அரசியல்

Saturday, February 18, 2017

அரசியல் என்பது ஒரு சூதாட்டம்!

என் இனிய இளைய சமுதாயமே!

இன்றைய தமிழக அரசியல் காட்சிகள் கண்டு வெட்கப்பட்டிருப்பீர்கள்; வேதனைப் பட்டிருப்பீர்கள்! இன்றைக்கு நடந்த காட்சிகள் தேவையற்றவை; தவறானவை!

அரசியல் என்பது ஒரு சூதாட்டம்!

இதில் எதிரி எப்படி செயல்படுகிறார்களோ அப்படித்தான் மற்றவர்கள் செயல்படுவார்கள்.

எம்.எல்..க்களை அடைத்து வைத்தல் என்பது இந்தியா முழுக்க எல்லா காலங்களிலும் நடந்து வரும் செயல்தான். இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!

வெளியில் வந்தால் கோடிக்கணக்கில் பேரம் பேச ஆட்கள் இருக்கும்போது, அதைத் தடுக்க ஒருதரப்பு அப்படித்தான் செய்யும்.

மக்கள் கருத்தறிந்து அடுத்த முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்பது வேடிக்கையான சந்தர்ப்பவாதம்.

நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்காக மக்கள் வாக்களித்தார்கள். அவர் பிரதமராக ஆகியிருக்கிறார். அவர் ஏதோ காரணத்தால் பிரதமராக இல்லாத நிலை வந்தால், மீண்டும் இந்தியா முழுக்க எம்.பி.க்கள் மக்கள் கருத்தறிந்துதான் அடுத்த பிரதம மந்திரியைத் தேர்வு செய்வார்களா? பெரும்பான்மை எம்.பி.க்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் தானே அடுத்த பிரதமர் ஆவார். அப்படியிருக்க மக்கள் கருத்து கேட்க வேண்டும் என்பது எப்படிச் சரியாகும்? மக்கள் கருத்தை எப்படி அறிய முடியும். ஒவ்வொருவராய் சந்திக்க முடியுமா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பெரும்பான்மை எம்.எல்..க்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்தான் முதல்வர். பெரும்பான்மையில்லாதவர்கள் பிதற்றுவதெல்லாம் சரியாகி விடாது.

எடப்பாடி அரசு, ‘நீட்தேர்வு விலக்கு பெறுவதிலும், விவசாயிகள் பிரச்சினை தீரவும், நதி நீர் சிக்கலில் தமிழக உரிமைகளைக் காக்கவும், மீனவர் சிக்கல் களையப்படவும், தமிழக மக்கள் நலங்காக்கவும், சாராயக் கடைகள் மூடப்படவும் முழுமையாகப் பாடுபடவேண்டும்.

இலஞ்சம், மணல் கொள்ளை, கனிமக் கொள்ளை அறவே இல்லாத நிலை வேண்டும்.

சசிகலா குடும்பத்தவர் ஆதிக்கம் அறவே இருக்கக் கூடாது. சசிகலா குடும்பம் விலகி நிற்பதுதான் அக்கட்சிக்கு அவர் செய்யும் நன்மையாகவும் உதவியாகவும் இருக்க முடியும்!

தி.மு.. தனக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பை அவசரத்தால் கெடுத்துக்கொண்டு விட்டது. அவர்கள் .தி.மு.. சிக்கலைப் புறந்தள்ளி மக்கள் பிரச்சினையைப் பேசுவதுதான் செல்வாக்கிற்கு உதவும். நடந்ததை மறந்து, இனியாவது மக்கள் பிரச்சினைக்காகப் பாடுபட வேண்டும். .தி.மு.. சிக்கலில் மூக்கை நுழைக்கக் கூடாது.

.பன்னீர்செல்வம் ஒரு கபட நாடகப் பேர்வழி. அவர் பி.ஜே.பி.யின் பினாமி. இளைஞர்கள் ஏமாறக் கூடாது. பி.ஜே.பி.யை பற்றி நிற்பதிலும், தீபாவுடன் சேர்ந்ததிலுமே அவர் ஒரு சந்தர்ப்ப சுயநலக்காரர் என்பது தெரிந்துவிட்டது.

தமிழர் நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளட்டும் நமக்கு எதிர்ப்பு இல்லை

ஆனால், மதவாத பி.ஜே.பி.க்கு மட்டும் இடம் கொடுக்கக் கூடாது. அது தமிழினத்தின் அழிவிற்கு வழிவகுக்கும். தமிழர் நலம் நாடும் கட்சிகள் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு பி.ஜே.பி.க்கு வழி வகுக்கக் கூடாதுஇதில் இளைஞர்களும், மக்களும், அரசியல் கட்சிகளும் விழிப்போடு இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment