அரசியல்

Thursday, July 23, 2015

மதுரையில் உள்ளது மாட்டுத்தாவணியா?


 மதுரை நுழைவாயிலில் உள்ளது “மாட்டுத்தாவணி” என்ற இடம். இது என்ன மாட்டுக்குத் தாவணி என்று கேள்வியெழுப்பாதவர் எவரும் இருக்கமுடியாது.

என்றாலும் அதன் பொருள் அறிய எவரும் முயற்சிப்பதில்லை எனவே அதன் உண்மைப் பெயரை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

 “மாட்டுத் தாம்பு அணி” என்பது மருவி மாட்டுத்தாவணீ என்று ஆனது.
"தாம்பு" - என்றால் மாடுகட்டும் கயிறு (தாம்பு கயிறு என்பர்). மாடுகளை வரிசையாக தாம்புக் கயிற்றால் பிணைத்து கட்டுவார்கள். இவ்வாறு மாடுகள் அணி அணியாய் நிற்கும்.

 மாடுகள் தாம்புக்கயிற்றால் அணியணியாய் கட்டப்படும் இடம் என்பதால் அது மாட்டுத் தாம்பணி எனப்பட்டது.

அதுவே மாட்டுத் தாவணியாக மாறியது. மதுரைக்காரர்கள் இனி தாராளமாய் விளக்குங்கள்.

 யாருக்கும் குழப்பம் வராது.

அதோடு இச்செய்தியை எல்லோருக்கும் பரப்புங்கள்.

மேலும் ஆதாரங்களுடன் பல செய்திகளை ஒவ்வொரு நாளும் உங்களுக்குச் சொல்வேன்.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

1 comment:

  1. அட்டகாசம்,தொடரட்டும்

    ReplyDelete