அரசியல்

Friday, January 8, 2016

பார்ப்பானைப் பார்த்தாவது பாடம் கற்கவேண்டாமா?

2G வழக்கு தி.மு.க. தேர்தல்வெற்றியைப் பாதிக்கும் என்கிற மாலன் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை மறைக்கிறார்...........

பார்ப்பான் ஓரணியில் ஒரே குரலில் சரியாக இருக்கிறான். தமிழன்தான் தன்முனைப்பில் தான் தோன்றியாய் அழிகிறான்!

பார்ப்பானைப் பார்த்தாவது பாடம் கற்கவேண்டாமா?

”தினமணி” என்றொரு பத்திரிக்கை. அது நடுநிலை நாளேடு என்று சொல்லிக் கொள்ளும்! ஆனால், பச்சை பார்ப்பன ஏடாக அச்சாகி, மத்தியில் பி.ஜே.பி., மாநிலத்தில் ஜெயலலிதா ஆட்சி நிலைக்க என்னென்ன பித்தலாட்டம், தில்லுமுல்லு, தகிடுதத்தம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்யும்!

அதற்காக சூடு, சொரணை மானம், வெட்கம் எதுவும் இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளும். காரணம், அப்படியொரு ஆள் அங்கு ஆசிரியராக வந்துவிட்டதன் விளைவு அது! பெரியார் நினைவு நாள் செய்தி வெளியிட்ட விதமே அதற்குச் சான்று அதுபோல் ஆயிரம் காட்டலாம்.

ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள ஆட்களை தயார்செய்து, கட்டுரைகளை வெளியிடுவது அவர்களின் கொள்கைத்திட்டம்

தில்லுமுல்லு திரிபுவேலை செய்வதில் கைதேர்ந்த, “நல்லவன் போல் நடிப்பான்” என்ற நயவஞ்சகப் பேர்வழிகளை பொறுக்கியெடுத்து பொறுக்கித் தனமான கருத்துகளை, புனிதத்தனமான முலாம் பூசி வெளியிடுவது அவர்களின் யுக்தி.

இன்றைக்கு (08.01.2016) தினமணியில் மாலன் என்ற ஒரு போலிப்புனிதரின் பார்ப்பன பாசம் வழியும் பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் கட்டுரை யொன்று, அரசியல் அலசல் என்ற போர்வையில் வந்துள்ளது”

“இணையுமா இலையும் தாமரையும்?” இதுதான் அவர் எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பு எவ்வளவு ஏக்கம், தவிப்பு, அக்கறை ஆர்வம் பாருங்கள் இந்த மாலனுக்கு!

இலையும் தாமரையும் கூட்டணிக்குத்தான் இணையவில்லையே தவிர, கொள்கையில் இணைந்து தானே இருக்கிறார்கள், மோடிக்கும் ஜெயலலிதாவிற்கும் எதில் வேறுபாடு? அதனால்தானே துக்ளக் சோமுதல் மாலன் வரை அத்தனை அம்பிகளும் மொத்தமாய் அணிவகுத்து அவர்களை ஆதரிக்கிறார்கள்!

அ.தி.மு.கவும், பி.ஜே.பியும் கூட்டு சேர என்னென்ன சாதகங்கள், நன்மைகள் உண்டோ அத்தனையும் சொல்லி ஒட்டவைக்க முயலும் மாலன், தி.மு.க.விற்கும் தே.மு.தி.க.விற்கும் எத்தனைச் சிக்கல்களை உருவாக்கிக் காட்ட முடியுமோ அத்தனையையும் உருவாக்கிக்காட்டி, இருவரும் இணைந்துவிடக்கூடாது என்பதற்கு தவியாய் தவிக்கிறார்.

பி.ஜே.பிக்கு மக்களவையில் பெரும்பான்மை இல்லாததால்தான் இன்னும் இந்தியாவில் பி.ஜே.பி. மற்றும் ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் தங்கள் ஆதிக்கத்தை அரங்கேற்ற முடியாமல் தவிக்கின்றன. அதை எப்படியாவது பெற்றுவிட வேண்டும். என்று துடிக்கின்றன.

அந்தத்துடிப்பு மாலனுக்கு மலையளவு உள்ளது. அதன் வெளிப்பாடுதான் இலையும் தாமரையும் இணையுமா என்ற ஏக்கம்!

அப்படியென்றால், அதைத் தடுக்க வேண்டுமானால் மதவாதத்தை எதிர்க்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டாமா? தி.மு.க.வைப்பற்றிப் பேசும் போது மட்டும் ஊழலை ஊதிஊதி பெரிதாகக் காட்டும் இவர்கள், அ.தி.மு.க ஊழலை, ஜெயலலிதா ஊழலை அப்படியே ஓரங்கட்டி ஒளித்துவிடுகிறார்கள்.

”2ஜி வழக்கில் தேர்தல் நேரத்தில் தீர்ப்பு வந்துவிடலாம்; அது தி.மு.கவிற்குப் பாதகமாக அமைந்தால் அது தேர்தலைப்பாதிக்குமா? இக்கேள்விக்கான விடைதான் தி.மு.க. கூட்டணி உருப்பெறுவதையும், வலுப்பெறுவதையும் இறுதிசெய்யும்” என்று கூறும் மாலன்,

தேர்தலுக்கு முன்பே ஜெயல்லிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் வாய்ப்பு உள்ளது என்பதை கூறவில்லை! ஏன், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கையே மாலன் இக்கட்டுரையில் குறிப்பிடவே இல்லை. அறவே மறைத்துவிட்டார்.

