>> 18ஆவது வயதில் முட்டை முந்தியா? கோழி முந்தியா? என்ற சிக்கலுக்கு தீர்வு சொன்னது.
>> 24ஆவது வயதில் கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்தமதம் 10
பாகத்திற்கும் மறுப்பு எழுதி ‘அர்த்தமற்ற இந்துமதம்’ நூலாக வெளியிட்டு,
கண்ணதாசனையே நேரில் பொதுமேடையில் (சிதம்பரத்தில்) சந்தித்து மறுப்புச்
சொல்லத் தயாரா என்ற சவால்விட்டு, அவரே தோல்வியை ஒப்புக்கொள்ளச் செய்தமை.
>> 1979இல் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவிற்கு சென்னையிலிருந்து பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு தஞ்சைக்கு நடந்தே சென்றமை - வழியனுப்பி வைத்தவர் கலைஞர்.
>> சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் தலைமையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் நடத்திவைக்க தாலி, மோதிரம் இல்லாமல் மாலை மட்டுமே மாற்றிக்கொண்டது எனது திருமணம். பிள்ளைகளுக்குத் தூயத் தமிழ்ப் பெயர் இட்டது.
>> ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’, ‘தினமணி’, ‘பாக்கியா’, ‘மாலைமலர்’ போன்ற இதழ்களில் பல கட்டுரைகள் எழுதியமை.
எனது பிற நூல்கள்:
>> தமிழா நீ ஓர் இந்துவா?
>> பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை!
>> பெண்ணால் முடியும்!
>> சம்பிரதாயங்கள் சரியா?
>> ஆவிகள் உண்மையா?
>> பக்தர்களே பதில் சொல்லுங்கள்
>> தீர்ப்பு
>> பழமெடாழி வழங்கும் பல்துறைச் சிந்தனைகள்
>> மத இணக்க மரபுகள்
>> மறைக்கப்பட்ட மாமனிதர்கள்
>> திப்புசுல்தான்
>> உலகத் தலைவர் நேதாஜி
>> ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்!
>> பி.ஜே.பி. ஒரு பேரபாயம்
>> எய்ட்ஸ் தடுப்பது எப்படி?
>> திருவள்ளுவர் எழுதாத் திருக்குறள்
>> குழப்பம் தரும் குறள்கள் - தீர்வுகள்
>> செய்யக் கூடாதவை
>> சுற்றியுள்ளவை கற்றுத் தருபவை
>> இவர்தான் பெரியார்
>> தப்புத் தாளங்கள்
>> வாழ்வியல் நுட்பங்கள்
>> சொல்லோவியம்
>> தரணியில் சிறந்தத தமிழினம் (தமிழரின் முழுச் சிறப்புத் தொகுப்பு)
>> தில்லுமுல்ல பேச்சா? தெய்வத்தின் குரலா?
>> ஒளிக்கீற்று - கவிதை நூல்
>> காகித ஓடம் - புதினம் (பதினெட்டாவது வயதில் எழுதப்பட்டது)
#கல்வி :
சிற்றூரில் பிறந்து, வளர்ந்து, அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்று, அதன்பின் இரு பட்டமேற்படிப்பும், (எம்.பில்) ஆய்வுப் படிப்பு.
பணிகள் :
முதுகலை ஆசிரியர், அதன்பின் மே.நி.பள்ளி தலைமையாசிரியர் பணி. தற்போது ‘உண்மை’ மாதமிருமுறை இதழ் தயாரிப்புப் பணி. நூற்றுக்கணக்கான கருத்தரங்குகளில் உரையாற்றுயமை.
“சன்”, “மக்கள்”, “வின்”, “கேப்டன்”, “புதிய தலைமுறை”, “இமயம்” போன்ற தொலைக்காட்சிகளில் நேரலை மற்றும் நேர்காணலில் பங்கேற்பு.
#விருது :
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் மற்றும் புத்தகக் கண்காட்சி அளித்த சிறந்த எழுத்தாளருக்கான விருது.
அயல்நாடு: சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு தமிழர் பண்பாடு, பகுத்தறிவு பற்றிப் பேச 10 நாள் பயணம்.
#வானொலி உரை :
1. சென்னை, புதுவை வானொலி நிலையங்களில் உரையாற்றிமை.
2. மலேசிய வானொலியில் உரையாற்றியமை.
தொடர்ந்து பயன் கருதாது மக்களுக்குப் பணியாற்றுவது ஒன்றே எனது இலக்கு.
நூல்களின் மூலமோ, சொற்பொழிவு மூலமோ நான் வருவாய் ஈட்டுவது இல்லை! இவற்றை 20 வயது முதல் தொண்டாகவே செய்கிறேன்! எனது அரசியல் ஆதரவுகள் சுயநலம் கருதாதவை என்பதை உணர்த்தவே இதைச் சொல்கிறேன்.
#எனது நூல்கள் கிடைக்குமிடம் :
திராவிடன் புத்தக நிலையம்
பெரியார் திடல், சென்னை - 7
Ph : 044-26618161
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
No comments:
Post a Comment