"திரு வைத்தியநாதன் ஆசிரியராக இருக்கும் வரை, என் எழுத்து எதுவும் தினமணியில் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை."
ஆம், அதனை நான் இழிவாகக் கருதுகின்றேன்.
திரு வைத்தியநாதன் ஆசிரியராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து தினமணி நாளேட்டின் சென்னைப் பதிப்பில், என் பெயரோ, என் படமோ இடம்பெறுவதில்லை. எங்கோ ஓரிரு விதிவிலக்கு இருக்கலாம். அது அவர்கள் உரிமை. தினமணி என்னும் மாபெரும் மக்கள் ஏடு வெளியிடுகின்ற அளவுக்கு என் வளர்ச்சி இல்லாமலும் இருக்கலாம்.
ஆனால் திடீரென்று, சில நாள்களுக்கு முன், தினமணி அலுவலகத்தில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டனர். விஜயகாந்த் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரையைத் தினமணியில் வெளியிடலாமா என்று கேட்டனர். என்னை நான் ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். கனவில்லை, நினைவுதான்.
அந்தக் கட்டுரையை வெளியிடுவதன் மூலம் ஏதோ வில்லங்கம் ஏற்பட வழியுள்ளது என்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். எப்படி என்றாலும் எனக்கு அது குறித்துக் கவலை ஏதுமில்லை. மக்களிடம் நம் கருத்து பரவ வேண்டும் என்பதற்காகத்தானே எழுதுகிறோம்! ஆகவே மகிழ்ச்சிதான். ஆனாலும் ஓர் எண்ணம் குறுக்கிட்டது. என்னைத் தொடர்புகொண்ட நண்பரிடம் இப்படிச் சொன்னேன் –
"திரு வைத்தியநாதன் ஆசிரியராக இருக்கும் வரை, என் எழுத்து எதுவும் தினமணியில் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை."
ஆம், அதனை நான் இழிவாகக் கருதுகின்றேன்.
// முடிந்தவரை பலருக்கும் பகிருங்கள்//
No comments:
Post a Comment