“பன்னீர்செல்வம்
அணி
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அணியே”
ஆவடிகுமார்
ஆவேசம் சரியானதே!
தமிழக மக்களே! எச்சரிக்கை!
“நெஞ்சினில்
நஞ்சுவைத்து நாவினில் அன்புவைத்து நல்லவன்போல் நடிப்பான் ஞானத்தங்கமே! அவன் நாடகம் என்ன
சொல்வேன் ஞானத்தங்கமே!’’ என்ற பாடல், ஓ
பன்னீர்செல்வத்திற்கு ஒட்டுமொத்தமாக பொருந்தியிருக்கிறது.
அவரது வளர்ச்சிக்கும் உயர்விற்கும் அவரின் பணிவு, விசுவாசம்
இரண்டுமே காரணமாய் அமைந்தன என்றே எல்லோரும்
கூறுவர். ஆனால், அவை வெறும்
நடிப்புதான் என்பது இப்பொழுது பட்டவர்த்தனமாகத்
வெளிப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா
அவர்கள் இறந்ததும் பன்னீர்செல்வம் வழக்கம்போல் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்
சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக சசிகலாவைத் தேர்வு செய்தனர். அதை
முன்மொழிந்தவரே பன்னீர்செல்வம்தான்.
அப்படியிருக்க
இருநாள் கழித்து ஜெயலலிதா நினைவிடத்தில்
ஒரு நாடகம் நடத்தி, கூட்டத்தைக்
கூட்டி, செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பேட்டியில் தான் வற்புறுத்தப்பட்டதாகவும், தான் சசிகலாவை
எதிர்த்து நின்று போராடப் போவதாகக்
கூறி தன் உண்மை உருவத்தை
உலகிற்குக் காட்டியுள்ளார்.
ஓர் கட்சியின் உண்மையான விசுவாசி என்றால் தனக்குள்ள மனக்குறையை,
மாற்றுக் கருத்தை, வெறுப்பை கட்சியின் கூட்டத்தில் தான் சொல்ல வேண்டும்.
மாறாக, முக்கால் மணி நேரம் கண்ணை
மூடிக்கொண்டு நடித்து எழுந்து, செயலலிதா
ஆன்மாவோடு பேசினேன் என்று அகில உலகப்
பொய்யை அவிழ்த்து விடுவது, உண்மைத் தொண்டனுக்கு விசுவாசிக்கு
அழகல்ல, மாறாக இது துரோகச்
செயலாகும்.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.ஸின்
கையாள்:
அ.இ.அ.தி.மு.க.வைச்
சேர்ந்த ஆவடி குமார், “ஓ.பன்னீர்செல்வம் ஆர்.எஸ்.எஸ்.,
பா.ஜ.க.வின்
கையாளாகச் செயல்படுகிறார்” என்று கூறியது தற்போது
உறுதி செய்யப்பட்டு வருகிறது. கீழ்க்கண்டவற்றை கூர்ந்து நோக்கினால் இந்த உண்மையை அறியலாம்.
¨ பா.ஜ.க.வினரும், பார்ப்பன பத்திரிகைகளும், ஒட்டுமொத்த பார்ப்பனர்களும் பன்னீர் செல்வத்தை தீவிரமாக
ஆதரித்து வருகின்றனர். இதற்குக் காரணம், அவர் பா.ஜ.க.வின்
கையாளாகச் செயல்படுவேன் என்று உறுதியளித்து உள்ளுக்குள்
ஒப்பந்தம் செய்துகொண்டதுதான்.
¨ சல்லிக்கட்டு பிரச்சினையில் மோடி அரசு பன்னீர்செல்வத்தின்
முயற்சிக்கு காட்டிய வேகம், தம்பிதுரையை
சந்திக்க மறுத்த கோபம்.
¨ தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டு வந்த
ஆர்.எஸ்.எஸ். அணி
வகுப்பிற்கு பன்னீர் செல்வம் அரசு
அளித்த அனுமதி!
¨ மைத்ரேயன் என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரை நம்பிக்கைக்குரியவராக,
தூதுவராக பன்னீர் செல்வம் பயன்படுத்துவது.
¨ ஆளுநரைச் சந்திப்பதில் மைத்ரேயனுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை.
¨ தனியாக பிரிந்துவந்த அன்றே
ஜெயலலிதா ஒதுக்கிவைத்த பார்ப்பனப் பெண்ணான தீபாவிற்கு பன்னீர்செல்வம்
விடுத்த அழைப்பு.
¨ பிப்ரவரி 24ஆம் தேதிதான் அரசியல்பற்றி
முடிவெடுப்பேன் என்ற தீபா, 14ஆம்
தேதியே பன்னீர்செல்வத்திடம் வந்து சேர்ந்த மர்மம்.
¨ தன் அணியில் சேர்ந்த
தீபாவை தன் வீட்டிற்கு அழைத்து
வந்ததோடு, தன் மனைவி மூலம்
ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்த
பாசப்பெருக்கு.
¨ பன்னீர் செல்வம் பதவி
துறந்த நிலையில், அவர் பெரும்பான்மை உறுப்பினர்
பட்டியல் அளிக்காத நிலையில் அவர் முதல்வராக நீடிக்க
வேண்டும் என்பதற்காக ஆளுநர் காத்துக் கிடக்கும்
(நாள்களைக் கடத்தும்) அநியாயம்.
¨ பெரும்பான்மை உறுப்பினர் ஆதரவு கடிதம் அளித்தும்
எடப்பாடி பழனிச்சாமியை அழைக்காத ஆளுநரின் அநீதி!
¨ 10க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை பா.ஜ.க.வின்
உதவியோடு தன் அணிக்கு சேர்த்த
சூட்சமம்.
¨ ஒட்டுமொத்தமாகச் சொன்னால், பன்னீர்செல்வத்துக்காக பார்ப்பனர்களும் பா.ஜ.க.
அரசும், ஆளுநரும் அப்பட்டமாகக் காட்டும் ஒருதலைச் சார்ப்பு ஆதரவு, அவர் பா.ஜ.க., பார்ப்பனர்
கையாளாக ஆகி, திராவிட இயக்கத்திற்கு
துரோகம் இழைக்கிறார் என்பதை அய்யத்திற்கு இடமின்றி
வெட்டவெளிச்சமாய் அறிவிக்கிறது.
ஆனால்,
சில ஊடகங்களும், சமூக வலைதளங்களும் ஏதோ
பன்னீர்செல்வம் ஊழலுக்கு அப்பாற்பட்டவர் போலவும், தமிழர்களின் பாதுகாவலர் போலவும், மிக மிக நல்லவர்
வல்லவர் என்பதாகவும் சித்தரித்து, மக்கள் ஆதரவு அவருக்கே
இருப்பதாகக் காட்டுவது ஓர் அப்பட்டமான மோசடிப்
பிரச்சாரமாகும்!
சசிகலா
ஊழல் பேர்வழியென்றால் ஜெயலலிதாவும் ஊழல் பேர்வழிதான்! ஜெயலலிதாவை
இதய தெய்வம் என்று கூறிவிட்டு
சசிகலாவை ஊழல் பெருச்சாளி என்பது
எவ்வகையில் சரி?
பன்னீர்செல்வம்
என்ன ஊழலே செய்யாத உத்தமரா?
சல்லிக்கட்டில் அவர் சாதித்ததாகச் சொல்வது
தவறு. சாதித்தவர்கள் தன்னலமற்ற தமிழக இளைஞர்கள். அந்த
பெருமையை அடைய எவருக்கும் உரிமையில்லை.
இன்னும்
சரியாகச் சொன்னால், சல்லிக்கட்டு நடத்த இப்போது கொண்டுவந்த
சட்டத்தை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே
கொண்டுவந்து, சல்லிக்கட்டு நடத்தாத அ.தி.மு.க. அரசும்,
மோடி அரசும் தமிழர்க்கு துரோகம்
செய்தவர்கள். அப்படியிருக்க அவர்கள் எப்படி பாராட்டுக்குரியவர்கள்
ஆவர்?
ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது
எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே!
பன்னீர்
செல்வம் எந்தவித ஆதரவு கடிதமும்
தந்து உரிமை கோரவில்லை.
அப்படியிருக்க
இருவர் கோரியுள்ளதாய்க் கூறுவதே தப்பான கருத்து.
ஆளுநர் உடனடியாக எடப்பாடிப் பன்னீர் செல்வத்தை ஆட்சி
அமைக்க கேட்டுக் கொள்ளாதது, பெரும்பான்மையுள்ள ஓர் ஆட்சியை கவிழ்க்க
முயலும் சதிச்செயலாகும்.
எனவே, ஆளுநர் செயலை பன்னீர்செல்வம்
அணி கண்டிக்காமல், ஆளுநருக்கு பாராட்டு தெரிவிப்பது அவர்கள் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி அணியில் சேர்த்துவிட்டதையே
காட்டுகிறது.
மதவெறி
அமைப்புகளுக்கு, தந்தை பெரியார் மண்ணில்
கைகொடுத்து உதவும் பன்னீர் செல்வத்திடம்
தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க
வேண்டியது கட்டாயம். வெளிநடப்பில் ஏமாந்தால் மதவாத அமைப்புகள் ஆதிக்கம்
செலுத்த வழிவகுக்கும். எனவே, தமிழ மக்கள்
குறிப்பாக, இளைஞர்கள் விழிப்போடு சிந்தித்துச் செயல்பட வேண்டும். மதவாத
சக்திகளின் முயற்சியை முறியடிக்க வேண்டும்.
ஆவடி குமார் வார்த்தையில், “அ.இ.அ.தி.மு.க. (ஆர்.எஸ்.எஸ். அணி)யிடம் தமிழர்களே எச்சரிக்கையாய்
இருங்கள்!
- - மஞ்சை வசந்தன்
No comments:
Post a Comment