வாழைப்பழங்களை குழந்தைகளுக்குத் தரும்போது, அதன் நடுவில் இருக்கும் கறுப்பு விதைகளை நீக்கிவிட்டு கையால் மசித்துக் கொடுக்கலாம்;
வாழைப்பழம் என்றதும் நன்கு கனிந்த தொட்டால் மென்மையாக இருக்கும் பழமே சிறந்தது என எண்ணுகிறோம்.
ஆனால் தொட்டால் சற்று கெட்டியாகவும்,உரித்தால் தோல் வரக்கூடியதாகவும் கடித்து மென்று சாப்பிடும் அளவுக்கும் இருப்பதே நல்ல வாழைப்பழம்.
சாப்பிடும் போது இனிப்பும் துவர்ப்புச் சுவையும் தெரிய வேண்டும். இதுதான் வாழைப்பழம் சாப்பிட சரியான பருவம்.
இந்தப் பருவத்தில் சாப்பிட்டால் தான் பழத்தின் முழுப் பலனையும் பெற முடியும். பழம் கனிந்துவிட்டால், மாவுச்சத்தும் இனிப்பும் அதிகரித்துவிடும்.
No comments:
Post a Comment