நம் உள்ளம் கலாம் வாழும் இல்லம்!..............
கள்ளமில்லா கருணை உள்ளம்!
கடும் உழைப்பில் உயர்ந்த உள்ளம்!
அள்ள அள்ளக் குறையா அறிவு உள்ளம்!
காலமெல்லாம் கண்ணியம் காத்த
சீலம் நிறைந்த சிந்தனை உள்ளம்!
கடும் உழைப்பில் உயர்ந்த உள்ளம்!
அள்ள அள்ளக் குறையா அறிவு உள்ளம்!
காலமெல்லாம் கண்ணியம் காத்த
சீலம் நிறைந்த சிந்தனை உள்ளம்!
ஞாலம் சிறக்க நற்கருத்துக்களை
நாளும் அளித்த நல்ல உள்ளம்!
கலாம் என்ற பெயரில்
காட்சி தந்து ஆட்சி செய்தது!
உலக இயற்கை அவர் உயிர் பறித்தாலும்
விலகல் இன்றி அவர் புகழ் நிலைக்கும்!
வாழ்க அப்துல் கலாம் புகழ்!
அய்யா அப்துல் கலாம் அவர்களை நேசிக்கின்ற இளைஞர்கள் இன்று முதல் ஓர் உறுதியேற்க வேண்டும்.
குடிப்பதில்லை! புகைப்பிடிப்பதில்லை!
பிறரைக் கெடுப்பதில்லை!
வன்சொல்லும் செயலும் பின்பற்றுவதில்லை!
பெண்ணிற்குக் கேடு செய்வதில்லை!
நன்நெறியிலிருந்து பிறழ்வதில்லை!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கொண்டு பேதம் ஒழிக்க மறப்பதில்லை!
சாதி,மதவெறி ஏற்பதில்லை!
தன்னலம் கொண்டு அலைவதில்லை!
பொதுநலம் காக்க முனைந்து நிற்பேன்!
புவியின் தூய்மை பேணிநிற்பேன்!
மரங்கள் வளர்த்து வளங்கள் காத்து வருங்கால தலைமுறைக்கு உலகைத் தருவேன்!
இந்த உறுதிகளை ஏற்று வாழ்வது ஒன்றே அப்துல்கலாம் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான மரியாதை!
நன்றி! வீரவணக்கம்! எல்லாம்!
- அன்புடன்
மஞ்சை. வசந்தன்
@ https://www.facebook.com/manjaivasanthan
நாளும் அளித்த நல்ல உள்ளம்!
கலாம் என்ற பெயரில்
காட்சி தந்து ஆட்சி செய்தது!
உலக இயற்கை அவர் உயிர் பறித்தாலும்
விலகல் இன்றி அவர் புகழ் நிலைக்கும்!
வாழ்க அப்துல் கலாம் புகழ்!
உறுதி ஏற்போம்!..............
அய்யா அப்துல் கலாம் அவர்களை நேசிக்கின்ற இளைஞர்கள் இன்று முதல் ஓர் உறுதியேற்க வேண்டும்.
குடிப்பதில்லை! புகைப்பிடிப்பதில்லை!
பிறரைக் கெடுப்பதில்லை!
வன்சொல்லும் செயலும் பின்பற்றுவதில்லை!
பெண்ணிற்குக் கேடு செய்வதில்லை!
நன்நெறியிலிருந்து பிறழ்வதில்லை!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கொண்டு பேதம் ஒழிக்க மறப்பதில்லை!
சாதி,மதவெறி ஏற்பதில்லை!
தன்னலம் கொண்டு அலைவதில்லை!
பொதுநலம் காக்க முனைந்து நிற்பேன்!
புவியின் தூய்மை பேணிநிற்பேன்!
மரங்கள் வளர்த்து வளங்கள் காத்து வருங்கால தலைமுறைக்கு உலகைத் தருவேன்!
இந்த உறுதிகளை ஏற்று வாழ்வது ஒன்றே அப்துல்கலாம் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான மரியாதை!
நன்றி! வீரவணக்கம்! எல்லாம்!
- அன்புடன்
மஞ்சை. வசந்தன்
@ https://www.facebook.com/manjaivasanthan
No comments:
Post a Comment