அரசியல்

Showing posts with label துக்ளக். Show all posts
Showing posts with label துக்ளக். Show all posts

Tuesday, September 12, 2017

துரோகம் புரியும் கிருஷ்ணசாமிதான் ‘துக்ளக்’கின் பாராட்டுக்குரியவர்!


திருமாவளவன் தாழ்த்தப்பட்டோரின் எதிரியாம், ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காகச் செயல்படுகிறாராம். கம்யூனிஸ்டுகள், மற்ற உரிமை காப்பு, மீட்பு அமைப்புகள் எல்லாம் தேசத் துரோகிகளாம்.

‘துக்ளக்’ குருமூர்த்தியின் கூட்டம்தான் தியாகத்தின் திருஉருவங்களாம்!

இந்த நவீன உலகத்தில்கூட எவ்வளவு அப்பட்டமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள் பாருங்கள்.

அனிதாவின் மரணத்தை வைத்து ஆதாயம் அடையப் பார்க்கிறார்கள் என்கிறது இந்த அய்யர்வாள் கூட்டம்.

பி.ஜே.பியிடம் விலைபோன, தலித் துரோகி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழர் துரோகி இந்த கிருஷ்ணசாமி.

எப்போது ஆரியப் பார்ப்பனக் கூட்டம், இப்படிப்பட்ட கோடாரிக்காம்புகளை உருவாக்கி, தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட கருவியாய்ப் பயன்படுத்தும் காரியத்தை பரம்பரையாய் செய்து வருகின்றன.

இராவணனின் உடன்பிறந்த விபீஷணனையே பதவி ஆசைகாட்டி தங்கள் கையாளாய்ப் பயன்படுத்திய கூட்டம் அல்லவா?

இன்றைய விபீஷணன், எட்டப்பன் டாக்டர் கிருஷ்ணசாமி.

எப்போதுமே எதிரிகளைவிட, அவர்களின் கையாளாய்ப் பயன்படும் கைக்கூலிகள்தான் அதிகம் குதிப்பர். அந்தக் குறிப்பை டாக்டர் கிருஷ்ணசாமியிடம் தற்போது காணலாம்.

அனிதாவின் தற்கொலையை, படுகொலையென்றே மனிதநேயம் உள்ள அனைவரும் கூறுகிறார்கள் என்றால் அதன் பொருள் என்னவென்று மனிதத் தன்மையுள்ள எவரும் சிந்தித்து உணர்வர். அந்தப் பெண் கோழையல்ல, வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள முடியாதவர் அல்ல.

பின் ஏன் அனிதா அந்த முடிவை எடுத்தார்?

வேலுநாச்சியார் படையிலிருந்த குயிலி ஆயுதக் கிடங்கை அழிக்க தன் உடல் முழுக்க நெய்ப்பூசி தனக்குத்தானே தீயிட்டுக் கொண்டு அக்கிடங்கில் குதித்தாளே அது தற்கொலையா?

ஆங்கில ஆதிக்கத்தை அழிப்பதற்காக அவர் கையாண்ட தியாகம் அல்லவா?

இன்று அனிதா செய்துள்ளதும் ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சியை அழிப்பதற்கான தியாகமே!

இதை புரியாத, புரிந்தும் புரியாததுபோல அவர் மரணத்தையும், அவர் மரணத்தால் தமிழகம் கொதித்தெழுந்ததையும் கொச்சைப்படுத்துகிறது ஒரு கூட்டம் என்றால், அவர்களுக்கு அறம் கிடையாது, நீதி கிடையாது, நேர்மை கிடையாது, நலிந்தோரின் வலி தெரியாது, மொத்தமாக மனிதநேயம் என்பதே கிஞ்சிற்றும் கிடையாது.

காரணம் அது பாசிசக் கூட்டம், தன் ஆதிக்கம், தன்னலம், தன் வாழ்வு, தன் உயர்வு இதற்கு எதையும் அழிப்பர்; யாரையும் ஒழிப்பர்.

தொடக்கக் கல்வி பயின்ற காலத்திலிருந்தே மருத்துவர் என்ற கனவை மனதிற் சுமந்து, அல்லும் பகலும் அதற்காகவே உழைத்து, பொதுப் போட்டியிலே மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் தகுதிபெற்ற ஒரு பெண்ணைப் பார்த்து உனக்கு மருத்துவம் பயில தகுதியில்லை என்கிறது ஒரு கூட்டம். அதுதான் சரி என்கிற அடிமை கிருஷ்ணசாமிக்கு சபாஷ் தெரிவிக்கிறார் குருமூர்த்தி அய்யர். கிருஷ்ணசாமிதான் நேர்மையாய்ப் பேசுகிறார் என்கிறார்.

ஒரு ஒடுக்கப்பட்ட 17 வயதுப் பெண் ‘நீட்’ என்னும் சுருக்குக் கயிற்றால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுபோல் ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் விரக்தியின் உச்சத்தில், வேதனையின் விளிம்பில் முடங்கிக் கிடக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களின் உரிமையை அபகரித்த ஆதிக்க, பாஸிஸ கும்பல், கொஞ்சங்கூட குற்ற உணர்ச்சியின்றி ஊருக்கு நியாயம் சொல்லிக் கொண்டிருப்பதுதான், சகிக்க முடியாத வேதனை!

இப்படிப்பட்ட யோக்கியர்களிடம் நன்சான்றும் சபாஷும் பெறும் கிருஷ்ணசாமிகள் எப்படிப்பட்ட துரோகிகள் என்பதை இவற்றிலிருந்தே  எடைபோட்டுக் கொள்ளலாம்!

“இன எதிரிகளிடம் எவன் ஒருவன் பாராட்டுப் பெறுகிறானோ அவன் இனத் துரோகி! இன எதிரிகளால் எவன் வெறுக்கப்படுகிறானோ அவனே இனத்தின் காவலன்’’ என்பதே அடிப்படை நியதி, உலக அனுபவம் உணர்த்தும் உண்மை!
அந்த அடிப்படையில் பார்த்தால் இன எதிரிகளால் பாராட்டப்படும் கிருஷ்ணசாமி இனத் துரோகி என்பதை எவரும் அறியலாமே!

Wednesday, February 24, 2016

பார்ப்பானைப் பார்த்தாவது பாடம் கற்போம் - 3


- மஞ்சை வசந்தன்

தங்கள் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ள ஆரிய பார்ப்பனர்கள் எந்த அயோக்கியச் செயலையும் செய்வர் என்பதற்கு துக்ளக் ‘சோ’வே சான்று.

தி.மு.க. ஆட்சிக்கு வரவேக் கூடாது என்பதற்கும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்கான காரணங்களைப் பட்டியல் இடமுடியுமா? என்று சோவிடம் கேட்ட கேள்விக்கு,

“தி.மு.க. ஆட்சியில் கண்ட அனுபவம் போதும் என்பது மக்களின் நினைப்பு. தி-.மு.க. வரக்கூடாது என்பதற்கு அதுதான் காரணம். அதற்கு அ.தி.மு.க.வே மேல் என்பதற்கும் அதேதான் காரணம்’’ என்று துக்ளக் சோ பதில் அளித்துள்ளார்.

இதைவிட அயோக்கியத்தனம் உண்டா?

மக்கள் என்றால் அக்ராஹரத்து ஆட்கள் என்று பொருளா?

தி.மு.க.வின் ஆட்சியின் கேடுகளை விட அ.தி.மு.க. ஆட்சியில் பலமடங்கு அதிகம் என்பதே மக்களின் கருத்து. ஊழல் புள்ளி விவரங்களும் அதையேச் சொல்கின்றன. அந்த உண்மையை அப்படியே மறைத்து, மாற்றி கொஞ்சங்கூட நியாயம், நேர்மை, நாணயம் இன்றி பதில் அளித்துள்ளார்.

