அரசியல்

Showing posts with label செய்யக்_கூடாதவை‬. Show all posts
Showing posts with label செய்யக்_கூடாதவை‬. Show all posts

Tuesday, February 2, 2016

உடலுறவு முடிந்ததும் பெண் உட்காரக் கூடாது


 குழந்தை வேண்டும் என்று விரும்பும் பெண்கள் உடலுறவு முடிந்ததும் எழுந்து உட்காரவோ, நடக்கவோ கூடாது. உடலுறவின்போது ஆணின் விந்து பெண்ணுறுப்பில் செலுத்தப்பட்டதும், விந்துவிலுள்ள அணுக்கள் கருப்பையில் உள்ள சினைமுட்டையுடன் சேர போட்டியிட்டு ஓடும். ஓடி ஏதாவது ஒன்று சேர்ந்தால்தான் ஆண்குழந்தை அல்லது பெண்குழந்தை உருவாகும்.
அவை விரைந்து ஓட வேண்டும் என்றால், பெண் உடலுறவு முடிந்த பின் மல்லாந்து படுத்திருக்கும் அதே நிலையில் 20 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்.

 உடனே எழுந்து உட்கார்ந்தால், விந்தணுவின் விரைவான ஓட்டம் தடைபட்டு, கருத் தரிப்பது நிகழாமல் போகும். இதைப் பெண்கள் கருத்தில் கொண்டு செயல்பட வெண்டும்.

 மாதவிலக்கு வந்த 12-ஆம் நாளிலிருந்து 15 ஆம் நாள் வரை நான்கு நாள்கள் தினம் உடலுறவு கொண்டால் கட்டாயம் கருத்தரிக்கும். இதை அறியாது இந்த நாள்களில் உடலுறவு கொள்ளாது போனால் கரு உருவாகாது. மற்ற நாள்களில் கொள்ளும் உடலுறவு உடல் சுகத்துக்கு மட்டுமே உதவும்.

#‎செய்யக்_கூடாதவை‬ :

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

பனிக்காலத்தில் காரம், உப்பு, புளி அதிகம் சாப்பிடக் கூடாது:.......



 வாயில் இனிக்கும் தேன் வயிற்றுக்குள் செல்லும்போது காரமாக மாறும்.
பனிக்காலத்தில் அதிகம் பசிக்கும். காரம், உப்பு, புளி இன்னும் பசியைத் தூண்டும். எனவே, இவற்றைக் குறைத்து, இனிப்புச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 இனிப்பு என்பது குடலுக்குள் செல்லும் போது இனிப்பாக இருக்கக்கூடிய இனிப்பு சாப்பிட வேண்டும். தேன் இனிப்பு. ஆனால், அது குடலுக்குள் சென்றதும் காரமாகும். எனவே, அது உகந்ததல்ல.

 பச்சைப்பயிறு, கோதுமை, அரிசிப் பொருள்கள், வெல்லம் சேர்த்து உண்பது சிறந்தது,

 பூசணி, குளிர்பானங்கள் கூடாது.

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

சளியுள்ளவர்கள் இவற்றைச் சாப்பிடக் கூடாது


மார்ச்சளி, மண்டைச்சளி, தும்மல், இருமல் என்று வேதனைப்படுபவர்கள், மாவுப் பண்டங்கள், புது அரிசி, இனிப்புகள், எண்ணெய்ப் பண்டங்கள், ஐஸ் கலந்த பொருள்கள், ஐஸ்கிரீம், குளிர்ந்த பானங்கள் சாப்பிடுதல், குளிர்காற்றில் செல்லல், பகலில் உறங்குதல் கூடாது
‪#‎செய்யக்_கூடாதவை‬

பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவை வைக்கக் கூடாது


உணவு விடுதிகளில் சூடான உணவுகளைப் பாலீத்தின் தாளில் வைக்கிறார்கள். சூடான சாம்பார், குருமா போன்றவற்றைப் பாலீத்தின் பைகளில் ஊற்றுகிறார்கள். இது உடலுக்குக் கேடு தரும். பிளாஸ்டிக்கிலுள்ள மெலாமைன் அளவு கூடும். இது கிட்னியில் கல் உருவாகக் காரணமாக அமையும்.

‪#‎செய்யக்_கூடாதவை‬