இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தந்த வரையறை.............................
பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,
உருவு, நிறுத்த காம வாயில், நிறையே, அருளே, உணர்வொடு, திரு என
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.
1. நற்குடிப் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
2. பிறந்தால் போதாது. அந்நற்குடிக் கேற்ற நல்லொழுக்கம் இருவரிடமும் இருக்க வேண்டும். பிறப்பு வேறு, குடிமை வேறு எனப் பிரிக்கிறார்.
3. இருவரிடமும் ஆண்மை _ ஆளுமை ஒத்திருக்க வேண்டும்.
4. அகவை ஒப்புமை வேண்டும். காலத்திற்கு ஒப்ப வயது ஒப்புமை பார்க்க வேண்டும்.
5. உருவு _ வடிவ ஒப்புமையும் வேண்டும். பார்ப்பவர் பொருத்தமான சோடி என்னும்படி உயரம், பருமன் இருக்க வேண்டும்.
6. நிறுத்த காம வாயில் என்பது தொல்லாசான் சிந்தித்துச் சொன்ன அரிய கருத்து. உடலில்அமைந்த காம நுகர்வுக்கான உடல், உள்ளக் கூறுகள். ஒருவர் மிக்க காமவெறியுடையவராகவும் மற்றவர் அளவாகத் துய்ப்பவராகவும் இருந்தால் ஒத்துவராது.
7. நிறை_ மனத்தைத் திருமணமான பின் கண்டவாறு ஓடவிடாது தடுத்து நிறுத்துதல். நிறுத்துதல் நிறை. மறை பிறர் அறியாது நிறுத்தல். இது மன நிறை, அடக்குதல், தடுத்து நிறுத்துதல் யாவும் அடங்கும்.
8. அருளுடைமையும் அதன் அடிப்படையான அன்பும் உடையவர்களாக இருவரும் திகழ வேண்டும்.
9. உணர்வு - ஒருவரை ஒருவர் அறிதல்; புரிந்து கொள்ளுதல்; உலகியலறிதல் வேண்டும். 10. திரு _ செல்வம்.
#குறிப்பு: இங்கு வரும் பிறப்பு என்பது ஜாதி அல்ல. நல்லொழுக்கக் குடும்பச் சூழல். குடிமை - நல்ல இல்வாழ்விற்குரிய பண்புகள்.
(தொல்காப்பியம் - பொருள் - 1219)
No comments:
Post a Comment