ஸ்வஸ்திக் என்று இக்காலத்தில் அழைக்கப்படும் இக்குறியீடு தமிழரின் பழைய எழுத்து. இந்துமதவாதிகளும், ஹிட்லரும் இதைப் பின்னாளில் பயன்படுத்தியவர்கள். இதன் உண்மையான உரிமையாளர் தமிழர்கள்.
பண்டைய தமிழ் வரிவடிவில் ஓம் என்று எழுத இக்குறியீட்டைத் தமிழர்கள் பயன்படுத்தினர். ஓமன் என்ற மன்னனைக் குறிக்க இக்குறியோடு அன் விகுதிச் சேர்த்து எழுதினர்.
தமிழில் ஓம் என்றால் காத்தல் என்று பொருள். மக்களைக் காப்பவன் மன்னன் என்பதால் ஓமன் (ஓம்+அன்) என்று அழைக்கப்பட்டான்.
தமிழனுடைய அறிவு, தமிழனின் சொற்கள், தமிழனின் கலை, மருத்துவம், உடற்கலை என்று பலவும் ஆரியர்களால், உலகின் பலதரப்பு மக்களால் தமதாக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள் ஸ்வஸ்திக் குறியும் ஒன்று.
- மஞ்சை வசந்தன்.
No comments:
Post a Comment