அரசியல்

Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Monday, April 2, 2018

திராவிடர் என்ற சொல்லை பெரியார் நுழைத்தாரா?



தமிழர் என்ற சொல்லை வேண்டுமென்றே விலக்கி, திராவிடர் என்ற சொல்லை பெரியார் நுழைத்தார். காரணம் அவர் கன்னடர் என்று சிலர் பெரியார் மீது பழி கூறுகின்றனர்.

இது உண்மையா? அல்லது மோசடிப் பிரச்சாரமா?
ஆதாரங்களுடன் விளக்க விரும்புகிறோம்.

1892இல் ஜான் ரெத்தினம் அவர்கள் திராவிடர் கழகம் என்றே ஓர் அமைப்பைத் தொடங்கினார். பண்டிதர் அயோத்திதாசர் ஆதி திராவிட மகாசன சபை என்ற அமைப்பைத் தொடங்கினார். திராவிட என்ற சொல்லை திரு.ஜான் ரத்தினம் அவர்களும் பண்டிதர் அயோத்திதாசரும் ஒடுக்கப்பட்ட, இம்மண்ணுக்கு உரிமையான மக்களை விளிப்பதற்காகப் பயன்படுத்தினர். பின்பு 1912இல் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் குறியீடாக டாக்டர் நடேசன் அவர்கள், திராவிடர் சங்கம் தொடங்குகிறார். 1916இல் பிட்டி தியாகராயர் அவர்களாலும் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களாலும் பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்ற தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. திராவிடன் என்ற பெயரில் இதழும் தொடங்கப்பட்டது. அப்போது காங்கிரசில் இருந்த தந்தை பெரியார் பின்னாளில்,  திராவிடர் என்ற குறியீட்டைப் பயன்படுத்துகிறார்.

1892இல் ஜான்ரெத்தினம் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு முன், கி.மு. முதல் நூற்றாண்டிலே மனுஸ்மிருதி, பத்தாம் அத்தியாயத்தில், 43, 44ஆவது சுலோகத்தில் திராவிட என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.

ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர்கள்... திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள் என்கிறது மனுஸ்மிருதி.

கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் எழுதிய, கல்லாத பேர்களே நல்லவர்கள் என்னும் பாடலில் திராவிடம் என்ற சொல் மொழியைக் குறிக்க ஆளப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர் திராவிட சிசு என அழைக்கப்பட்டார். இங்கு திராவிடம் என்பது தமிழைக் குறிக்கப் பயன்பட்டது.

1856இல் வெளியிடப்பட்ட கால்டுவெல் என்பவரின் திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar in Dravidian or South Family of Languags)  என்ற நூலிற்குப்பின் திராவிடம் என்ற சொல் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது.

எனவே, திராவிடம் என்ற சொல்லை நீதிக் கட்சியினரோ, பெரியாரோ, திராவிடர் கழகத்தினரோ, திராவிட முன்னேற்றக் கழகத்தினரோ உருவாக்கவில்லை. குறிப்பாக பெரியார் திணித்தார் என்பது தவறு; மோசடி!
அறிஞர் இராம. சுந்தரம் அவர்கள் இது குறித்து, கால்டு வெல்லுக்கு முன்பே, திராவிட என்ற சொல் தென்னிந்தியர்களை, தென்மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்கிறார்.

குமாரிலபட்டர் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) திராவிட பாஷைகள் பற்றிக் குறிப்பிடுகிறார்  (tadyatha dravidadi bhassyam ever.... so in the Dravida and other languages. (ச. அகத்தியலிங்கம், திராவிட மொழிகள், 22).

கியர்சன்  (Linguistic Survey of India Vol.I) தனக்குத் தெரிந்தமட்டில் அட்சன் (Dr.Hodgson)   என்பவர்தான் திராவிடன் (Dravidan)  என்ற சொல்லை முதன்முதலாகத் தென்னிந்திய மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார்.

உண்மை வரலாறு இப்படியிருக்க பெரியார்தான் திராவிடர் என்ற சொல்லை வலிய, உள்நோக்கத்தோடு நுழைத்தார் என்பது பித்தலாட்ட பிரச்சாரமாகும்.

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரையில் இருந்துவரும் போராட்டமெல்லாம் ஆரியர்-திராவிடர் பேராட்டமே ஒழிய, வடமொழி தென்மொழிப் போராட்டமல்லவே! இதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் காட்டலாமே!

தமிழ் என்பது மொழிப்பெயர். திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூட முடியும். ஆனால் தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவனாய் இருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில்தான் சேருவான். ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடனென்று கூறிக்கொள்ள முடியாது. தமிழர் என்றால் பார்ப்பானும் தன்னை தமிழனென்று கெடுக்கப் பார்ப்பான். திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொண்டு நம்முடன் சேர முற்படமாட்டான்...

... தமிழர் என்று பொதுவாக அழைக்கும்போது, இவ்வளவு நிபந்தனை (தடை) உண்டா? ஆகவேதான் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். மற்றபடி திராவிடர் என்பதில் எங்களுக்கு வேறென்ன உள்ளெண்ணம் இருக்க முடியும்?

தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த _ நமக்கு மாறுபட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதி உண்டா? இழிவுக்கும் தாழ்வுக்கும் கட்டுப்பட்டுள்ள மக்களையும், இதற்கு நேர்மாறக _ இவ்விழிவுக்கே காரணமான உயர்ஜாதி மக்களையும் ஒன்றாக்கிக் கொண்டால், அதில் இவ்விழிவு நீங்க வழி ஏற்படுமா? முதலில் இவ்விழிவு நீங்கட்டும்! பிறகு எல்லோரும் ஒன்றாவோம்!
.... சூத்திரர் என்பவர்களுக்குத் திராவிடர் தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் யாராவது கூறுவார்களானால் அதை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு, என் அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன்.

நீங்கள் கொடுக்கும் பெயரில் மேலே சொன்ன அத்தனை பேரும் ஒன்று சேர வசதி இருக்க வேண்டும். அதில் சூத்திரனில்லாத ஒரு தூசி கூட புகுந்து கொள்ளாமல் தடுக்க ஏதாவது தடையிருக்க வேண்டாமா? என்றார் பெரியார். (மொழியாராய்ச்சி எனும் நூலில் பெரியார் எழுதியதிலிருந்து.)

ஆரிய ஆதிக்கத்தின் விளைவாய், இந்த மண்ணின் பெரும்பான்மை மக்கள் (97% மக்கள்) தாங்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்படுவதை மறுத்து, திராவிடர்கள் என்ற சொல்லால் தங்களை அழைத்து, ஆரிய பார்ப்பனர்களிலிருந்து மாறுபட்டவர்கள் தாங்கள் என்பதைக் காட்டிக்கொள்ள திராவிடர் என்ற சொல்லாட்சியே பொருத்தமாய்ப் பயன்பட்டது.

தமிழர் என்னும்போது தாங்களும் தமிழர்கள்தான் என்று ஆரிய பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்து இனப் பகுப்பை சிதைத்துவிடுகின்றனர்.

தமிழினத்தின் பரம்பரைப் பகையினமான ஆரிய பார்ப்பனர்களுள் தமிழர்கள் என்றால், இதைவிட இன மோசடியும், இன கட்டின் தகர்ப்பும் வேறு என்ன இருக்க முடியும்?

ம.பொ.சி. காலத்திலிருந்து சீமான் காலம் வரை ஆரிய பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று உள்ளடக்கி, ஆரியத்திற்கு துணைநிற்கக் கூடியவர்களே திராவிடத்தை எதிர்க்கின்றனர்.

பெரியார் ஈ.வே.ரா முதலில் தமிழரைப் பிளவுபடுத்தும் பிராமணர் _ பிராமணர் அல்லாதார் கூச்சலுக்கு முற்றுப் புள்ளி வைக்கட்டும். அப்பொழுதுதான் தமிழகத்தில் தமிழர் அல்லாதாரின் ஆதிக்கத்தை ஒழித்துத் தமிழினத்துக்கு வாழ்வு தேட முடியும் (தமிழன் குரல் அக்டோபர் 1954 இதழில் ம.பொ.சி.)

ஆக, மலையாளி, கன்னடர், தெலுங்கர்தான் தமிழர்களுக்கு எதிரியே தவிர, ஆரியப் பார்ப்பனர்கள் அல்ல என்பதே இவர்கள் கொள்கை.

திராவிடர் என்பதை விலக்கி தமிழர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ள விரும்புகின்றவர்கள் ஆரிய பார்ப்பனர்களை அறவே விலக்கித் தமிழர்களை கடமைக்கு அணியாக்கிக் காட்ட வழி சொன்னால் அய்யா பெரியார் சொல்வதுபோல அதை அட்டியின்றி ஏற்க நாம் யாராகவுள்ளோம் என்பதை ம.பொ.சி.  வாரிசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, பெரியார், தான் கன்னடர் என்பதால் தமிழர் என்ற சொல்லை நீக்கி, திராவிடர் என்ற சொல்லைப் புகுத்தினார் என்ற குற்றச்சாட்டு அற்பத்தனமானது _ அபத்தமானது ஆகும்.

என்னுடைய தாய்மொழி கன்னடமாக இருந்தபோதிலும், அதனை நான் தினசரி பேச்சு வழக்கத்தில் கொண்டிருக்கவில்லை. எல்லா வற்றிற்கும் தமிழ்மொழியைத்தான் பயன்படுத்தி வருகிறேன். எனக்குக் கன்னடத்தைத் தவிர தெலுங்கிலும் கொஞ்சம் பயிற்சி உண்டு. எப்படி என்றால், வியாபார முறையிலும் நண்பர்களின் பழக்கத்தாலுமேயாகும். (விடுதலை 21.5.1959) என்று தன்னைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய பெரியார், தமிழின், தமிழரின் மேம்பாட்டிற்கு மட்டுமே பாடுபட்டார். அவர் என்றைக்குமே கன்னடர்களுக்காகப் பாடுபட்டதில்லை.



Tuesday, February 16, 2016

தாழ்த்தப்பட்டோர் உரிமையும் உயர்வும் பெற தந்தை பெரியார் ஆற்றிய பணிகள் !


- மஞ்சை வசந்தன்
 
தந்தை பெரியார் மனிதநேயத்தின் மறுவடிவம். மனிதனை மனிதன் பேதப்படுத்தி, அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி உரிமைகளைப் பறித்து கொடுமைப்படுத்துவதை அறவே வெறுத்துக் கொதித்தெழுந்தவர்.
இப்படிப்பட்ட கொடுமைகளுக்குக் காரணமான சாஸ்திரம், புராணம், மதம், கடவுள், சாதி இவற்றைக் கடுமையாகச் சாடி அவற்றை ஒழிக்க ஆயுள் முழுவதும் அயராது போராடியவர்.
அவர் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் மேம்பாட்டிற்குப் பாடுபட்டவர். தமிழர் என்னும்போது குறிப்பாக பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இழிவும் தாழ்வும் நீங்கி, உயர்ந்தெழ உரிய வழிகண்டவர். இதை இந்தியா அளவில் உள்ள பிற்பட்டோர் தலைவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஏன் காந்தியாருங்கூட ஒப்புக் கொண்டுள்ளனர்.
வீதிகளில் தாழ்த்தப்பட்டோர் செல்லக்வடாது என்பதை எதிர்த்து வைக்கம் போராட்டத்தில் பெரியார் தீவிரமாய் ஈடுபட்டிருந்த நிலையில், வீதிகளில் தாழ்த்தப்பட்டோர் செல்ல அனுமதி கிடைத்தபோது, கோயிலுக்குள் செல்லவும் அனுமதி வேண்டும் என்று போராடியவர் பெரியார்.
வீதியில் செல்லத் தானே போராட்டம் நடத்தினீர்கள். அதுதான் வெற்றி பெற்று விட்டதே. அப்புறம் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்ற ஏன் போராடுகிறீர்கள், என்று காந்தியார் கேட்டபோது, கோயிலுக்குள்ளும் செல்ல வேண்டும் என்பதே தாழ்த்தப்பட்டோருக்கு முழுமையான தீர்வு ஆகும் என்று தாழ்த்தப்பட்டோர் நலனில் தீவிரம் காட்டியவர் பெரியார். இப்படி தாழ்த்தப்பட்டோருக்காக அம்பேத்கருக்கு முன்பே போராடிய பெரியாரை தலித்துகளின் எதிரியாய் சில அற்பர்களும் அயோக்கியர்களும் ஆரிய அடிவருடிகளும் அபாண்ட பொய்களைக் கூறிக் காட்ட முயற்சித்து வருவதால், மக்கள் உண்மையறிய கீழ்க்கண்டவற்றைக் கூற விரும்புகிறோம்.
தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காகப் போராட முன்வந்தபோது தாழ்த்தப்பட்டோரின் நிலை என்ன?
1.    ஆதிராவிடர்கள் பார்ப்பனத் தெருக்கள், முன்னேறியவர்கள் வாழும் தெருக்கள், கோயில்களைச் சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்துகூடச் செல்லமுடியாது.
2.    ஆதிதிராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டக்கூடாது.
3.    தங்க நகைகள் அணியக்கூடாது.
4.    மண் குடத்தில்தான் நீர் மொள்ள வேண்டும்.
5.    ஆதிதிராவிடர் வீட்டுக் குழந்தைகள் படிக்கக்கூடாது.
6.    அடிமையாக இருக்க வேண்டும்.
7.    சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.
8.    திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.
9.    பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக்கூடாது.
10.    குதிரைமீது ஊர்வலம் செல்லக்கூடாது.
11.    வண்டி ஏறிச் செல்லக் கூடாது.
12.    பொதுக்கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.
13.    சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையே வேறு.
14.    பறையன் சுடுகாடு என்றே தனி சுடுகாடு.
15.    மேல் அங்கியோ, துண்டு அணிந்துகொண்டோ செல்லக் கூடாது.
16.    பெண்கள் ரவிக்கைகள் அணியக்கூடாது என்பதோடு மேல் ஜாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணியையும் எடுத்து அக்குலில் வைத்துக்கொள்ள வேண்டும்.
17.    நீதிமன்றங்களில் சாட்சி சொல்ல நேர்ந்தால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும் என்று இருந்தது. இவற்றை மாற்றவே சுயமரியாதை இயக்கம் அதிகம் போராடியது.
    பஞ்சமனும் (தாழ்த்தப்பட்டவர்களும்) நாய்களும், பெருநோயாளிகளும் (தொழுநோயாளிகள்) நுழையக் கூடாது என்று உணவு விடுதிகளிலும் பேருந்துகளிலும் எழுதி வைத்தனர். நாடக சபாவில் பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று வைத்தனர்.
    தாழ்த்தப்பட்டவன் வண்டியிலேறி வீதிக்கு வந்துவிட்டான் என்பதற்காக கட்டிவைத்து அடித்து அபராதம் போட்டனர். அதைப் பெரியார் வன்மையாகக் கண்டித்து, கொடுமை! கொடுமை! என்ற தலைப்பில் 24.11.1929 குடியரசில் எழுதினார்.
    அந்தோணிராஜ் என்ற மாணவன் அக்கிரகார வீதியில் நடந்துவந்தான் என்பதற்காக, அவனை ரங்கசாமி அய்யர் செருப்பாலடித்தார். இதை வன்மையாக எதிர்த்து 24.4.1926 குடியரசில் பெரியார் எழுதினார்.
    ஆதித்திராவிடர், தீயர், தீண்டாமை விலக்கு மாநாடுகளை பெரியார் நடத்தினார்.
    21.07.1929இல் சென்னையிலும், 25.08.1929இல் இராமநாதபுரத்திலும், 10.06.1930இல் திருநெல்வேலியிலும், 16.05.1931இல் சேலத்திலும், 07.06.1931இல் லால்குடியிலும், 05.07.1931இல் கோவையிலும், 04.07.1931இல் தஞ்சையிலும், 07.12.1931இல் கோவையிலும், 07.02.1932இல் லால்குடியிலும், 28.08.1932இல் அருப்புக்கோட்டையிலும், 07.08.1933இல் சென்னையிலும், 1.07.1938இல் சீர்காழியிலும், 07.03.1936இல் திருச்செங்கோட்டிலும், 23.05.1936இல் கொச்சியிலும், 02.09.1936இல் சேலத்திலும், 06.05.1937இல் சிதம்பரத்திலும், 04.07.1937இல ஆம்பூரிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மாநாடுகளை நடத்தி கண்டன தீர்மானங்களையும், உரிமைக்கான தீர்மானங்களையும் பெரியார் நிறைவேற்றினார்.
மனித உரிமை பெற அரசின் தடையை மீறுவோம். தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி வைப்போரை திராவிடர் இயக்கத்தின் எதிரிகளாய் எண்ணி எதிர்போம் என்று திருமங்கலத்தில் பேசினார்.
ஜாதிகளை ஒழிப்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, திராவிடர் கழகமும் பழங்குடி மக்கள் (தாழ்த்தப்பட்டோர்) நகமும் சதையும்போல என்று திருச்சியில் பேசினார் பெரியார்.
தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு! என்று 09.02.1982இல் விடுதலை தலையங்கம் தீட்டியது. இப்படி ஆயிரக்கணக்கான போராட்டங்களை திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்துள்ளது. இவற்றை மேலும் விரிவாய் அறிய குடியரசு, விடுதலை, உண்மை, தலித்திய ஏடுகள் போன்றவற்றை படியுங்கள்.
ஒளிவு மறைவு இன்றி உண்மை பேசிய பெரியார்: 

நானோ திராவிடர் இயக்கமோ தாழ்த்தப்பட்டோருக்காக என்று இதுவரை தனியாக ஒதுக்கி வேலை செய்தது கிடையாது. வேண்டுமானால் திராவிடர் இயக்கத் திட்டமானது யார் யார் தாழ்த்தப்பட்டுள்ளார்களோஅவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்கும் முறையில் இருக்கிறது என்று கூறுங்கள். 

யான் தாழ்த்தப்பட்டோருக்காகத் தனியாக உழைக்கிறேன் என்று உங்களிடையே பொய் கூற முடியாது. அவ்வித எண்ணம் எனக்கில்லை. இருக்கவேண்டிய அவசியமுமில்லை. ஏன் இவ்வாறு கூறுகிறேன்? நீங்கள் வேறுவிதமாக கருதவேண்டாம். ஆதிதிராவிடன் _ திராவிடன் என்ற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும்.
திராவிடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களும் இல்லாமலில்லை. இனி அவர்களை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்பதும் எனக்குத் தெரியும்.
ஆகவே ஒரு இனத்தைச் சார்ந்த நாம் நமக்குள் பிரிவுகளாக சொல்லளவிலும் இருக்கக் கூடாதென்பதே எனது தீவிர எண்ணமாகும்.
இன்னும் விளக்கமாக கூறுகிறேன். திராவிடர் இயக்கத்திற்கு முக்கிய கொள்கை என்னவென்பதை இந்த நாட்டில் பறையன் என்றும், பார்ப்பனர் என்றும், உயர்ந்த ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்று மிருப்பதையும் அறவே ஒழித்து எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள், என்னும் கொள்கையை நடைமுறையில் செய்வதேயாகும். எனவே, நானோ, திராவிடர் கழகமோ நமக்குள்ளாக இருந்துவரும் ஜாதிகளுக்காக இதை செய்தோம் என்று வீண் பெருமை பேசிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
ஆரியரும் அவர்களின் ஸ்தாபனமாகிய காங்கிரசும் அம்மாதிரி வேண்டுமானால் சொல்லி ஏமாற்றிப் பெருமையடையலாம். காரணம் வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் அவர்கள், வேறு நாட்டினர் அவர்கள் நம்மைக் கடவுள் பேரால் அடிமைப்படுத்தி, நம் நாட்டில் நமக்கு வாழ்வில்லாமல் செய்து கறையான் போன்று அவர்கள் இங்கிருப்பதால் ஏதோ தானம் செய்வதுபோன்று அக்கூட்டம் ஆதிதிராவிடர்களுக்கு இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று கூறி ஆதிக்கத்தின் பித்தலாட்ட சூழ்ச்சியை மறைக்கச் செய்யலாம். நாம் ஏன் நமது திராவிடர் இயக்கம் அவ்வித கீழ்நிலையில் செல்லவேண்டும்?  எனவே, தோழர்களே, இனி நமக்குள் ஆதிதிராவிடர், திராவிடர் என்ற வித்தியாசங்கள் வேண்டாம். பறையன் என்று சொல்லாதே, சூத்திரன் என்று கூறாதே என்று உணர்ச்சியை அடையச் செய்யுங்கள். தவிர தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு என் அருமை நண்பரும் அறிஞருமான டாக்டர் அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்ற மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர். நான் மிக எதிர்பார்த்திருந்தேன்.

 அவரின் ஒத்துழைப்பை இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க. ஆனால் எதிர்பாராத விதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ அதே ஆரியத்தின் ஸ்தாபனமாகிய இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நம் அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூறவேண்டுமானால் இந்திய நாடு பிரிக்கப்படக் கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாட்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்று நான் அஞ்சுகிறேன்.
எனினும் அவருக்குள்ள சூழ்நிலையில் வடநாட்டுத் தொடர்பில் அப்படித்தான் இருக்க வேண்டியிருக்கிறது போலும்! நான் அதைப் பற்றித் தப்பாகவோ குறைவாகவோ கூற முன்வரவில்லை. அவர் என்ன? நம் நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களே தாழ்த்தப்பட்டோரின் விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டுள்ள திராவிடர் இயக்கத்தையும் திட்டத்தையும் என்னைப் பற்றியும் வீணாகப் பழிக்கிறார்கள் என்றால் வடநாட்டுப் படிப்பிலுள்ள டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நாம் குறைகூற முடியுமா?
என்னையோ அல்லது திராவிடர் இயக்கத்தையோ வீணாகக் குறை கூறினாலும் இல்லாவிட்டாலும் ஒன்று கூறிகிறேன். தோழர்களே! திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்நாட்டில் பள்ளன், பறையன் என்று இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்.
தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை நான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங்கள்.
திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனைத் தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு அனுபவிக்க உரிமையுண்டு என்று உள்ளத்து உணர்வுகளை உண்மையாய்க் கூறியவர் பெரியார்.
தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஒத்த சிந்தனையுள்ளவர்கள் என்ற உண்மையே தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோரின் காவலர் என்பதற்கு சரியான சான்றாகும். கீழ்க்கண்ட இருவரின் சிந்தனைகளும் இதை உறுதி செய்யும்.
(விடுதலை 8.7.1947)
***********

Wednesday, October 7, 2015

பெரியாரின் பெருந்தொண்டர் காமராசர்


பெரியார் எனக்கு நண்பர் ஆனால் இந்திக்கு அவர் நண்பர் இல்லையே! நேருவிடம் காமராசர் சொன்னது!

 காமராசரை பெரியார் விட்டுக் கொடுக்கமாட்டார்; பெரியாரும் காமராசரை விட்டுக் கொடுக்கமாட்டார்!

 பெரியார் சொல்வதை செய்கின்றவன் நான் என்று பெருமை பொங்கப் பலமுறை கூறியுள்ளார்.

 இந்தித் திணிக்கப்பட்டபோது, தேசிய கொடி எரிப்புப் போராட்டத்தை பெரியார் அறிவித்தார்.

 அப்போது டில்லி சென்றிருந்த காமரசரிடம் “பெரியார் உங்கள் நண்பர். பின் ஏன் உங்கள் ஆட்சியில் போராட்டம் நடத்துகிறார்?” என்று நேரு கேட்டார்.
”பெரியார் என் நண்பர் தான். ஆனால், இந்திக்கு அவர் நண்பர் இல்லையே! இந்தித்திணிக்கப்படுவதால் எதிக்கிறார் கைவிட்டால் அவரும் போராத்தை கைவிடுவார்” என்றார்.

 அதன்பின் நேருவின் உறுதிமொழிப்படி இந்தித் திணிப்பு இல்லையென்று காமராசர் அறிவிக்க, பெரியார் தேசியக் கொடிப்போராட்ட்த்தை ஒத்திவைத்தார்.

காணக்கிடைக்காத மாமனிதர் காமராசர்!

காணக்கிடைக்காத மாமனிதர் காமராசர்!


 

 பெரியார் சொல்கிறார். அதைநான் செய்கிறேன்!
 

பெரியார் இல்லை என்றால் நமக்கெல்லாம் முன்னேற்றம் ஏது? - காமராசர்

தமிழன் வீடு என்றால் பெரியார் படமும், காமராசர் படமும் இருக்க வேண்டும் – நெ.து.சுந்தரவடிவேல் (முன்னாள் துணைவேந்தர் சென்னைப் பல்கலைக் கழகம்)

காமராசர்:

ஏழை கிராம மக்கள் ஏற்றம் பெறவேண்டும்! என்று உழைத்தவர்.

இன்றைக்குத் தமிழகத்திலிருக்கிற அணைக்கட்டுகள், தொழிற்சாலைகள், கல்விக் கூடங்கள் பலவற்றை அமைத்தவர்.

இராஜகோபாலாச்சாரி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தவர்.

மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி ஆகியவற்றிற்கு மாணவர் சேர்க்கப்பட, நேர்முகத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 150 ஆக இருந்ததை இராஜாஜி 50 மதிப்பெண்ணாகக் குறைக்க அதை மீண்டும் 150 ஆக உயர்த்தினார் காமராசர்.

எங்கிருந்தாலும், யாரைச் சந்தித்தாலும் ஏழைகளைப் பற்றியே பேசினார், சிந்தித்தார், செயல்பட்டார்!

எடுத்துக்காட்டாக,

சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராய் இருந்தார் நெ.து. சுந்தரவடிவேலு. பெரியாரிடமும், காமராசரிடமும் பேரன்பும், பெரும் மதிப்பும் கொண்டவர். புதுடில்லி விமான நிலையத்தில் அவர் நின்று கொண்டிருந்தபோது, காமராசரும் அங்குவர, அவருடன் ஏராளமானவர்கள் வந்து காமராசருக்கு மரியாதைத் தந்தனர்.

அந்தக் கூட்டத்திலும் தூரத்தில் நின்ற நெ.து.சுந்தரவடிவேலு அவர்களைப் பார்த்துவிட்டு, அவரை நோக்கி வந்து,

”டில்லிக்கு எப்பவந்தீங்க!” என்று விசாரித்தார் காமராசர்.

நே.து.சு. வணங்கிவிட்டு விவரம் சொன்னார். காமராசர் மீண்டும் கூட்டத்தை நோக்கிச் சென்றுவிட்டார்.
 

 விமானம் புறப்படத்தயாரானது. காமராசர் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார். நெ.து.சு. விமானத்தின் பின் பகுதியில் அமர்ந்திருந்தார். விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் காமராசர் பின்பகுதியில் கண்ணைச் செலுத்தித்தேடிவிட்டு, இருக்கையிலிருந்து எழுந்து நெ.து.சு. அமந்திருக்கும் இடம் நோக்கிச் சென்றார்.

நெ.து.சு. எழுந்து நிற்க, அவரை அமரச்செய்து, அவர் அருகில் காமராசர் அமர்ந்து கொண்டார்.
தமிழ்நாட்டின் கல்வித் துறைப்பற்றி அவரிடம் காமராசர் பேசத் தொடங்கினார்.

”கிராமமக்களுக்கு மேல்படிப்பு ரொம்ப சுலபமாக கிடைக்கணும். அதுதான் முக்கியம்.

நகரத்திலிருக்கிறவன் எவ்வளவு செலவானாலும் படிச்சிடுவான். கிராமவாசி எங்கே போவான்! சாதாரண பள்ளிப் படிப்புக்கே அவன் ஆடு, மாடு, கோழியெல்லாம் விற்கவேண்டியிருக்கு....! கிராமபுற ஏழைப்புள்ளங்க மேல் படிப்பு படிக்க ஏற்பாடு செய்யணும்...!” என்று பேசினார்.

நெ.து.சு. அவர்கள், “உங்கள் முயற்சியால், இன்றைக்கு கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் 60% மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள்” என்றார்.

அதற்குக் காமராசர், “அதைத் தானே நாம் விரும்பினோம்; அதுக்குத் தானே இவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஒரு தலைமுறை படித்து மேல வந்துட்டா அப்புறம் அந்தத் தலைமுறையே, அந்த கிராமமே மேல வந்துடும்! என்றார்.

”அய்யா பெரியார் கிட்ட இந்தவிவரத்தைச் சொன்னேன். அவருமிகுந்த மகிழ்ச்சியோடு, “இவ்வளவுக்கும் காரணம் காமராசர் அய்யாதான். அவருக்குத்தான் தமிழன் கடன் பட்டிருக்கான். அவர் மட்டும் இல்லான்னா 1952 லேயே நம்ம தலைமுறையையே இராஜகோபாலச்சாரியார் குழித்தோண்டி புதைத்திருப்பார்” என்று பெரியார் சொன்னதைக் கூறினார் நெ.து.சு.

உடனே காமராசர், “அது எப்படின்னேன்? எல்லாம் பெரியார் அய்யாவாலேதான் நடக்குது! அவர் சொல்றார் நாம செய்றோம்...! காரணகர்த்தா அவர்தானே! 1952ல் வந்த பிரச்சினை” அய்யாயிரம் வருஷமா இருக்கிற தாச்சே...! கடவுள் பேராலும், மதத்து பேராலும் நம்ம ஒடுக்கிவைச்சுட்டானே...! இதைப்பத்தியாரு கவலைப்பட்டா...?

பெரியார் ஒருத்தர் தானே தலையில எடுத்துப் போட்டிட்டு பண்ணிட்டிருக்கார். அவர்மட்டுமில்லன்னா நம்ம புள்ளைங்க கதி என்னாயிருக்கும்?

கோவணங்கட்டி ஏர் ஓட்டினவர்கள், கலக்டரா, செக்ரட்டரியா. ஒக்காந்திருக்க யார் காரணம்! பெரியார் தானே...!

நம் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரியார் சொல்றதை செய்யுறோம்...!

பெரியார் எந்த அதிகாரமும் இல்லாமலே எவ்வளவு பெரியகாரியத்தையெல்லாம் நம்மக்களுக்காச் செய்கிறார்! “என்று உணர்வு பொங்கக் கூறினார் காமராசர். தமிழன் வீடு என்றால் அங்கு பெரியார் படமும் காமராசர் படமும் இருக்க வேண்டும், என்றார் நெ.து.சு!

வாழ்க பெரியார்! வாழ்க காமராசர்!

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Saturday, March 20, 2010

‘‘வைக்கம் வீரர்’’ யார்? (ஜெயமோகனுக்கு மறுப்பு) -2

ஆய்வாளர்கள் இருவகை:
1. எது சரியென்று தேடல் மேற்கொண்டு, அரிய தரவுகளைப் பெற்று, ஆய்வு செய்து, உண்மையை, சமரசத்திற்கு இடமின்றி, விருப்பு வெறுப்பு இன்றி வெளியிடுவோர் ஒரு வகை.

2. முன் முடிவு ஒன்றை எடுத்துக் கொண்டு, அதற்குத் தேவையான வகையில், கற்பனைகளை, யூகங்களை, திரிபுகளை, ஆதாரமற்ற செய்திகளைக் கூறியும், தொடர்பில்லா செய்திகளைத் தொடர்புபடுத்தும் முயற்சிகளைச் செய்தும், தனக்குச் சாதகமில்லாத செய்திகளை முற்றாக மறைத்தும் தனது கருத்தை (முடிவை) நிலை நாட்டுகிறவர்கள் மற்றொருவகை.

இவர்களுள் ஜெயமோகன் இரண்டாம் வகை.

இவர் எடுத்துக் கொண்டு நிறுவ வந்தது பெரியார் வைக்கம் வீரர் அல்லர் என்பதே. அப்படியாயின் அந்தக் கோணத்தில் அதற்கான ஆதாரங்களைச் சொல்ல வேண்டும் என்ற கோணத்தில் சொல்லாமல், பெரியாரின் உழைப்பை, தியாகத்தை, தொண்டை, புரட்சியை, உயர்வை, பங்களிப்பை, சாதனைகளை, பெருமையை, புகழை, உலகமே ஏற்றுப் போற்றிய இணையிலாப் பெருமையை ஒட்டு மொத்தமாக மறைத்து, மாற்றி, ஒன்றுமே இல்லை, அவர் ஒரு சாதாரண ஆள். திராவிட இயக்கத்தவர் அவரை ஊதிப் பெருக்கிக் காட்டுகின்றனர் என்கிறார்.

மேலும் “ஈ.வெ.ரா. வரலாற்றைப் பற்றிய புரிதலோ, தன் கருத்துக்களின் விளைவுகள் பற்றிய புரிதலோ இல்லாமல் பேசினார். இன்று சில வரலாற்றாசிரியர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சித்திரம் போலன்றி, பெரியார் என்றுமே ஒரு மாபெரும் மக்கள் தலைவராக இருக்கவில்லை. அவரது கருத்துக்களுக்கு பரவலான சமூகச் செல்வாக்கும் இருக்கவில்லை. திராவிட இயக்கம் அவரது தலைமையில் ஒரு குறுங் குழுவாகவே இருந்தது.”

“இன்றைய திராவிட இயக்கத்தின் நிறுவனராக பின்னால் சென்று பார்ப்பதனாலே ஈ.வெ.ரா. அவர்களின் ஆளுமை இன்றுள்ள வடிவை அடைகிறது என்கிறார் இந்த ஜெயமோகன்.

இதைவிட, பைத்தியகாரப் பிதற்றல் வேறு என்ன இருக்க முடியும்?

மக்கள் செல்வாக்கில்லாதவரா பெரியார்? அவர் கொள்கையை மக்கள் ஏற்கவில்லையா? அண்ணாதான் பெரியாரை பெரியவராக்கினாரா? அற்பத்தனமும், அயோக்கியத்தனமும் இருந்தாலன்றி இப்படி எழுத முடியாது.

1. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் (பி.ஜே.பி. தவிர) பெரியார் படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்கின்றனவே அதன் அடித்தளம் என்ன? அவசியம் என்ன?

2. இடஒதுக்கீட்டில் எம்.ஜி.ஆர். கை வைத்ததும் மக்கள் அவரைப் புறக்கணிக்க, இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தி, தன்னைத் திருத்திக் கொண்டு மீண்டும் செல்வாக்கு பெற்றாரே அதன் உட்பொருள் என்ன?

3. பி.ஜெ.பி. என்ன தகிடுதத்தம் போட்டாலும் தமிழகத்திலும் காலூன்ற முடியவில்லையே அதன் காரணம் யார்?

4. உலகத்திற்கே உரித்தான தமிழ் நூல் திருக்குறள் என்று மக்களுக்கு அடையாளம் காட்டி, அதை மாநாடுகள் போட்டு மக்கள் மத்தியில் பரப்பியவர் யார்?

5. இளம் வயது திருமணத்தை எதிர்த்து, விதவைத் திருமணத்தைத் தூண்டும் விதத்திலே செயல்பட்டவர் யார்? அதுவும் தன் குடும்பத்திலே செய்து காட்டியவர் யார்?

6. பெண்ணுரிமைக்காகவே தன் வாழ்க்கையைச் செலவிட்டு பெண்களுக்கென அனைத்து உரிமைகளும் கிடைக்க வழி செய்தவர் யார்? நன்றியுள்ள பெண்கள் அவருக்கு அளித்த பெயர்தானே “பெரியார்” என்ற சிறப்புப் பெயர், பெரியாரைப் பேசாத பெண்ணுரிமைப் போராளிகள் உண்டா?

7. ஆரிய ஆதிக்கத்தை ஒழித்து, ஆரிய பார்ப்பனர்களின் கொட்டத்தை ஒடுக்கியது யார்?

8. இடஒதுக்கீட்டிற்காக இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தத்தை ஏற்படுத்தச் செய்து இலட்சோப லட்சம் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர வழி செய்தது யார்?

9. மூடநம்பிக்கை ஒழிய மூலைமுடுக்கெல்லாம் மூத்திரப்பையோடு சுற்றி, தன்மானமுள்ள தமிழர்களை உருவாக்கியது யார்?

10. மானம் கெட்ட மணமுறையை மாற்றி சுயமரியாதைத் திருமணத்தை செய்து காட்டி இன்று பெருவாரியான மணங்கள் அப்படி நடக்கச் செய்த சிற்பி யார்?

11. கருவறைக்குள் செல்ல அனைத்து சாதியினருக்கும் உரிமை கிடைத்தது யாரால்?

12. உலக அளவில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் மக்களிடம் ஆழப்பதிந்த கடவுள் நம்பிக்கையை அவர் அகற்றவும் முயற்சித்தார். அதுவும் “மலையை மயிரைக் கட்டி இழுக்கிறேன்; வந்தால் மலை போனால் மயிர்!” என்று அடைவு (முடிவு) அறிந்தே முயற்சித்தார்.

மக்கள் பெருவாரியாகக் கடவுளை கைவிடவில்லை என்பதை மட்டும் வைத்து பெரியார் கொள்கைகளை மக்கள் ஏற்கவில்லை, நிராகரித்தார்கள் என்பது எவ்வளவு பெரிய அறிவீனம்.

கடவுள் நம்பிக்கையை விடமுடியாமல் மக்கள் உள்ளனர் என்பதுதான் உண்மையேயன்றி, கடவுள் நம்பிக்கை ஆட்டங்கண்டு, கலகலத்து நிற்பது நிதர்சன உண்மையல்லவா?

ஆனால், பெரியாரின் பிரச்சாரத்தால் மூடநம்பிக்கைகள், முட்டாள் தனங்கள், சாமியார் பின் செல்லல், மானம் இழத்தல் என்று எத்தனையோ இழிவுகள் இன்று அகலவில்லையா?

கடவுள் இல்லையென்ற பெரியார் கருத்தை மக்கள் பெருமளவு ஏற்காததால் பெரியாரை மக்கள் நிராகரித்ததாகப் பொருளா? பெரியாரின் கொள்கைப் பிரச்சாரத் தொண்டில் கடவுள் மறுப்பு என்பது ஒரு விழுக்காடு மட்டுமே.

ஆனால், மனித நேயத்தோடு அவர் மக்களின் உரிமைக்காக, சமத்துவத்திற்காக, இழிவு அகற்ற அவர் ஆற்றிய தொண்டிற்கு அளவுண்டா?

கடவுள் நம்பிக்கை கொண்ட கோடானு கோடி மக்கள், பெரியாரின் இந்த அளப்பரிய தொண்டுகளை ஏற்று, அவரை அளவு கடந்து மதித்ததை கண்கூடாகக் காணலாமே!

தமிழகத்தில் கடவுளை ஏற்றுக்கொண்ட மக்களில் 90 விழுக்காடு மதிப்பதை விழுக்காடு மக்கள் பெரியாரை அவரது தூய தொண்டிற்காய் மதிக்கக் கூடியவர்களாயிற்றே! பெரியாரை மனமார ஏற்றுக் கொண்டவர்களாயிற்றே!

இன்று பக்தர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் தாங்கள் பெற்றிருக்கும் வாழ்வு பெரியார் போட்ட பிச்சையென்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்களே தெரியாதா?
(தொடரும்)

‘‘வைக்கம் வீரர்’’ யார்? (ஜெயமோகனுக்கு மறுப்பு) -1

* “ஈ.வெ.ரா. வைக்கம் வீரர் அல்லர்’’!

* “ஈ.வெ.ரா. அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார்’’.

* ‘‘அவரது உரைகள் முரண்பாடுகளின் தொகையாக உள்ளன’’.

* ‘‘திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஒரு பரப்பிய இயக்கம். பரப்பிய இயக்கம் என்றுமே பொது மேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது... எதிரிகளை உருவாக்கி, அவர்கள்மீது உச்ச கட்ட வசைகளைப் பொழிந்து அந்தக் கருமைச் சித்திரம் முன்பு தன்னை வெண்மையாகக் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு ஹீரோ X வில்லன் என்ற நாடகத் தன்மை தேவையாகிறது.’’

* ‘‘ஈ.வெ.ரா. என்றுமே ஒரு மாபெரும் மக்கள் தலைவராக இருக்கவில்லை’’.

* “திராவிட இயக்கத்தை மக்களிடையே கொண்டு சென்றவர் கவர்ச்சிப் பாவாதியான சி.என். அண்ணாத்துரை அவர்களே’’.

* “காந்திய யுகத்தின் இன்னொரு பெருந் தலைவர் அல்ல ஈ.வெ.ரா.’’

* ‘‘வரலாற்று நிகழ்ச்சிகளைப் பார்க்கையில் அவற்றை எளிமையான தப்பு, சரிகளின் ஆட்டமாக அல்லாமல், சிக்கலான ஊடுபாவுகளின் பின்னலாக உருவகித்துக் கொள்வது உகந்தது’’.

* ‘‘கேரளம் புறத்தொடர்பு இல்லாமல் பழங்குடி மனநிலையை அப்படியே நீட்டித்துக் கொண்ட நிலமாகவே பதினெட்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது.’’


அறிவு, நாணயம் அறவே இல்லாமல், மாபெரும் உண்மைகளை முழுப்பூசணிக்காயை பிடிசோற்றில் மறைக்கும் வகையில், உண்மை கலவா அப்பட்டமான பொய்களைக் கூறி, ஒரு பெரும் இமயத்தை மணற்குன்றாகக் காட்ட முயலுவதோடு பெரியார் என்ற மாபெரும் மனிதரின் மதிப்பீடுகளை வரலாறு அறிய வாய்ப்பில்லா இணையதள இளைஞர்களின் மத்தியில் தகர்த்து, தரம் தாழ்த்தும் அற்பத்தனமான அயோக்கிய வழியிலான முயற்சியில் இறங்கியுள்ள ஜெயமோகன் என்பவர் இணையதளத்தில் ஏற்றியுள்ள கருத்துகளே மேற்கண்டவை.

யார் இந்த ஜெயமோகன்?

பெரிய ஆய்வே தேவையில்லை.

“காந்தியும் வைக்கமும்’’ என்ற தலைப்பில் இணையத்தில் (http://www.jeyamohan.in) அவர் எழுதியுள்ள கட்டுரையைக் கூர்ந்து நோக்கினால் யார் இந்த ஜெயமோகன் என்பது அப்பட்டமாக விளங்கிவிடும்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை அடிமனதில் ஏற்றிக் கொண்டு, கண்ணியவான்போல் கருத்துக்கூற முற்பட்டிருக்கும் ஒரு வஞ்சக வேடதாரி இந்த ஜெயமோகன் என்பது, இக்கட்டுரையை இவர் எழுதியுள்ள முறையிலேயே, இம்மியளவும் அய்யத்திற்கிடமின்றி தெளிவாகின்றது.

சங்கர நாராயணன் என்பவர்,
“வைக்கம்’’ போராட்டத்தில் காந்தியின் துரோகம் குறித்து பெரியாரின் மேற்கோளுடன் நிறையவே பேசப்படுகிறது. “வைக்கம் தெருவில் தாழ்த்தப்பட்ட சாதியினர் நடமாட உரிமையை வாங்கிக் கொடுத்தவர் “பெரியார்’’ என்ற வரிகளை சுவர்களிலெல்லாம் காண்கிறோம். உண்மையில் என்ன நடந்தது?’’ என்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முற்பட்ட இந்த ஜெயமோகன் இருபது பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையின் துவக்கத்திலேயே அவர் எழுதியுள்ள அற்ப செய்திகளே மேற்கண்டவை.

இருபது பக்கம் கொண்ட இக்கட்டுரையில்,
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை ‘‘காந்தி’’ என்றும் இராஜகோபாலாச்சாரியாரை ‘‘இராஜாஜி’’ என்றும் மக்கள் அன்போடு அழைக்கும் வகையிலே மதிப்போடு குறிப்பிடுகிற இந்த ஜெயமோகன், கோடானுகோடி மக்களால் உலக அளவில் “அண்ணா’’ என்று அழைக்கப்படும் அந்த அறிஞர் பெருந்தகையை அண்ணாத்துரை என்றே எழுதுகிறார். உலகமே ஏற்றுக் கொண்ட “பெரியார்’’ என்ற மதிப்பிற்குரியவரை ஈ.வெ.ரா. என்று மட்டுமே குறிப்பிடுகிறார். தப்பித் தவறிக்கூட அந்த இருபது பக்கத்தில் எந்த இடத்திலும் பெரியார் என்று குறிப்பிட்டுவிடக் கூடாது என்பதில் திட்டமிட்டு எச்சரிக்கையுடன் இருக்க ஈ.வெ.ரா. என்றே குறிப்பிடுகிறார்.

காந்தியாரை “காந்திஜி’’ என்று எல்லோரும் மதிப்போடு அழைப்பது வழக்கில் இருக்கையில் காந்திஜி என்று அவரைக் கூற மறுக்கும் இந்த ஜெயமோகன் இராஜகோபாலாச்சாரியாரை மட்டும் “இராஜாஜி’’ என்று அழைக்கிறார்.

முழுப்பெயரைச் சொன்னால் சிறுமையா? பகுத்தறிவுப்படி தவறா? என்ற கேள்வி எழலாம். அப்படியாயின் இராஜகோபாலாச்சாரியாரையும் பெயர் சொல்லியிருக்கலாம் அல்லது ஈ.வெ.ரா. என்று பெரியாரைச் சொன்னது போல சி.ஆர். என்று இராஜாஜியை அழைத்து மகிழலாம் அல்லவா? ஏன் அழைக்கவில்லை?

இங்குதான் சனாதன தர்மத்தைத் தாங்கும் இவர்களின் (ஜெயமோகன்களின்) உண்மை உருவம் புலப்படுகிறது. “அண்ணா’’ “பெரியார்’’ ‘‘காந்திஜி’’ என்று கூற மறுக்கும் அவரது உள்ளம் ‘‘இராஜாஜி’’ என்று குறிப்பிட மட்டும் தாராளமாக இடம் கொடுக்கிறது. இது வெறும் பெயர் பிரச்சினையல்ல. இது உளவியல் சார்ந்த அணுகுமுறை. ஓர் ஆள் யார் என்பதை அடையாளம் காட்டும் கருவி. அவர்கள் உணர்வை வெளிப்படுத்தும் தடயம்.

“துக்ளக்’’ சோ இராமசாமி அப்படித்தான் தன்னை நடுநிலையாளர் போலக் காட்டிக் கொண்டு, எல்லோரையும் விமர்சிப்பார். சங்கராச்சாரி அதுவும் பெரியவாள் என்று அவாள் அழைக்கும் சந்திரசேகர சரஸ்வதி சாமியாரை மட்டும் அவர் விமர்சிக்க மாட்டார். இராஜாஜி பெயர் வைத்தால் அதை ஏற்பார். அண்ணா பெயரை வைத்தால் ஏற்க மாட்டார். அண்ணா சாலையென்று பெயர் வைத்தால் அதை ஏற்காது மவுன்ட்ரோடு என்றே எழுதுவார்.

இதுதான் ஆர்.எஸ்.எஸ். அடிமனம் என்பது ஆரிய மனம் அல்லது ஆரிய அடிமனம் என்றும் கொள்ளலாம்.

(தொடரும்)