அரசியல்

Wednesday, March 28, 2018

பெரியார் வேடம் போட்டபோதே

ஆன்மீக அரசியல் தோற்றுவிட்டதே!

அப்புறம் ஏது ஆன்மீக அரசியல்?

தாடியும் தடியும் வைத்தால் பெரியாரா?

ஆன்மீகத்தை அறவே வெறுத்தவரை ஆன்மீக அடையாளமாக்குவது அயோக்கியத்தனமல்லவா?

பெரியாரை கேவலப்படுத்தும் இரஜினி இரசிகர் மீது இரஜினிகாந்த் நடவடிக்கை என்ன?

தமிழர்கள் தலையாய உயிர்ப் பிரச்சினை காவிரி நீருக்கும் கருத்துச் சொல்ல மாட்டார்! தமிழகத்தின் எந்த உரிமையை மத்திய அரச பறித்தாலும் வாய்திறக்க மாட்டார்!

ஆனால், தமிழகத்தை தலைகீழாக இவர்தான் புரட்டிப் போடப் போகிறாராம்!

ஆன்மீக அரசியலாம்!

அதற்கு ஆயிரம் விளக்கம்!

உண்மை, நேர்மை, தூய்மை, மக்கள் தொண்டு, ஏழைகளின் ஏற்றம், சமத்துவம், சம உரிமை இதற்குத்தான் ஆன்மீகம் என்று பெயராம்.

இவர் ஒரு தனி அகராதி போடுகிறார். மேற்கண்டவற்றிற்கு ஒரே பெயர் மனிதநேயம் என்பதுதான். அதற்கு என்ன ஆன்மீகச் சாயம்?

மனித நேயத்திற்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமில்லையே!

கோயில் கருவறையிலே கற்பழிக்கிறான் ஆன்மீகவாதி!

குற்றவாளிகள் 99% ஆன்மீகவாதிகள்தான்.

கொடுமைகள் அனைத்தும் நிகழ்த்தப்படுவது ஆன்மீகவாதிகள்தான்.

மனிதநேயத்திற்கு உண்மையிலே சொந்தக்காரர்கள், உரியவர்கள் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள்.

மனித நேயத்தின் மறுவடிவாய் விளங்கிய கார்ல் மார்க்ஸ், பெரியார், நேரு போன்றவர்கள் கடவுளையோ, ஆன்மீகத்தையோ ஏற்காதவர்கள்!

உண்மைகள் இப்படியிருக்க, மனிதநேயத்திற்கு ஆன்மீக அடையாளம் காட்டுவது அசல் மோசடி அல்லவா?

ஜாதி கூடாது, சமத்துவம் வேண்டும் என்றார் பெரியார்.

ஜாதி வேண்டும், ஜாதி தர்மம் வேண்டும் என்றார் சங்கராச்சாரி.


ஆணைப்போல பெண்ணுக்கும் சம உரிமை உண்டு என்றார் பெரியார். கணவன் இறந்தால் மனைவியை நெருப்பில் தள்ளி எரிக்க வேண்டும். அதுதான் தர்மம் என்றார் சங்கராச்சாரி.

தன் சொத்துக்களை மக்களுக்கே கொடுத்தார் பெரியார். தன் சொத்தை தன் வாரிசுகளுக்கு உயில் எழுதி வைத்தார் இரமணரிஷி.

ஆன்மீகம் மனித நேயத்திற்கு எதிரானது. கடவுள் எல்லாம் பார்த்துக்கொள்வார் என்பது.

கடவுள் எல்லாம் பார்த்துக் கொள்வார் என்றால் நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல், சுரண்டல், மோசடி, ஏமாற்று, அரசியல் பித்தலாட்டம் எல்லாவற்றையும் கடவுள் தடுத்தாரா? தண்டித்தாரா?

கடவுள் எல்லாம் செய்வார் என்றால் சிஸ்டம் சரியில்லாமல் இருப்பதையும் கடவுளே சரி செய்வாரே! அதற்கு ரஜினிகாந்த் எதற்கு?

கடவுள் எல்லாம் செய்வார் என்றால் அவரிடம் பொறுப்பை விட்டுவிட்டு காஷ்மீருக்குப் போக வேண்டியதுதானே!

நான் வந்து சரி செய்வேன் என்பதே நாத்திகம்தானே! கடவுள் பொறுப்பை இவர் எடுத்துக்கொள்வதுதானே!

ஆக, ஆன்மீக அரசியல் என்பது ஒரு அண்டப் புரட்டு! அண்மைக்கால மோசடி!

அப்படிப்பட்ட ஒரு ஆன்மீக அரசியல்வாதிக்கு பெரியார் வேடம் போட்டுக் காட்டுவது பெரிய மோசடியல்லவா?

இதைவிட பெரியாரை கேவலப்படுத்த முடியுமா?

தாடியும், தடியும் வைத்துவிட்டால் அவர் பெரியாரா? அடப் பைத்தியக்காரர்களே!

பெரியார் வேடம் போட்டு அரசியல் நடத்த வந்தபோதே ஆன்மீக அரசியல் தோற்றுவிட்டதே! ஆக, ஒன்று மட்டும் உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் பெரியாரை ஏற்காமல் யாரும் அரசியல் செய்ய முடியாது!

உண்மையிலே இரஜினிகாந்த்திற்கு பெரியார் மீது மரியாதை இருந்தால், இந்த போஸ்டர் போட்டவர்களை உடனே கண்டிக்க வேண்டும். இதுபோன்ற அற்பத்தனமான _ அயோக்கியத்தனமான காரியங்களைச் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இல்லையென்றால் இதுபோன்ற செயல்களுக்கு எதிர்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரிக்கிறோம்!

====

No comments:

Post a Comment