22-2-2017
விளைச்சலைக் கண்டதும்
அறுவடைக்கு முயலும் கமலகாசன்கள்!
தமிழர்களே எச்சரிக்கை!
தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து மத்திய அரசால் வஞ்சமாகப்
பறிக்கப்பட்டுவரும் நிலையில், சல்லிக் கட்டிற்கும் நிரந்தரத்
தடை விதிக்கப்பட்டதால் இளைஞர்கள் வெகுண்டு எழுந்தனர்.
தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக இளைஞர்கள் எழுந்து கூடவே, பொதுமக்களும்
இணைந்து தமிழகமே போராட்டக் களமானது.
விளைவு சல்லிக்கட்டுக்கான சட்டம் வந்து, இளைஞர்கள்
எழுச்சி வென்றது.
இந்நிலையில், அ.தி.மு.க. உடைய, இதைத்
தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த பா.ஜ.க.
மத்திய அரசும், ஆர்.எஸ்.எஸ். மதவெறிக் கூட்டமும்
பலவகையில் முயற்சி செய்தன.
ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி,
தன் கையாளாக ஆக்கி, பினாமி
ஆட்சி நடத்த மத்திய அரசு
முயற்சி செய்தது. அதற்குக் கூட்டாளியாக தீபாவை சேர்த்துவிட்டது.
ஜெயலலிதா ஒரு பார்ப்பனப் பெண்
என்பதால் அந்த இடத்தை நிரப்ப
தீபா என்னும் பார்ப்பனப் பெண்ணை
தூக்கி நிறுத்தியது. அது சரிப்பட்டு வராமையால்
தற்போது கமலகாசன் என்ற பார்ப்பனரை உசுப்பி
விட்டிருக்கிறது.
அரசியல் சபலமுள்ள கமலகாசன்
இளைஞர்கள் எழுச்சி என்ற விளைச்சலை
அறுவடை செய்துவிடலாம் என்று ஒவ்வொரு நாளும்
ஒரு சூழ்ச்சி வலையை விரித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் அறிவும், ஆற்றலும், தலைமைப் பண்பும் உள்ள
எத்தனையோ தமிழ் இளைஞர்கள் உள்ளனர்.
கமலகாசனோ, இரஜினிகாந்தோ, வந்துதான் தலைமையேற்க வேண்டியதில்லை! கோடிக்கணக்கில் சம்பாதித்து கருப்புப் பணத்தை இருப்பு வைத்து
ஏமாற்றி வருபவர்கள், மக்களால் அறியப்பட்டிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் தகுதி உடையவர்கள்
ஆகிவிட முடியாது.
இந்தத் தமிழகத்திற்குத் தேவை
சேவையே தன் வாழ்வின் நோக்கு
என்று கொண்டு வாழ்நாளெல்லாம் எந்த
பலனும் எதிர்பாராமல் உழைக்கும் எக்ஸ்னோரா நிர்மல், அய்.ஏ.எஸ்.
சகாயம் போன்ற, தியாக உள்ளம்
கொண்ட இளைஞர் எம் தமிழ்நாட்டில்
ஏராளமாய் உள்ளனர்.
அந்த இளைஞர்கள் வருவார்கள்
நல்ல தலைமையைத் தருவார்கள். விளைச்சலைக் கண்டதும் அறுவடை செய்ய முயலும்
கமலகாசனோ, தீபாவோ, இரஜினிகாந்தோ எமக்குத்
தேவையில்லை! இளைஞர்களே எச்சரிக்கையாய் இருங்கள்! விழிப்போடு செயல்படுங்கள்.
ஊர்தோறும் இளைஞர் நற்பணிமன்றங்களை அமைத்து
தொண்டு செய்யுங்கள், தகுந்த வாய்ப்பு வரும்போது
அரசியலுக்கு வாருங்கள். அதுவரை எவர் ஆண்டாலும்
அவர்கள் சரியாக ஆள, சுரண்டாமல்,
இலஞ்சம் இல்லாமல் ஆள, மதுக்கடைகளை மூட,
விவசாயி, மீனவர், மாணவர் என்று
பலதரப்பு பிரச்சினைகளும் தீர,
நீட் தேர்வை விலக்க போராடுங்கள்.
இளைஞர்கள் போராடினால் ஆட்சியாளர்களை சீர்செய்து, மக்கள் நலங்காக்க முடியும்!
இது உறுதி!
ஆட்சியாளர்கள் இளைஞர் எழுச்சிக்கு அஞ்சி
நடக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது.
எழுச்சியை மீறி எந்த ஆட்சியாளரும்
இனி ஊழல், சுரண்டல் செய்ய
முடியாது! இளைஞர்களின் மனவுறுதியும், துணிவும் ஒற்றுமையுமே நாட்டையும் மக்களையும் காக்கும்! நீங்கள் முயன்றால் காக்கலாம்!
- மஞ்சை வசந்தன்
---
No comments:
Post a Comment