 அதே துக்ளக் இதழில் மற்றொருவர்,

”சதவிகிதப்படி பதில் சொல்லுங்கள். அ.தி.மு.க அரசின் நிறை,குறை எவ்வளவு?” என்று கேள்விக் கேட்டதற்கு,

”கேள்விகளை சதவிகிதப்படி பார்த்தால் உங்கள் கேள்வி மிகவும் பின்னால் வருகிறது. அதனால் சதவிகிதப்படி அதற்குரிய பதிலைத் தர இயலவில்லை. என்று பதிலளித்துள்ளார். இதை விட ஓர் அயோக்கியத்தனமான பதிலை உலகத்திலேயே பார்க்க முடியுமா?

துக்ளக்கில் சோ செய்யும் வேலையை, தினமணியில் அவர் சீடர் வைத்தியநாதன் செய்கிறார்.

ஆரிய பார்ப்பானுக்க உள்ள உணர்வு தமிழனுக்கு வரவேண்டும்!

ஆதாரம் : துக்ளக் 02-03-2016

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Wednesday, January 13, 2016

துக்ளக்கில் சுதா சேஷய்யன்எழுதியதற்கு மறுப்பு

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

- மஞ்சை வசந்தன்

தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளை அழிப்பதிலும் திரிப்பதிலும் ஆரியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மாற்றி, சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று திரித்து, சமஸ்கிருத பெயரைத் தமிழ் ஆண்டின் பெயர் என்று திணித்து, தமிழர் பண்பாட்டை அழிக்கின்றனர். 

20.1.2016 ‘துக்ளக்’ இதழில் சுதா சேஷய்யன் என்ற அம்மையார், தன் ஆரிய இனப்பற்றின் உந்துதலால் சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு என்று சாதிக்க முயற்சிக்கிறார். வலுவான சான்று எதையும் காட்டாது வழக்கமாக ஆரியம் செய்யும் மோசடி வேலையையே இவரும் செய்கிறார். எனவே, அதை மறுத்து உண்மையை உணர்த்த கீழ்க்கண்டவற்றை தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

தமிழர்கள் நாள், மாதம் ஆண்டுக் கணக்கீட்டை உலகுக்கு முதன்முதலில் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டுக் கொடுத்தவர்கள்.

காலையில் சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற ஆகும் காலம் ஒரு நாள்.

மாதம் என்பதற்குத் திங்கள் என்று ஒரு சொல் உண்டு. திங்கள் என்றால் நிலவு. நிலவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் திங்கள் என்ற பெயர் மாதத்திற்கு வந்தது.

முழுநிலவு தோன்றி மீண்டும் முழு நிலவு தோன்ற ஆகும் காலம் ஒரு மாதம்.
அதேபோல் ஆண்டு என்பது சூரியன் இருப்பை வைத்துத் தமிழர்களால் கணக்கிடப்பட்டது. சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடகோடி முனைக்குச் செல்ல ஆறு மாதம். அது மீண்டும் தென்கோடி முனைக்கு வர ஆறுமாதம். ஆக, தென்கோடி முனையில் தோன்றும் சூரியன் மீண்டும் தென்கோடி முனையை அடைய ஆகும் காலம் ஓர் ஆண்டு என்று கணக்கிட்டனர். (சூரியன் நிலையாகவுள்ளது என்பது அறிவியல் உண்மை. ஆனால் பார்வைக்கு அது இடம் மாறுவதாய்த் தோன்றுவதை வைத்துக் கணக்கிட்டனர்.)

உலகில் முதன்முதலில் ஆண்டுக் கணக்கீட்டை சூரியன் இருப்பை வைத்துக் கணக்கிட்டவர்கள் தமிழர்கள். பின் இதனைப் பின்பற்றியே ஆங்கிலேயர்கள் ஆங்கில ஆண்டை அமைத்தனர்.

சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாளே தமிழ் ஆண்டின் பிறப்பு. தமிழரின் புத்தாண்டு அன்றுதான். அந்த நாளே பெரும் பொங்கல் எனப்படும் சூரியத் திருநாள்.

ஆனால், இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய இத்தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல்நாள் என்று மாற்றி, அதற்கு ஒரு புராணக் கதையை எழுதிச் சேர்த்து, தமிழ்ப் பண்பாட்டை ஒழித்து, ஆரியப் பண்பாட்டை, தமிழ்ப் புத்தாண்டிலும் புகுத்தினர்.

