வயதான காலத்தில் பொழுதுபோக்காக கால்பந்து விளையாடுவது, 60 வயது மேற்பட்டவர்களிடையே இதய - ரத்தநாள நோய்கள், சர்க்கரை நோய் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை கணிசமாக குறைப்பதாக அண்மையில் டென்மார்க் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
63-75 வயது முதியவர்களிடம் ஓராண்டுக்கும் மேலாக ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளனர்
கோபன்ஹெகன் பல்கலைக்கழகத்தின் உணவூட்டம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள். ஓராண்டு வாரம் இருமுறையாவது சேர்ந்து விளையாடுகிறார்கள்.
பயிற்சி முடித்த 4 மாதங்களிலேயே, அவர்களின் இதய ரத்தநாள ஆரோக்கியம் 15% அதிகரித்ததாம். செயல்திறனம் 30% அதிகரித்துள்ளது.
ஓராண்டுக்க பிறகு ரத்தத்தில் சர்க்கரையின் அளவுக் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளதுடன், உடலுக்கு தீங்க விளைவிக்கம் கழிவுகளும் குறைந்தது உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், உடல் தசைகள் வலவுடன் இருக்க, உடல் எடையும் ஓரளவுக்கு குறைந்துள்ளது. உடல் வலுவாதல், நோய் தடுப்பு இவற்றுடன் ஒன்று சேர்ந்து விளையாடுவதால் நட்புறவும் மனநலமும் மேம்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
No comments:
Post a Comment