அரசியல்

Saturday, August 15, 2015

குங்குமம் என்றால் என்ன தெரியுமா? தெரிந்தால் யாரும் வைக்கமாட்டார்கள்!



பெண்களும் ஆண்களும் நெற்றியில் சிகப்புத்தூள் (குங்குமம்) வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அதன் பொருள் தெரிந்தால் அது எவ்வளவு பெரிய கேவலம் என்பது புரியும்.

திருமண முறை வராத காலத்தில் வயதுவந்த ஆணுடன் பெண்ணும் தனிமையில் சந்தித்து காதல் வளர்ப்பர். மனம் ஒத்து சேர்ந்து வாழ முடிவு செய்தால் மறைவிடங்களில் உடலுறவு கொள்வர்.

இப்படி ஒரு பெண் ஓர் ஆணுடன் முதன் முதலில் உடலுறவு கொள்ளும் போது, அவளின் கன்னித்திரை கிழிக்கப்பட்டு, குருதி வெளிப்படும்.

இந்த உடலுறவுக்குமுன் கன்னியாக இருந்தவள், இந்த உறவு மூலம் கன்னிக் கழிந்துவிட்டாள் (அதாவது ஓர் ஆணோடு புணர்ந்து விட்டாள்) என்பதை பிறர் அறிய, கன்னித்திரை கிழிந்து வெளிவந்த குருதியை விரலால் தொட்டு அவள் நெற்றியில் உறவுகொண்ட அந்த ஆண் வைப்பான். இதற்குக் குருதிக் குறியிடல் என்று பெயர்.

திருமண முறையில்லாத  அக்காலத்தில் கன்னி கழிதல் என்றுதான் கூறுவர்.

இந்த நிகழ்வே கன்னிகழிதல் ஆகும். பெண்ணியச் சிந்தனையாளர் இராஜம்கிருஷ்ணன், கூரிய கல்லால் நெற்றியில் கீறி இரத்தக்குறியிடுவான்  என்று சற்று மாற்றி கூறியிருக்கிறார். ஆனால் அது உண்மையல்ல, கன்னித்திரை கிழிக்கப்பட்ட இரத்தமே அதன் அடையாளமாக இடப்பட்டது. இடு தான் காலப் போக்கில் குங்குமமாக மாறியது.

குங்குமத்தின் பொருள் இப்படியிருக்க இதை பெண்கள் வைக்கலாமா?  அதைவிடக் கேவலம் ஆண் வைக்கலாமா?  சிந்தியுங்கள்!

- மஞ்சை வசந்தன்

No comments:

Post a Comment