அரசியல்

Friday, February 2, 2018

கவிஞர் வைரமுத்துவின் மகிழ்ச்சியும் இல.கணேசனின் மகிழ்ச்சியும் திராவிட ஆரிய போராட்டத்தை திரை விலக்கிக் காட்டுகின்றன!


- மஞ்சை வசந்தன்
அண்மையில் இந்த இருவரும் தங்களின் மன வருத்தத்திலும் தங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் வெளிப்படுத்திய இந்த உணர்வுகள் தனிப்பட்ட மனிதர்களின் உணர்வுகள் அல்ல. அவை இரு இனத்தின் போராட்ட உணர்வின் வெளிப்பாடுகள்.
இல.கணேசனின் மகிழ்ச்சி:
"இந்த உடம்பில் எழுந்துள்ள எனது மார்பகங்கள், ஒரு மானுடனைத் தழுவ

வேண்டி வரும் என்கின்ற செய்தியைக் கேள்விப்பட்டால் கூட நான் உயிர் வாழ
மாட்டேன்" என்று நம் தமிழ்நாட்டில் ஒரு தெய்வீகப் பெண் (ஆண்டாள்)
பேசியுள்ளாள்.

ஆனால் அவர் தற்கொலை செய்யவில்லை. அவளது பக்தியின் வேகம் தீவிரமாக இருந்ததால் ஆண்டவனை மணம் முடித்தாள் என்றார்.
"இதில் அவளது பக்தி மாத்திரம் அல்ல; கற்பும் தெரிந்தது". வேறொருவனைத்

தழுவ நேரிடும் எனக் 'கேள்விப்பட்டால்'கூட உயிர் வாழ மாட்டேன் என்கிறாள்
அந்த நாச்சியார்.

ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித் தெழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப்படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே
எத்தனை உயர்ந்த பண்பினை விரிக்கும் பாடல் இது! இந்தப் பாடலை வைத்தே

அந்த ஆண்டாளை விமர்சனம் செய்தார்கள் என நினைக்கும்போது நெஞ்சம் பதறுகிறது.

ஒரு சமுதாயம் எத்தனையோ நூற்றாண்டு காலமாக ஒருவரை நினைவுகூர்ந்து,

பூஜிக்கத் தகுந்தவராகக் கருதுகிறது என்றால் அவரைப் பற்றி விமர்சனம்
செய்யும் முன் சிந்திக்க வேண்டாமா? விமர்சனம் செய்யும் தகுதி தான் நமக்கு
உண்டா?

நான் 1970 முதல் பொதுவாழ்க்கையில் இருக்கிறேன். பல சம்பவங்கள் நினைவுக்கு வந்தாலும் ஓரிரு உதாரணங்களை முன் வைக்கிறேன்.
சேலத்தில் நமது ஹிந்துக் கடவுள்களை கேவலப்படுத்திய சம்பவம் அன்றைய

"துக்ளக்" இதழ் மூலம் அம்பலமானது. தமிழகம் முழுவதும் கண்டனம் தெரிவிக்க
பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்தது. வந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.
அமைப்போடு தொடர்புள்ளவர்கள். பொதுமக்கள் குறைவு.

ஆனால் நேற்று (12.01.2018) மாலை மயிலை மாங்கொல்லையில் கண்டன

ஆர்ப்பாட்டம். திரளான கூட்டம். ஆர்.எஸ்.எஸ். ஏற்பாட்டில் அல்ல. பொதுமக்கள்
அதிகம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குறைவு. புரிந்துகொள்ளுங்கள்.

சம்பவம் (ஆண்டாளைப் பற்றி வைரமுத்து எழுதியது) வருத்தம் தந்தாலும்

எதிர்விளைவு (பார்ப்பனர் போராட்டத்தில் குதித்தது) மகிழ்ச்சி தருகிறது."
என்கிறார். இது இல.கணேசனின் மகிழ்ச்சி!

கவிஞர் வைரமுத்துவின் மகிழ்ச்சி
ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ரூ.5 இலட்சம் வழங்கிப் பேசிய கவிஞர் வைரமுத்து அவர்கள்,
"382 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹார்வேர்டு பல்கலைக்கழகம் பல்கலைக்கழகங்களில் தொன்மையானது.
தமிழோ உலக மொழிகளில் தொன்மையானது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள்
தொன்மையுள்ளது. அந்தப் பழந்தமிழ் இந்தப் பல்கலைக்கழகத்தில் இடம் பெறுவது
பல்கலைக்கழகத்திற்குத்தான் பெருமை!

இதுவரை அப்பல்கலைக்கழகத்தில் 7 மொழிகள் இருக்கை பெற்றவை. ஆனால், அதில்
சீனத்தைத் தவிர மற்றவை வழக்கொழிந்து செத்த மொழிகள். ஆனால், என்றும் இளமை
குன்றா தொன்மைத் தமிழ் இடம் பெறுவது உலகுக்குக் கிடைத்த பெருமை!

நான் நேசிக்கும் மக்களையெல்லாம் இங்கு ஒரு கூரையின் கீழ் சந்திக்கிறேன்.
புயல் விண்ணில் வந்தால் மழை மண்ணில் உண்டு!
எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மையுண்டு
ஒரு தீமைவந்து எனக்கு விளைந்தது
நன்மை என்ன தெரியுமா?
எங்கெங்கோ இருந்த தமிழ்ச் சிங்கங்கள் ஒரு அணியில் சேர்ந்து நிற்கின்றன" என்றார். இது வைரமுத்துவின் மகிழ்ச்சி.
ஆண்டாள் பற்றிய அவரது ஆய்வுக் கட்டுரையின் இறுதிப் பகுதியை எடுத்துத்
திரித்து, அதைக் கொண்டு மதவெறியை உண்டாக்கி, பயன்பட சில அற்பர்கள் முயன்று
அவருக்குத் தீமை தந்தார்கள்.

அது தனக்கு நேர்ந்த தீங்கு என்றாலும், அதிலும் ஒரு நன்மை என்னவென்றால்,
ஆரிய பார்ப்பனர்கள் ஆண்டாளை வைத்து அரசியல் ஆதாயம் பெறப் பார்த்தார்கள்.
ஆனால், எங்கெங்கோ இருந்த தமிழர்களோ வைரமுத்துவை வைத்து ஒன்றுசேர்ந்து
ஆரியத்திற்கு எதிரான அணியை அமைத்து விட்டார்கள்.

இது தீமையுள் கிடைத்த நன்மை! இதனால் தனக்கு மகிழ்ச்சி என்கிறார் வைரமுத்து.
ஆக, ஆண்டாள் பிரச்சினையில் ஆரிய பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து வீதிக்கு வந்தது இல.கணேசனுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
அதே ஆண்டாள் பிரச்சினையில் தமிழர்கள் வீதிக்கு வந்து
வைரமுத்துக்காகவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாத சங்கராச்சாரியைக்
கண்டித்து  தமிழுக்காகவும் போராடுவது வைரமுத்துவுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

ஆக, ஆண்டாள் பிரச்சினையும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சனையும்,
ஆண்டாளுக்காகவோ, தமிழுக்காகவோ வந்த பிரச்சனைகள் அல்ல. அது
திராவிடத்திற்கும், ஆரிய இனத்திற்குமான உட்பகையின் வெளிப்பாடுகள்.

