- மஞ்சை வசந்தன்
இந்துத்வா ஆட்கள் திடீரென அம்பேத்கரை தூக்கிப்பிடித்துத் துதிபாடத் தொடங்கியுள்ளனர். அவர் பிறந்த நாளைக் கொண்டாடுவது தொடங்கி அய்.அய்.,டி.க்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டவேண்டும் என்பது வரை அம்பேத்கர் மீது அவர்களுக்கு பற்று, பக்தி நிலைக்குப்போனதுபோல் பேசவும், புகழவும் தொடங்கியுள்ளனர்.
அம்பேத்கர்
இவர்களுக்கு நேர் எதிரான கொள்கை உடையவர். இவர்கள் எதைக்காக்க வேண்டும்,
வளர்க்க வேண்டும், நிலை நிறுத்த வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அதை அழிக்க
வேண்டும், ஒழிக்க வேண்டும் என்றவர் அம்பேத்கர்.
ஆர்.எஸ்.எஸ்.
பரிவாரங்கள், இந்து முன்னணி பி.ஜே.பி. என்று இந்துத்வா அமைப்புகளுக்கு
இந்து மதத்தை வளர்க்க வேண்டும், திணிக்க வேண் டும், இந்துத்வா ஆட்சியை
கொண்டு வர வேண்டும், இந்து ராஷ்ட்டிரத்தை உருவாக்க வேண்டும் என்ற வேகமும்
வெறியும் இரத்தத்தில் ஊறிப்போன உணர்வு. அதற்காக கலவரம், பித்த லாட்டம்,
மோசடி, கீழறுப்பு, கொலை, வன்முறை, திரிபு, வதந்தி, வஞ்சகம், கபடம் என்று
எத்தனையுண்டோ அத்தனையும் செய்யக்கூடியவர்கள், செய்து வருபவர்கள்! ஆனால் அம்
பேத்கர் இந்துமதத்தை ஒழிக்க வேண் டும், இந்துமத வேத ஸ்மிருதிகளை ஒதுக்க
வேண்டும். இந்துமதத்தை விட்டு தாழ்த்தப்பட்டோர் வெளியேற வேண்டும் என்று
கண்டிப்பாகக் கூறுகிறார்.
இந்துமதத்தின்
அடிப்படையே பிரித்து வைப்பது தான். இது சந்தேகத் திற்கு இடமில்லாத உண்மை,
பொது வாக் கூறினால், இந்துமதமும் சமூக ஒற்றுமையும் ஒன்றுடன் ஒன்று சேரவே
முடியாது. இந்துமதம் பிரிவினையை அதாவது சமூகரீதியான ஒற்றுமையின் மையை
நம்புகிறது. இன்னும் சொல்லப் போனால், சமூகப் பிரிவினையை அதுவே
உருவாக்குகிறது.
இந்துக்கள்
ஒற்றுமையாக வாழ விரும்பினால் அவர்கள் இந்துமதத் தைத் தூக்கியெறிய வேண்டும்.
இந்துக்களின் ஒற்றுமைக்கு எதிரான தடை இந்து மதந்தான். சமூக ஒற்று மைக்கான
உணர்வை இந்துமதம் ஏற்படுத்தவே முடியாது.
(காங்கிரஸூம், காந்தியும் தீண்டத்தகா தாருக்குச் செய்தது என்ன? - பக்கம் 175)
நான்
இந்துவாகப் பிறந்ததிருந்தாலும் இந்துவாகச் சாகமாட்டேன் என்று உறுதி
யேற்கிறேன். இந்து மதத்தில் இருக்கும் வரை எவரும் முன்னேற முடியாது.
ஏற்றத்தாழ்வு என்ற கட்டுமானத்தின் மேல் கட்டப்பட்டது. இந்துமதம் ஆதிக்கச்
சாதிகளுக்கு வேண்டுமானால் அது சாதகமாக (வசதியாக) இருக்கலம்.
ஒரு
பார்ப்பனக் குழந்தை பிறந்தால் அது எந்த நீதிமன்றத்தின் நீதிபதியாகலாம்
என்று குறிவைக்கிறது. ஆனால் ஒரு துப்புரவு பணியாளர் குழந்தை எங்கே
துடப்பக்கட்டை கிடைக்கும் என்று ஏங்கு கிறது. இவை இந்துமத சாதியமைப்புகளின்
விளைவேயாகும். இப்படிப்பட்ட அமைப்பு முறையில் நாம் எத்தகைய முன்னேற்றத்
தைக் காண முடியும்? (15.10.1956 இல் நாகபுரியில் அம்பேத்கர் உரை)
இந்த உரையாற்றிய கூட்டத்தில்தான் 10 லட்சம் மக்களுடன் அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்ந்தார்.
இப்படிப்பட்ட
இந்துமத வெறுப்பாள ரான அம்பேத்கரை இந்துத்வாவாதிகள் தூக்கிப்பிடித்துப்
புகழக் காரணம், அவர் மீதுள்ள மதிப்பால், கொள்கைப்பிடிப்பால் அல்ல,
அம்பேத்கர் பற்றுக்கொண்ட அவரது இனமக்கள் கோடிக்கணக்கில் இந்தியாவில்
உள்ளனர். அவர்களைக் கவர இந்த மோசடி நாடகத்தை அவர்கள் நடத்துகிறார்கள்
அவ்வளவே!
தலித்துகள் இந்துக்களா?
இந்துமதத்
தத்துவப்படி தலித்துகள் இந்துக்கள் அல்லவே. இந்துமதம் இந்துக் களாக
பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்குப்பிரிவுகளைத் தானே
சொல்கிறது. தலித்துக்கள் இந்து மதப்பிரிவிலே வரவில்லையே! அவர்கள்
பஞ்சமர்கள், தீண்டத்தகாதவர்கள், இந்துக் களோடு சேர்ந்து வாழத்தகாதவர்கள்,
ஊருக்கு வெளியே ஒதுக்குபுறமாக வாழ வேண்டியவர்கள் என்றுதானே இந்துமதம்
சொல்கிறது. அப்படியிருக்க தாழ்த்தப் பட்டவர்கள் (தலித்துகள்) எப்படி
இந்துக்கள் ஆவர்?
இந்துமதத்தின்
அடித்தட்டு மக்கள் சூத்திரர்கள் என்கிறது இந்துமதம். ஆனால்
தாழ்த்தப்பட்டவர்கள் இந்து மதத்தில் யார் என்பதே இல்லை. அவர்கள் கடவுளின்
எந்த உறுப்பிலிருந்து பிறந்த வர்கள் என்பதும் சொல்லவில்லை. இந்து மதத்தில்
அவர்களுக்குத் தொடர்பிருந் தால் மற்றவர்களுக்குச் சொன்னது போல்
இவர்களுக்கும் சொல்ல வேண்டு மல்லவா?
ஆக
ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் புறம்பான, ஒதுக்கப்பட்ட மக்களே
தாழ்த்தப்பட்டவர்கள். அதுமட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்துகளாலும் தீண்டத்
தகாதவர்கள். இந்துக்களுக்கு அடிமை வேலை செய்யும் இழி மக்கள் என்பது தானே
இந்து மதத்தின் நிலைப்பாடு. அப்படியிருக்க தாழ்த்தப்பட்டவர்கள் எப்படி
இந்துக்கள் ஆவர்?
ஆனால் இந்துத்வா
வாதிகள் தாழ்த் தப்பட்டோர் வேறு மதத்திற்குச் சென்று விட்டால் தாங்கள்
சிறுபான்மையாகி விடுவோம் என்ற அச்சத்தில் தாழ்த்தப் பட்டவர்களை
இழுத்துப்பிடித்து இணைத் துக் கொள்கின்றனர். அவர்களை கறி வேப்பிலையாகக்
கையாளுகின்றனர்.
அதே நோக்கத்தில் தான் தற்போது, தாழ்த்தப்பட்டோரைக் கவர அவர்களின் வாக்குகளைப் பெற அம்பேத்காரைத் தூக்கிப் பிடிக்கின்றனர்.
ஆனால்
உண்மையில் அம்பேத்கா ரைப் பற்றி சங்கராச்சாரி உள்ளிட்ட இந்துமதத்தவர்கள்
எப்படிக் கேவலப்படுத் தினர், இழிவுப்படுத்தினர் தெரியுமா? இதோ ஓர்
எடுத்துக்காட்டு.
புதிய
இந்துச்சட்டம் என்ற பெயரில் அம்பேத்கர் ஒரு ஸ்மிருதியை எழுதியி
ருக்கிறார். அதைச் செய்யும் உரிமை அம்பேத்கருக்குக் கிடையாது. பால் எவ்வளவு
தான் புனிதமானது என்றாலும் சாக்கடை வழியாக வந்தால் அதை யாரும் ஏற்பது
இல்லை. தீண்டத்தகாத வராகிய அம்பேத்கர் சாஸ்திரங்களை மேற்கோள் காட்டுவதும்
அப்படித்தான்.
(ஆதாரம்: நவ்பாரத்
12.01.1950) ஆக, அம்பேத்கார் தீண்டத்தகாதவர் என்பதால் அவர் சாக்கடைக்குச்
சமமான வர் என்றார் சங்கேஸ்வர் பீடத்தின் சங்கராச்சாரி. சாக்கடைக்கு சமமான
சங்கராச்சாரி சாஸ்திரங்களை தொட உரிமையில்லை என்கிறார்.
இதுமட்டுமல்ல.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் முன்னாள் ஆசிரியரும், வாஜ்பாய் தலைமையில்
1999 -2004ல் தொழில் அமைச்சராய் இருந்தவருமான அருண் ஷோரி, டாக்டர்
அம்பேத்கரை இழிவுபடுத்தி(Worshipping Flase Goods) என்ற நூலை எழுதி
வெளியிட்டார். இதற்கு தாழ்த்தப் பட்டோர் அமைப்புகள் கடும் கண்டனம்
தெரிவித்தன. இந்துத்வா சக்திகள் எந்த அளவிற்கு அம்பேத்கர் மீது வெறுப்புக்
கொண்டிருந்தனர் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.
1952இல்
இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் பம்பாய் நாடாளு மன்றத் தொகுதியில்
(ரிசர்வ்) அம் பேத்கர் போட்டியிட்டார். அப்போது இந்துத்வா அமைப்புகள்
அவருக்கு எதிர்ப்பாகக் கடும் பரப்புரையில் ஈடுபட்டு அவரை தோற்கடித்தனர்.
இப்படிப்பட்ட
இந்துத்வா பேர் வழிகள் இன்றைக்கு அம்பேத்கரை வானளாவப் புகழ்வதும் அவர்
இந்து கலாச்சாரத்தை நேசித்தவர் என்று அயோக்கியத்தனமாய் கருத்துப்பரப்பு
வதும் செய்வதோடு அய்.அய்.டி.க்கு அம்பேத்கர் பேர் வைக்க வேண்டும்.
அம்பேத்கருக்கு விழா கொண்டாட வேண்டும் என்று நாடகமாடுகின்றனர்.
இவையெல்லாம் எதற்கு? இரண்டு காரணங்களுக்காகத்தான்!
1)
இந்து மதத்தை விட்டு தாழ்த்தப் பட்டோர் சென்றுவிடக் கூடாது. சென்றால்
இதுமதம் காணாமல் போய் விடும். ஆரிய ஆதிக்கம் உதிர்ந்து விடும்.
2)
இந்தியா வெங்கும் தாழ்த்தப் பட்டோர் கோடிக்கணக்கில் உள்ளனர். அவர்களின்
வாக்குரிமைகளைப் பெற வேண்டும். ஆரியத்தின் வழக்கம் இது தானே. எதிர்ப்பது
எதிர்க்க முடிய வில்லையென்றால் அவர்களையும் அய்க்கியப்படுத்தி அழிப்பது.
இப்படித் தானே புத்தத்தை அழித்தனர். இப் போது தாழ்த்தப்பட்டோரை அழிக்க,
ஒடுக்க, வீழ்த்த அணைத்து அழிக்கும் யுக்தியைக் கையாளுகின்றனர்.
தாழ்த்தப்பட்ட
சமுதாயத் தோழர் களே! எச்சரிக்கையாய் இருக்க வேண் டிய நேரம் இது. வஞ்சக
வலையில் வீழாது விழிப்போடிருந்து அம்பேத்கர், பெரியார் வழியில் நின்று
மதவாத சக்திகளை வீழ்த்த வேண்டும். ஆரிய ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும்.
No comments:
Post a Comment