அறிவு நாணயம் இருந்தால், நீதி நேர்மையிருந்தால், நடுநிலையிருந்தால் யோக்கியதையிருந்தால், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தேர்தலுக்குமுன்னமே வரவாய்ப்புள்ளது.

அது ஜெயலலிதாவிற்குப் பாதகமாக அமைந்தால் அது அ.தி.மு.கவின் எதிர்காலத்தையே பாதிக்கும், தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அ.தி.மு.க எதிர்கொள்ள நேரிடும், இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் பி.ஜே.பி. அ.தி.மு.கவுடன் கூட்டு சேர்வது பற்றி முடிவெடுக்க வெண்டும் என்று எழுதியிருக்க வேண்டுமல்லவா?

அ.தி.மு.க அரசின் மீது தமிழக மக்கள் அளவு கடந்த கோபத்தில் உள்ளனர். அ.தி.மு.கவிற்கு வாக்களிக்க மக்கள் தயாராய் இல்லை என்ற உண்மையை கட்டுரையில் எந்த இடத்திலும் மாலன் குறிப்பிடவில்லை


அ.தி.மு.க. செல்வாக்கு அப்படியே இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்க, அத்தனை பார்ப்பனர்களும் பார்ப்பன ஊடகங்கத்தாரும் தொடர்ந்து முயற்சிக்கின்றனர்.

தமிழகத் தேர்தல் களம் தெளிவாகத்தான் இருக்கிறது. மாலன் போன்ற ஆரியப்பார்ப்பன ஆதிக்க வெறி கொண்ட ஆட்கள் தான் அதை குழப்பிக் குளறுகின்றனர்.


தமிழகத்தின் பெரிய கட்சிகள் தி.மு.க; அ.தி.மு.க. இரண்டுதான். இரண்டின் மீதும் ஊழல் குற்றச் சாட்டு உள்ளது. ஊழலைக் கருத்தில் கொண்டுமட்டும் அணுகினால் இந்த இரு கட்சிகளும் தகுதியிழக்கின்றன. ஆனால், இந்த இரு கட்சிகளின் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இப்போது வந்ததல்ல, 40 ஆண்டுகளுக்கு மேலாகவுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில் மாறிமாறி கூட்டுசேர்ந்த கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகள் இப்போது மட்டும் புனிதம் பேசுவது சரியா? இது சந்தர்ப்பவாதமல்லவா? இது யோக்கியமான செயலா?

மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சியோடு கம்யூனிஸ்ட்டுகள் கூட்டு வைக்க முயற்சிக்கிக்கின்றார்களே, காங்கிரஸ் ஊழல் இல்லாத கட்சியா?

இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸை வெறுக்கும் கட்சிகள் த.மா.க.வோடு கூட்டுச் சேரத் துடிக்கின்றனவே அது சரியா? இலங்கையில் உச்சக்கட்ட போர் அழிவின் போது, மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் காபினட் அமைச்சராய் இருந்தவர் வாசன் அல்லவா? அவரும் இலங்கைத் தமிழர் அழிவிற்குப் பொறுப்பாளிதானே?


எனவே, சந்தர்ப்பவாதத்தை விட்டுவிட்டு. பி.ஜே.பி அல்லாத அதனோடு ஒத்துப் போகும் அதிமுக அல்லாத ஆட்சி அமைவதே சரி என்ற உண்மைகள் பேசப்படாதது ஏன்?

திமுகவை தவிர்த்து அதிமுகவை வீழ்த்தமுடியாது என்ற நிலையில் திமுகவும் கூட்டு சேர்வதில் என்ன தவறு?

முதலில் ஒழிக்கப்பட வேண்டியது திமுகவா? அதிமுகவா? என்றால் அதிமுக தானே?


இந்தமுறை அதிமுகவை அகற்றிவிட்டு, இன்னும் 5 வருடங்களில் மாற்று ஏற்பாடு செய்து, மக்களை மாற்றி, மாற்றம் காண்பதுதானே சரியானதாக இருக்கும் முடியும்?

இதைப் பேசாது. எதையெதையோ பேசுவது பித்தலாட்டப் பேச்சு தானே?

தமிழர்களே எச்சரிக்கை!

ஆளாளுக்கு வாக்குகளைப் பிரித்தால், அது அ.தி.மு.க. அராஜக ஆட்சிக்கே வழிவகுக்கும்

தந்தை பெரியார் சொல்வார், “பார்ப்பான் யாரை ஆதரிக்கிறானோ அவரை தமிழர்கள் எதிர்பதே தமிழர் நலனுக்கு நல்லது!” என்று.

2016 தேர்தலில் பெரியாரின் இந்த அறிவுரையை ஏற்பது ஒன்றே தமிழர்க்கும், தமிழகத்திற்கும் நல்லது தமிழர்களே சிந்திப்பீர்!

No comments:

Post a Comment