அதாவது, நாரதர் கிருஷ்ணனைப் பார்த்து, “நீர் அறுபதானாயிரம் கோபிகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’’ என்று கேட்டார். அதற்கு கண்ணன், “நான் இல்லாப் பெண்ணை உனக்கு உரியதாக்கிக் கொள்’’ என்று கூற, நாரதர் எல்லா வீடுகளிலும் சென்று பார்த்தபோது, கண்ணன் இல்லாத வீடு கிடைக்காததால், கண்ணன் மீதே காமங்கொண்டு, “நான் பெண்ணாய் மாறி உங்களைப் புணர வேண்டும்’’ என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்த, “யமுனையில் குளித்துவிட்டு வாருங்கள்’’ என்று நாரதரைப் பார்த்து கண்ணன் கூற, யமுனையில் குளித்த நாரதர் அழகிய பெண்ணாக மாறினார். அந்த அழகில் மயங்கிய கண்ணன், பெண்ணாயிருந்த நாரதரை அறுபது ஆண்டுகள் புணர்ந்து, அறுபது பிள்ளைகளைப் பெற்றார். அவர்களே, பிரபவ தொடங்கி அட்சய முடிய அறுபது ஆண்டுகள் என்று ஆபாசமான அறுவறுப்பான ஒரு புராணக்கதையைச் சொல்லி, இவற்றைத் தமிழாண்டுகள் என்றனர். தமிழே இல்லாத இந்த அறுபது ஆண்டுகளைத் தமிழ் ஆண்டு என்று திணித்தனர். 

தமிழாண்டு என்றால் தமிழிலல்லவா ஆண்டுப் பெயர் இருக்கும். சமஸ்கிருதத்தில் உள்ள 60 ஆண்டும் எப்படித் தமிழாண்டாகும். சித்திரை தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது ஆரியர் பண்பாட்டின் திணிப்பு. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதே தமிழரின் மரபு!

அடுத்து, அறிவியல் அடிப்படையில், வேளாண் விளைச்சலுக்கு முதன்மைக் காரணமாய் இருக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பொங்கல் திருநாளை மகரசங்கராந்தி என்று மாற்றினர் ஆரியப் பார்ப்பனர்கள்.

“சூரியன் தனுசு இராசியில் சஞ்சரிக்கும் காலம். இது தேவர்களுக்கு விடியற்காலம். மகா சங்கிரமே சக்தி எனும் சக்தி தட்சிணாயணம் ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்த நிலையில், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கியதனால், தை மாதம் முதல் நாள், அக்காலத்து விளைந்த பொருட்களைக் கொண்டு சூரியனை வழிபட்டனர். இதுவே மகர சங்கராந்தி என்று கூறி, பொங்கல் திருநாளை மகா சங்கராந்தி யென்று மாற்றினர்.

சூரியத் திருநாளை மகர சங்கராந்தி என்று மாற்றியதுபோல, மழைத் திருநாளை போகி என்று மாற்றினர்.

மழைத் திருநாள் போகிப் பண்டிகையாக்கப்பட்டது

தமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை தொன்மைக் காலத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பயன்படுகின்றவற்றை, தங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் தருகின்றவற்றை மரியாதையின் பொருட்டும், நன்றி செலுத்தவும் வணங்கினர்.

அதனடிப்படையில் மனிதர்களின் இன்பத்திற்கும், இனப் பெருக்கத்திற்கும் காரணமாய் அமைந்த ஆண் பெண் உறுப்புகளை இணைத்து நன்றியும், மரியாதையும் செலுத்தினர். அதுவே பின்னாளில் ஆரியர்களின் திரிபு வேலையால், புராணம் புனையப்பட்டு, சிவலிங்க வழிபாடாக்கப்பட்டது.

அதேபோல் குலப் பெரியோர், வீரர், பத்தினிப் பெண்டிர், நிலத் தலைவர் வழிபாடெல்லாம் அம்மன், முருகன், மாயோன், வருணன் வழிபாடுகளாக மாற்றப்பட்டன.

இதே அடிப்படையில் வேளாண் விளைவிற்குத் துணைநிற்கும் மழை, சூரியன், மாடு, உழைப்பாளிகளை மதிக்க, நன்றி சொல்ல தமிழர்கள் கொண்டாடிய அறிவிற்குகந்த, பண்பாட்டைப் பறைசாற்றும், நன்றி விழாவான பொங்கல் விழாவிலும் தங்கள் மூடக் கருத்துக்களை, சடங்குகளை, புராணங்களைப் புகுத்தினர்.

பொங்கல் என்பது அறுவடைத் திருவிழா. விளைவித்த விளைபொருள் களம் கண்ட மகிழ்வில், அந்த விளைவிற்குக் காரணமானவற்றை மதிக்கும் முகத்தான், முதலில் மழைக்கு நன்றி கூறினர். அது மழைத்திருநாள் ஆகும்.

மழை அன்றைய தினம் பொழியாது என்பதால், மழையின் அடையாளமாக ஒரு சொம்பில் தண்ணீர் வைத்து அதற்கு மரியாதைச் செலுத்தினர்.

ஆனால், ஆரிய பார்ப்பனர்கள் இந்த அர்த்தமுள்ள விழாவில் தங்கள் பண்பாட்டை நுழைத்தனர். மழைக்கு அதிபதி இந்திரன். இந்திரனுக்கு போகி என்று ஒரு பெயர் உண்டு. எனவே, மழைக்குக் காரணமான இந்திரனைக் குறிக்கும் போகி என்ற பெயரை மழைத் திருநாளுக்கு மாற்றாக நுழைத்து, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.

மழைக்கதிபதியாக இந்திரன் இருக்க, கரிய மாலை (திருமாலை), மழையின் பலன் பெற்றதற்காக வழிபட மக்களுக்குக் கட்டளையிட்டதால், வருணன் கோபம் கொண்டு பெரும் மழையை பெய்யச் செய்ய, இதனால் உயிரினங்கள் மழையால் பாதிக்கப்பட, கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய் பிடித்துக் காக்க, இந்திரன் தன் தோல்வியை ஒப்பி வெட்கிக் குனிந்து நிற்க, இந்திரனை மன்னித்து அவனுக்கும் சிறப்பு செய்ய, சங்கராந்திக்கு முதல் நாள் இந்திரன் என்ற போகிக்கு போகிப் பண்டிகை கொண்டாட கிருஷ்ணன் கட்டளையிட்டான். இதுவே போகி என்று புராணக் கதையைக் கூறி, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.

போகி என்பதை காலப்போக்கில் போக்குதல் என்று பொருள் கொண்டு, வீட்டிலுள்ள பழைய பொருட்களைக் போக்குதல் என்று முடிவு செய்து, பழைய நூல்கள் உட்பட எல்லாவற்றையும் தெருவிலிட்டு தீ வைத்தனர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொளுத்தப்படுவதால் காற்று மண்டலமே கரும்புகை மண்டலமாக மாறி, மூச்சுக் கோளாறுகளையும், மற்றக் கேடுகளையும் உருவாக்கி வருகிறது.

ஆக, ஆரிய பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பால், அர்த்தமுள்ள மழைப் பண்டிகை, போகிப் பண்டிகையாக மாற்றப்பட்டு, புகைப் பண்டிகையாகி கேடு பயக்கிறது.

பொங்கல் திருநாள்:

பொங்கல் திருநாள், பெரும் பொங்கல் என்று தமிழர்களால் அழைக்கப்படும். இந்த நாள் தமிழரின் முதன்மையான திருநாளும் ஆகும். காரணம், அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. அன்று பயிர் விளைய அடிப்படைக் காரணியாய் உள்ள சூரியனுக்கு நன்றி செலுத்தினர்.

