அரசியல்

Tuesday, December 29, 2015

இதுதான் தினமணியின் திரிபு வாதம்!

இதுதான் தினமணியின் திரிபு வாதம்!
மாலன் கட்டுரையும் மதியின் கார்ட்டூனும்................................

இந்துத்துவாவாதிகளின் கையில் ஆட்சி இருப்பதால், மதவெறியர் காளின் பாசிசப் போக்கு எல்லை மீறிச் செல்வதைச் சுட்டிக்காட்டி எழுத்தாளர்கள் விஞ்ஞானிகள், திரைத்துறையினர் பேசுகிறார்கள், கண்டிக்கிறார்கள், தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.
இவர்களின் உண்மையான உணர்வைப் புரிந்துக்கொள்ளாமல், மதவெறிக்கூட்டத்தின் ஆபத்தை உணர்ந்து அதைக் கண்டிக்காமல், ஆரிய பார்ப்பனர்கள், தங்கள் கையில் பத்திரிகைகள் இருப்பதால், உண்மைகளை மறைத்துத் திரிபுவாதம் செய்கின்றனர்.
எடுத்துக்காட்டு இன்றைய (28.11.2015) ”தினமணி” வந்துள்ள மாலன் கட்டுரையும் மதியின் கார்ட்டூனும்.
ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்கும், பி.ஜே.பி. கட்சியினருக்கும், இந்துத்துவா அமைப்புகளுக்கும் தான் சகிப்புத் தன்மையில்லையென்று குற்றம்சாட்டி எதிர்க்கப்படுகிறதே ஒழிய, இந்திய மக்களுக்கு சகிப்புத் தன்மை இல்லையென்று எவன் சொன்னது? இந்திய மக்களுக்குச் சகிப்புத் தன்மை இல்லையென்று சொல்வது போல மாற்றி; ஏமாற்றி எழுகின்றனர்.
மக்களை ஏமாற்ற இந்திய மக்களின் சகிப்புத் தன்மையை இவர்கள் எடுத்துக்காட்டி, நல்லவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள்? இதுதான் ஆரியச்சூழ்ச்சி; ஆரிய திரிபுவாதம். இந்திய மக்களின் சகிப்புத் தன்மையை மதிக்கிறோம். இந்துத்துவா வாதிகளின் சகிப்பின்மையை எதிர்க்கிறோம்! மாலனும் மதியும் ஏய்க்கப்பார்க்கிறார்கள் இளைய தலைமுறையே எச்சரிக்கை!
பாதிக்கப்படுகிறவர்கள் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் இந்தப் பார்ப்பனர்கள், வன்முறையாளர்களை இந்த அளவிற்குக் கண்டிக்காதது ஏன்?
தாத்ரி சம்பவம், கல்புர்கி கொலையின் நோக்கமும், வெறியும் இலங்கையில் நடந்த இனக்கொலையும் ஒன்றா? இரண்டையும் முடிச்சுப்போட்டு குழப்பப்பார்க்கிறார்கள். இதுதான் ஆரிய நரித்தனம்
கார்ட்டூனிஸ்ட் கூட கட்டுரை எழுதுகிறார்.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

மழைநீர் தேங்கி தொற்றுநோய் பரவும்! உயிரிழப்பைத் தடுக்க ஓர் அரிய மருந்து

மழைநீர் தேங்கி தொற்றுநோய் பரவும்!
உயிரிழப்பைத் தடுக்க ஓர் அரிய மருந்து ............
நோய் வராமலே தடுக்கும்; வந்தால் விரைவில் குணமாக்கும்!
‪#‎என்ன‬ மருந்து?
இது எளிய மருந்து, வீட்டிலே செய்து குடிக்கலாம். 6 மாத குழந்தை முதல் அனைவரும் பருகலாம்.
‪#‎தேவையான‬ பொருட்கள்:
நிலவேம்பு வேர், வெட்டிவேர், விளாம்பிச்சி வேர், கோரைக்கிழங்கு, மிளகு, சுக்கு. இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். விலையோ மலிவு! பயனோ மிக மிக அதிகம்!
வீட்டிலுள்ளவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இவற்றை சம அளவில் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு, தேவையான அளவு நீர் ஊற்றி, நன்றாகக் கொதித்ததும், ஆறவைத்து பின் வடிகட்டி சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
‪#‎அளவு‬: நோய் வராதவர்கள்:...............
பெரியவர்கள் 30 மில்லி சாறு, குழந்தைகள் 2 முதல் 5 மில்லி சாறு (வயதுக்கு ஏற்ப) பருகவும். 6 முதல் 12 மாத குழந்தைக்கு 10 சொட்டு (தாய்ப்பாலில் கலந்து) தினம் ஒரு ஒருவேளை சாப்பாட்டுக்குப் பின் கொடுக்கவும்.
காய்ச்சல் வந்தவர்கள் (எந்தக் காய்ச்சலானாலும்):
இச்சாற்றை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மேலே சொன்ன அளவுப்படி பருகவும். எல்லாவிதமான காய்ச்சலிலிருந்தும் இது உங்களைக் காக்கும்! உயிரிழப்பைத் தடுக்கும்.
நாட்டுச் சரக்கென்று நக்கலாய் எண்ணாதீர்!
இது உயிர்காக்கும் சரக்கு! நோய் எதிர்ப்பாற்றல் தரும் சரக்கு!
காய்ச்சல் பரவும் நேரம் கட்டாயம் பருகுங்கள்!
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan