ஆட்சி அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்தியே பி.ஜே.பி. ஆட்சியைப் பிடித்துள்ளது.
உண்மை என்ன?
வாக்கு எண்ணிக்கையன்று முற்பகல் நிலவரப்படி காங்கிரஸ் முன்னிலையில்
இருக்க, டில்லி போன்ற பகுதிகளில் காங்கிரஸார் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதன்பின் பி-.ஜே.பி முன்னிலை என்று செய்திகள் வந்தன.
அதன்பின் பி-.ஜே.பி முன்னிலை என்று செய்திகள் வந்தன.
வாக்கு எண்ணிக்கைகளைக் கூர்ந்து நோக்கினால் 25 தொகுதிகளில் காங்கிரஸ் 500 முதல் 2000 வாக்குகளில்தான் தோற்றுள்ளது.
#உண்மையான வித்தியாசம் என்ன?
500 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி என்றால் 251 வாக்குகள் இன்னும்
கூடுதலாகப் பெற்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பர். அதாவது உண்மையான
வித்தியாசம் 251 வாக்குகள்தான். 2000 வாக்குகள் வித்தியாசம் என்றால்
காங்கிரஸ் கூடுதலாகப் பெற வேண்டியது 1001 வாக்குகள்தான்.
#சோதிக்க வேண்டும்
வாக்கு எண்ணிக்கையை மீண்டும் சோதிக்க வேண்டும். அந்த 25 தொகுதிகளிலாவது கட்டாயம் வாக்கு எந்திரங்களைச் சோதிக்க வேண்டும்.
ஆக 25 தொகுதிகள் 15 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றாலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும்.
அது மட்டுமல்ல. மத்திய ஆட்சியின் அதிகாரம், பணம் வாரி இறைக்கப்பட்டது, தேர்தல் ஆணையத்தின் ஆதரவு, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை, காங்கிரஸாரை நெருக்கியது, மோடியின் மோசடிப் பேச்சகள், மதவெறித் தூண்டல் என்ற பலவும் சேர்ந்தும் காங்கிரஸ் இந்த அளவிற்கு வாக்குகளைப் பெற்றிருப்பது, பி.ஜே.பி படுதோல்வியையே காட்டுகிறது.
குஜராத்தை முதல்மாதிரி வளர்ச்சி மாநிலமாகக் காட்டிய பி.ஜே.பி.க்கு இது உண்மையிலேயே பெருந்தோல்வி!
எனவே, குஜராத்தில் உண்மையில் வென்றது காங்கிரஸ்தான்.
இனி என்ன செய்ய வேண்டும்?
குஜராத்திலே மக்கள் நிராகரித்துவிட்டதால், எதிர்க்கட்சிகள், குறிப்பாக
கம்யூனிஸ்டுகள் காங்கிரசோடு கூட்டணி அமைத்து, 2019 தேர்தலில் பி.ஜே.பியை
வீழ்த்த வேண்டும். வீழ்த்த முடியும்!
No comments:
Post a Comment