ஒரு வழக்கு சம்பந்தமாக நாமக்கல் சென்றுவிட்டு நடுஇரவு குதிரை வண்டியில் சேலம் திரும்பினார். இரவில் கொலை கொள்ளை அதிகம் நடக்கும் என்பதால் கைதுப்பாக்கியுடன் சென்றார். வண்டியில் காவற்காரனும் வந்தான்.
வண்டியில் அமர்ந்திருந்த இராஜாஜி இரவு என்பதால் தூங்கிட்டார். சுங்கச்சாவடியில் வண்டி நின்றது.
காவற்காரன் சுங்கப்பணம் கட்டிவிட்டு, மீண்டும் வண்டியின் பின்புறம் வந்தான். தீடீர் என்று விழித்த இராஜாஜி யாரோ கொலைகாரர் என்று நினைக்க காவற்காரானை தன்கைத் தூப்பாக்கியால் சுட்டார் அவன் மண்ணில் சாய்ந்தான் கூட்டம் கூடியது. காவற்காரனை சுட்டுவிட்டதால் அதிர்ச்சியடைந்த இராஜாஜி மருத்துவமனைக்கு காவற்காரனைக் கொண்டு சென்றார். ஆனால் அவன் வழியிலே இறந்துவிட்டான்.
இராஜாஜி மீது கொலைக் குற்றம் சாட்டி வழக்கு நடந்தது. இருட்டில் தற்காப்புக்காகச் சுட்டார் என்று நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார்.
#ஆதாரம்: இராஜாஜி வாழ்க்கை வரலாறு (1949 பக்கம் - 20)
No comments:
Post a Comment