அரசியல்

Friday, June 19, 2015

கடவுள் மறுப்பாளர்கள் காலணிகளா? சுகிசிவத்தைக் கேட்கிறேன்!...........

கடவுள் மறுப்பாளர்கள் காலணிகளா?
 
 சுகிசிவத்தைக் கேட்கிறேன்!...........

 
 இன்று (19-06-2015) காலை தொலைக்காட்சியை இயக்கியதும் சுகிசிவம் குரல் ஒலித்தது. ஆன்மிகச் சொற்பொழிவாக அவர்பேச்சை நான் விரும்பி கேட்பேன். பக்தர்களை பகுத்தறிந்து பேசக்கூடியவர், தரமாக பேசக் கூடியவர். ஆனால் இன்று தரம் தடம்மாறிச்சென்றதோடு, தாழ்ந்தும் போனது.

 கணவர் கோயிலுக்குப் போகாதவர். மனைவி அவரைக் கோயிலுக்குத் தள்ளிக் கொண்டு வருகிறாள். கோயில் வாசலிலே அவர் நின்று, “ நீ உள்ளே போய் விட்டு வா!” என்கிறார் மனைவியிடம்.”

 மனைவி தன் கால் செருப்பை வாசலில் கழற்றி வைத்து “இதைப் பார்த்துக்கிட்டு இங்கே இருங்க” என்கிறார்.

 இடையில் சுகி சிவம், “உள்ளே வரக்கூடாதது எல்லாம் வெளியில் தான் இருக்கும் “என்று இரட்டைப் பொருளில் கடவுள் மறுப்பாளர்களை திறமையாக தாக்கும் பெருமிதத்தோடு கூறுகிறார். பார்வையாளர்கள் கைத்தட்டுகின்றனர்.

 ஆனால், சுகி சிவத்திற்கு உண்மையும் புரியவில்லை: உயர்வும் புரியவில்லை.
பிறருக்கு உழைத்துத் தேய்பவர்கள் கோயிலுக்கு ஏன் போக வேண்டும். அதுதான் வெளியிலே இருக்கிறார்கள்.

 சுயநலக்காரர்களும் சுரண்டல் பேர் வழிகளும்தான் பேரம்பேச உள்ளே செல்லவேண்டும்.

 ஊருக்கு உழைப்பவரைத் தேடிதான் கடவுள் வரும்: அவர்; அவர் கோயிலைத் தேடிச் செல்லத் தேவையில்லையென்ற கடவுள் சித்தாந்தம் உங்களுடையதுதானே! மறந்து போச்சா?

No comments:

Post a Comment