அரசியல்

Thursday, August 6, 2015

முட்டை முந்தியா கோழி முந்தியா? சந்தேகம் தீர புதிய விளக்கங்கள்....



உலகில் முதன்முதலில் காம உணர்வை அடிப்படையாய் வைத்து 

இச்சிக்கலுக்குத் தீர்வு சொன்னேன். சிலர் அய்யம் எழுப்பினர். 

எனவே மெலும் சில விளக்கங்கள்..........

முட்டையில்லாமல் கோழி எப்படி வந்தது என்ற 

சிந்தனையாலேதான். இதற்குத் தீர்வே இல்லாமல் இருந்தது.
இரண்டில் எது முன்னர் வரமுடியும் என்று சிந்தித்தால் தீர்வு 
உடனே கிடைக்கும்.

முட்டையோ அல்லது விதையோ “கரு” ஆகும்.

கருமுதலில் வருமா? உடல் முதலில் வருமா? இப்படிச் 

சிந்தித்தால் பளிச்சென்று பதில் வரும்.

விதையில்லாத செடியுண்டு. ஆனால் செடியில்லாமல் விதைவருமா?  ஆக கட்டாயமாய் அடிப்படையாய் இருப்பது? உடல்தான்.

மரமோ செடியோ மனிதனோ, கோழியோ அப்படியே உருவாகவில்லை. ஒருசெல் உயிரியிலிருந்து பரிணாமம் பெற்று வந்தவை.

ஒருசெல் உயிரி (அமீபா) அதற்கு ஆண்பெண் வேறுபாடோ, தாவர, விலங்கு வேறுபாடோ கிடையாது. அது தானே பலவாகச் சிதைந்து இனப்பெருக்கம் செய்தது.

இங்கு முதலில் தோன்றியது விதையா, முட்டையா,உயிரின் உடலா? உடல்தானே முதலில், அதன்பின் பலசெல் உயிரியாகி பின் தாவர விலங்கு வேறுபாடுவந்து அதன்பின் இப்போதுள்ள உயிரினங்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்வந்தன.

வெட்டி வைத்தால் பிழைக்கும் மரங்கள் உண்டு. இங்கு விதையே இல்லையே! எனவே மரம்தான் அடிப்படை. 

கரு உருவாக்க முடியாதவர்கள் உண்டு.

எனவே முட்டை முதன்மையல்ல. உடல்தான் முதன்மை!

எனவே முட்டை பிந்தி, விதை பிந்தி உடல்தான்  முந்தி!

- மஞ்சை வசந்தன்

No comments:

Post a Comment