இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், மூளை போன்ற முதன்மை உறுப்புகளை காக்கவும், அவற்றின் நோயைப் போக்கவும் பெரிதும் உதவுகிறது துளசி. வீட்டில் இரண்டு மூன்று தொட்டிகளில் துளசிச் செடியை வளர்த்தால் தினம் அக்குடும்பத்திலுள்ள அனைவருக்கும் துளசி பலவகையில் பயன்படும்.
நாள்தோறும் 5 முதல் 10 துளசி இலைகளுடன் 2 அல்லது 3 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு வெதுவெதுப்பான சுடுநீர் குடித்தால், இதயம், நுரையீரல், மூளை, சிறுநீரகம் வலுப்படும். இரத்த அழுத்தம் குறையும், கொலஸ்ட்ரால் கரையும், நுரையீரல் சளி, இருமல் நீங்கும், கல்லீரலைக் காக்கும். மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும்.
துளசி டீ:
துளசி இலைகளைப்பறித்து ஒரு டம்ளர் நீரில் போட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி, பால், வெல்லம், ஏலக்காய் தூள், சுக்குத்தூள், சீரகத்தூள் போன்றவற்றைக் கலந்து வாரம் மூன்று நான்கு முறைச் சாப்பிட்டால் நோய் தடுக்கப்படும்; வந்த நோயும் அகலும்.
இது போன்ற எளிய வழிகளில் நோயைத் தவிர்த்து நலமுடன் வாழ்வதே அறிவுடைமைக்கு அழகு. இதில் என்ன சிறமம் சிந்தித்துப்பாருங்கள். துளசியை அன்றாடம் அனைவரும் பயன்படுத்துங்கள்.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
No comments:
Post a Comment