடிக்கும் இளையவன் என்ற பொருள் நமக்குத் தோன்ற வேண்டாமா? அதில் ள்ள தமிழ்த் தன்மை மட்டும்தானே நமக்குப் புலனாக வேண்டும்.
இவைகள் எல்லாம் விட்டு விட்டுப் பாலன் என்பது ஒரு வடசொல் என்ற இருள், நம்மை வந்து சூழ்நது கொளவ்னேன்? பாலன் என்பது குழந்தை என்று பொருள்படும்போது அஃது ஓர் ஆகுபெயராகும், பால் என்பது பால் குடிக்கும் பருவத்துக்கு ஆவதால்,
இனி,
பால் என்பதே பாலம் பாலியம் என அம்முச்சாரியையும் அம்மோடு இகரச் சாரியையும் பெற்று, இளம் பருவத்தைக் குறிக்கும். ஓவம் ஓவியம் காண்க.
பாலன், பாலியன் என்பவை வடசொற்கள் என்று வடசொற்காரர் ஏய்ப்பர். ஏமாறாதிருக்கவே இவ்வாறு ஆராயப்பெற்றது. பாலன், பாலியன் தூய தமிழ்க் காரணப்பெயர் என்பது தெளிதல் வேண்டும்.
நீதி
இது வடசொல் அன்று. நீப்பு, நீத்தல், நீங்கல், நீதல், நீதி அனைத்தும் தொழிற்பெயர்கள். நீதி என்பதில் நீ முதல் நிலை! தி, தொழிற்பெயர். இறுதிநிலை! தி. தொழிற்பெயர் இறுதி நிலையாய் வருதலைச் செய்தி, உய்தி, ஆதி என்பவற்றில் காண்க.
நீதி என்பதன் நேரான பொருள், மனம். புலன்களின் மேல் செல்லுவதினின்று நீங்கி இருப்பது, அது பற்றின்மையைக் குறித்தது. அப்பற்றின்மை ஒருபால் கோடாமையாகிய ஓர் ஆற்றலுக்கு ஆனது: ஆகுபெயர்!
நீதிநூல், அறநூல் இயற்றுவாரும், தமிழரசர் காலத்தில் பற்றற்ற துறவிகளே. இவர்களை நீத்தார் என்ற பெயராற் குறித்தார் வள்ளுவரும்,
நீதி என்ற சொல்லே நமக்குப் பல உண்மைகளைக் காட்டி நிற்கிறது. மேலும் பழந்தமிழர் பண்பாட்டையும் அது விளக்குகின்றது அன்றோ!
நீதி, வடசொல் என்று கதைப்பதும், அதை மதிப்பதும் அறிவு மதுகை அற்றார் செயல் என விடுக்க, நீதி தூய தமிழ்க் காரணப் பெயர்.
(குயில்: குரல்: 2, இசை: 15, 20-10-1959)
அச்சாரம்
 
