அரசியல்

Friday, July 3, 2015

பித்தகரஸ் தேற்றம் முதலில் சொன்னவர்கள் தமிழர்கள்!

பித்தகரஸ் தேற்றம்   

முதலில் சொன்னவர்கள் தமிழர்கள்!

- மஞ்சை வசந்தன்

பித்தகரஸ் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் தமிழர்களின் அறிவைப் பெற்றே அத்தேற்றத்தை கூறினார் என்று அப்போலாலியசு என்பவர் குறிப்பிடுகிறார்.

(ஆதாரம்: கடலடியில் தமிழர் நாகரிகம் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு. பக்கம் 40)

ஆம். பித்தகரசுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் முக்கோணவியலின் தத்துவத்தைப் பாடலாக எழுதி வைத்தனர். அப்பாடல் இதோ:

”ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறாக்கி
 கூறதில் ஒன்றைத் தள்ளி
 குன்றத்தில் பாதி சேர்த்தால்
 நீடிய கர்ணந் தானே!”
- கோதையனார்

இதன் பொருள்: முக்கோணத்தின் கர்ணம் கண்டுபிடிக்க, நீளத்தை எட்டால் வகுத்து, கிடைப்பதை நீளத்தில் கழித்து, செங்குத்து உயரத்தில் பாதியை இத்தோடு சேர்த்தால் கர்ணம் கிடைக்கும்.

எடுத்துக்காட்டு:


விடை:

நீளம் 4. அதில் எட்டில் ஒரு பாகம் 0.5. அதை நீளத்தில் கழித்தால் 3.5. இத்தோடு உயரத்தில் பாதி (1.5) சேர்க்க 3.5 + 1.5 = 5. ஆக BC (கர்ணம்) = 5.

பிதாகரஸ் தேற்றப்படி கர்ணம் காண சூத்திரம்

AB^2 + AC^2  = BC^2

4^2 + 3^2 = 16 + 9 = 25 = 5^2

BC = 5

தமிழர் பெருமைக்கு ஆதாரம் கேட்பவர்கள் ஆதாரத்திற்கு இதை புரிந்து கொள்ளட்டும். தமிழர் பெருமை இன்னும் வரும்.



3 comments:

  1. This concept is invalid for some right angled triangles. For example right angled triangles with sides 7,24,25

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. தவறான கருத்துகளை பரப்புரைத்து தமிழர் பெருமையை சீரழிக்காதீர்கள். காண்க: https://drive.google.com/file/d/0BzwpbxABzaV5blFCMFY1ODZIZ0E/view?usp=sharing&resourcekey=0-8THvkRD-t_vVkrMqroOD5A

    ReplyDelete