தினத்தந்தி செய்தியில்
பஞ்சாங்கத்தில் கடந்த 14 ஆம் தேதி(சனிக்கிழமை) அன்று “புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதுபோல அந்த பஞ்சாங்கத்தில் வருகிற 21ஆம் தேதி (சனிக்கிழமை) “ஒரு வாரம் மழை பெய்யும்” என்றும், 22ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று “புயல் பலமாக சென்னையை உலுக்கும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினத்தந்தி செய்திக்கு மறுப்பு!
1. தினத்தந்தி எந்த பஞ்சாங்கம் என்பதை குறிப்பிடப்படவில்லை. இது ஓர் மோசடி! எப்படி உண்மையை அறிவது? இதுதான் செய்தி வெளியிடும் நாணயமா?
2. மழைக்காலங்களில் இல்லாமல் மற்ற காலங்களில் மழைப் பொழிவதை, காற்றழுத்தம் ஏற்படுவதை பஞ்சாங்கத்தில் சொல்ல முடியாதது ஏன்? ஏன் சொல்லவில்லை? மழைக்காலத்தில் மழைபொழியும், காற்றடிக்கும் என்பது தெரியுமே!
3. ஒரு பஞ்சாங்கம் கூறியதை மற்ற பஞ்சாங்கம் கூறாதது ஏன்? அப்படியென்றால் மற்ற பஞ்சாங்கம் தப்பா?
4. பஞ்சாங்கம் என்பது கிரகங்கள் பற்றியது அதில் மழை, காற்று, சூறாவளி பற்றி கூற என்ன அடிப்படை உள்ளது? மழையும் காற்றும் காற்றழுத்ததால் வருவது அல்லவா?
5. ஓராண்டில் எத்தனையோ முறை காற்றழுத்த தாழ்வு உள்ளாகிறது அவற்றையெல்லாம் பங்சாங்கம் கூறாதது ஏன்? கூற முடியாது என்பதே உண்மை!
6. 22ஆம் தேதி புயலடிக்குமா? எங்கு அடிக்கும்? சொல்லுங்களே பார்ப்போம்!
7. இன்று ஆந்திராவுக்குச் சென்ற புயல் பற்றி பஞ்சாங்கம் கூறாதது ஏன்?
8. பஞ்சாங்கம் தமிழ் நாட்டுக்கு மட்டுமா? மற்ற மாநிலங்களுக்குமா? தினத்தந்தி விளக்குமா? இப்படியும் ஒரு பிழைப்பா?
No comments:
Post a Comment