பார்ப்பு என்பதற்கு
இருபிறப்பு என்ற பொருள் தப்பு
- மஞ்சை வசந்தன்
- மஞ்சை வசந்தன்
கோழிக்குஞ்சு - கோழிப்பார்ப்பு என்று
தலைப்பிட்டு வய்.மு.கும்பலிங் கன் அவர்கள் எழுதிய செய்திகள் முற்றிலும்
தவறானவை. ஆதார மற்றவை. அவரைத் தொலைபேசி வழி தொடர்புகொண்டு, கோழிக்
குட்டியும் கிடையாது, கோழிக்குஞ்சும் கிடையாது. அதன்பெயர் கோழிப்பார்ப்பு
என்று எழுதியுள்ளீர்களே அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டேன்.
ஆதாரம் இல்லை. அப்படி நினைத்து எழுதினேன்
என்றார். ஆயிரக்கணக் கான அறிஞர்கள் படிக்கும் தின மணியில் இப்படியொரு
பொறுப்பற்ற பிதற்றல் வருத்தமளிக்கிறது.
முட்டையிட்டு வருவது குஞ்சு. ஈன்று
பெறுவது குட்டி. விலங்கின் குட் டிக்கும், பறவையின் குஞ்சுக்கும் பார்ப்பு
என்பது வழங்கப்பட்டிருக்கிறது. பார்ப்பு என்பதற்கு இளமை என்பதே பொருள்.
இளம் பிள்ளையை பார்ப்பா என் போம். பார்ப்பா என்பதே பாப்பா என்றா னது. கோர்ப்பு கோப்பு ஆனது போல.
“தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை”
- (அய்ங்-41)
- (அய்ங்-41)
“பார்ப்புடை மந்திய மலையிறந்தோரே”
- (குறு-278)
- (குறு-278)
பார்ப்பனர் என்ற சொல் ஆரியர் களுக்குத் தமிழகத்தில் மட்டுமே வழங் கப்படுவதாகும். மற்றப் பகுதிகளில் இவ்வழக்கு இல்லை.
தமிழகத்தில் தமிழர்க்குரிய தொழில் பெயரான பார்ப்பனர் என்ற சொல் ஆரியர்களால் பறித்துக் கொள்ளப் பட்டது.
அக்காலத்தில் அரசர் மற்றும் செல்வந்தக்
குடும்பத்தில் பிறந்த இளம் வாரிசுகளுக்கு, ஆலோசனை கூற, தோழமை கொள்ள, உதவ,
துணை நிற்க இளம் தோழர்கள் (தமிழர்கள்) அமர்த் தப்பட்டனர். அவர்களே
பார்ப்பனர் கள். அத்தொழில் பார்ப்புத் தொழில் ஆகும்.
பார்ப்புத் தொழிலுக்குரிய பணிகளை தொல்காப்பியம் தெளிவாகக் குறிக்கிறது.
“காமநிலை யுரைத்தல் தேர்தல்நிலை யுரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்,
கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்,
ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்,
செலவுறு கிளவியும், செலவழுங்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்புக் குரிய” - (கற்பு-36)
செலவுறு கிளவியும், செலவழுங்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்புக் குரிய” - (கற்பு-36)
ஆரியர்கள் தமிழகத்துள் நுழைந்து
பரவியதும், அவர்களின் நிறமும், தோற் றமும், அரசு மற்றும் செல்வந்த குடும்
பத்து இளைஞர்களைக் கவர, பார்ப்புத் தொழிலுக்கு அவர்களை (ஆரியர்களை)
அமர்த்த, அத்தொழில் முழுவதும் ஆரியர் வசமாகி, அதன்பின் அத்தொழி லின் பெயர்
அந்த இனத்திற்கே ஆனது.
கூர்க்கர் என்ற இனப்பெயர், வாயில் காப்போரின் தொழிற்பெயராய் ஆனது போல, பார்ப்பு என்ற தொழில் பெயர் ஆரியர் இனத்தின் பெயராய் ஆனது.
உண்மை இப்படியிருக்க பார்ப்பனர் இரு
பிறப்பாளர். கோழிக்குஞ்சு இரு பிறப்புடையது. எனவே இரண்டிற்கு பார்ப்பு என்ற
பெயர் வந்தது என்பது பிழை. பார்ப்பிற்கு இரு பிறப்பு என்ற பொருள்
கிடையாது. பார்ப்பு என்றால் இளமை என்பது மட்டுமே பொருள்.
குறிப்பு: தப்பைச்
சுட்டிக் காட்டி ‘தினமணி’க்கு உரிய நேரத்தில் இம் மறுப்பு அனுப்பப்பட்டும்;
தினமணியில் இது வெளியிடப்படவில்லை. இதுதான் இ(தி)னமணியின் யோக்கியதை!
face book page : https://www.facebook.com/manjaivasanthan
No comments:
Post a Comment