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்

வேளாண் உற்பத்திக்கு மழை, சூரியன் இவற்றிற்கு அடுத்தது மாடுகள் கட்டாயம்.
காரணம், ஏர் உழப் பயன்படுவதோடு, வேளாண்மைக்குத் தேவையான உரம் கிடைக்கவும் மாட்டுக் கழிவுகள் பயன்படுகிறது என்பதாலும், மாடுகள் உழவனின் தோழன் என்பதாலும், உழவனின் செல்வம் என்கிற சிறப்பாலும் மாடுகளுக்கு ஒரு திருநாள் கொண்டாடினர் தமிழர். இது பண்பாட்டின் அடிப்படையில் நன்றி செலுத்தும் நோக்கில், உதவியாய் அமைந்தவற்றிற்கு உரிய சிறப்பு செய்யும் உணர்வில் உருவாக்கப்பட்டது. மாட்டுப் பொங்கல் தமிழரின் நன்றி கூறும் பண்பாட்டின் அடையாளம்.

ஆனால், இதையும் புராணக் கதையைப் புகுத்தி புரட்டு வேலை செய்து மாற்றினர். இந்திரன் கோபத்தால் கடும் மழை பெய்யச் செய்ததால் மாடுகள் மிகவும் சிரமப்பட்டதாகவும், பின்னர் மனம் மாறி இந்திரன் மழையை நிற்கச் செய்ததால், மறுநாள் மாடுகள் கட்டு அவிழ்த்து விடப்பட மகிழ்ச்சியில் துள்ளிப் பாய்ந்து ஓடினவென்றும், அதுவே மாட்டுப் பொங்கல் ஆனது என்றும் மாட்டுப் பொங்கலின் மாண்பிலும் மடமையைப் புகுத்தினர். தமிழர் பண்பாட்டில் ஆரியப் பண்பாட்டைப் புகுத்தினர்.

காணும் பொங்கல்:

அடுத்த நாள் கொண்டாடப்படும்  காணும் பொங்கல் என்பது வேளாண் உற்பத்திக்காக உழைக்கின்ற உழைப்பாளர்களுக்கு நன்றி சொல்லவும், அவர்களைச் சிறப்பிக்கவும் தமிழர்களால் உருவாக்கப்பட்டு கொண்டாடப்படுவதாகும்.

அன்று உழைப்பாளிகள் நில உரிமையாளர்களைச் சென்று கண்டு, நெல், காய்கறி, துணி போன்றவற்றைப் பெறுவர். நிலத்தின் உரிமையாளர்களும் உழைத்து உற்பத்திப் பெருக்கும் உழைப்பாளிகளை மகிழ்விக்க புத்தாடை, புதுப்பானை, புத்தரிசி, கரும்பு என்று பலதும் வழங்கிச் சிறப்பிப்பர்.

இப்படி உழைப்பாளிகளைச் சிறப்பிக்கத் தமிழர்கள் உருவாக்கிய உழைப்பாளிப் பொங்கல் என்னும் காணும் பொங்கலையும் புராணக் கதைப்புக் கூறி புரட்டினர்; தங்கள் பண்பாட்டைப் புகுத்தினர்.

கோபங் கொண்டு இந்திரன் பொழியச் செய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மழை நின்ற பின் ஒருவரையொருவர் கண்டு பாதிப்பு பற்றி விசாரித்தனர். அதவே காணும் பொங்கல் என்று கதை கட்டி, காரணம் கூறினர். காணும் பொங்கலிலும் ஆரியப் பண்பாட்டை, புராண மடமையைப் புகுத்தினர்.

இந்த உண்மைகளை மறைத்து ஆரிய பார்ப்பனர்கள் தொடர்ந்து சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்கின்றனர். சித்திரையில் சூரியன் தலைக்கு நேர் இருக்கும். ஆண்டு தொடங்கும்போது தலைக்கு நேர் இருந்து தொடங்க மாட்டார்கள். நாள் தொடங்கும்போது காலையில் சூரியன் கிழக்கில் உதிப்பதைத்தான் எடுத்துக் கொண்டனர். மாறாக, மதியம் தலைக்கு நேர் சூரியன் இருப்பதை எடுக்கவில்லை. அதேபோல் சூரியன் தென்கோடியிலிருந்து தை மாதம் முதல் நாள் வடக்குநோக்குவதைத்தான் ஆண்டின் தொடக்க மாகக் கொண்டனரே தவிர, சூரியன் தலைக்கு நேர் இருக்கும் சித்திரையை அல்ல.

