அரசியல்

Tuesday, March 22, 2016

பருவமடைந்த பின் பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டியவை.


பெண்ணின் கருப்பையை பலப்படுத்தவும். வருங்காலத்தில் குழந்தையின்மையைத் தவிர்க்கவும், ஒரு பெண் பூப்படைந்து மாதவிடாய் ஆரம்பிக்கும் காலத்தில் இருந்து வாழ்நாள் முழுக்கவே பின்வரும் உணவுக் குறிப்புகளைப் பின்பற்றலாம்.
உளுந்தங்களி, கருப்பைக்கு மிகவும் நல்லது; மார்பகங்களைச் சீராக வைத்திருக்கவும் உதவும். தோல் நீக்காத கறுப்பு உளுந்தை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் எடுத்துக்கொள்வதுடன் மாதுளை, பப்பாளி போன்ற பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆண்களோ, பெண்களோ... பர்கர், பீட்ஸா மற்றும் துரித உணவுகளை உண்பதும் மலட்டுத்தன்மையை உண்டாக்கலாம். அதேபோல், உடற்பயிற்சியின்மையும் மலட்டுத்தன்மைக்கான காரணமாகும்.
சீரான உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள், கருப்பை கோளாறுகளைத் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment