அரசியல்

Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Friday, September 29, 2017

பிரண்டை

Image result for பிரண்டை
கொடி இனத்தைச் சேர்ந்தது ‘பிரண்டை’. தோட்டங்களின் புறத்தில் வேலிகள் மீதும், மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் அருகில் உள்ள மரம், செடி, கொடிகள் மீதும் பரவி வளர்கின்ற தாவரம் இது. காடு, மேடுகளிலும் பிரண்டை நம் கண்ணில் படும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை சென்டி மீட்டர் கனத்துடன், நீளமாக, தனித்தனிக் கிளைகளாகப் படரும் கொடிதான் பிரண்டை. இது நான்கு பட்டைகள் கொண்டுள்ளது. அவற்றில் நடுவில் ஆங்காங்கே கணுக்கள் உண்டாகும். அவற்றில் ஓரிரு இலைகள் காணப்படும். இவ்விலைகள் ஓர் அங்குலம் முதல் ஒன்றரை அங்குல அகலத்தில் வட்ட வடிவுடன் இருக்கும். இலைகளின் காம்பிலிருந்து இன்னொரு காம்பு தோன்றும். அது மலர்ந்து, காய்க்கும். பிரண்டையின் தண்டுகளும் இலைகளும் பச்சை நிறத்தில்தான் இருக்கும்.

பிரண்டை தாவர இயலில் Cissus Quadrangularis என்ற பிரிவைச் சார்ந்த தாவரமாகும். இதில் பல வகைகள் உண்டு. சதுரப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, நாப்பிரண்டை, புளிப்பிரண்டை, களிப் பிரண்டை, தீப்பிரண்டை மற்றும் ஓலைப் பிரண்டை என்பன அவ்வகைகளாகும். எல்லாப் பிரண்டைகளும் சமமான அளவில் மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளன.
பிரண்டை நாவில் அல்லது உடலில் பட்டால், பட்ட இடத்தில் அரிப்பு ஏற்படும். இது கரகரப்புக் குணமுடையது. உறுதியானது. உடலுக்கு உறுதி அளிக்க வல்லது. பொதுவாக அப்பளத்திற்குக் அளிக்க பிரண்டை பயன்படுத்தப்படுகிறது.

பிரண்டையில் கால்சியம், கரோட்டின், அமிரோன், அமைரின், சிட்ரோசிராஸ் என்ற மருத்துவ குணமுடைய வேதிப் பொருட்கள் (Chemicals) உள்ளன. மேலும், இதில் வைட்டமின் ‘‘C’’யும் உள்ளது.

பிரண்டையின் இளந் தண்டுகளைப் பருப்பு சேர்த்து கூட்டுச் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் உரம் பெறும்.

பிரண்டையின் பயன்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த மகத்துவமுள்ள பிரண்டை மந்தநிலை நீங்கி நன்றாகப் பசியுணர்வைத் தூண்டுகிறது. இரத்த மூலம், உள்மூலம், வெளிமூலம் போன்ற அனைத்து மூலநோயையும் குணப்படுத்துகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கி இயல்பான வாழ்வு பெற; வயிற்றுப் புண்கள், ஜீரணக் கோளாறுகள், புளிச்ச ஏப்பம் குணமாக; சுளுக்கினால் வீக்கம், வலி ஏற்பட்டால் குணமாக; எலும்பு முறிவு குணமாகி, எலும்புகள் ஒன்று சேர; உடல் வலிமை பெற என அத்தனை நோய்களுக்கும் அறு மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் பெண்களுக்கு மாதவிலக்கு கால வயிற்றுவலி குணமாகவும், முறையில்லா மாதவிலக்கு சீரடைவதற்கும் சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது.

விலையுயர்ந்த ஆங்கில மருத்துவ மருந்துகளைத் தேடி அலைந்து வாங்கிச் சாப்பிட்டும் குணமாகாத நோய்கள், நம் நாட்டு மூலிகை மருந்தான எங்கும் குறைந்த செலவில் கிடைக்கும் பிரண்டையைப் பயன்படுத்துவதால் விரைவாகவும், பக்க விளைவுகள் எதுவும் இல்லாமலும் குணமாகி விடுகின்றன. எனவே, இயற்கையின் அறுங்கொடையான பிரண்டையை பயன்படுத்துவோம்! பிணியின்றி வாழ்வோம்!




Thursday, July 14, 2016

குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்! அப்போ கட்டாயம் இதைப் படியுங்கள்!


¨ குளிர்பானத்தில் வைட்டமின், தாது உப்புக்கள், மாவுச் சத்து எதுவும் இல்லை.
¨ வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிட்டி) உருவாகி செரிமானக் கோளாறு வரும்.
¨ வயிற்றில் வாயுத் தொல்லை உருவாகும்.
¨ உடல் பருமன் ஏற்படும்.
¨ செயற்கைக் கலர் (சிந்தடிக்) சேர்க்கப்படுவதால் உடல்நலம் கெடும்.
¨ சுவைக்குச் சேர்க்கப்படும் இரசாயனங்களால் கேடு.
¨ நார்ச்சத்து இல்லை.
¨ கொடுக்கும் காசுக்கு பயன் இல்லை கேடு அதிகம்.
குளிர்பானத்திற்குக் கொடுக்கும் காசுக்கு திராட்சை பழத்தை வாங்கி நன்றாக அலசி மென்று சாப்பிட்டால் எவ்வளவு பயன் தெரியுமா?
<<<<<< திராட்சையின் நன்மைகள் >>>>>>
¨ வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், தாது உப்புக்கள் கிடைக்கிறது.
¨ நார்ச்சத்து முழுமையாய் கிடைக்கும்.
¨ இதயம் வலுப்பெறும்
¨ மென்று சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள், தடைகள் வலுப்பெறும்.
¨ உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் கிடைக்கும்.
¨ உமிழ் நீர் அதிகம் கலப்பதால் உடல் நலம் பெருகும்.
¨ நோய் எதிர்ப்பாற்றல் வளரும்.
¨ எலும்புகள் வலுப்பெறும்.
‪#‎குறிப்பு‬: பழச்சாறு பருகுவதைவிட பழமாக மென்று சாப்பிடுவதே சிறந்தது. பழச்சாறு சாப்பிட்டால் அய்ஸ் சேர்க்க வேண்டாம். ஜீனி சேர்க்க வேண்டாம்.
அய்ஸ் அசுத்த நீரில் செய்கிறார்கள். அதிலுள்ள கிருமி அய்ஸ் மூலம் நமக்கு வந்து பல நோய்களை உண்டாக்கும்.

Tuesday, February 2, 2016

உடலுறவு முடிந்ததும் பெண் உட்காரக் கூடாது


 குழந்தை வேண்டும் என்று விரும்பும் பெண்கள் உடலுறவு முடிந்ததும் எழுந்து உட்காரவோ, நடக்கவோ கூடாது. உடலுறவின்போது ஆணின் விந்து பெண்ணுறுப்பில் செலுத்தப்பட்டதும், விந்துவிலுள்ள அணுக்கள் கருப்பையில் உள்ள சினைமுட்டையுடன் சேர போட்டியிட்டு ஓடும். ஓடி ஏதாவது ஒன்று சேர்ந்தால்தான் ஆண்குழந்தை அல்லது பெண்குழந்தை உருவாகும்.
அவை விரைந்து ஓட வேண்டும் என்றால், பெண் உடலுறவு முடிந்த பின் மல்லாந்து படுத்திருக்கும் அதே நிலையில் 20 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்.

 உடனே எழுந்து உட்கார்ந்தால், விந்தணுவின் விரைவான ஓட்டம் தடைபட்டு, கருத் தரிப்பது நிகழாமல் போகும். இதைப் பெண்கள் கருத்தில் கொண்டு செயல்பட வெண்டும்.

 மாதவிலக்கு வந்த 12-ஆம் நாளிலிருந்து 15 ஆம் நாள் வரை நான்கு நாள்கள் தினம் உடலுறவு கொண்டால் கட்டாயம் கருத்தரிக்கும். இதை அறியாது இந்த நாள்களில் உடலுறவு கொள்ளாது போனால் கரு உருவாகாது. மற்ற நாள்களில் கொள்ளும் உடலுறவு உடல் சுகத்துக்கு மட்டுமே உதவும்.

#‎செய்யக்_கூடாதவை‬ :

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Friday, January 22, 2016

எழுச்சி குறைபாடுள்ள இளைஞர்களுக்கு...

எழுச்சி குறைபாடுள்ள இளைஞர்களுக்கு...
(Erectile Dysfunction)

ஏமாற்றம் அடையும் இளம்பெண்கள்! 

விரக்தியில் இல்வாழ்வு!  
மறைக்கப்படும் உண்மைகள்! 

கவலை வேண்டாம்! எளிய தீர்வு இதோ!

- மஞ்சை வசந்தன்

இன்றைய இளைஞர்கள் பரபரப்பு, மன அழுத்தம், மனச்சோர்வு, கண்ட நேரத்தில் கண்ட கண்ட உணவுகள், குடித்தல், புகைப்பிடித்தல் போன்றவற்றை கொண்டிருக்கின்றனர்.

பிராய்லர் கோழி, பாக்கட் உணவுகள், செயற்கை பானங்கள் அதிகம் சாப்பிடுகின்றனர். சரியாக உறங்குவதில்லை. இவைதான் இவர்கள் ஆண்மை இழக்கக் காரணங்கள்.

மாறாக, சுய இன்பத்தில் ஈடுபட்டு விந்து வெளியேற்றுவதால் ஆண்மை இழப்பதாகச் சொல்வது சரியல்ல. அதிகம் விந்து வெளியேற்றப்படுவதால் ஆண்மைக் குறைவு வராது. அப்படி வருவதாக எண்ணும் எண்ணத்தால்தான் அப்பாதிப்பு வருகிறது.

இதற்கு இளைஞர்கள் அஞ்ச வேண்டாம். இப்பாதிப்பிலிருந்து மீண்டு, இல்லற வாழ்வில் நிறைவாக ஈடுபடலாம். அதற்காக விளம்பர வைத்தியர்களிடம் சென்று ஐயாயிரம், பத்ததாயிரம் செலவிடத் தேவையில்லை. கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுங்கள்.

தீர்வு:

குடிப்பழக்கம், புகைப்பழக்கம், பாக்கட் உணவுகள், பிராய்லர் கோழி, செயற்கை பானங்கள் இவற்றை அறவே நீக்குங்கள்.

பாதாம் பருப்பு, கீரை, மீன், பப்பாளி, வெங்காயம், முருங்கைக்காய், முருங்கைக் கீரை இவற்றைத் தவறாது அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு 7 மணி நேரம் உறங்குங்கள். வாழ்க்கையை துணிவுடன், பதட்டம், மனஇறுக்கம், கவலையின்றி எதிர்கொள்ளுங்கள். நண்பர்களுடன் சிரித்து மகிழுங்கள். உடற்பயிற்சி  ½  மணி நேரமாவது செய்யுங்கள். நமக்கு உடலில் எக்குறையும் இல்லை; நாம் ஆண்மையுள்ளவர்,

நம்மால் ஆற்றலோடு உடலுறவு கொள்ள முடியும் என்று முழுமையாய் நம்புங்கள்.

எக்குறையும் இல்லாத பெரும்பாலான ஆண்கள் பயத்தாலும், நம்பிக்கையின்மையாலும், தவறான கருத்துக்களை நம்புவதாலுமே தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். உண்மையில் அவர்கள் ஆண்மை உடையவர்கள்தான். 

ஆயிரத்தில் ஒருவர்தான் இயல்பாய் இக்குறையுடன் இருப்பார். மற்றதெல்லாம் பயத்தால் வருவதுதான். நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் செயல்பட்டால் இக்குறை வராது.

இதற்கு பக்கவிளைவு இல்லா ஹோமியோ மருந்துகள் உள்ளன. 

கீழ்க்கண்ட அறிகுறிகளுக்கு ஏற்ப தங்களுக்கு உரிய மருந்தைத் தேர்வு செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இக்குறை அறவே நீங்கும். ஹோமியோ மருந்துகள் மிக மலிவானவை. ஐம்பது ரூபாய் செலவிட்டாலே போதும். இம்மருந்துகள் சிறு சர்க்கரை உருண்டையாய் இருக்கும். கேடு வராது.