ஓர் ஒப்பந்தம் பற்றி எழும் அச்சத்தைத் தீர்த்துக் கொள்வதற்கான முற்பணம் என்பது இதன் பொருள்.
இது முதலில் அச்சவாரம் என இருந்தது. பின்னர் அகரம் கெட்டு அச்சாரம் என்றாயிற்று. அச்சம்-அஞ்சுதல். வாரம்-பங்கு பகுதி, அச்சப் பகுதி ஆகிய இது, பணத்திற்கானது ஆகுபெயர். எனவே அச்சாரம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்க.
புத்தகம்
புஸ்தகம் வடமொழி என்று அதன் சிதைவே புத்தகம் என்றும்,  ஆதலால் புத்தகம் வடசொல்லை என்றும் கூறி மகிழ்வர் வடசொல்காரர். அவரடிகத்தும் தமிழர்களும் அப்படியே?
புத்தகம், புதுமை அகம் எனும் இரு சொற்கள் சேர்ந்த ஒருசொல். புதுமையின்மை இறுதி நிலை கெடப் புது என நின்று, அதுவும் தன்ணாதற்றிரட்டல் என்ற சட்டத்தால் புத்து என ஆகி அகம் சேர-உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்பதால் புத்தகம் ஆயிற்று. புத்தகம்-புதுமைக்கு இடமானது, புதுமையான உள்ளிடம்.
அந்நாளில் ஒலி வடிவை வடிவிற் கொணர்ந்தார் எனில் அது புதுமை அன்றோ. எனவே புத்தகம் தூய தமிழ்க் காரணப் பெயர்.
புத்தகத்தை புஸ்தகம் என்றது வடவர் செயல். வேட்டியை வேஷ்டி என்றும், முட்டியை முஷ்டி என்றும் அவர்கள் கூறவில்லையா?
(குயில்: குரல்: 2, இசை: 22, 8-1-59)
மேகம்
இது வடசொல் அன்று, தூய தமிழ்க் காரணப் பெயர். மேகு-மேல் அம்சாரியை. மேக்கு மேற்றிசை மேலும் பேர் என்ற கண்ட காண்க. மேலே தவழும் முகிலுக்கு பெயர். மேல் என்பதே மேற்கு, மேக்கு, மேகு எனத் திரியும்.
இதை வடவர் வடசொல் என்று கூறி மகிழ்ர். அது கடைபட்ட முடிச்சுமாறித்தனம் என்க.
திசை, திக்கு
இவை நிகழ்ச்சி என்பதன் அடியாகப் பிறந்த திகை என்பதன் திரிபுகள் திகை-திசை.
திசை, திக்கு ஆகிய இரண்டம் வடசொற்கள் என்பர் திசை தெரியாது திக்கற்றுத் திரிந்த ஆரியர்.
அனுபோகம்
இது அநுபவம் என்ற வடசொற்றிரவு என்று கூறுவார் கூற்று அறியார் கூற்றே.
அனு அன்மையின் திரிபு. போகம், போதல் போ+கு+அம், முதனிலை இறுதிநிலை இடையில் சாரியையும் என உணர்க.
அனுபோகம் அன்மை அதாவது ஒன்றை உடையவனாயிருந்த நிலை 
ஒழிந்தது.
அனுபோகம்-இல்லாமை தீர்ந்தது, ஒன்றின் மேல் ஏற்பட்ட நிலை.
ஆதலின் இது தூய தமிழ்க் காரணப் பெயர் என்று கடைப்பிடிக்க.
உத்தரவு, உத்திரவு, உத்தாரம்
இவைகள் வடசொற்கள் அல்ல. தூய தமிழ்க் காரணப் பெயர்களே.
உம் என்பது ஆடுமாடு மேய்ப்பவர்களிடம் கேட்கின்றோம். உம் என்பதன் பொருள் என்ன? செல். அதாவது ஓரிடத்தினின்று செல், ஏறு, உயர்வு, கொள் என்பன. ஆடு மாடு பேய்ப்பவர்களிடம் கேட்கப்படுதால் உம் என்பதைப் பற்றி இங்கு நாம் எடுத்துச் சொல்கிறோம் என்பதில்லை. பழங்காலத்தில் மேற்சொன்ன பொருளில் உம் என்பதைத்தான் மேற்கொண்டார்கள் சொற்கள் பொருளாகக் காலமாதலால்.
உம் என்ற பிறகு உந்து எனத் திரிந்தது, திரிந்தாலும் பொருள் மாறாது, மேற்சொல்லிய பொருள்கள் தான்.
உந்து என்பதிலிருந்து உந்தி என்பது தோன்றிற்று. இது வந்து என்பதன் அடியாகப் பிறந்த பெர்ச்சொல். இதில் இ. பெயர் இறுதியில்லை. பொருள் உந்தப்படுதாகிய ஆள் கூட்டம்.
மற்றும் உந்து என்பது உயிர்ப்பினை உந்தும் இடமாகிய கொப்பூழ் மற்றும் உந்தி உந்துதலால் பெற்ற இடமாகிய உயர்ச்சியையும் குறித்தது. பிறவும் உண்டு.
உந்து என்பதனடியாகப் பிறந்தது உந்தல். உந்துதல் தொழிற்பெயர்.
இனி,
உந்து,-உத்து என வலித்தல் பெற்றது என்ன பொரள் முன் சொன்னதே.
உத்து-உத்தரவு. உந்து-அரவு. அரவு தொழிற்பெயர் இறுதிநிலை பெற்று உத்தரவு ஆயிற்று.
அரவு தொழிற் பெயர் இறுதி நிலையால் வருவதைத் தேற்றிரவு முதலியவற்றை காண்க.
உத்தரவு என்ன பொருள்? ஒருவன் தன் ஆணையை மேற் செல்ல வைப்பது. உத்தரம்-(உத்து+ஆர்+அம்) இதில் அரவு என்ற இறுதிநிலை அர் எனத் திரிந்து அம் முச்சாரியைப் பெற்றது.
உத்தரவு, உத்தரம், உத்தாரம் இது சார்ந்த பிற பொருளிலும் வரும். ஆயினும் அப் பிற பொருள்களும் மேலே சொல்லிய பொருளுக்கு அப்பாற் சொல்ல மாட்டா.
எனவே, இவை தூய தமிழ்க் காரணப் பெயர்கள் ஆதல் அறிக. இன்னும் உத்து என்பதன் அடியாக உத்தித்தல், உத்துதல் என்றும் என்பனவும் வருவதுண்டு.
உச்சரித்தல்
இதை வடசொல் என்று (வடவர்) பார்ப்பனர் சொல்லுகின்றார்கள். ஆதலால் இது பற்றியும் விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
உம்+உந்து+உத்து+உச்சு, உச்சு உத்து என்பதன் போல!
உச்சு+அரித்தல்=உச்சரித்தல் அள அரி எனத் திரிந்து தல் இறுதிநிலை பெற்றது.
உச்சரித்தல் என்பதன் பொருள் எழுத்தொலியை வெளியிற் செலுத்துதல். மேலே உம், உந்து, உத்து உச்சு பொருளில மாற்றமில்லை.
எனவே உச்சரித்தல் தூய தமிழ்க்காரணப் பெயர் ஆதல் அறிக.
(குயில்: குரல்: 2, இசை: 27, 12-1-1960)
கவனம்
இது வடசொல் அன்று, கவற்சிவிரப்பம், கல், விருப்பம் கெடுதலினால் ஆகும் வருத்தம்.
அதனடியாகப் பிறந்ததே கவனம், கல் கவன் எனத் திரிந்து அம்முச் சாரியை பெற்றதென்க.
கவனம்-கருத்து, விருப்பம், கண்காணிப்பு.
எனவே கவனம் தூய தமிழ்க் காரணப் பெயர் ஆதல் அறிக.
(குயில்: குரல்: 2, இசை: 28, 26--1--1960)

அடுத்து, ஆரியர்கள் எப்படி தமிழ்ச் சொற்களை சமஸ்கிருதச் சொல்லாக மாற்றிக்கொண்டனர் என்ற ஆய்வுச் செய்திகளை இரண்டாம் பகுதியில் பார்ப்போம்.

3 comments:

  1. தங்களின் அருமையான ஆராய்ச்சிக்கு நன்றி !! தமிழர்களாய் நாம் இணைந்து வெல்வோம்..

    ReplyDelete
  2. அருமையிலும் அருமை

    ReplyDelete