அரசியல்

Tuesday, September 1, 2015

இடஒதுக்கீட்டின் தடம் தமிழகத்திலிருந்தே!


- மஞ்சை வசந்தன்

இடஒதுக்கீடு சமூகநீதிக்கான சரியான தீர்வு. கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, மூன்றுக்கும் கல்வி யிலும், சமூகத்திலும் பின் தங்கி யோருக்கு சாதியடிப்படையில் அளிக் கப்படும் இடஒதுக்கீடு என்பது சலு கையோ, கருணையோ, பிச்சையோ அல்ல; அது கிடைக்க வேண்டிய உரிமை!

இடஒதுக்கீடு பற்றி யார் பேசினா லும், சிந்தித்தாலும் கருத்துக் கூறி னாலும் முதலில் அவர்கள் அறிய வேண்டிய அடிப்படை இது. இதில் தெளிவின்மையோ, தெரியாமையோ இருப்பின் அவர்கள் இடஒதுக்கீட் டுக்கு எதிராகவே செல்வர்.

முள்ளை முள்ளால், சூட்டை சூட்டால், காரணத்தைக் காரணத்தால் தீர்வு காண வேண்டும் என்பதே சரியான அணுகுமுறை, எந்த ஜாதியால் ஒடுக்கப்பட்டார்களோ அதே ஜாதியால் அவர்களை மேலெழச் செய்வது என்பதே காரணத்தை காரணத்தால் தீர்வு காண்பதாகும்.

இடஒதுக்கீடு என்றவுடன் ஏன் ஜாதி அளவுகோல்? பொருளாதாரந் தானே அளவு கோலாக இருக்க முடியும்? என்பது சில மேதாவிகளின் மேம்புல் மேய்ந்த கேள்வி. பொரு ளாதாரம் என்பது பணம் (நிதி). நிதிசார்ந்த உதவி செய்யும் போது பொருளாதாரம் அடிப்படை; கல்வி உதவித்தொகைத் தருகிறோம் என் றால் பொருளாதாரத்தில் நலிந் தோர்க்கு நிதி உதவி செய்வது சரி.

சமுதாயத்தில் ஜாதியால் ஆயி ரக்கணக்கான ஆண்டுகளாய் அழுத்தி ஒடுக்கப்பட்டவனை மேலே கொண்டுவர கல்வி, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு அளிக்க பொருளாதாரம் எப்படி அளவுகோலாக இருக்க முடியும். எது காரணமோ அது தானே அடிப்படையில் அமைய முடியும்? அப்படியென்றால் ஜாதியடிப்படை தானே சரியாகும்!

பொருளாதார அடிப்படையென்பது எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அவராலே சோதனை செய்யப்பட்டு, அது தப்பு என்று அவரே ஒப்புக் கொண்டு பொருளாதார அடிப்படையை நீக்கியதோடு இடஒதுக் கீட்டின் அளவையும் அதிகரித்தார்.

ஆத்திரம் கொண்ட ஆரிய பார்ப் பனர்கள் அவரிடம்  சென்று கொதித்து கூக்குரல் இட்டபோது, உங்களுக்கு விளக்கம் வேண்டுமானால் வீரமணியிடம் சென்று கேளுங்கள் என்றாரே! அது எவ்வளவு அர்த்தமுள்ள அனுபவத்தால் விளைந்த வார்த்தை?

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மன்னன் இராசஇராசனே வெளியில் தான் நிற்கிறான். ஆனால் அன்னக்காவடி ஆரிய பார்ப்பான் அக்கோயில் கரு வறையில் ஆதிக்கம் செலுத்துகிறான். மன்னனுக்கு இல்லாத பொருளாதாரமா? அவனைப் புறந்தள்ளியதுடன், ஆரியப் பார்ப்பானை கருவறைக்குள் அனுமதித் ததும் எது? ஜாதியல்லவா? இன்றளவு ஜாதியாதிக்கம் வீழ்ந்த பாடில்லையே. எவ்வளவு பொருளாதாரம் வந்தாலும் சூத்திரன் சூத்திரன் தானே! கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து கோயில் கட்டிய செல்வந்தனானாலும் சூத்திரன் வெளியில் தானே நிற்க வேண்டும். அரைக் காசுக்கு வழியில்லாமல் போனா லும் ஆரிய பார்ப்பான்தானே கருவறை யுள் சென்று கடவுள் சிலையைத் தொட முடியும்?

அங்கு ஏன் பொருளாதார அடிப்படை பார்க்கப்படவில்லை? ஆக பொருளாதார அடிப்படை பேசுவது அறியாமையின் அடையாளம்.

எவ்வளவு காலத்திற்கு ஜாதியைச் சொல்லி இடம் ஒதுக்குவது?

இது இரண்டாவது கேள்வி. எவ்வளவு காலம் என்பது அதன் தேவையைப் பொறுத்தது. எவ்வளவு காலத்திற்கு சாதியால் ஒடுக்கப்பட்டுக்கிடக்கிறானோ அவ்வளவு காலத்திற்கு எல்லா ஜாதிக் காரரும் கல்வியிலும், வேலை வாய்ப் பிலும், உயர்பதவியிலும் வந்துவிட்டால் இடஒதுக்கீடு தேவையில்லை. அது வரும் வரை உயர்சாதி ஆதிக்கம் அனைத்துத் துறையிலும் இருக்கும்வரை, ஒடுக்கப் பட்டவன் உயர்ந்தெழ ஒரேவழி ஜாதியடிப் படையில் இடஒதுக்கீடு மட்டும் தானே!

இடஒதுக்கீட்டால் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மாவட்ட ஆட்சியராக ஆகிறார் என்றால், மருத் துவர் ஆகிறார் என்றால், நீதியரசராக ஆகிறார் என்றால், அந்த சமுதாயத்தை சேர்ந்த கோடானுகோடி மக்களுக்கு ஒரு நம்பிக்கைப் பிறக்கிறது. ஓர் தெம்பு வருகிறது, ஒரு எழுச்சி ஏற்படுகிறது. ஓ...! நாமும் இந்த அளவிற்கு உயரலாம்! என்ற ஒரு உந்துதல் கிடைக்கிறது. இதுதானே இடஒதுக்கீட்டின் தத்துவம், சித்தாந்தம் எல்லாம்!

ஜாதி இடஒதுக்கீட்டால் தகுதி திறமை கெடாதா?

இது மூன்றாவது கேள்வி. இன்றைக்கு மருத்துவக்கல்லூரியில் மாணவரைச் சேர்க்கும்போது இடஒதுக்கீட்டில் கொடுக்கிறோம்? இதனால் தகுதியற்ற மாணவர் எவர் மருத்துவராக ஆனார்? எல்லோரும் உயர் மதிப்பெண் பெற்ற வர்தானே! இடஒதுக்கீடு என்பது தகுதி திறமையற்றவர்களுக்கு கொடுப்பதல்ல; அவருக்குரிய இடத்தை அவரவர்கக்குக் கொடுப்பது. தகுதி திறமை கூப்பாடு. ஆரிய பார்ப்பனர் எழுப்பும் சூழ்ச்சிக் குரல்.

இடஒதுக்கீடு இருக்கும் வரை ஜாதி எப்படி ஒழியும்?

இது அடுத்த கேள்வி. இடஒதுக்கீடு தர ஜாதி கேட்கப்படுவதால் இந்த கேள்வியை எழுப்புகின்றனர். நோயைத் தீர்க்க விஷத்தை மருந்தாகத் தருவதுபோல, சமூகநீதிகாத்து, அவனை நிமிர்ந்து நடக்கச் செய்ய ஜாதி மருந்தாக மட்டுமே இங்கு பயன்படுகிறது. இதனால் சாதி வளர்வதில்லை.

ஜாதியை ஒழிக்க ஒரே வழி ஜாதி மறுப்பு மணங்கள் (காதல்  மணங்கள்) அதிகரிப்பது ஒன்றே வழி. ஜாதி மறுத்து மணந்தவர் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு அளித்தால், விரைவில் ஜாதியும் ஒழியும் ஜாதி அடிப்படையும் ஒழியும்.

இந்த இடஒதுக்கீடு எவ்வளவு ஜாதித் துள்ளது என்பதை அறிய வேண்டுமா னால், மத்திய அரசில் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு வருவதற்கு முன் யாராவது வேலைக்குப் போக முடிந்ததா? எல்லாம் ஆரிய பார்ப்பன மயம் அல்லவா. இன்றைக்கு பிற்பட்டோர் நுழைவது இடஒதுக்கீட்டின் விளைவல்லவா? மண்டல், வி.பி.சிங் போட்ட அடித் தளம் அல்லவா?

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு!

இன்றைக்கு அரசுத்துறைகள் அருகி தனியார் துறைகள் பல்கிப் பெருகுவதால், தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டைக் கேட்டுப் பெற வேண்டும். அதற்கு அனைவரும் சேர்ந்து போராடவேண்டும். அப் போது இடஒதுக்கீட்டின் பயன் எவ்வளவு மகத்தானது என்பது புரிவதோடு, சாதியும் வெகு விரைவில் ஒழிக்கப்படும். ஜாதி மறுப்பு மணங்கள் பெருகும்.

தமிழகமே வழிகாட்டி!

இடஒதுக்கீடு சிக்கலானாலும், விளக்கமானாலும், தீர்வு ஆனாலும், தெளிவு ஆனாலும் அதற்குத் தமிழ கமே வழிகாட்டி! மற்ற இடங்களில் உணர்வுகள் எழலாம்; உண்மைத் தீர்வுகள் கிடைக்காது. காரணம் அங்கு உணர்வு திரண்ட அளவிற்கு தெளிவு பிறக்கவில்லை.

குஜராத் இடஒதுக்கீட்டுப் போராட் டத்தில் பங்கு கொண்டவர்களில் ஒரு பெண் கையில் ஒரு பதாகை. அதில் இடஒதுக்கீடு வேண்டாம். ஜாதி வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. இது இடஒதுக்கீடு போராட்டமா? அல்லது இடஒதுக்கீட்டை ஒழிக்க நடக்கும் சதியா?

சிலர், இடஒதுக்கீடு எங்களுக்கு வேண்டும் இல்லையேல் இடஒதுக் கீட்டை ஒழி! இப்படி முழங்குகின்றனர்.

இது எப்படி இடஒதுக்கீட்டுப் போராட்டமாகும். அங்கு ஜாதி உணர்வில் அணி திரண்டுள்ளனர். ஆனால் சரியான செயல் திட்டத் தோடு போராடவில்லை. அங்கு தெளிவும் இல்லை, வரையறுத்த கோரிக்கையும் இல்லை.

எனவே இடஒதுக்கீட்டுப் போராட் டம் எவர் நடத்தினாலும் அவர்கள் தமிழகத்தில் தந்தை பெரியார் போராட்ட தடத்தில் செல்வது ஒன்றே வெல்வதற்கான ஒரே வழி!

No comments:

Post a Comment