- மஞ்சை.வசந்தன்
தந்தை பெரியாரின் நினைவு நாள் 24.12.2015 அன்று.
தந்தை பெரியார் நினைவு நாள் என்றால், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட பெரியார் திடல் முதன்மையானது. அவர் இயக்கத்தின் தலைமை இடமும் அதுவே. ஆக, நாணயமுள்ள, யோக்கியமுள்ள ஒரு இதழ் செய்தி வெளியிட வேண்டும் என்றால் அவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைக்கப்பட்டதைப் படமாகப் போட வேண்டும். அவர் உருவாக்கிய அமைப்பான திராவிடர் கழகத் தலைவர் மரியாதை செலுத்தியதை முதலில் கூறவேண்டும். அடுத்து திராவிட முன்னேற்றக் கழகம், அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் என்று குறிப்பிடுவதுதான் மாண்புக்குரிய செயல்.

ஆரிய பார்ப்பனர்களுக்கு அந்த மாண்பு மருந்துக்குக்கூட இருக்காதே! வைத்தியநாத அய்யர் ஆசிரியரானதும் தினமணி இனமணியாகி அற்பத்தனத்திற்கும் அயோக்கியத் தனத்திற்கும் அடையாளமாக வெளிவந்து கொண்டிருப்பதால், பெரியார் நினைவு நாள் செய்தி எப்படி வெளியிட்டுள்ளார்கள் பாருங்கள்.
அச்செய்தி தமிழ்நாடு முழுவதும் செல்லாத “சென்னை’’ பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, பெரியாரோடு பெரிதும் தொடர்பில்லா விஜயகாந்த், அவர் அலுவலகத்தில் பெரியாருக்கு மரியாதை செலத்திய படம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் குத்துவிளக்கு, ஊதுபத்தியெல்லாம் எரியவிடப்பட்டுள்ள படம்.
முக்கியமாக பெரியாரின் நேரடி வாரிசான, தற்போது தி.க. தலைவராக உள்ள கி.வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தியது கடைசியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைவிட அற்பத்தனமும் அயோக்கியத்தனமும் வேறு இருக்க முடியுமா?
இதைவிட அற்பத்தனமும் அயோக்கியத்தனமும் வேறு இருக்க முடியுமா?
வெள்ள நிவாரணப் பணி ஆர்.எஸ்.எஸ். செய்தது என்று செய்தி வெளியிட்ட தினமணி, தி.க. மிகப் பெருமளவில் 10 நாள்களுக்கு மேல், பெரியார் திடலையே முகாமாக மாற்றி செய்த நிவாரணப் பணிகள் பற்றி ஒரு வரிகூட எழுதவில்லை!
பார்ப்பானுக்குள்ள இனவுணர்வு தமிழனுக்கு எப்போது வரும்?
No comments:
Post a Comment