1. செலினியம் (Selenium): 

இரவில் அடிக்கடி விந்து வெளிப்படுதல், விரைவில் விந்து வெளிவருதல், விரைப்பு மெதுவாக வருதல், விரைப்பு விரைவில் தளர்தல், விந்து வெளியேறியதும் சோர்ந்து போதல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளவும்.

2. அக்னஸ் காஸ்டஸ் ((Agnus Castus): 

அறவே விறைப்பின்மை இல்லாதவர்கள், மனைவி தீண்டும்போதும் மனைவியை அணைக்கும்போதுகூட விறைப்பு ஏற்படாதவர்கள், ஆண் உறுப்பு குளிர்ந்த நிலையில் உள்ளவர்கள் (அதாவது உடலுறவு வேட்கையின்போது ஆண்குறி சூடேறும். இவர்களுக்கு அப்போதும் ஆண்குறி சூடேறாது குளிர்ந்த நிலையில் இருக்கும்.) இப்படிப்பட்டவர்கள் இம்மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். உடலுறவு ஆசை அறவே இல்லாதவர்கள், உடலுறவு கொள்ள சக்தியற்றவர்களுக்கு இம்மருந்து மிகுந்த பயன்தரும்.

3. கலடியம் ((Caladium): 

புகையிலைக்கு அடிமையானவர்கள், விறைப்பு அறவே இல்லாதவர்கள், மன அழுத்தத்தால் உடலுறவில் ஆர்வம் இல்லாதவர்கள் இம்மருந்தை எடுத்துக் கொள்ளலாம். நல்ல பயன் தரும்.

4. லைக்கோபோடியம் (Lycopodium):

விறைப்பு ஏற்படாத இளைஞர்கள், முதியவர்கள் என்று இரு பிரிவினருக்கும் இது பயன் தரும். சுய இன்பத்தில் அடிக்கடி ஈடுபட்டவர்கள். உடலுறவு நாட்டம் அதிகம் உள்ளவர்கள் இம்மருந்தை எடுத்துக் கொண்டால் குறை அறவே நீங்கும்.

வயதானவர்களுக்கு ஏற்படும் றிக்ஷீஷீstணீtமீ வீக்கத்திற்கும் இது மருந்தாகும்.

5. டிரிபுலஸ் (Tribles): 

சிறுநீர் கழிக்கும்போது வலியோ எரிச்சலோ இருந்து, அத்தோடு விறைப்பின்மையும் இருந்தால் இம்மருந்து பயன் தரும்.

6. நியூபர் லூட்டியம் (Nuphar Luteum): 

மலம் கழிக்கும்போது விந்து ஆண்குறியில் வெளிப்படுதல். அறவே உடலுறவு ஆசையில்லாதிருத்தல். விறைப்பு அறவே இல்லாத நிலை உள்ளவர்களுக்கு இம்மருந்து ஏற்றது.

7. யோகிம்பினம் (Yohimbinum): 

நரம்பு மண்டலம் பலவீனம் அடைந்து, உடலுறவில் நாட்டம் (விருப்பம்) இல்லாது விறைப்புத் தன்மை அறவே இல்லாது, உடல் பலவீனம், கவலை, மன உளைச்சல் உள்ளவர்களுக்கு இது உகந்த மருந்து. இது உடலுறவு ஆசையை உருவாக்கி உறுப்பு விறைப்படைய உதவும்.

8. அவேனா சாட்டிவா (Avena Sativa): 

இது திரவ வடிவிலான மருந்து. இது உடலுக்கு நல்ல ஆற்றலைத் தந்து, உடலுறவு விருப்பத்தை வளர்க்கும். விறைப்பு ஏற்படுத்தும். அதிகம் சுயஇன்பம் கண்டு விந்து வெளியேற்றியவர்களுக்கு இது பயன் அளிக்கும்.

குறிப்பு: விறைப்பின்மை உள்ளவர்கள் உரிய சிகிச்சை செய்து குணம் பெறுங்கள். குறையை நீக்காமல் திருமணம் செய்து ஒரு பெண்ணின் வாழ்வைப் பாழாக்காதீர். வேறு காரணம் சொல்லி திருமணத்தைத் தவிர்த்து விடுங்கள்.

- மஞ்சை வசந்தன்

Thursday, January 7, 2016

“ஜிம்”முக்கு போகிறவரா நீங்கள்? கட்டாயம் இவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்!.

1. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யாதீர்கள். உங்கள் பயிற்சியின்போது அதிக அளவு கலோரி எரிக்கப்படுவதால், அதை ஈடுசெய்ய உடலில் சக்தி வேண்டும். வெறும் வயிற்றில் பயிற்சி செய்தால், சக்தியின்மையால் தலைச்சுற்றல் வரும்.
எனவே, பயிற்சி தொடங்கும் முன் சிறிதளவு பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு, பழங்கள் அளவோடு சாப்பிட்ட பின் செய்தால், உடல் சோர்வடையாது, உடல் வலுப்பெறும்.
2. தளர்வான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.
3. பயிற்சியைத் தொடங்கம் முன் உடல் உறுப்புகளை சிறிதுநேரம் அசையுங்கள் (வாம் அப் செய்யுங்கள்)-. இதனால் பயிற்சி எளிதாகும்.
4. உடல் எடையை உடனே குறைக்கக் கூடாது. அதிக எடை உள்ளவர்கள் மாதம் 5 கிலோவுக்குமேல் குறைக்கக் கூடாது. மெல்லமெல்ல குறைப்பதுதான் சிறப்பு.
5. உடற்பயிற்சியை முறைப்படி அறிந்து செய்யுங்கள். உடற்பயிற்சிக்கு உடல் தகுதியாய் உள்ளதா என்று அறிந்து செய்யுங்கள்.
6. பயிற்சியின்போது தண்ணீர் அறவே குடிக்காமல் இருக்கக் கூடாது. நாக்க உலரும்போது ஒரு வாய் தண்ணீர் பருக வேண்டும். பயிற்சி முடிந்து 15 நிமிடம் கழித்து தேவையான அளவு தண்ணீர் குடிக்கலாம்.
முடிந்த அளவு திறந்தவெளியில் காற்றோட்டமாக உடற்பயிற்சி செய்தல் நன்மை தரும். வயல், தோட்டம் இருப்பின் அங்கு உழைப்பது மிகச் சிறந்தது. ஓடுதல், நீந்துதல், நடத்தல் போன்றவை மிகச் சிறந்தவை.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

ஆண்களின் உடலுறவுத் திறன் அதிகரிக்க எளிய வழி!

பத்து சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, சிறிது எண்ணைவிட்டு வதக்கிச் சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும். உடல் பலப்படும், நரம்புகள் வலுப்பெறும், உடற்ச்சூடு தணியும், இதயம் வலுப்பெறும், வயிற்றுப் புண் ஆறும். வாரம் இருமுறை இப்படிச் சாப்பிட்டால் நல்லது. சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வரும்.
சின்ன வெங்காயத்தை தினம் சாம்பார் அல்லது, சட்னியில் சேர்த்து சாப்பிட்டால் கல்லீரல், இதயம் நலமாய் இருக்கும்.
இரவு மீதமுள்ள சோற்றில் நீர்ஊற்றி அதில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, விடியற்காலை சோறு, தண்ணீர், வெங்காயம் மூன்றையும் அப்படியே சாப்பிட்டால் வயிற்றுப் புண் ஆறும். உடலுறவுத் திறனும் கூடும்.
தினம் பப்பாளி சாப்பிடுவது, முருங்கைக் காய், முருங்கைக் கீரை வாரம் மூன்றமுறை சாப்பிடுவது, அமுக்குரா கிழங்கு பொடியை தேனில் அல்லது பாலில் கலந்து சாப்பிடுவது ஆணுக்குச் சக்தியளிக்கும், மலச்சிக்கல் வராது. கண் நலமாய் இருக்கும்.
பாக்கட் உணவு, துரித உணவு, பிராய்லர் கோழி இவற்றை அறவே தவிர்க்கவும். மீன், ஆட்டுக்கறி அளவோடு சாப்பிடுவது நல்லது.

Wednesday, October 7, 2015

இளைஞர்களே இதயத்தைக் காக்க எளிய வழிகள்!

இளைஞர்களே இதயத்தைக் காக்க எளிய வழிகள்!
 கட்டாயம் பின்பற்றுங்கள்!
 

 (ஆண் பெண் இருவருக்கும்).................



 இது உங்களுக்காக மட்டுமல்ல. உங்களை நம்பியுள்ள உங்கள்
குடும்பத்தாருக்காக, உங்கள் மனைவிக்காக அல்லது கணவனுக்காக; உங்கள் பிள்ளைகளுக்காக.

இக்காலத்தில் 30 வயதிலே மாரடைப்பால் இறப்பது
 

 நிகழும்போது இதில் எச்சரிக்கை கட்டாயம் வேண்டும்.

 காலையில் ஒரு துண்டு இஞ்சி. தோல் நீக்கி, தண்ணீருடன் வாயில் போட்டு மென்று விழுங்குங்கள். இது உங்கள் இடுப்பில் விழும் மடிப்புச் சதையைப் போக்கும். பித்தம், மயக்கம் வராமல் காக்கும். உடலினுள்ள கொலஸ்ட்டரால் அளவைக் கட்டுக்குள் வைக்கும்.

 பிற்பகல் உணவுக்குப்பின் இரண்டு பச்சைப் பூண்டுப் பல்லை தண்ணீருடன் சேர்த்து மென்று விழுங்குங்கள்.

 தாமரைப்பூ (ரூபாய் 5க்குக் கிடைக்கும்) அதன் இதழ்களை அலசி தினம் ஒன்று சாப்பிடுங்கள்.

 தாமரைப்பூ கிடைக்காதவர்கள் செம்பருத்திப் பூவைச் சாப்பிடுங்கள்.
சிறிய வெங்காயத்தை உணவில் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.
கொள்ளு இரசம் வாரம் இருமுறைச் சாப்பிடுங்கள்.
வாழைத் தண்டு பொரியல் வாரம் இருமுறை.

வாழைப்பூவை வாரம் இருமுறைச் சாப்பிடுங்கள்.

 ஏழுமணிநேரம் கட்டாயம் இரவில் உறங்க வேண்டும். காலை 6 மணி வரைத் தூங்க வேண்டும். ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்தல்.

 இரவு நேரத்தில் பணியாற்றுவோர் பகலில் 7 மணி நேரம் உறங்க வேண்டும்.
நல்ல கொழுப்பு தரும் பாதாம், வேர்க்கடலை, முந்திரி பருப்பு சாப்பிடலாம்.
பப்பாளி, மாதுளை, வாழைப்பழம், கீரைகள் நாள்தோறும் உண்ண வேண்டும். திராட்சைப் பழத்தை நன்குக் கழுவிச் சாப்பிடவும்.

 தினம் ஒரு ஸ்பூன் சீரகத்தை மென்று சாப்பிடுங்கள்.

வெந்தயம் (ஊறவைத்து) தினம் ஒரு ஸ்பூன் அளவு மென்று சாப்பிடுங்கள்.
பாகற்காயை வாரம் மூன்றுமுறை சாப்பிடுங்கள்.
 
‪#‎தவிர்க்க‬ வேண்டியவை:

1. பாக்கட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகள், துரித உணவுகள்.
2. குளிர்பானங்கள்.
3. மது, புகைப்பிடித்தல் _ -விளையாட்டாய் கூடத் தொடக்கூடாது.
4. உணர்ச்சிவசப்படுதல், பரப்பரப்பாய் செய்தல், பதட்டப்படுதல், எதுவும் உடனே நடந்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது.
5. நினைத்த நேரம் நினைத்ததைச் சாப்பிடுதல்.
6. தூக்கத்தைத் தொலைத்தல்
7. கொழுப்பு நிறைந்த உணவுகள் (அளவோடு சாப்பிடலாம்).
8. வறுத்த உணவுகள். (சுவைக்காக சிறிது சாப்பிடலாம்.)

 இவற்றைப் பின்பற்றினால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். முதுமையிலும் வலுவோடும் பொலிவோடும் வாழலாம். இதில் சிரமமும் இல்லை; செலவும் அதிகம் இல்லை. நல்ல உணவு, நல்ல பழக்கம் அவ்வளவே!

 குறிப்பு: 

1. இதன்படிச் செய்தால் மருத்துவச் செலவு என்பதே உங்களுக்கு வர வாய்ப்பில்லை. இது பல ஆயிரம் ரூபாய் செலவைத் தவிர்க்கும்!

