தம்பி ரங்கராஜ் பாண்டே! இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்!
1. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் கேட்டது போல் சங்கராச்சாரியாரிடமும், ஜெயலலிதாவிடமும் உள்புகுந்து எல்லா விவகாரங்கள் பற்றியும் கேள்வி கேட்க உம்மால் முடியுமா?
2. பிரதமர் உட்பட எல்லோரையும் பெயர் சொல்லும் வாய்ப்பை பெருமையாக நினைக்கும் நீ சங்கராச்சாரியையும், ஜெயலலிதாவையும் பெயர் சொல்லி அழைக்க, அவர்கள் பேட்டி ஒத்துக் கொள்ளவில்லையென்றால் அதை விமர்சித்து சொல்லத் தயாரா?
3. உம்முடைய கேள்விகள் சொந்த சரக்கா? உன் பின்னணியிலிருந்து வந்த சரக்கா?
அப்பட்டமான
ஆர்.எஸ்.எஸ் பின்ணணியிலிருந்து வந்த உங்களால் எப்படி நடுநிலையாக
விவாதங்களை நடத்த முடியும்? அல்லது அந்த நடுநிலை வேடம் ஏன்?
4. திராவிடர் கழக ட்ரஸ்ட் பற்றி கேள்வி கேட்ட நீ தந்தி நிறுவனம் பற்றி கேள்வி கேட்கத் தயாரா? அங்குள்ள ஊதிய பட்டுவாடா முதல் அலசத் தயாரா?
5. பேட்டி காணும் போதே குறிப்பிடாதவற்றை பேட்டிக்குப் பின் ஒட்டிச் சேர்ப்பது யோக்கியதையான செயலா? பேட்டி காணும் தகுதி உனக்கு இனியுண்டா?
6. பிறரிடம் நியாயம் கேட்கும் நீ உன் செயல்பாடுகளில் (தினமலரில் பணியாற்றியது முதல்) நெறியும், நேர்மையும் ஒளிவு மறைவின்றி செயல்படுகிறாயா? உளச் சான்றுகளின்படி பதில் கூறுவாயா?
7. பாண்டே என்பது மனித பேதம் காட்டுவதாயிற்றே? அதை வைத்துக் கொண்டு நியாயம் பேசலாமா?
பூணூல் போடுகிறாயா? அது அயோக்கியத் தனத்தின் அடையாளம் என்பதை ஏற்கிறாயா?
8. உண்மையைக் கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில்லாமல், உனது நோக்கதிற்கு ஏற்ப பேட்டியாளரின் பேச்சில் குறுக்கிடுவது, திரித்து பேசுவது செய்கிறீரே அது மோசடியல்லவா?
9.தூக்கு தண்டனைக்கெதிராக உயிர் துறந்த செங்கொடியின் மரணத்தை, காதல் தோல்வியினால் தற்கொலை என்று அநாகரிகமாக தினமலரில் எழுதி கொச்சைப்படுத்திய கொடுஞ்செயலை குறுந்தாடிக்குள் மறைத்துவிட்டு நாகரிகமானவரைப் போல் தந்தி குழுமத்துக்குள் அடைக்கலமாகிவிட்டால் சரியாகி விடுமா?
10. சங்கரமடமே ஒரு மோசடி மடம் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கையில் அது பற்றி ஒரு விவாதம் நடத்தி மக்களுக்கு உண்மைத் துலங்கச் செய்யலாமே?
சங்கர ராமன் கொலைவழக்கில் உண்மையைக் கூற முன்வந்துள்ள இரவி சுப்பிரமணியத்துடன் ஒரு பேட்டி நடத்தத் தயாரா?
#குறிப்பு
: பெயர் சொல்லியழைப்பது பகுத்தறிவு என்று தெரிந்த அளவிற்கு பண்பாடு என்பது
ஒன்று உண்டு என்பது தெரியவில்லையா? தெரிய வேண்டும் என்பதற்காக உன்பாணியில்
இக்கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment