அரசியல்

Sunday, March 31, 2013

அண்டவெளி நுட்பங்கள் ஆன்மீகம் அறிந்தவையா? - மஞ்சை வசந்தன்


'கடவுள் துகள்'' - ஒரு மீள் பார்வை என்ற தலைப்பில் ''தினமணி'' நாளேட்டில் பொன்னி செல்வநாதன் என்பவர் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு

''தினமணி'' 'தினமலர்' ''துக்ளக்'' என்ற மூன்றும் முட்டுத்தூக்கி ஆன்மீகத்தை, ஆரியத்தை நிலை நிறுத்த தொடர்ந்து முயன்று வருகின்றன. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அதிகமாகவும் தீவிரங்காட்டுகின்றன.காரணம், கடந்தசில ஆண்டுகளாக அறிவியல் தரும் அடியால் ஆன்மீகத்தின் அடிப் படை தகர்ந்து நொறுங்கியுள்ளது.

ஆன்மீகத்தை வைத்தே ஆதிக்கம் செலுத்தும் ஆரியக் கூட்டம், சரியும் ஆன்மீக நம்பிக்கைகளையும்,ஆரியர் ஆதிக்கத்தையும் சரிசெய்ய முயல் கின்றன. அதன் அடிப்படையில் மேற்கொண்ட மூன்று பத்திரிகையின் ஆசிரியர்களும் உள்ளார்ந்த உடன்பாட்டின் அடிப்படையில் மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் முலாம்பூசியும், ஆன்மீக உளறல் களுக்கெல்லாம் அறிவியல் விளக்கம் கொடுத்தும் மக்களின் மதியை மயக்கி மடையராக்க தங்கள் பத்திரி கைகளைப் பயன்படுத்துகின்றனர்.

அதிலும் தந்தை பெரியாரின் சிந்தனைத் தாக்கத்தைச் சிதைப் பதிலும், தமிழர் எழுச்சியின் வேகத்தைக் தடுப்பதிலும், திராவிடர் உணர்வாளர்களைக் கேவலமாகவும், கேலியாகவும் எழுதுவதிலும், மக்களுக்கு அவர்கள் மீதுள்ள மதிப்பை, நம்பிக்கையை, நன்றியை, பற்றை குலைப்பதுடன், குறைப் பதிலும் அற்பத்தனமாக இறங்கு கின்றன. இதற்கு சில தமிழர்களை நிரந்தரமாகவே வைத்துள்ளனர். பழ. நெடுமாறன், பழ.கருப்பையா போன்றோரை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

தினமலரும், துக்ளக்கும் வெளிப் படையாக தமிழர் எதிர்ப்பைக் காட்டும் நிலையில், தினமணி வைத்தியநாதன் அய்யர் தமிழ் வளர்க்கும் போர்வையில் தமிழையும் தமிழரையும் வீழ்த்த வியூகம் அமைத்து செயல்படுகின்றனர். பத்திரிகை விளம்பரத்திற்காக தமிழர் சிலரும் அதற்குத் தங்களையும் அறியாமல் துணை போகின்றனர்.

வைத்திய நாத அய்யர் தமிழுக் காகச் செய்யும் செயலைச் செய்ய வேறு எந்தத் தமிழருக்கும் தகுதி யில்லையா,? திறைமையில்லையா?

ஆற்றல் இல்லையா? அறிவு இல்லையா? செல்வாக்கு இல்லையா? அறிமுகம் இல்லையா? பின் எதற்காக அவர்பின்னே அணிவகுக்கின்றனர்.

ஆரிய பார்ப்பனர்கள் அடுத்த வர்க்குரியதில் ஆர்வம் காட்டுகிறார்கள்  என்றால், அது அய்யப்படுவதற்குரியது (Vested Interest) என்பதை அறிஞர்பெருமக்கள் மறந்துவிடக்கூடாது. குழந் தையைக் கடத்துபவன் மிட்டாய் கொடுப்பது போலத்தான் இது.

தமிழர்களின் அமைப்பு களை ஒன்று சேர்க்க ஆரிய பசையா தேவை? சிந்திக்க வேண்டுகிறோம். வைத்திய நாத அய்யர் தமிழர் ஆட்சி இழக்க ஆரியப் பெண்ணே ஆட்சியமைக்க என்ன பாடுபட்டார் என்பது அறிஞர் பெருமக்கள் அறியாததா? தமிழுக்குப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொண்டு ஆரியத்தை ஆட்சிபீடத்தில் ஏற்றி வீரியத்துடன் தமிழை அழிக்கும் செயல்அல்லவா தற்போது நடைபெறுகிறது.

பாடுபட்டு பெற்ற ''செம்மொழி' என்ற அடையாளம் அகற்றப்படு கிறது. தமிழ்வளர்ச்சி முடக்கப்படு கிறது. தமிழ்ப் பல்கலைக்கழக நிலம் பறிக்கப்படுகிறது. தமிழ் வழிக்கல்வி ஒடுக்கப்பட்டு, வணிக நோக்கில்  நடத்தப்படும் ஆங்கில வழிக் கல்விக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு களெல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. தமிழ்ப் புத் தாண்டு ஆரிய ஆண்டாக மாற்றப் பட்டுள்ளது. தமிழர் நலன் காக்கும் சேது சமுத்திர திட்டம் ஆரியப் பார்வையில் எதிர்க்கப்படுகிறது. இப்படி எத்தனையோ... செயலலிதா ஆட்சியின் எந்தச் சீர்க்கேட்டை யாவது இவர்கள் கண்டித்தது உண்டா? பரிதிமாற்கலைஞரை நினைத்துக் கொண்டு வைத்தியநாத அய்யரைப் பார்க்கக் கூடாது! அவர் உளச்சான்று உடையவர் இவரோ ஆர்.எஸ். எஸ் அமைப்பில் கூர்தீட் டப்பட்ட ஆரிய அமைப்பின் கூரிய ஆயுதம். விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ் வளவும் சொல்கிறோம்.இரண்டு மணிநேர மின்வெட்டைக் கண்டித்து எகிறிக்குதித்தவர்கள் பத்து மணி நேர மின்வெட்டில் பதுங்கிவிட்டார்கள்.

இந்த இருட்டில் ஆரிய பாசம் பளிச்சென்று தெரிகிறதே! அண்டம் பற்றி எழுத வந்து, இதையெல்லாம் எழுதுவது தேவை கருதியே, இக்கட்டுரை வெளியிடப்படுவதன் நோக்கம் அறிய இவை உதவும் இனி கட்டுரைக்கு வருவோம். இக்கட்டுரை ஆரியத்தின் அறிவுத்திறனை உயர்த் திக் கூட்டவும், முடக்குவியலாய் உள்ள வேத, சாத்திரங்களை அறிவுக் கருவூலமாய் அடையாளங்காட்டவும், அதன்வழி தங்கள் ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக்கொள்ளவும் வெளியிடப்பட்டது ஆகும்.

கடவுள் நம்பிக்கையைத் தகர்க்கும் அறிவியல் கண்டுபிடிப்பு எதுநிகழ்த் தப்பட்டாலும், உடனே அதைத் தடுத்து, கடவுள் நம்பிக்கையை நிலை நிறுத்த ஏதாவது கற்பனைச் செய்திகளை, வெளியிட்டு மக்கள் மதியை மழுங்கச் செய்து, தங்கள் பிடியில் இருக்கும் வகையில் மூளைச் சலவை செய்துவிடுவது ஆரியத்தின் வழக்கம். குளோனிங்முறையில் ஆட்டுக்குட்டி உருவாக்கப்பட்ட அன்றே கடவுளுக்குக் ''கருமாதி'' முடிந்து விட்டது. பத்தாவது கோள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போதே சோதிடத்-திற்கு சமாதி கட்டப்பட்டுவிட்டது. அதேபோல், அண்ட உருவாக்கத் துகள் கண்டுபிடிக்கபட்டபோதே கடவுள் படைத்த உலகு என்ற நம்பிக்கை கலகலத்துப் போயிற்று.

சுனாமியும், நிலநடுக்கமும் ஒரு நிமிட நேரத்தில் இலட்சக்கணக்கான உயிர்களை எப்போது அழித்தனவோ, அப்போதே கடவுளும் இல்லை சோதிடமும் பொய் என்பது உறுதி செய்யப் பட்டது. இயற்கை நிகழ்வு என்பதால் இப்படி நடக்கிறது. கடவுள் கட்டுப்பாட்டில் இவ்வுலகு இருந்தால் இப்படியெல்லாம் நடக்காது என்று மக்கள் எண்ணி கடவுளை கைவிட் டனர். அப்போது கூட இவை கட வுள் சீற்றம், கடவுள் தண்டிக்கிறார் என்று ஆரிய பத்திரிகைகள், ஊட கங்கள் செய்தி பரப்பின. கடவுள் நம்பிக்கை தகர்க்கப்படும் போதெல்லாம் கற்பனைக் கதைகளை கூறிமக்களை மாற்ற முயலும் வழக்கப்படியே இக்கட்டுரை இப் போது தினமணியில் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த அண்டம் (பிரபஞ்சம்) கடவுளால் படைக்கப் பட்டதல்ல அது இயற்கையாய் இருப்பது. இதை உறுதி செய்ய, நடத்தப்பட்ட ஆய்வே அண்டத்துகள் ஆய்வு. கடவுளை மறுக்கும் இந்த ஆய்வை கடவுளை யும் சாத்திரத்தையும் காப்பாற்ற பயன் படுத்தியுள்ளார் தினமணி ஆசிரியர்.

ஒவ்வொரு மனிதனும் ஒருகருத்தை ஊன்றி உணர்ந்தாலே, கடவுள் நம்பிக்கைக்குக் காரணமில் லாமலே போகும்.

உலகில் எந்தவொன்றையும் ஆக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. உலகில் உள்ளவை எப்போதும் உள்ளவை Ever Existing.

அவற்றில் மாற்றங்கள் மட் டுமே அவ்வப்போது நிகழும் என்பவை உறுதிசெய்யப்பட்ட அறிவியல் உண்மைகள். அப்படியிருக்க கடவுளுக்கு இதில் என்ன வேலை?  இந்த அண்டத்தை கடவுள் உரு வாக்கினார் என்றால் அக் கடவுள் எங்கிருந்து வந்தது? எங்கிருக்கிறது? கடவுள் இவ் வண்டத்தை எந்தப் பொருளைக் கொண்டு உருவாக்கியது? அப் பொருள்கள் எங்கிருந்து கடவுளுக்குக் கிடைத்தன?

ஏற்கனவே இருந்த பொருட் களைக்கொண்டு உருவாக்கினாரா? அல்லது கடவுள் நினைத்த மாத்திர திலேயே இவ்விடத்தில் உள்ளவை வந்தனவா? நினைத்த மாத்திரத்தில் வந்தனவென்றால் சூரியன், நிலவு, நிலம், எல்லாம் கடவுள் எண்ணிய வுடன் வந்தன என்று பொருள்.

எண்ணியவுடன் பொருள்வருமா? வருமென்றால் ஏன் புதியவற்றை கடவுள் இப்போது உருவாக்க வில்லை? மாறாக ஏன் முன்னர் இருந் தவை இப்போது இல்லாமல் போயின? எடுத்துக்காட்டாக அக்காலத்தி லிருந்த ''டைனோசர்'' இக்காலத்தில் இல்லை. இப்படி எத்தனையோ சொல்லலாம்.கடவுள் படைப்பு என்றால் மீண்டும் இவற்றைக் கடவுள் ஏன்படைக்க வில்லை? எனவே, எப்படிச் சிந்தித் தாலும் அண்டம் என்பது (பிரபஞ்சம் என்பது) இயற்கையாய் இருப்பது, அது கடவுள் படைப்பல்ல என்பது தக்க அளவிலே உறுதி செய்யப்படு கிறது. இப்பூமி சூரியனிலிருந்து சிதறியது என்பதை எரிமலை வெடிப்பு உறுதி செய்கிறது. உயிரி னங்கள் ஒருசெல் உயிரி உருவாகி அதிலிருந்து பரிணாமம் தொடர்ந்து கொண்டேயிருக்கும் எனவே, எதுவும் கடவுள் செயல் அல்ல, கடவுளும் இல்லை என்பதை அறிவியல் உறுதி செய்துள்ளது.

அதை இறுதியாக உறுதிசெய்ய நடத்தப்பட்ட சோதனை ''அண்டத் துகள் ஆய்வு'' நியூட்ரான், புரோட் டான், எலக்ட்ரான் அணுக்கள் ஒன்று சேர்ந்து இணைய காரணமான துகளைக் கண்டறிந்தால் அண்டம் அமைந்த அடிப்படையை அறியலாம் என்பதற்காக நடத்தப்பட்ட ஆய்வு இது . அதன்படி இந்த ஆய்வில் வெற்றி கிட்டி 'இவ்வுலகு கடவுள் படைப்பல்ல' என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடவுள் நம்பிக்கை பெரும்பாலும் போய்விட்டது.

Saturday, April 21, 2012

நான் ஒரு வீடு கட்டினால் ஆயிரம் வீடு கட்டினா போல!


நான் ஒருமுறைச் சொன்னால் நூறு முறைச் சொன்னதுபோல! திரைப் படத்தில் ரஜினிகாந்த் பேசிய புகழ் பெற்ற வசனம். பொதுவாக நாயகர்களை உச்சிக்கு உயர்த்தி மிகைப்படச் சொல்வது வழக்கம். ஆனால், நடைமுறை வாழ்க்கை யில் இப்படியொரு அகாசுகா பேர்வழி நாட்டின் நாயகராக வந்ததுதான் கொடு மையிலும் கொடுமை; கேவலத்திலும் கேவலம்.
காலையில் வீட்டிற்கு அடிக்கல் நாட்டி, மாலையில் திறப்பு விழா நடத்தி முப்பது ஆண்டுகளுக்கு முன்னமே சாதித்துக் காட்டினார் அறிவியல் மேதை ஜி.டி. நாயுடு. ஒரு சில வாரங்களில் பல்லடுக்குக் கட்டடங்களைக் கட்டி சமீபத்தில் சாதனை படைத்துள்ளது சீனா. அப்படியிருக்க, இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியிலே 40,000 வீடுகள் கட்டுவது என்பது எளிய செயல். அதுவும் ஓர் அரசுக்கு இது மிக மிக எளிய செயல். அப்படியிருந்தும் ஓராண்டுகளாகியும் 40,000 வீடுகள் கட்டி முடிப்பதற்கு மாறாக வெறும் 40 வீடுகள் மட்டுமே இராஜபக்சே அரசால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றால், அவரது இறுமாப்பையும், இரக்க மற்ற தன்மையையும், இனவெறியையும் காட்டுவதோடு, மேற்கண்ட வசனத் தையே நினைவு படுத்துகிறது.
திரைப்பட வசனம் கூட ஒன்றுக்கு நூறு என்றது. ஆனால், இராஜபக்சே ஒன்றுக்கு ஆயிரம் என்று அகந்தையும் ஆணவமும் கொண்டு நிற்கிறார். அந்த பஞ்ச் டயலாக்கிற்கு, பராக் பாட நம் நாட்டு வெளியுறவு அமைச்சர் பறந்து போய் நிற்கிறார். இந்திய நாட்டிற்கு, இவ்வளவு பெரிய நாட்டிற்கு இத்தனை இழிவா? தவிக்கும் தமிழனுக்கு இவ்வளவு அவலமா? இந்தியன் ஒவ்வொருவனும் வெட்கப்பட வேண்டும், தமிழன் ஒவ் வொருவனும் தலை குனிய வேண்டும். சுருங்கச் சொன்னால், நாமெல்லாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை அறவே இழந்துவிட்டோம் என்பதே பொருள்!
இரண்டு இத்தாலியர்களை, இந்தியா கூண்டில் நிறுத்தியதற்கோ இத்தாலி நாட்டுப் பிரதமர் எகிறிக் குதிக்கிறார். இத்தாலிய அதிகாரிகள் இரவோடு இரவாகப் பறந்தோடி வருகிறார்கள்; இந்தியாவை மிரட்டுகிறார்கள். ஆனால், நித்தம் நித்தம் எத்தனைத் தமிழர்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் செத்து மடிகிறார்கள்! கடலுக்குப் போகும் மீனவன் படகில், மீன் வருவதற்குப் பதில் தினம் தினம் மீனவன் உடல் வருகிறது! கேட்டால் இந்தியா - இலங்கை நல்லுற வாம் !

கண்ணெதிரிலே தங்கை கற்பழிக்கப் படும்போது, நல்லுறவைப் பற்றிச் சிந்திப் பவன், சொரணை உள்ள மனிதனா? இது நல்லுறவு நோக்கா அல்லது தமிழினம் கொத்திக் குதறி, சின்னாபின்னமாகச் சிதைக்கப்படுவதால் இராஜபக்சேவுக்கு உள்ள மகிழ்வு இங்குள்ள இந்தியத் தலை வர்களுக்கும் இருப்பதன் அடையாளமா? அய்யம் எழுகிறதே!
மானத்தை இழந்து மண்டியிட்டு நின்றாலும், இலங்கை ஒரு போதும் இந்தி யாவின் விசுவாசியாகாது. சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் சேர்ந்து கொண்ட துணிவில், இந்தியாவை, இலங்கை ஏளனமாகப் பார்க்கவும், சீண்டவும் தொடங்கி இரு ஆண்டுகள் ஆகிவிட்டன. இல்லையென்றால் இனப்படுகொலை செய்த ஒருவர்; இந்திய மீனவர்களை தினம் தினம் சுடும் ஒருவர்; இந்தியா எவ்வளவு கேட்டுக் கொண்டும், கேளாச் செவியராய் செயல்படும் ஒருவர், எந்தத் தயக்கமும் இன்றி, இறுமாப்போடு இந்தியாவுக்கு வந்து போகமுடியுமா?
இந்தியா என்னதான் வலியச் சென்று இலங்கையிடம் வாஞ்சை காட்டினாலும், இந்தியாவின் எதிர்கால ஆபத்தே இலங்கை மூலம்தான் என்ற எதார்த் தத்தைப் புரிந்து கொள்ள முடியாத மண்ணுருண்டைகளா இந்தியாவின் ராஜதந்திரிகள்? என்ன வியூகத்தில் இவர்கள் இலங்கையிடம் இவ்வளவு இறங்கிப் போகிறார்கள்? இந்தியா விலுள்ள வெளியுறவுத் துறை விற்பன்னர்கள் உண்மையிலே வியூகம் தெரிந்தவர்கள் என்றால், கனிந்து நின்ற காலத்திலே தமிழ் ஈழத்தை அங்கீகரித்திருக்க வேண்டும். எத்தனை நாடுகள் இலங்கையில் தளம் அமைத்து இந்தியாவைத் தாங்க முற்பட்டா லும், ஈழத்தில் தளம் அமைத்து நாம் அதை எதிர் கொள்ள முடி யும். ஈழம் நமக்கு உணர்வுபூர்வ மான நட்பு நாடாய் ஆகி யிருக்கும்.
அதைவிடுத்து. இலங்கையுடன் அந்த நாடு கைகோர்த்துவிடும்; இந்த நாடு கைகோர்த்துவிடும் ; அதைத் தடுக்க நாம் இலங்கையை நட்பு நாடாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வியூகம் இந்தியாவிற்கு ஆபத்தானது; ஆழ்ந்து சிந்திக்காததன் விளைவு.
நட்பு என்பது இருதரப்பு உணர்வின் பிடிப்பு. நாம் மட்டும் நட்பு காட்டி, இலங்கை நட்பாக நடித்துக் கொண்டிருந்தால், இடர் யாருக்கு? இதில் யார் புத்திசாலி?
இந்தியா இலங்கை விசுவாசத்தை விட்டுவிட்டு, அய்.நா. மன்றத்தில் அமெரிக்கா வைக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அரைகுறையாக ஆதரித்து, மனித நேயத்தின் பக்கம் திரும்பியது போல, இலங்கையில் மூன்று ஆண்டுகளாய் முள்வேலிக்குள் முடங்கிய தமிழர்களுக்கு உடனடியாக வீடு, தமி ழர்க்கு சம உரிமை, பாதுகாப்பான வாழ்வு; இந்திய மீனவர்களுக்குப் பாதுகாப்பு; கச்சத்தீவு மீட்பு என இவற்றை துரித கதியில் இந்தியா செய்து முடிக்க வேண் டும் என்பதே இந்தியாவின் இறை யாண்மையை, பெருமையை, நேர்மையை, மனித நேயத்தை சமாதானத்தை விரும்பும் எவரும் விரும்பக்கூடியதாகும்! இந்தியா இனியாவது திருந்த வேண்டும்!  இல்லையேல் வருந்தவேண்டி வரும்!
இலங்கை செய்த இனப்படு கொலைக் கும், கொடுமைகளுக்கும், அநீதிகளுக் கும், அடக்கு முறைகளுக்கும், வன் புணர்ச்சி வக்கிரங்களுக்கும், இடைவிடா இன்னல்களுக்கும், இழப்புக்கும் இந்தி யாவின் ஒத்துழைப்பே முதன்மைக் காரணம் என்பதை எவரும் மறுக்கவும் இயலாது; மறைக்கவும் இயலாது.
அய்.நா. தீர்மானத்தை ஆதரித்ததன் மூலம், இலங்கையின் உண்மை உரு வத்தை இந்தியா முழுமையாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர், தாள்பணிந்து எழுதிய கடிதத் திற்குக் கூட ராசபக்சே பதில் அளிக்க வில்லை என்பது மட்டுமல்ல; அலட்சியப் படுத்தி குப்பையில் வீசியுள்ளார்.
அமெரிக்கா கொண்டு வந்த வலுவற்ற தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்த இந்தியாவின் இரட்டை வேட நிலைக்கு இதைவிட வேறு என்ன அவமானம் வேண்டும்?
ஓடி ஓடி வலியச் சென்று இலங் கையுடன், இந்தியா கை கோர்த்தாலும், அது உதறிவிட்டு, சீனாவுடன் சேர்ந்து கொள்ளும் என்பதை இனியும் இந்தியா உணராது செயல்பட்டால், அதைவிட அவமானமும், ஆபத்தும் வேறு எதுவும் இருக்க முடியாது.
அமெரிக்கா கொண்டு வந்த ஒரே காரணத்திற்காகவே, அதன் பகை நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக் களித்தன. சரியானதொரு தீர்மானத்தை இந்தியாவே கொண்டு வந்திருந்தால், இன்னும் ஆதரவு கூடியிருக்கும் என்ப தோடு, இலங்கையையும் நடுங்கச் செய் திருக்கும். எத்தனையோ தலைவர்கள், எத்தனையோ முறை இதை வலியுறுத் தியும் இந்தியா அதைச் செய்யாது ஒதுங்கி நின்றதன் விளைவு இந்தியாவிற்கு இழிவையும், இலங்கைக்குத் தெம்பையும் தந்துள்ளது. எனவே, இனியாவது இந்தியா இலங்கைக்கு எதிரான உறுதி யான நடவடிக்கைகளை அமெரிக்கச் சார்பின்றி எடுத்தால், இந்தியா தலை நிமிரும், இலங்கை அடங்கும்.
அய்.நா. பேரவையில் இலங்கைக்கு எதிரான பொருளாதார புறக்கணிப்புக் கான தீர்மானத்தை இந்தியா கொண்டு வந்து அதன் கொழுப்பைக் குறைத்து கொட்டத்தை அடக்க வேண்டும்.
இனியும் காலம் தாழ்த்தாது தமி ழீழத்தை அமைக்க அனைத்து நடவடிக் கைகளையும் துணிந்து மேற்கொண்டு, இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதுதான் இந்தியா விற்கும் நல்லது; இலங்கை வாழ் தமிழர்களுக்கும் நல்லது.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறுதியிட்டு உறுதிபடக் கூறியுள்ள இந்தத் தீர்வை தமிழகத் தலைவர்கள் ஒரு சேர வலியுறுத்தி, குரல் எழுப்பி, போராடி, தமிழ் ஈழம் அமைக்கும் முயற்சியில் இந்தியாவை அடியெடுத்து வைக்கச் செய்ய வேண்டும்.
இந்தியப் பாதுகாப்பிற்கும், இலங்கை தமிழரின் தன்மான வாழ்வுக்கும், ஒரே தீர்வான தமிழ் ஈழம் அமைக்கும் முயற்சிக்கு இதுவே இறுதி வாய்ப்பு! இதுவே கனிந்த நேரம்! தமிழர்களின் இடைவிடாத, ஒருங்கிணைந்த, தீவிரப் போராட்டமே இப்போதைய உடனடித் தேவை! தமிழர் தலைவர் தலைமையில் தமிழர்கள் அணி திரளுவோம்!