2. அப்படியெல்லாம் வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம். நல்லா அனுபவிச்சுட்டு சாவோம்! என்கின்றவர்கள், திருமணம் செய்து கொள்ளாதீர்கள்! பெற்றோருக்குச் சுமையாய் இருக்காதீர்கள்!

 ____
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan

Thursday, October 1, 2015

குழந்தை பெற உடலுறவு கொள்ள வேண்டிய நாள்கள்


 

 மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 நாள்களில் உடலுறவு கொண்டால் மட்டுமே குழந்தை பிறக்கும். இவையே கருத்தரிப்பிற்கு உரிய நாள்கள்.

 திருமணம் முடிந்து நான்காண்டுகளாவது குழந்தை பெறாது சுமையின்றி மகிழ்வாக வாழ்ந்து பிறகு பெற்றுக் கொள்வது வாழ்வை மகிழ்வாக்குவதற்கான வழி. கணவன் மனைவி இடையே ஈர்ப்பு குறையாமலிருக்க இது உதவும்.

 ஆனால், சில ஆண்கள் தன் ஆண்மையை உலகுக்குக் காட்ட உடனே பெற எண்ணி ஓராண்டிலே குழந்தை பெற்றுக் கொள்வர்.

 சிலருக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறப்பதில்லை.

குழந்தை பிறக்காததற்கு பல காரணங்கள் உண்டு. ஆண்களின் விந்தில், உயிரணு இல்லாமல் இருத்தல் அல்லது உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாய் இருத்தல். பெண்ணின் கருக்குழாயில் அடைப்பு அல்லது கருப்பை பாதிப்பு.

 பொதுவாக, குழந்தை இல்லை யென்றதும் பெண்தான் காரணம் என்று ஆண் மறுமணம் செய்து கொள்கிறான். இது தப்பு மட்டுமல்ல குற்றமும் ஆகும்.

 குழந்தை இன்மைக்கு பெண்ணைக் காட்டிலும் ஆணே பெரும்பாலும் காரணம். எனவே, இருவரும் சோதனை செய்து யாரிடம் குறை என்று கண்டு அதைச் சரி செய்ய வேண்டும். பெரும்பாலும் சரி செய்துவிட முடியும். அந்த அளவிற்கு மருத்துவம் வளர்ந்துள்ளது.

 குழந்தை பெற உரிய நாட்களில் உடலுறவு கொள்ளாமையும் குழந்தையின்மைக்கு ஒரு காரணம். எனவே, அந்த நாள்களை அறிந்து உடலுறவு கொள்ள வேண்டும்.

 மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 ஆகிய மூன்று நாள்கள் உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்கும். அதிலும் குறிப்பாக 14, 15 ஆகிய இரு நாள்களும் மிகச் சரியான நாள்கள். காரணம் 14, 15ஆம் நாள்களில்தான் பெண்ணின் சினையணு கருவுற தயார்நிலையில் இருக்கும்.

 இந்த நாள்களுக்கு முன்னோ பின்னோ உடலுறவு கொள்வதால் குழந்தை பிறக்காது. இந்த உண்மை தெரியாததால் குழந்தை பிறப்புத் தள்ளிப் போகிறது.
குழந்தை வேண்டாம் என்பவர்கள் மாத விலக்கு வந்தபின் 11, 12, 13, 14, 15 ஆகிய நாள்களில் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

 14, 15ஆவது நாள்கள்தான் உரிய நாள்கள் என்றாலும், 11, 12, 13 நாள்களில் உடலுறவு கொள்ளும்போது வெளியேறிய விந்து பெண்ணுருப்பில் ஓரிரு நாள்கள் உயிர்வாழும். அதிலுள்ள உயிரணு மூலம் குழந்தை பெற வாய்ப்பு வரும். அதனால், 11, 12, 13 ஆகிய நாள்களும் விலக்கப்பட வேண்டும்.

 பருவமடைந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இதை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

 இந்த விவரம் அறிந்திருந்தால் தேவையில்லாமல் பெண் கருவுறவும், கருக்கலைப்புச் செய்து உடல் பாதிக்கவோ வேண்டிய நிலை வராது!