பசுமாட்டின் முத்திரத்தில் (கோமியத்திற்கு) கிருமிகளை அழிக்கும் சக்தி
இருப்பதாகக் கூறி தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில்,
கோமியத்தை தெளித்து பரிசோதிக்க இராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் நாகரீக வளர்ச்சி இல்லாத காலத்தில் மாட்டின் மூத்திரத்தை
தெளிக்கும் வழக்கம் இருந்து வந்தது, 1870 களில் இந்திய கிராமங்களில்
குழந்தைகளுக்கு தொடர்ந்து சுவாசம் தொடர்பான கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு
போன்றவை வீடுகளில் தெளிக்கப்படும் சாணம்
மற்றும் மாட்டு மூத்திரத்தினாலும் ஏற்படுகின்றன, என்ற உண்மை தெரிந்த உடன்
பசுமாட்டு மூத்திரத்தை தெளிப்பாதை தவிருக்குமாறு ஆங்கிலேய அரசு
விளம்பரங்களின் மூலம் மக்களிடம் கேட்டுக்கொண்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் மோனக காந்தி இந்தியாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் பசுமாட்டுக் கோமியம் தெளிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு மத்திய அரசு ஊழியர்களின் சம்மேளனம் கடுமையான எதிர்ப்பைத்தெரிவித்திருந்தது. மத்திய அமைச்சர் ஒருவர் இதுபோன்ற பிற்போக்குத் தனமாக கருத்துக்களைத் தெரிவிப்பது நல்லதல்ல என்று கூறியிருந்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்டது.
சாணமும் மூத்திரமும்
ஓர் அறிவியல் பார்வை
பசுமாட்டுச் சாணம் என்பது மாட்டின் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளில் ஒன்றுத்தான், பசுமாடு பெரும்பாலும் புல், தவிடு, குறிப்பிட்ட பசுந்தழைகளை உணவாக உண்கிறது, அவ்வாறு உண்ணும் உணவில் கால்சியம், சோடியம் மக்னீசியம் மற்றும் சிலிகா போன்றவைகளுடன் புரதம், மற்றும் சக்திக்கு தேவையான கார்போஹைடிரேட்டுகள் அதிகம் உள்ளன.
பசுமாட்டின் சாணத்தில் அதிகபட்சமாக நைட்ரஜன், மீத்தேன், மற்றும் சிலிகா போன்ற வேதிப் பொருட்களுடன் நிணநீர் கழிவு, மற்றும் செரிக்கப்படாத இலை தழைகளின் மிஞ்சியப் பகுதி மற்றும் ஜெல்லிப் புரோட்டின்கள் உள்ளது. இதன் கரைசல் வீட்டு முற்றத்தில் தெளிக்கவும், சிமெண்டு இல்லாத தரைதளத்தில் பூசவும் பயன்படுகிறது.
இந்தக் கரைசலில் மீத்தேன் வாயூ வெளிப்படுவதால் தோலின் மூலம் சுவாசிக்கும் ஈ, கரப்பான் மற்றும் சில நுன் பூச்சிகள் அந்தப் பகுதிக்கு வருவதில்லை, அதே நேரத்தில் மீத்தேன் தரையில் தவழும் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மாட்டு மூத்திரம்
மாட்டு மூத்திரத்தில் .4% கால்சியம், .1% பொட்டாசியம்,.13% பொட்டசியம் குளோரைடு , .3% மக்னீசியம், தாமிர ஆக்ஸ்டைடு 1.28%, அமேனியம் 2.65 %, சல்பர் .8%, சோடியம் போன்றவைகளுடன் அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகள் உள்ளது.
நீர் 95 விழுக்காடு உள்ளது.
இதில் மேலே குறிப்பிட்ட அனைத்து வகை வேதிப்பொருளும் மனித உணவிலிருந்து கிடைக்கும் நலம் பயக்கும் வேதிப்பொருட்கள் அல்ல, நலம்பயக்கும் வேதிப்பொருட்களில் பல்வேறு வேதிவினைக்கு ஆட்பட்டு உருமாற்றப் பட்ட பிறகு பசுமூத்திரமாக வெளியேறும் தேவைப்படாத கழிவு வேதிப்பொருட்களாகும், எடுத்துக்காட்டாக பசுமூத்திரத்தில் உள்ள .13 விழுக்காடு சோடியம் குளோரைடு(உப்பு) எந்த விதத்திலும் மனிதர்களுக்கோ அல்லது பிற உயிரினங்களுக்கோ பயன்படாது. ஆக, இந்த மூத்திரம் பயனற்றது.
எனவே, மாட்டுச்சாணமும், மூத்திரமும், கழிவுகளேயன்றி மருந்துகள் அல்ல. இவை உரங்களாக மாறினால் பயிர் நன்றாகவிளையும்! இதில் மதத்தைக் கலந்து, தெய்வீகத்தைப் புகுத்தி திரிபுவாதம் செய்வது அறிவுக்கும், மக்கள் நலத்திற்கும் எதிரானது ஆகும்.
No comments:
Post a Comment