அரசியல்

Tuesday, July 26, 2016

யோகாசனம் - சில முக்கிய குறிப்புகள்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!
யோகாசனம் - சில முக்கிய குறிப்புகள்.............................
1. உணவு அருந்திய மூன்று மணி நேரத்திற்குப் பிறகுதான் ஆசனங்கள் பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், சில பள்ளிகளில் உணவு இடைவேளை முடிந்தவுடன் யோகா வகுப்புகள் நடைபெறுகின்றன. இது தவறு. வணிகநோக்கில் மாணவர்கள் உடல் நலத்தைப் பாழாக்கக்கூடாது.
2. குறிப்பிட்ட சில ஆசங்களைப் பெண்கள் சில நேரங்களில் செய்யக்கூடாது. அதை நன்றாக அறிந்து பின்பற்ற வேண்டும்.
3. ஒரு ஆசனத்திற்குரிய மாற்று ஆசனம் செய்யவேண்டும் இல்லையேல் பாதிப்பு வரும். இதையும் அறிந்து செயல்படவேண்டும்.
4. பயிற்றுநர் 5 ஆண்டாவது அனுபவம் உடையவராகவும் உடற் கூறு பற்றி அறிந்தவராகவும் இருக்க வேண்டும். ஒவ்வொருவர் உடலுக்கு ஏற்ற யோகா செய்யப்பட வேண்டும். ஏசி அறையில் யோகாசெய்வது தவறு.
5. கூட்டமாக யோகா கூடாது
பெரிய அரங்கம் அல்லது பெரிய திடலில் நூற்றுக்கணக்கானவர்களை அமரவைத்து அனைவருக்கும் ஒரே மாதிரியான யோகா பயிற்சி அளிப்பது தவறு. காரணம், ஒவ்வொருவர் உடல் நிலையைக் கேட்டறிந்து, அதற்கேற்ப பயிற்றுநரின் நேரடி கண்கானிப்பில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி பார்த்தால் மோடி நடத்தும் யோகா தவறானது மக்கள் நலத்திற்கு எதிரானது.
- மஞ்சை வசந்தன்

No comments:

Post a Comment