மூத்திரச்சட்டியுடன் 13,19,622 கி.மீட்டர் பயணம் செய்து பேசியுள்ளார், அவர் பேசிய மொத்த நேரம் 21,400 மணிகள்.
பெரியார் பேசிய மொத்த நேரம் 21,400 மணிகள், பொதுக் கூட்டங்கள் மொத்தம் 10,700, சுற்றுப்பயண தொலைவு 8,20,000 மைல்(13,19,622 கி.மீ) உலகில் இந்த சாதனையை மிஞ்சியவர் எவரும் இலர்.
கம்பியில்லா பேசுங்கருவி ஒவ்வொர் சட்டைப் பையிலும் இருக்கும் என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார்.
பெரியார் என்றால் மனிதநேயம் என்று பொருள்.
ஓர் அரசக் குடும்பத்திற்குரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும், எளிமையாய் எல்லா இன்னலும் ஏற்று மக்களுக்காக வாழ்ந்தார்.
தன்னைப் போல பிறரை நேசிக்கச் சொன்னார். தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் பொதுமக்கள் நலனுக்கே கொடுத்தார்.
சாதி ஒழிய வேண்டும். எல்லா மனிதரும் சம உரிமை, சமவாய்ப்பு பெற்று வாழ வேண்டும் என்றார்.
பெண்ணுரிமைக்காக அதிகம் உழைத்தவர் பெரியார். பெரியார் என்ற பெயரே பெண்கள் அளித்ததுதான். பெரியார் ஒரு இனத்துக்கோ ஒரு மொழிக்கோ உரியவர் அல்ல. அவர் உலகத் தலைவர்.
தமிழர் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து சம உரிமையோடு கல்வி வேலைவாய்ப்பில் உரிய பங்கை பெற்று உயர்ந்து நிற்பதற்கு பெரியாரே காரணம்.
தமிழகம் ஏற்ற பெரியாரை இந்தியா முழுமையும் ஏற்று இன்று உலகில் பல நாடுகளும் ஏற்றூ போற்றுகினறன்.
அவரது மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற பாவேந்தரின் கணிப்பு நம் கண்முன்னே உண்மையானது.
வாழ்க பெரியார்!
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
No comments:
Post a Comment