அரசியல்

Showing posts with label பார்ப்பனீயம். Show all posts
Showing posts with label பார்ப்பனீயம். Show all posts

Wednesday, February 24, 2016

பார்ப்பானைப் பார்த்தாவது பாடம் கற்போம் - 3


- மஞ்சை வசந்தன்

தங்கள் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ள ஆரிய பார்ப்பனர்கள் எந்த அயோக்கியச் செயலையும் செய்வர் என்பதற்கு துக்ளக் ‘சோ’வே சான்று.

தி.மு.க. ஆட்சிக்கு வரவேக் கூடாது என்பதற்கும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்கான காரணங்களைப் பட்டியல் இடமுடியுமா? என்று சோவிடம் கேட்ட கேள்விக்கு,

“தி.மு.க. ஆட்சியில் கண்ட அனுபவம் போதும் என்பது மக்களின் நினைப்பு. தி-.மு.க. வரக்கூடாது என்பதற்கு அதுதான் காரணம். அதற்கு அ.தி.மு.க.வே மேல் என்பதற்கும் அதேதான் காரணம்’’ என்று துக்ளக் சோ பதில் அளித்துள்ளார்.

இதைவிட அயோக்கியத்தனம் உண்டா?

மக்கள் என்றால் அக்ராஹரத்து ஆட்கள் என்று பொருளா?

தி.மு.க.வின் ஆட்சியின் கேடுகளை விட அ.தி.மு.க. ஆட்சியில் பலமடங்கு அதிகம் என்பதே மக்களின் கருத்து. ஊழல் புள்ளி விவரங்களும் அதையேச் சொல்கின்றன. அந்த உண்மையை அப்படியே மறைத்து, மாற்றி கொஞ்சங்கூட நியாயம், நேர்மை, நாணயம் இன்றி பதில் அளித்துள்ளார்.

 அதே துக்ளக் இதழில் மற்றொருவர்,

”சதவிகிதப்படி பதில் சொல்லுங்கள். அ.தி.மு.க அரசின் நிறை,குறை எவ்வளவு?” என்று கேள்விக் கேட்டதற்கு,

”கேள்விகளை சதவிகிதப்படி பார்த்தால் உங்கள் கேள்வி மிகவும் பின்னால் வருகிறது. அதனால் சதவிகிதப்படி அதற்குரிய பதிலைத் தர இயலவில்லை. என்று பதிலளித்துள்ளார். இதை விட ஓர் அயோக்கியத்தனமான பதிலை உலகத்திலேயே பார்க்க முடியுமா?

துக்ளக்கில் சோ செய்யும் வேலையை, தினமணியில் அவர் சீடர் வைத்தியநாதன் செய்கிறார்.

ஆரிய பார்ப்பானுக்க உள்ள உணர்வு தமிழனுக்கு வரவேண்டும்!

ஆதாரம் : துக்ளக் 02-03-2016

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Tuesday, February 2, 2016

ஆதிசங்கரரைக் கொன்றதும் ஆரிய பார்ப்பனர்களே !

அப்பரை, நந்தனாரை வள்ளலாரை, காந்தியாரைக் கொன்றது மட்டுமல்ல ஆதிசங்கர்ரைக் கொன்றதும் ஆரிய பார்ப்பனர்களே!
- பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரை

 ஆதி சங்கராச்சாரி இறுதியாக எழுதியது “மனோசாப்பஞ்சகம்” என்பது. அது அய்ந்து சுலோகங்கள் அடங்கியது.

 அதில் ஒரு சுலோகம் கடவுள் இல்லை என்பது. கடவுளை எதிர்ப்பது.
இரண்டாவது சுலோகம் மதச்சின்னங்கள் அணிவதைத் தவறு என்பது.
மூன்றாவது உருவ வணக்கத்தை தவறு என்பது
நான்காவது சாதிகளை எதிர்ப்பது

 ஆக, பெரியார் கொள்கை, காரல்மார்க்ஸ் கொள்கைகளை ஆதிசங்கரரே சொல்லிவிட்டார். விட்டு வைப்பார்களா ஆரிய பார்ப்பனர்கள்.
ஆதிசங்கராச்சாரியை அவரது 32ஆவது வயதில், உயிரோடு, உட்கார்ந்த நிலையில் புதைத்து சமாதி கட்டினர். அவரது சமாதி காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உள்ளது.

 (சென்னையில் பகுத்தறிவாளர் கழகப்பொதுக்கூட்டத்தில் 05.06.1983 இல் பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார் ஆற்றிய உரையில் இவ்வுண்மையை வெளியிட்டார்).

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Friday, January 22, 2016

இந்துத்வாவாதிகளே இதற்கென்ன பதில்?.


¨>> கோயில் சிலையில் கடவுள் இல்லை, அது பேசாது, கேட்காது, சிரிக்காது என்று கோல்வால்கர் கூறிய பின் அவரின் தொ(கு)ண்டர்கள் இராமருக்குக் கோயில் கட்டத் துடிப்பது அவர் கொள்கைக்கு எதிர் அல்லவா?
¨>> அதுவும் பாபர் மசூதியிருந்த இடத்தில் கட்டத் துடிப்பது அடாவடிச் செயல் அல்லவா?
¨¨>> கோயில் சிலையில் கடவுள் இல்லையென்னும்போது, பூசை ஏன்? அபிஷேகம் ஏன்? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதைத் தடுப்பது ஏன்?
¨¨>> கோயில் சிலையில் கடவுள் இல்லையென்றால், கும்பாபிஷேகம் ஏன்? யாகம் ஏன்?
¨¨>> கோயில் சிலையில் கடவுள் இல்லையென்றால், கற்சிலைக்கு சக்தி கொடுக்க ஆரிய பார்ப்பானர் செய்யும் சடங்கு பித்தலாட்டம் தானே?

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan