பள்ளிகளில் “புராஜெக்ட்” என்ற பெயரில் பெயின்டை 3 வயது குழந்தைகள் முதல் பயன்படுத்துவதால், அது குழந்தைகளின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. எனவே, இதைத் தவிர்க்க அரசும், கல்வியாளர்களும் கவனம் செலுத்த வேண்டும். இது குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்தது. எச்சரிக்கை!
பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.
பெயின்ட் பூசப்பட்ட பொருட்கள் குறிப்பாக விளையாட்டுப் பொருட்களை குழந்தைகளிடம் கொடுக்காதீர்கள்!
பெயின்ட் புதிதாக அடிக்கப்பட்ட வீடுகளில் உடனே குழந்தைகளையும் கருவுற்ற பெண்களையும் புழங்க விடாதீர்கள்! சில நாள்கள் கழித்து அந்த நாற்றம் நீங்கியபின் புழங்கவிடுங்கள்.
பெயின்ட்டில் காரீயம் கலக்கப்படுகிறது. அதன் நச்சுத்தன்மை குழந்தைகளை, கருவுற்ற பெண்களைப் பெரிதும் பாதிக்கிறது.
உலகத்தில் ஆண்டுக்கு 43 ஆயிரம் பேர் இதனால் உயிரிழக்கின்றனர். லட்சக்கணக்கில் பாதிக்கப்படுகின்றனர்.
மஞ்சள், சிவப்பு பெயின்டில் காரீயத்தின் அளவு அதிகம். விலை குறைவான, மட்டரக பெயின்ட்டைப் பயன்படுத்தாதீர்கள்
தரமற்ற பென்சில், வாட்டர் கலர், க்ரையான் போன்றவற்றைக் குழந்தைகளிடம் தராதீர்கள்!
பெயின்ட் அடித்த பொம்மைகள், பேட்டரிசெல்கள், கலாய் பூசிய பாத்திரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், சால்ட்ரிங் பொருட்களை குழந்தைகளிடம் கொடுக்காதீர்கள்.
இவற்றை குழந்தைகள் வாயில் வைக்கும் போது அவற்றிலுள்ள காரீயம் இரத்ததில் கலந்து உடல் நலம் கெடுக்கும்; உயிருக்குக் கேடு விளைவிக்கும்!
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
No comments:
Post a Comment