காஞ்சி வரதாரஜர் கோயிலில் கிறுக்கனெல்லாம் இருந்தால் பக்தர்களுக்குப் பாதுகாப்பு இல்லை! அதுவும் சாதாகிறுக்கனல்ல முற்றிப் போன முரட்டுக் கிறுக்கன்! கண்டபடி உளறுகிறான் ஆளைக் கடிக்கத் தொடங்கும் முன் அங்கிருந்து விரட்டுங்கள்!
எங்கள் பணத்தில் நாங்கள் கட்டிய கோயிலில், நாங்கள் தொட்டு பூசை செய்ய, நாங்கள் அர்ச்சகராக உரிமையில்லையா?
எதையும் கொடுக்காத வெற்று ஆள்கள் தான் அர்ச்சகர் ஆகமுடியும் என்பது அயோக்கியத்தனம் அல்லவா என்று நீதிகேட்டால், அந்த நீதிக்காக குரல் கொடுத்தால்,
ஒரு கண்ணியமான, கற்றுத் தேர்ந்த, கட்டுப்பாடான பெண் வழக்கறிஞரைப் பார்த்து உன்னோடு குடும்பம் நடத்த உன் கணவரைத் தவிர ஆண் தகுதியுள்ளது என்பதால் எல்லோரும் வர அனுமதிப்பீரா? என்று கேட்கிறான்! அர்ச்சகனாவதும் ஆம்படையானாவதும் ஒன்றா? இவனைப் பொறுக்கி என்பதா? ரவுடி என்பதா? காலி என்பதா? கயவன் என்பதா? அயோக்கியன் என்பதா, அசல் பைத்தியம் என்பதா?
இவன் மனைவியோடு குடும்பம் நடத்த வரட்டுமா என்று எவனாவது கேட்டால் அவனைப்பார்த்து கேட்க வேண்டிய கேள்வியை, சமூகநீதி பேசும் பெண்ணிடம் கேட்பதைப் போன்ற கீழ்த்தரம் கிறுக்குத் தனம் வேறு உண்டா?
ஒருபெண்ணுடன் குடும்பம் நடத்த கணவனுக்கு உரிமையுண்டு ஆனால், கோயிலில் அர்ச்சகராக பார்ப்பானுக்கு மட்டுமே உரிமையுண்டு என்று எந்த ஆகமத்தில் உள்ளது? அடிமுட்டாளே உன் உரிமைக்கு ஆதாரம் காட்டுவாயா? காட்ட முடியுமா? ஆகமம் பற்றி உனக்குத் தெரியுமா? வாதிட வருவாயா? அர்ச்சகராய் இருந்து கொண்டு அரசியல் பண்ணும் பித்தலாட்ட பேர்வழியெல்லாம் நியாயம் பேசுவதா?
கடல் தாண்டக் கூடாது “பிராமணன்” என்கிறது சாஸ்திரம். அதையெல்லாம்தூக்கி யெறிந்துவிட்டு, பணம் சம்பாதிக்க கடல் தாண்டிச் செல்வது அயோக்கியத் தனமல்லவா?
வேலைக்கு இடஒதுக்கீடு கேட்டால் தகுதி திறமை என்பதும்; அர்ச்சராக மட்டும் தகுதி திறமை இல்லை எங்களுக்குமட்டுமே யென்பதும் மொள்ளமாறித்தனமல்லவா?
உங்களுக்கு சாதகமானால் சாஸ்திரம் என்பதும், பாதகமானால் சாஸ்திரத்தைச் சாக்கடையில் போடுவதும் செய்யும் உமக்கெல்லாம் உரிமை பற்றிப் பேச என்ன யோக்கியதை உள்ளது. அட..... தூ.....!
No comments:
Post a Comment