தமிழர் பண்பாட்டை மாற்றி, மறைத்து, ஆரியப் பண்பாட்டைப் புகுத்துவதில் ஆரிய பார்ப்பனர்கள் எவ்வளவு முனைப்புடன் செயல்படுகிறார்கள் என்பதற்கு ‘துக்ளக்’ இதழும், சுதா சேஷய்யனும் சான்று. தமிழர்கள் இவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்!



Tuesday, December 29, 2015

துக்ளக் இதழின் பச்சைப் பார்ப்பன பித்தலாட்டம்

06.01.2016 துக்ளக் இதழின் முன் அட்டையில் தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் அர்ச்சகராக பூசைச் செய்வது போலவும், அதைக் கண்டு கலைஞரும் பேராசிரியரும் மகிழ்வது போலவும் கருத்துப்படம்.
இதைவிட ஓர் அயோக்கியத்தனம்; அற்பத்தனம், பித்தலாட்டம் புத்தி வேறு இருக்க முடியுமா?
இதுவெல்லாம் ஓர் ஏடு; இதற்கு வாசகர் மாநாடு; பாராட்டு, ஓகோ... ஓகோ.. ஆதரவு. இப்போதெல்லாம் பார்ப்பான் பச்சையாக கூச்சநாச்சமின்றி பித்தலாட்டம் செய்கிறான்! அதன் அடையாளம்தான் இது!
கொஞ்சங்கூட பத்திரிகா தர்மம் இல்லாமல், அறிவு நாணயம் இல்லாமல், நியாய உணர்ச்சியில்லாமல், உண்மைகளை மறைக்க, நையாண்டி முயற்சி! இப்படியும் ஒரு பிழைப்பா?
அற்பத்தனத்திற்கும் அயோக்கியத்தனத்திற்கும் ஓர் அளவு வேண்டாமா?
கடவுள் இல்லை என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை. ஆனால், எல்லா ஜாதியினருக்கும் அர்ச்சகராக உரிமை உண்டு என்பது தி.க.வின் சமூகநீதிக் கொள்கை.
அச்சமூக நீதிக்குப் போராடி, மக்களின் உரிமையை மீட்டுத் தரவேண்டியது சமூக இயக்கத்தின் கடமை. அதில் வெற்றி பெற்றுள்ளது திராவிடர் கழகம்.
ஜாதி ஒழிப்பின் இறுதிக் கட்டம் உறுதிப்பட்டுள்ளது!
அதைப் பொறுக்க முடியாமல், தங்கள் ஆதிக்கம் பறிபோகிறதே என்ற வயிற்றெரிச்சலில், சம்பந்தா சம்பந்தம் இல்லாத கருத்துப் படம்.
கிறுக்குப் பிடித்தவனெல்லாம் கீழ்ப்பாக்கத்திற்கு போகாமல் துக்ளக் அலுவலகத்தில் உட்கார்ந்து பேனா பிடிப்பதன் விளைவு அல்லவா இது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று பெரியார் கேட்டதும், கலைஞர் சட்டம் இயற்றியதும், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் போராடி வெற்றிபெற்றதும் இவர்கள் அர்ச்சகராக வேண்டும் என்பதற்கா?
எங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள எம் மக்களுக்கு அர்ச்சகர் உரிமை வேண்டும்! என்று போராடிப் பெற்றதில் என்ன கொள்கைத் தவறு? எதற்கு நையாண்டி?
சூடு சொரணையிருந்தால் அறிவு நாணயத்தோடு பதில் சொல்லவேண்டும். அதைவிடுத்து கிறுக்குத்தனமாக கேலி செய்வது மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனமல்லவா? மக்களை ஏமாற்றும் மோசடி வேலையல்லவா? வயிற்றெரிச்சலின் வடிகால்தானே இந்தக் கேலிச்சித்திரம்.
கீழ்ப்பாக்கத்துக் கிறுக்கர்களிடம் தமிழர்களே எச்சரிக்கை! கிறுக்கர்களை விரட்டுங்கள்!