உண்மையான திராவிட இயக்கங்கள்
ஓரணியில் சேர்ந்து செயல்பட வேண்டும்!
வைகோவும், கோவை இராமகிருஷ்ணனும் வழிகாட்டுகிறார்கள்!
இது காலத்தின் கட்டாயம்!
வரவேற்கிறோம்; பாராட்டுகிறோம்!
- மஞ்சை வசந்தன்
மு.க.ஸ்டாலின்
அவர்கள் அரசியல்ரீதியாக இதைச் சிந்தாமல் சிதறாமல் சேர்த்துக் கோர்த்து,
ஆரிய ஆதிக்கத்தையும் மதவெறி கொடுஞ்செயல்களையும் அடித்து நொறுக்கி,
நல்லிணக்கமும், சம உரிமயும் காக்க வேண்டும். நாட்டுக்கு நல்லாட்சி
தரவேண்டும். ஊழலற்ற, தமிழர் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்.
திராவிடர்
கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திராவிட இனத்தின் சரியான வழிகாட்டி.
அதற்குரிய அறிவு, ஆற்றல், வயது, முதிர்ச்சி, இணக்கம், தன்னல மறுப்பு என்று
அனைத்தும் அவரிடம் உள்ளன.
எனவே,
மு.க.ஸ்டாலினும், வைகோவும் அவரின் ஆலோசனையை அடிக்கடிப் பெற்று, அரசியல்
நகர்வுகளை செய்ய வேண்டியது கட்டாயக் கடமையாகும். பிஜேபியுடன்
எக்காலத்திலும் எச்சூழலிலும் உறவு வைக்க மாட்டோம் என்பதை இவர்கள் உறுதிபட
அறிவிக்க வேண்டும்! அதில் உறுதியாக நிற்க வேண்டும்.
மதவாதசக்திகளையும்
அதற்குத் துணைபோகும் அ.இ.அ.தி.மு.க. என்ற பி.ஜே.பி.யின் பினாமி
கட்சியையும் அடியோடு வீழ்த்தி, உண்மையான திராவிட அரசியல் அமைப்புகளான
தி.மு.க., ம.தி.மு.க. இரண்டையும் ஆதரித்து வளர்க்க வேண்டியது தமிழர்
ஒவ்வொருவரின் கட்டாயக் கடமையாகும். விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர்
திருமாவளவன் அவர்கள் முன்னமே மிகச் சரியான தடத்தில் செல்வது
பாராட்டுக்குரியது. பொதுவுடமைக் கட்சிகள் சரியான நிலைப்பாடு எடுத்தது
வரவேற்கத்தக்கது.
ஊழலா?
மதவாதமா? என்றால் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது மதவாதந்தான். ஊழலைக்
காட்டி மதவாத்தை வளர்த்துவிடும் எந்தவொரு செயலும் அறிவுக்கும், மக்கள்
நலத்திற்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் கேடானது.
மத ஆதிக்க ஆட்சியாளர்களை, அவர்களுக்குத் துணை போகிறவர்களை அப்புறப்படுத்திவிட்டு, ஊழலை ஒழிக்க முற்பட வேண்டும்.
இனி,
ஊழல் பேர்வழிகள் அரசியலில் நிலைகொள்ள முடியாது என்பது உறுதியான உண்மை!
எனவே, இனி எந்த ஆட்சியாளனும் ஊழல், கொள்ளை செய்யாதவாறு அனைத்து
அமைப்புகளும் ஒன்று சேர்ந்து தடுத்துவிட முடியும்!
தமிழ்,
தமிழர் என்று உணர்ச்சிப் பெருக்கில் முழங்கிவிட்டு, ஆரியப் பார்ப்பனர்களை
அரவணைத்து அவர்களைத் தமிழர் என்று ஏற்கும் அணுகுமுறையும்; சாதி உணர்வை
சக்தியாகக் கொண்டு சாதனைகளை செய்ய முடியும் என்ற செயல்திட்டங்களும்,
தப்பான, முதிர்ச்சியற்ற முடிவுகள்.
திராவிட
இயக்கங்களை ஒழித்துவிட வேண்டும் என்ற இவர்களின் முயற்சி பி.ஜே.பி.
வளர்ச்சிக்கே உதவும். திராவிட ஆட்சி சாதனைகளை அறவே மறைத்து ஊழல், கொள்ளைகளை
மட்டுமே பெரிதாகப் பேசுவது சுயநல அரசியலே! திராவிட ஆட்சிகளின் தப்புகள்
களையப்பட வேண்டியவை. மாறாக திராவிடக் கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டியவை அல்ல.
இந்த
இரு தரப்பாரும் நல்லவர்களாய், வல்லவர்களாய், நேர்மையானவர்களாய்,
போராளிகளாய் இருந்தாலும், இந்த அடிப்படைத் தவற்றால் வரலாற்றுப் பிழை
செய்கின்றவர்களாகவே ஆவர். அவர்கள் இத்தவற்றை உணர்ந்து தங்களைச் சரியான
பாதையில் செலுத்தினால், அவர்கள் எதிர்காலத்தில் தமிழர்களின், தமிழர்
மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவாக்ள் என்பதோடு, அரசியலில் நல்ல
மாற்றாகவும் அவர்கள் அமைய முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவர்கள் பி.ஜே.பி. எதிர்ப்பில் உறுதியாக இருக்க வேண்டும். அதை வெளிப்படையாக
அறிவிக்க வேண்டும்! இது இவர்களின் எதிர்காலத்திற்கும் நல்லது.
தமிழர்க்கும் நல்லது.
ஆனால்,
அ.இ.அ.தி.மு.க.வை ஓ.பி.எஸ்., எடப்பாடி இருவரும் அடகுவைத்து விட்டார்கள்.
இனி அந்தக் கட்சியில் உள்ள தமிழர் உணர்வுள்ள தொண்டர்கள் அனைவரும்
தி.மு.க.விலோ அல்லது ம.தி.மு.க.விலோ இணைந்து விடுவதே அவர்களுக்கும்,
தமிழ்நாட்டுக்கும் நன்மை தரும்! மேலே சொன்னவை கசப்பானவையாக இருந்தாலும்
அவையே சரியான மருந்து. உணர்ச்சிவசப் படாமல் அறிவு வயப்பட்டு சிந்தித்தால்
உண்மை விளங்கும்!
=====
No comments:
Post a Comment