அரசியல்

Showing posts with label உடல் பருமன். Show all posts
Showing posts with label உடல் பருமன். Show all posts

Tuesday, February 2, 2016

அதிக உடல் பருமனா? குறைக்க எளிய வழி!


- மஞ்சை வசந்தன்

 நாள்தோறும் பச்சை வாழைத்தண்டை நறுக்கி, அதைச் சாறு பிழிந்து, சாற்றுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பருகினால் உடல் எடை குறையும், பருமன் குறையும், இதயத்தில், இரத்தக் குழாய் அடைப்பு நீங்கி, மாரடைப்பு வராது காக்கும்.

 கொழுப்புப் பொருட்கள், இறைச்சி, செயற்கை உணவு சாப்பிடக் கூடாது.
கீரை, பழம், காய்கறி, மீன் உண்ணவும்.

 நடைப்பயிற்சி, உடற்பயிற்சி தினம் 1 மணி நேரம் செய்யவும்.
நாள்தோறும் காலையில் சாப்பாட்டிற்கு முன் ஒரு துண்டு இஞ்சியைத் தோல்நீக்கி, மென்று விழுங்கி தண்ணீர் குடிக்கவும்.

 மதியம் சாப்பாட்டிற்குப் பின் இரண்டு பூண்டு பல் பச்சையாக வாயில் தண்ணீர் வைத்து, தண்ணீருடன் சேர்த்து மென்ற விழுங்கவும். தண்ணீருடன் மென்றால் பூண்டு காரம் தெரியாது. வாய் புண்ணாகாது.

 கொள் சுண்டல் செய்து தினம் மாலையில் சாப்பிடவும்.

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Monday, January 4, 2016

உடல் பருமன் குறைக்கும், இதயம் காக்கும் இஞ்சி பூண்டு விழுது எப்படி செய்வது?........

இஞ்சி பூண்டை சேர்த்தரைத்து கூழ்போல் ஆக்குவதே இஞ்சிபூண்டு விழுது ஆகும். இதை தினம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு சேர்த்தால் உடல் பருமன் குறையும்; இதயம் காக்கப்படும்; இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாது. உணவும் சுவையாக இருக்கும்.
எப்படி அரைப்பது?
இஞ்சி பூண்டு சேர்த்து அரைக்கும்போது பூண்டு 60% இஞ்சி 40% என்ற அளவில் இரண்டையும் சேர்த்து அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்தால் விழுதுபோல் வரும்.
கெடாமல் இருக்க: இந்த இஞ்சி பூண்டு விழுதை அரைத்த பின் சிறிது உப்பும், சிறிது சூடான எண்ணெயும் கலந்து வைத்தால் சில நாள்களுக்கு கெடாமல் இருக்கும்.