சென்னை படப்பை அருகே இருக்கும் ஆரம்பாக்கத்தில் தன் மகனுடன் தற்போது இருக்கிறார். சொந்த ஊர் கேரளா. 121 வயதிலும் தன் துணிகளை துவைக்கிறார், வீடு கூட்டுகிறார், நடக்கிறார்!
இவருக்கு எட்டு பிள்ளைகள். இரண்டு இறந்து போக மீதி ஆறு. எல்லாம் சிறுவயதில் இருக்கும்போதே கணவன் இறந்துபோக, குடும்பத்தைக் காக்கும் முழுப் பொறுப்பும் இவரைச் சேர்ந்தது.
பிள்ளைகளைக் காப்பாற்ற கூலி வேலை செய்தார். பின் தொலைவிலுள்ள கடலோரக் கிராமத்திற்குச் சென்று மீன் வாங்கிவந்து தலையில் சுமந்து விற்றார்.
இடையிடையே எங்கு கூலி வேலைக்குக் கூப்பிட்டாலும் போவார். பல கி.மீ. நடந்துதான் போவார்.
90 வயது வரை கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். இவரை கைப்பிடித்துக் கூட்டிச் சென்றால் இந்த வயதிலும் பிடிக்காது. கோலூன்றி இவரே நடப்பார். இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை. மருந்து மாத்திரைச் சாப்பிட்டதில்லை!
எதுவெல்லாம் எப்படி? என்றபோது, இயற்கை உணவு சாப்பிட்டோம். இன்றைக்கு எல்லாம் பூச்சிமருந்துதானே சாப்பிடுறீங்க! என்றார்.
இரசாயணத்தில் பயிர் பண்ணுவோரை ஓங்கி அறைந்தது போலிருந்தது!
தெருவில்திரியும் தெண்டத்தீனிகள், கூலிக்குக் கொலை செய்வதைத் தொழிலாய்க் கொண்டோர் திருந்துவார்களா இவரைப் பார்த்து!
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
No comments:
Post a Comment