தனியார் துறையில் பணியாற்றும் அறிவும் ஆற்றலும் உடைய இலட்சக் கணக்கான இளைஞர்கள் எவ்வித பணிப்பாதுகாப்பும் இன்றி பணிக்குச் செல்லும் கொடுமை நிலவுகிறது. இது மனித உரிமைக்கு எதிரானது.
25 வயதில் பணியில் சேர்பவரின் உழைப்பைக் கடமையாகச் சுரண்டிவிட்டு, 30
வயதில் ”வேலையில்லை வீட்டுக்குப்போ” என்பது அநீதி! இதைவிடக் கொடுமை வேறு
இருக்க முடியாது.
மனிதன் வாகனம் அல்ல. 5 ஆண்டு பயன் படுத்திய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவது போல், 5 ஆண்டு பணியாற்றியவரை வீட்டுக்கு அனுப்பி விட்டு புதியவரை வேலைக்குச் சேர்க்க! நிறுவனங்கள் இலாபக் கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்காது, இளைஞர்களின் எதிர்கால வாழ்வையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
25 வயதில் பணிக்குச் சேர்ந்த இளைஞர் உயிருள்ள, உணர்வுள்ள, மனிதர். அவருக்கென்று வாழ்க்கை உண்டு, திருமணம், பிள்ளை, பிள்ளைகளின் படிப்பு என்று பலப்பல உண்டு. எனவே, அவர்களின் 55 வயது வரையிலாவது அவர்களுக்கு பணி உத்திரவாதம் வேண்டும். பணியிலிருந்து ஓய்வுபெறும் போது ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.
கம்பெனிகளை விருப்பம் போல மூட அரசு அனுமதிக்கக்கூடாது. அப்படி மூடும் கம்பெனியை அரசே ஏற்று நடத்த வேண்டும். கம்பெனிகளுக்கு அனுமதி அளிக்கும்போது சரியான நிபந்தனைகளுடன் அளிக்க வேண்டும்.
இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கைப் பிரச்சினை இது.
எனவே, இளைஞர்களும் தங்களுக்குள் தொழிற் சங்கங்கள் அமைத்து, தங்களின் உரிமைக்குப் போராட வேண்டும். போராட்டமின்றி நியாயம் (உரிமை) கிடைக்காது! அரசுகள் எச்சரிக்கையுடன் பொறுப்புடன் இதன் கையாள வேண்டும்.
இளைஞர் கரங்கள் இணையட்டும்!
இடரில்லா வாழ்வு அமையட்டும்!

No comments:
Post a Comment