இல.கணேசன் ஆண்டாளுக்காக பொதுமக்கள் வீதிக்குவந்து போராடுவதாய் குறிப்பிடுவது உண்மையல்ல. ஆரிய பார்ப்பனர்க் கூட்டம் வீதியில் இறங்கியது என்பதே உண்மை! மயிலாப்பூரில் யார் அதிகம் என்பது மக்களுக்குத் தெரியாதா?
அதேபோல் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த சங்கராச்சாரியை எந்த ஆரிய பார்ப்பனரும் கண்டிக்கவில்லை. தமிழர்கள் மட்டுமே கண்டித்தனர்.
இவை வெளிப்படுத்தும் உண்மை என்ன?
இங்கு எல்லா பிரச்சனையும் மோதலும் இனப் போராட்டங்கள் என்பதுதான்.
இடையிலே எஸ்.ஆர்.சேகரும், எஸ்.வி.சேகரும்
"வைரமுத்து, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், அபுபக்கர் போன்றவர்கள் கடந்த
வாரம் அழகுகாட்டிய ஹீரோக்கள். ஹிந்து சமுதாயத்தின் மீது சேற்றை வாரி
இறைத்தவர்கள். அதற்காகக் கடுமையான எதிர்கணை தாக்குதல்களால் காயம்பட்டு
வீழ்ந்தவர்கள். தாக்கிவிட்டார்களே என ஒப்பாரி வைத்து கூக்குரலிட்டு ஊரை
பஞ்சாயத்துக்காக கூட்ட முயன்று தோற்றுப் போனவர்கள். இவர்கள் ஹிந்து
சமுதாயத்தை தாக்கிய விதம் வேறுபட்டாலும் நோக்கம் மட்டும் ஒன்றாக இருந்தது.

அகந்தையான பேச்சுக்களுக்கு ஹிந்துக்களின் குறைந்த எதிர்வினையே இருந்தது
ஒரு காலம். ஆனால் இன்று புனிதவதி மார்கழி நாயகி ஆண்டாளின் பிறப்பிலும்,
குலத்திலும் இழியுரை நிகழ்த்திய ”களவாணி கோத்திரமே காளை மூத்திரமே” என தன்
குலத்தையே தரம் தாழ்த்தி சினிமா பாட்டெழுதிய வைரமுத்துவுக்கு ஹிந்துக்கள்
கொடுத்த எதிர்வினை யாரும் எதிர்பார்க்காததே!

அடிச்சா கேட்க ஆளில்லாத அனாதையாய் இருந்தது அந்தக் காலம்!" என்கிறார்
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர். இதற்கு என்ன பொருள்?

அடிச்சா கேட்க ஆளில்லாத அனாதையாய் இருந்தவர்கள் யார்?
இப்போது அதிகாரம் கிடைமத்துவிட்டதாம் ஆட்டம் போடுவது யார்?
இதற்கெல்லாம் விளக்கமா சொல்ல வேண்டும்?
ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிராய் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த உணர்வுக் குரல் அந்த ஆளுக்கு ஒப்பாறியாம்!
பாரதிராஜாவும், பிரகாஷ்ராஜூம் களத்தில் காயப்பட்டு வீழ்ந்து விட்டார்களாம்!
இவர்களெல்லாம் இந்து சமுதாயத்தின் மீது சேற்றைவாரி இறைத்தவர்களாம்! இவர் சொல்லும் இந்து சமுதாயம் எது என்று இப்போது புரிகிறதா?
மேற்கண்டவர்கள் எந்தச் சமுதாயத்தை எதிர்த்து ஆவேசமாகப் பேசினார்கள்? ஆரிய பார்ப்பனர்களை எதிர்த்துத்தானே!
அப்படியிருக்க இந்து சமுதாயத்தை இவர்கள் எதிர்த்தார்கள் என்று கூறுவதன்
மூலம் இந்து சமுதாயம் என்பது ஆரிய பார்ப்பன சமுதாயம் என்பதை அவரே
எதிர்க்கவில்லையே, ஆரியர்களைத் தானே எதிர்த்தனர்?
ஒப்புக்கொண்ட வாக்குமூலம் அல்லவா? இவர்கள் பக்தர்களான தமிழர்களே

ஆக, இல.கணேசன், எஸ்.ஆர்.சேகர், எஸ்.வி.சேகர் இவர்களின் உணர்வு முழக்கம்
ஆரியத்தின் குரலாயும், வைரமுத்து, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், அபுபக்கர்
போன்றோரின் குரல் திராவிடத்தின் குரலாயும் ஒலிப்பது தெளிவாய்த் தெரிகிறதே!

எனவே, திராவிட ஆரிய போர் இனறு உச்சத்தை எட்டியுள்ளது. எச்சரிக்கையாய்
ஒற்றுமையாய் இருந்து ஆரியர் அல்லாதோர் அவர்களை வீழ்த்தி மனிதம் காக்க
வேண்டியது மகத்தான கடமையாகும்!

===

No comments:

Post a Comment