இஞ்சி இடுப்பழகு என்று பலரும் கூறுவர். திரைப்படப் பாடல்கூட பரவலாக அறியப்பட்டது. ஆனால், அதன் பொருள் என்ன?
இஞ்சி போன்று இடுப்பா? இஞ்சி போன்ற அழகா? என்ன காரணத்தால் அப்படிச் சொல்லப்பட்டது? பலருக்கும் தெரியாது. அதன் உண்மைக் காரணத்தை இங்கே விளக்கியுள்ளேன். படியுங்கள்! பலருக்கும் பகிருங்கள்!
இஞ்சி என்பது பித்தம் அகற்றக் கூடியது; கொழுப்பைக் குறைக்கக் கூடியது. அதனால்தான் ஆட்டுக்கறி போன்ற கொழுப்புமிக்க உணவு சாப்பிடும்போது இஞ்சி அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.
இடுப்பு என்பது ஒடுங்கி இருப்பதுதான். அழகு தோள் விரிந்து அகன்று இருக்க வேண்டும். இடுப்பு ஒடுங்கி இருக்க வேண்டுமானால் அடிவயிறு தொப்பையின்றி ஒடுங்கியிருக்க வேண்டும்.
கொழுப்பு கூடக்கூட அடிவயிறு பருத்து மடிப்பு விழும். கொழுப்பு குறையக் குறைய அடிவயிறு ஒடுங்கி இடுப்பு அழகாய் இருக்கும்.
காலையில் தவறாது இஞ்சி சாப்பிடுகின்றவர்களுக்கு வயிறு ஒடுங்கி இடுப்பு அழகாய் இருக்கும். இந்த அழகு இஞ்சியால் வந்தது என்பதால் இஞ்சி இடுப்பழகு என்றனர்.
தினம் தவறாது காலையில் இஞ்சி சாப்பிடுங்கள். இடுப்பு அழகாகும். இதய நோயும் வராது.
- @மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
Follow face book page : https://www.facebook.com/manjaivasanthan
No comments:
Post a Comment